இப்பிறப்பில் மட்டுமே
இவர் எந்தாய்
இவர்களுக்கு நான் தாய் ..
என்றாலும் விட்டேனோ
பாசமும் பற்றுதலும்
இவர் பால் மிக மிக
மிகுதியாய் போகிறதே
ஸ்யாமளக் கண்ணனே !
நான் விட்டும் நீர் விடாமல்
வெறும் நிழல் போல் மறையாமல்
நிஜமாகி எல்லா பிறப்பிலும்
என் தாயுமாய் தந்தையுமாய்
மற்றெல்லாமும் நீராகிப்
போன பின்னே
என்ன குறை எந்தனுக்கு
எம்பெருமானே நாராயணனே !
இந்தச் சும்மாக் கவிதைக்கு பெரியதாய் விளக்கம் ஏதும் தேவை இருக்காது என்று நினைக்கிறேன் 🙂 குழந்தைகளுக்கும் , நம்மை வளர்த்து ஆளாக்குகிற பெற்றோர்களுக்கும் மற்றும் நமக்குத் தெரிந்த உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கும் ஏதேனும் என்றால் நமது மனம் பதை பதைத்து போகிறது இல்லையா ! இத்தனைக்கும் இவர்களுக்கும் நமக்குமான தொடர்பு இந்த ஒரு பிறப்பில் மட்டுமே ! அடுத்த பிறப்பில் நம் சுற்றமே நம் பகை என்று ஆகும் சூழ்நிலையும் இருக்கலாம் .. ஆனாலும் இவர்கள் மேல் நமக்கு எத்தனை பற்றுதல் … பரிவு …!!!!!
ஆனால் எப்பிறப்பிலும் பகவானே நம் எல்லோருக்கும் தாய் தந்தை ..அப்படி இருந்தால் அவருக்கு நம் மீது எத்தனை பரிவு இருக்கும் .. அதுதான் என்னை போன்ற ரொம்ப சாதரணமான ரொம்பவும் சம்சார சாகரத்திலேயே மூழ்கிக் கிடக்கும் நபர்களுக்கும் அவரது கருணை கிடைக்கிறது .. நாம் எவ்வளவு தான் அவரை விட்டு விட்டு வந்தாலும் அவர் நம்மை விடாது பார்த்துக் கொண்டே இருக்கிறார் ..
வெண் பொங்கல் குறிப்பு
பச்சரிசி ஒரு கப்
பாசிப் பருப்பு அரை கப்
முந்திரி – கால் கப்
இஞ்சி பொடியாய் நறுக்கியது – ஒரு டேபிள் ஸ்பூன்
மிளகு – இரண்டு ஸ்பூன்
சீரகம் – மூன்று ஸ்பூன்
பெருங்காயம் – அரை ஸ்பூன்
கறி வேப்பிலை – ஒரு கைப்பிடி
நெய் – தாளிக்கத் தேவையான அளவு
மஞ்சள் போடி – ஒரு சிட்டிகை
உப்பு தேவையான அளவு
குக்கரில் அரிசி , பருப்பு , மஞ்சள் மற்றும் உப்பை சேர்த்து நான்கு கப் தண்ணீரை சேர்த்துக் கொண்டு நன்றாக மூன்று விசில் வரும் வரை குழைய வேக விடவும் . அதே நேரத்தில் ஒரு வாணலியில் நெய்யில் மிளகு , சீரகம், முந்திரி, இஞ்சி , பெருங்காயம் , க. வேப்பிலை இவற்றை தாளித்துக் கொள்ளவும்.
வெந்த சாதத்தில் இவற்றை போட்டுக் கிளறவும். வேண்டுமானால் நெய் மீண்டும் சேர்த்துக் கொள்ளலாம். காய்ச்சிய பாலையும் சற்று சேர்த்துக் கொள்ளாலாம்.
இதை பாசிப் பருப்பு கூட்டு மற்றும் தேங்காய் சட்னியுடன் பெருமாளுக்கு நெய்வேத்தியம் செய்து அவர் பிரசாதத்தை சாப்பிட்டு பின் அந்த அனுபவத்தை என்னுடனும் பகிர்ந்து கொள்ளுங்களேன் .. !!!
//இத்தனைக்கும் இவர்களுக்கும் நமக்குமான தொடர்பு இந்த ஒரு பிறப்பில் மட்டுமே ! அடுத்த பிறப்பில் நம் சுற்றமே நம் பகை என்று ஆகும் சூழ்நிலையும் இருக்கலாம் .. ஆனாலும் இவர்கள் மேல் நமக்கு எத்தனை பற்றுதல் … பரிவு …!!!!!
ஆனால் எப்பிறப்பிலும் பகவானே நம் எல்லோருக்கும் தாய் தந்தை ..அப்படி இருந்தால் அவருக்கு நம் மீது எத்தனை பரிவு இருக்கும் .. //
ஏன் இறைவன் நமக்கு தாயும் தந்தையும் என்று சொல்கிறார்கள் என்பதற்கு இப்போது தான் இதன் முழு அர்த்தமும் எனக்கு புரிகிறது ஜானு
பதிவுக்கும் ,வெண் பொங்கலுக்கும் நன்றி ஜானு !
LikeLike