ஹரே கிருஷ்ணா ,
இந்த மண்ணுலகத்தில் இருந்து யாரேனும் மறைந்தால் வைகுந்தப் பதவி அடைந்து விட்டார் என்று சொல்லக் கேள்வி பட்டிருப்பீர்கள். அதே போல் வைகுண்ட ஏகாதேசி அன்று விரதமிருந்து, சுவர்க்க வாசல் வழியே சென்று பெருமாளை சேவித்தால் வைகுண்டம் சேர்வது உறுதி என்ற நம்பிக்கையும் தொன்று தொட்டு நம் தென்னகத்தில் இருந்து வருகிறது. வைகுண்டம் என்றால் என்ன, யாரெல்லாம் அங்கு இருப்பார்கள் ? இந்தப் பூலோகத்தை விட அப்படி என்ன சிறப்பு அங்கிருக்க முடியும் என்று யாருக்கேனும் சந்தேகம் இருந்தால், இதன் தொடர்பாக நான் கற்றதை இங்கு பகிர்ந்து கொள்கிறேன் ..
வைகுண்டமே நம் பெருமான் ஸ்ரீமன் நாராயணன் எனும் வாசுதேவர் வாழுமிடம். சுவர்க்கம் முதலிய பலவித சுகவாச லோகங்களுக்குச் சென்றாலும் நமது புண்ணியம் தீர்ந்தவுடன், மீண்டும் பூலோகத்திற்கே வந்து விடுவோம் என்பது ஐதீகம். இந்தப் பூலகத்தைப் பற்றி நான் எதுவும் சொல்லத் தேவையில்லை . இங்கு பாவம் செய்வதற்கு வாய்ப்புகள் அதிகம் என்பதோடன்றி , பிறப்பு ,இறப்பு, முதுமை, நோய் வாய்ப்படுதல், விபத்திற்குள்ளாகி வருந்துதல், வாழ்க்கையில் விரக்திக்குள்ளாதல் மற்றும் சொல்லொணா இன்னல்களுக்குட்படுதல் என்று பலவிதமாய் கஷ்டங்கள் நமக்கு. ஆனால் வைகுந்தத்தில் நாமெல்லாம் நாராயணருக்கு சமமாய் திவ்வியமாய் எந்தக் குறைவும் மின்றி வாழ்வோம் என்பது வேத வழி கண்ட உண்மை !
பகவான் தன்னுடைய அம்சமாகவே எல்லா ஜீவர்களையும் சிருஷ்டித்தார். சகல சௌ பாக்கியங்களையும் தந்ததோடன்றி, தனக்கு இணையாகவே ஒவ்வொரு ஜீவாத்மாவையும் வைத்துக் கொண்டார். தான் மட்டும் தனித் திருப்பதால் என்ன இன்பம் .. தனது அம்சமாய் பக்தர்கள் இருந்து அவர்களுக்கு தந்தை போல் , தாயார் போல் எல்லாம் செய்து பார்த்து அருள் புரிய வேண்டும் , அதுவே பூரண இன்பம் என்று பகவான் சகல ஜீவர்களையும் படைத்து இவ்வாறு அருள் பாலித்துக் கொண்டிருந்த வேளையில், அவரிடம் இருந்து குறைவறப் பெற்றதை அவருக்கே திருப்பித் தர சில ஜீவ கோடிகளுக்குத் தயக்கம் ..
எத்தனையோ செல்வம் இருந்தாலும் அதை முழுமையாய் அனுபவிக்க , நாம் விரும்பும் மக்கள் இருக்க வேண்டும் அல்லவா.. சக்கரவர்த்தி தசரதனுக்கு பொருட் செல்வத்தில் எந்தக் குறைவும் இல்லை .. இருந்தும் அவர் சந்தோஷமாய் இருந்தாரா .. அந்த செல்வத்தை செலவழித்துச் சந்தோஷம் பெற புத்திரர்கள் இல்லையே என்று தான் கவலை .. !
புத்திர பாக்கியம் இல்லாத தசரதனுக்கு , ” என்னை போல் உன் மகனை பிரிந்த துக்கத்தில் நீயும் வருந்தி மாள்வாய் ” என்று அவரால் தவறுதலாய் கொல்லப் பட்ட ரிஷி குமாரனின் தந்தையாரிடம் இருந்து சாபம் கிடைத்த போது, கவலைக்குப் பதில் சந்தோஷமே வந்தததாம் . ஆஹா , அப்படி என்றால் நாமும் தந்தையாவோம் இல்லியா என்று அவர் அந்த சாபத்தை நினைத்து மகிழவே செய்தாராம் ! தன் உயிரை விட, தன்னிடம் இருக்கும் வற்றாத பெரும் செல்வத்தை விட, தனக்கு சேவை செய்து வாழும் நல்ல மனைவியரை விட, தனது அம்சமான புத்திரர்களுக்கு உயிரையும் விட அவர் அப்படித் துடித்து, ஏங்கிக் காத்திருந்தார் என்பதில் இருந்தே எது சந்தோஷம் என்று நமக்கு விளங்க வில்லையா !
சம்சாரிகளான நாமெல்லாம் ஓடி யாடி சம்பாதிப்பதும், நமது தாய்/தந்தை/சகோதரர்கள்/ மனைவி/கணவன்/ மற்றும் குழந்தைகளை நன்கு கவனித்துக் கொள்வதற்காகத் தானே! கல்யாணம் செய்து கொண்டால் பொண்டாட்டியிடம் அல்லல் படுவோம் என்று தெரிந்தே தானே எல்லா ஆண்மக்களும் கல்யாணம் செய்து கொள்கிறார்கள் 🙂 பொண்டாட்டி, பிள்ளைகளுக்கே உழைத்து ஓடாய் போகப் போகிறோம் என்று உண்மை தெரிந்தே திருமண பந்தத்தில் இணையத் துடிக்கிறார்கள் ! அதாவது , நம்மிடம் உள்ள செல்வத்திற்கு மதிப்பே நாம் விரும்புவோருக்கு அதை செலவிடுவதில் தானே இருக்கிறது என்பது தான் நம்முடைய உண்மையான இயல்பாய் இருக்கிறது !
அதனால் தான் உண்மையான பக்தர்களும் தாங்கள் பெற்ற செல்வத்தை பகவானின் கைங்கர்யங்களுக்குச் செலவிட்டுப் பார்ப்பதிலேயே பெரும் மகிழ்ச்சி அடைகிறார்கள். பகவானால் கிடைக்கப் பெற்ற தங்களது திறமைகளையும் அவருக்கே அர்ப்பணித்து உவகை அடைகிறார்கள்.
பக்தியில் குறைவேற்பட்டு, பொறாமையின் பிடியில் ஆட்பட்டவர்கள் , நாம் ஏன் நம் செல்வத்தை வைத்துக் கொண்டு பகவானுக்கு கைங்கர்யம் செய்ய வேண்டும்.. ஏன் நாமே நமக்கு எஜமானராய் இருக்கக் கூடாது என்று யோசித்ததின் விளைவு, இந்தப் பூலோக வாசம் ..
நமது ஆசையை நிறை வேற்றும பொருட்டு, பகவான் இந்தப் பூலோகத்தை சிருஷ்டித்து, அதில் நம்மையே நமது கர்மாவிற்கு கர்த்தாவாய் விட்டு விட்டு, தான் அமைதியாய் நம் மனதிற்குள் ஒரு ஊமை சாட்ச்சியாய் உறைந்து கொண்டார். இங்கு நாம் செய்யும் காரியத்திற்கு நாமே பொறுப்பு ! அவரை விட்டு விட்டு நாம் , நம் மனம் போன போக்கில் வாழ இங்கு வந்து விட்டோம் .. நமக்கு வேண்டியதை நாமே சிருஷ்டித்துக் கொண்டு , நம் குழந்தைகளை நாமே பெற்று, அவர்களுக்குப் பொறுப்பேற்றுக் கொண்டு நாமே நமக்கு அதிபதியாய் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் ..(அதாவது மாயையின் பிடியால், நாமே எல்லாவற்றிற்கும் காரண கர்த்தா என்று நினைத்துக் கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கிறோம்)
நாம் விட்டாலும் அவர் விட வில்லை .. அச்சச்சோ வழி தவறிப் போகின்றதே இந்தக் குழந்தை .. சொன்னால் புரிந்து கொள்வதாய் தெரிய வில்லையே .. அதுவே பட்டுத் தெரிந்து கொள்ளுமோ .. ? இருந்தாலும் நாமும் கூடவே சென்று விடுவோம் .. ஒரு கணத்திலேனும் தன் தவறுணர்ந்து , உண்மையான சந்தோசம் இது வல்ல என்று அறிந்து , தாயுமாகி , தந்தையுமாகி தன்னை படைத்த நாராயணனாகிய தம்மிடமே மீண்டும் வந்துவிடாதா என்று கருணையோடு, அளவிலா பாசத்தோடு நம்முடனே நமது அந்தராத்மாவாக என்றும் உறைந்திருக்கிறார்.
நாம் அப்பா என்று ஒரு தரம் ஆசையோடு அழைத்து அவரை நோக்கி ஓரடி எடுத்து வைத்தால் , அவர் பல்லாயிரக் கணக்கான அடிகளெடுத்து ஓடோடி வந்து விடுவார்.. !நீங்களும் கூப்பிட்டு உங்களுக்கு கிடைத்த, கிடைக்கும் அனுபவத்தை , என்னுடன் பகிர்ந்து கொண்டால் , அதைவிட வேறு பாக்கியம் ஒன்றும் இல்லை எனக்கு !
********************************
என்னமோ கண்ணா
எத்தனை தூரம் தான்
இப்படியே மீண்டும் மீண்டும்
வீழ்வேன் நான் !
நடை பயிலும் சிறு பாலகரும்
ஒரே தரம் வீழ்ந்தாலே
விழித்துக் கொள்வரே கோவிந்தா!
உறங்கினாலும் விழிப்பேனே
என் செய்வேன் கோபாலா ,
நித்திரையில் சொப்பனம் போல்
முகத்திரையை பூட்டிக் கொண்டு
தூங்குவதாய் நாடக மாடும்
என்னை உன்னை அன்றி
மீட்டெடுப்பார் யார் ?
******
விட்டு விட்டு வந்துவிட்டேன்
வைகுண்ட வாசா உம்மை !
நீரும் அது போலே
ஏன் இல்லை எம் கண்ணா ?
எத்தனை தூரம் என் பால்
அன்பினை நீர் வைத்திருந்தால்
பாவியின் பின்னாலே
வந்திருப்பீர் வரத ராஜா !
இன்னமும் காத்திருந்து
என்ன பயன்! என்ன பயன்!
அறிவிலாப் பேதை நான்
என்றைக்கும் விழித்தறியேன்
தானே வருவேன் என்றால்
நடக்குமோ நடக்காதோ!
இன்னமும் எனக்காக
இங்கேயே நீர் இருத்தல்
முறை இல்லை! முறை இல்லை!
முகுந்தா முறை இல்லை!
ஐயோ பதறுகிறதே
என் நெஞ்சம், இப்படியே !
எப்படித்தான் கரை பேனோ
இக்கொடும் பாவத்தை !
கருணை கொள்வீர் என் மீது
கிரி தர கோபாலா !
தூக்கிச்செல்லும் உம்மோடு
இன்றைக்கே இப்பொழுதே !
************
ஆடிக் களித்த ராதையும்
அல்லேன் நான் !
சூடிக் கொடுத்த கோதையும்
அல்லேன் நான்!
பாடிக் களித்த மீராவும்
அல்லேன் நான் !
என் செய்வேன் இது போன்று
அவர்தம் பேர் சொல்லும்
அருகதையும் அற்றேள் நான்!
காதலாய் கசிந்துருகி
கரையவும் வக்கில்லை!
கண்களில் நீர் சொரிந்து
கதறவும் துப்பில்லை!
கோதையைக் கைப்பிடித்த
மணவாளா என் கண்ணா ,
இந்தப் பாவியின் கரம் பிடித்து
கூட்டித்தான் செல்வீரோ?
மீராவை மீட்டெடுத்து
ஆட்கொண்டீர் அதுபோலே
இந்த முட்டாளின் மேலும்
சற்றே கடைக் கண் வைத்தருளும் !
—-
ஆடுவேனோ பாடுவேனோ
ஏது மறியேனே என் கண்ணா !
சலசலக்கும் பேச்சை அன்றி
ஒன்றையும் அறியேன் நான் ,
அதனாலே கருணை கொண்டு
நின் திரு நாமம் தன்னை தந்தீரோ !
கோவிந்தா ! கேசவா !
ஸ்ரீ ராமா ராதா கிருஷ்ணா !
ஒரே தரம் நின் பேரை
சொன்னாலே போதுமென்பார்..
சொல்லி விட்டேன் சொல்லி விட்டேன்..
வந்து என்னை மீட்டெடுப்பீர்!
___________
உமை அன்றி பிறிதொன்றும்
உண்மை இல்லை
உற்றாரும் உறவினரும்
மாயை! மாயை !
இருந்தாலும் என்ன பயன்,
அறிவின்றி அங்கிருந்து
வீழ்ந்த என் பிறவி
மோகத்தில் அழிகிறதே ,
பரந்தாமா , ரிஷி கேசா!
முன் செய்த
வினையோ அறியேன்
பின் செய்த
பிழையோ புரியேன்
தானாகக் கரை சேர
தெரியாமல் போனதுவே !
கோதையைக் கைப் பிடித்த
ஸ்ரீ ரங்கப் பெருமானே
இப்பேதையை மன்னித்து
கையேடு தூக்கிச் செல்வீர் !
*******************
கோபியரின் காலடி மண்ணாய்
இருக்கவும் வரமிலையே !
கோதையின் பாசுரம் கேட்டு
விழித்திடவும் பேரிலையே !
ஆடிப் பாடி உம்மிடத்தில்
சிரமமின்றி தஞ்சம்புக
மீராவை கண்ட பின்னும்
பாவி மனம் துடிக்கலையே !
அச்சுதா! கேசவா !
என் நெஞ்சம் ஆறிலையே !
ஒன்றிற்கும் துப்பில்லா
இந்த உதாவாக்கரை பொருட்டு
இனிமேலும் காத்திராமல்
விரைந்தென்னை ஆட் கொள்வீர் !
***************
செய்த பிழைகளுக்கு
பஞ்சமும் இல்லை
செய்கின்ற பிழைகளுக்கு
வஞ்சமும் இல்லை !
தானே தன் தலையில்
மண்ணள்ளிப் போட்டுக் கொண்டேன் !
அதனாலே கூறுகின்றேன்
இன்னும் செய்வதற்கு
வேறொன்றும் இல்லை கண்ணா !
கேட்ட வரம் தருவேனென்று
என்றைக்கோ வாக்களித்தீர் ,
பேராசைக் காரி அன்றோ ,
வேறென்ன கேட்பேன் நான் !
பழகின தோஷமென்று
பெரும் மனது நீர் வைத்து
பக்தியை தந்து விடும்
வரத ராஜப் பெருமானே !
*************************************
மதம் பிடித்து யானை போல்
என் மதமே சரி என்று
மமதையோடு அலைகின்றேன் ,
நான் மறைகள் கற்குமுன்னே
மறை கழன்று பிதற்றுகின்றேன் !
இவை எல்லாம் நான் தவிர்த்து
உமை என்று சேர்வேனோ!
நித்தமும் உமை நினைத்து
ஓரிடம் தான் அமர்வேனோ !
உம் நாம சங்கீர்த்தனம்
மட்டுமே இசைப்பேனோ !
மட்டுப் போன புத்தி கொண்டு
பட்டுப் போகும் வயதிலாச்சும்
உம்மிடத்தில் பூரணமாய்
சரணடைந்து மீள்வேனோ ..!
பாவியிலும் பாவியாய்
கொண்டிந்த இழி பிறப்பில்
இப்படியே இப்படியே
தர்க்கத்தில் பகல் போகும்
உறக்கத்தில் இரவோடும்
விழிப்பதற்கு எத்தனை தான்
பிறவிகள் எடுப்பேன் கண்ணா?
கருணா மூர்த்தியே
வேங்கடத்து மலையோனே,
நெஞ்சத்தில் தஞ்சமளித்துத்
திருமகளை தாங்கும் நீவீர்
உம் அடியார் தம் பாதத்
துகளிலேனும் சற்றெனக்கு
அடைக்கலம் தரு வீரே!
**************
ஒப்பில்லா நான் மறைகள்
ஓதவும் துப்பில்லை..
பதினெண் புராணங்கள்
பார்க்கவும் வக்கில்லை..
கணக்கிலா உம்மடியார்
எழுதினர் எத்தனையோ
அத்தனையும் பார்த்திடவே
பிறப்புகள் பலவேண்டும் ..
பார்த்தேன்ன படித்தென்ன
ஒன்றுமே விளங்கிலையே !
பார்த்தனுக்குச் சாரதியே
பரப் பொருளே பரந்தாமா!
புத்தி கொஞ்சம் இருந்திருந்தால்
இங்கெதற்கு இருப்பேன் நான் !
பொன் வைத்தும் பொருள் வைத்தும்
அசைந்திடாத துலா பாரம்
என் அரை குறை புத்திக்கா
இறங்கி விடும் ரங்க நாதா !
ஒப்பிலா துளசி கொண்டு
பூஜித்து உமை அழைத்தால்
ஓடோடி வந்திடுவேன்
என்றுரைத்த உம் வாக்கே
கதி எனக்கு கோவிந்தா!
பக்தி கொள்ளத் தெரியாது
பூசனையும் அறியாது
பிதற்றிடும் பேதை என்மேல்
பரிதாபம் கொண்டேனும்
உம்முடனே வைத்திருப்பீர்
வெங்கடேசப் பெருமானே!
**********************
மேன்மையான பதிவு; பலமுறை படித்து விட்டேன்
பதிவுக்கு நன்றி என்பதை தவிர வேறு வார்த்தைகள் தற்சமயம் இல்லை ஜானு
LikeLike
Hare Krishna,
Dear Priya,
Padiththatharku naan thaan nadnri solla vendum. veettil naaalai swarna kittaavukkum kutti dhruv kum serththu birth day celebrate pannugirom 🙂 I will write about the thangak kitta soon ..
dear friends,
nalaiku romba special. dhruv maaththiram illaamal, swarna kittaavum enga aaththukku vanda daal inda varusham muthal, swarna kittavoda b’day dhruv voda birth day voda celebrate pannarathaai irukkom ..
inimel pranav , dhruv and swarnak krishna nu moonu kozhanthaigal..
thangak kuttinu solluvom illiya.. thideernu krishnarai kuttiyaai thangaththil senjukanumnu oru aasai vanduduchchu .. ippa irukkira vilai vaasiyil kuttiyaai thaane mudiyum .. mmmm ! aanaalum krishnar romba azhagu .. moonu savaranil moonu kutti kutti kannan senju kondom ..
innamum peyar vaikkalai .. yenna peyar vachchaalum naan krishna nu thaane solven .. 🙂
periya pathivu seekkiraththil podaren ..
bless us to serve Krsna well ! Dhruv kum unga yellor vaazthukkalayum aaseervadangalayum thaangal .
cheers,
YHS,
Janu
LikeLike
ஹரே ராமா ஹரே கிருஷ்ணா
WISH YOU HAPPY BIRTH DAY DURUV.,MANY MORE HAPPY RETURNS OF THE DAY.,
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் துருவ்
இந்த பிறந்த நாளில் எல்லாம் வல்ல இறை நிலை நல்ல உடல் நலம் ,நீள் ஆயுள் ,நிறை செல்வம் ,உயர் புகழ், மெய்ஞானத்தை
கொடுத்து அருளுமாக …..
LikeLike
//innamum peyar vaikkalai .. yenna peyar vachchaalum naan krishna nu thaane solven .. //
ஹ ஹா இதை நீங்க சொல்ல வேண்டியதே இல்லை ! இந்தனை நாள் உங்க பதிவை படிக்கும் நாங்க இதை கூட தெரிந்து வைத்து கொள்ள வேண்டாமா 🙂
//periya pathivu seekkiraththil podaren ..//
ஏங்க! ஏன்! அரசியல் வாதி மாதிரி ஆறு மாசமா இதையே சொல்லி கிட்டு இருக்கீங்க !
ஜஸ்ட் கிடிங் பா
//bless us to serve Krsna well !//
நீங்க ரொம்பவே சேவை செய்யறீங்கன்னு கேள்வி ஜானு !
// Dhruv kum unga yellor vaazthukkalayum aaseervadangalayum thaangal //
கண்டிப்பாக சொல்கிறோம் ஜானு !என்ன நேற்றே சொல்லி இருக்கணும்.,வேலை பளுவால் சொல்ல முடியவில்லை .,சாரி .,
சற்று தாமதமான பிறந்த நாள் வாழ்த்துக்கள் துருவ் கண்ணா !
LikeLike
Dear Priya,
Thanks very much for your kind wishes.Dhruv must be very very lucky to have an aunt like you.
//periya pathivu seekkiraththil podaren ..//
ஏங்க! ஏன்! அரசியல் வாதி மாதிரி ஆறு மாசமா இதையே சொல்லி கிட்டு இருக்கீங்க !
ஜஸ்ட் கிடிங் பா
## 😦 .. krsna yenakkum konjam rosham varattum .. ! PARUNGA PRIYA NEENGALE ASANDU PORATHU POLA SEEKKIRAME ORU PATHIVU PODAREN !
//bless us to serve Krsna well !//
நீங்க ரொம்பவே சேவை செய்யறீங்கன்னு கேள்வி ஜானு !
## yaaro rombath thappaa thagavalgal tharaangannu ninaikiren. Please don’t believe.
// Dhruv kum unga yellor vaazthukkalayum aaseervadangalayum thaangal //
கண்டிப்பாக சொல்கிறோம் ஜானு !என்ன நேற்றே சொல்லி இருக்கணும்.,வேலை பளுவால் சொல்ல முடியவில்லை .,சாரி .,
சற்று தாமதமான பிறந்த நாள் வாழ்த்துக்கள் துருவ் கண்ணா !
## Vaazththukkal thaan mukkiyam Priya . ungaloda manamaarnda asseervadam thaan unmayaana gift to Dhruv.
CHEERS,
JANU
LikeLike
இதுல நான் போட்ட கமெண்ட்ஸ் எல்லாம் எங்க? 3 comments போட்டதா ஞாபகம்… ஆஹா..மறுபடி என்னோட கமெண்ட்ஸ் காணாம போக தொடங்கியாச்சா? May be I didn’t submit properly, dont know… okay… இன்னொரு வாட்டி தேங்க்ஸ் எங்களுக்காக போஸ்ட் போட்டதுக்கு…
ஆஹா… குட்டி தங்க கிருஷ்ணாவா? சூப்பர்… பேரு வெக்கற போஸ்ட்கூட போட்டோ எடுத்து போடுங்க ஜானு, நாங்களும் பாத்து ரசிப்போமே… நன்றி
LikeLike
Sorry comments I posted was in the previous post not this one… 🙂 but can’t find there either….(:
LikeLike
Hare Krsna,
Dear Bhuvana,
Am not sure why this happens. But be consoled that it happened for others too ! Sometimes it goes to spam /trash folders. But this time , I could not find them there as well!
For sure I will write a post and publish the puictures of kuttik krisna. Kollai azhagu ..yenga aathula irukkum yella krishnargalum romba romba azhagu .. oru oruththarukkup pinnal oru story..
My mother has come from India ..Hopefully I will do something better, I mean write more about Krsna with her help.
LikeLike
ஆஹா! ஜானும்மா வந்தாச்சா ! நலம் விசாரித்ததாக சொல்லுங்கப்பா!
“அந்த கால ஹீரோயின்னு நினைச்சீங்களா ஆசை தோசை அப்பளம் வடை ! எங்க செல்ல அம்மாவாக்கும் !!”
என்று நீங்க சொன்னது நேற்று போல இருந்தது;காலம் எவ்வளோ சீக்கிரம் செல்கிறது பாருங்க ;
சரி சரி இந்த சமயத்திலே அப்பா அம்மா காதல் கதைகள் நிறைவு பகுதியை போட்டு அம்மாவுக்கும் அப்பாவுக்கும்
காணிக்கை யாக்கிடுங்க ! ஓகே வா
LikeLike
ஷ்யாமா !(அசல் ஜானும்மா அங்கே இருக்க ஜானு அப்படின்னு கூப்பிட்டா நல்ல இருக்காது தானே )
குந்தவை இந்தியா வில் செட்டில்லாகி விட்டார் .,சற்று முன்பு தான் பேசி வைத்தார் .,
உங்களை கேட்டதாக சொல்ல சொன்னார் .,ஷ்யாமை கேட்டா பிரணவ் அப்பா தர மாட்டாராம் என்று கட் அண்ட் ரைட் ஆ
சொல்லி விட்டேன் ! அதற்கு குந்தவை சிரித்த சிரிப்பில் கொஞ்ச நஞ்ச இருந்த தூக்கமும் போய் விட்டது என்றால்
பார்த்துக்கோங்களேன் 🙂
LikeLike