பிரணவ் கிட்ட சொன்ன “பாட்டி வடை சுட்ட கதை “
ஒரு ஊருல ஒரு பாட்டி வடை சுட்டுக் கிட்டு இருந்தாங்களாம் ..ஒரு வடை இல்லை ரெண்டு வடை இல்லை.. நிறைய வடை ..எல்லாம் செம டேஸ்ட்டி வடை ..வகை வகையா ..இருந்தது அவங்க சுட்ட வடைகளனைத்தும் ..
கார வடை ..மெது வடை.. ஆம வடை..மசாலா வடை..வாழப்பூ வடை.. வாழக்காய் வடை ..முட்டை கோஸ் வடை .. பருப்பு வடைன்னு எல்லா வடையும் ஒரே நேரத்துல ஆசையா பேரன் பேத்திகள் சாப்பிடனும்னு செஞ்சாங்களாம் அந்த பாட்டி.
வடையோட மணம் அப்படியே காத்துல பரவிச்சாம். அது பக்கத்து மரத்துல வசிச்சுட்டு இருந்த ஒரு சோம்பேறிக் காக்காவையும் சுண்டு இழுத்துச்சாம் ..
வாயூரிய காக்கா அந்த பாட்டி கிட்ட போயி , ” பாட்டி ..இவ்ளோ விதம் விதமா வடை ..நான் பார்த்ததே இல்லை.. எதாவது ஒன்னே ஒன்னையாவது எனக்குத் தரியா ” , என்று கேட்டுச்சாம்..
பாட்டிக்கு வயசு தான் பெருசே தவிர மனசு ரொம்ப சின்னது ..சீ போ ஒன்னும் இல்லைன்னு விரட்டி அடிச்சாங்களாம்..
சும்மா போகுமா இந்த காக்கா.. மெல்ல மெல்ல கள்ளம் அதன் மனசுல புக , அது திருட்டு காக்காவாய் மாறி வடையை திருடிட்டு ஓடிடுச்சாம்..
மரத்து மேல ஏறி உக்கார்ந்து கிட்ட காக்கா, அதை சாப்பிட ஆரம்பிக்கும்போது ஒரு குள்ள நரி அங்க வந்துச்சாம்.
அது காக்காவை பார்த்து “ஹேய் காக்கா ..நீ ரொம்ப அழகு .. உன் குரலோ ரொம்ப இனிமை ..உன் பாட்டை கேக்காம எனக்கு டெய்லி தூக்கமே வருவது இல்லை.. எனக்காக ஒரே ஒரு பாட்டை பாடேன் ப்ளீஸ் ” என்று கெஞ்சி கேட்டுச்சாம்.
காக்கா கொஞ்சம் புத்தி சாலி ..அது அவ்ளோ சீக்கிரம் ஏமாறலை ..எனக்கே அல்வாவானு மனசுக்குள் நெனச்ச காக்கா , வாயில் இருந்த வடையை எடுத்து , காலுக்கு அடியில் வச்சிக்கிட்டு கா.. கானு கத்திச்சாம்..
நரி மாத்திரம் கேனையா என்ன..? மனசுக்குள் காக்காவின் சாமார்த்தியத்தை எண்ணி மெச்சிக் கிட்டாலும், நரி காக்காவை விட தந்திரம் வாய்ந்தது தானே ..அது காக்கா பாடறதை விடாம கேட்டு ரசிக்கிற மாறி நடிச்சதாம்..
உண்மையா பாராட்டுவது போல , ஆஹா ஓஹோ என்று பாராட்டிக் கிட்டே இருந்துச்சாம்.. குள்ள நரியின் புகழ்ச்சியில் இந்த காக்கா கொஞ்சம் கொஞ்சமாய் புத்த்தியை இழக்க ஆரம்பிச்சதாம்.
மேலும் , மேலும் பாராட்டின நரியின் வார்த்தைகள் கேட்டு இந்த காக்கா உற்சாக மாய் “நிஜமா நாம ரொம்ப நல்லாத்தான் பாடறோமோ ” என்று நினைத்து அது பாட்டுக்கு பாடிட்டே கிடக்க இப்ப நரி தந்திரமாய் சொல்லுச்சாம் ..” ஏய் காக்கா ..நீ பாடறதே சூப்பராய் இருக்குதே ..நீ பாடிட்டே டான்ஸ் ஆடினால் எப்படி இருக்கும் ..எனக்காக ஒரு டான்ஸ் ஆடேன் ப்ளீஸ் ..அதையும் பார்த்துட்டு போயிடறேன்னு ” 🙂
புகழ் போதையில பரவசமான காக்காய் , இப்ப எச்சரிக்கை குணம் குறைந்து ஒரு குதியாட்டம் போட காலடியில் இருந்த வடை கீழே விழுந்திடுச்சாம் 😦
நரி வடையை எடுத்துகிட்டு , நாளைக்கு வந்து மீதி ஆட்டத்தை பார்க்கிறேன் காக்கா ..ஸீ யு ..சூன் -னு சொல்லி ஓடியே போயிடுச்சாம்.. 😉
நீதி 1: பாட்டி கிட்ட காக்கா மரியாதைய கேட்கறச்ச பாட்டி வடை கொடுத்து இருக்கலாம்.. பாட்டிக்கு நல்ல பேராவது வந்து இருக்கும் .. ஏமாளி பட்டம் கிடைச்சு இருக்காது ..
நீதி 2: வடையை வாங்கிட்டு போன திருட்டு காக்காய் ..முதலில் வடையை சாப்டுட்டு மத்த வேலை பார்த்து இருக்கலாம்.. .. எவ்வளவு பெரிய புத்திசாலியாய் இருந்தாலும் , . எவ்ளோ எச்சரிக்கையாய் இருந்தாலும் பத்தாது .. புகழ் போதையில் மாட்டி கிட்டா அவ்வளவு தான் ..அதிகமாய் யாராவது நம்மை புகழ்ந்தால் நாமும் அதிகமாய் விழிப்புணர்வு வோடு இருப்பது நல்லது ..
நீதி 3: நரி போல அசராமல் காரியத்திலேயே கண்ணாய் இருந்தால் , .ஏதாவது ஒரு வழி பொறக்கும். வெற்றி நிச்சயம்!
விபத்து : வடை திருடிட்டு வேகமா ஓடிப் போன நரி பாட்டி , சர்கஸ் கம்பனி வச்சி நடத்தும் பாட்டியோட பேரன் கிட்ட மாடிக்கிச்சாம்.. இப்ப கூண்டுக்குள்ள அடைஞ்சி கிடக்கு .. என்று கேள்வி.. தப்பு செஞ்சால் தண்டனை ஏதாவது ஒரு ரூபத்தில் வந்தே தீரும் ..
கொசுறு நீதி : வாய்மை எப்படியாவது வெல்லும்.
சின்ன வயசுல பாட்டி வடை சுட்ட கதை ரொம்ப பாமஸ்.. யார் முதலில் எழுதி வைத்தார்களோ தெரியாது .. இந்த பஞ்ச தந்திரக் கதைகள் காலத்துக்கும் அழியாதவை ..இங்கே அதை ரீ -மிக்ஸ் மாத்திரம் நான் பண்றேன்.. ஏன்னா இப்ப இருக்கிற குழந்தைகள் ரொம்ப புத்திசாலிகள்.. கேள்வி மேல கேள்வி கேட்கிறாங்க..அவங்க கேள்விக்கு விடை சொல்றதுக்குள்ள முழி பிதிங்கிடுது ..என் குழந்தை கிட்ட கதை சொல்லும்போது நான் ரொம்ப யோசிச்சு பொறுமையா சொல்லணும் … சமீபத்தில் அப்படி சொன்ன கதை தன் இதுவும்..
இந்தக் கதை கூட பிரணவோட கேள்விகளுக்கு நான் கொடுத்த பதில்களால தான் உருவானது ..
வடை தானே காக்கா கேட்டுச்சு ..அந்த பாட்டி சுத்த மோசம்.. காக்கை வடயை காலடியில் வச்சிகிச்சாம்..என்றால் ..ஏன் நரி டான்ஸ் ஆட சொல்லலைனு 🙂 ஒரு கேள்வி ..
பரவாயில்லை பையன் என்னை இல்லை .. அப்பாவ மாறியும் இல்லை ..ரொம்ப விவரமாய் தான் இருக்கான் என்று மனதிற்குள் நினைத்து பெருமூச்சு விட்டுக் கொண்டேன்..
அந்த சர்கஸ் விஷயம் மாத்திரம் தான் என்னோட டச் .. சோ ஏதாவது நல்லா வந்து இருந்ததுன்னா அதற்கும் காரணம் ப்ரணவ் மட்டுமே ..
எச்சரிக்கை : இதை பதிவுன்னு எல்லோரும் ஏத்துகிட்டு ஒழுங்கா பின்னூட்டம் இடுங்கள்.. இல்லாட்டி இதே போல் நிறைய மொக்கை போடுவேன் .. ;)இல்லாட்டியும் இதே போல் தான் மொக்கை போடுவேன்.. 😀
அச்சச்சோ இத மறந்துட்டேனே :- இந்தக் கதையை நான் ப்ரனவிற்கு சொன்னப்ப , அவனோட பாட்டி கூடவே இருந்தாங்க.. அவங்களுக்கு செம சந்தோசம்.. நான் முழி பிதுங்கினாலும் சமாளிச்சு கிட்டு அவனுக்கு பதில் சொல்ல, எங்க அம்மா என்னை பார்த்து இப்ப தெரியுதா ..உன்னை எல்லாம் வளர்க்க நானும் அப்பாவும் எவ்ளோ கஷ்டப் பட்டு இருப்போம்னு .. நீ அப்ப கேள்வி கேட்ட இப்ப உன் பையன் உன்னை மடக்கறான்னு சொல்லி ஒரே கலாட்டா.. பாட்டிங்களுக்கு தான் பேரங்க மேல எவ்ளோ பாசம்..
Nice janu
நான் என் பொண்ணு கிட்ட போய் கதை சொல்ல போறேன்
LikeLike
கதை அருமை அக்கா! ஆனா இதுல எதாவது உள்குத்து இருக்கா ?? ஹி ஹி !!
LikeLike
// மெல்ல மெல்ல கள்ளம் அதன் மனசுல புக , அது திருட்டு காக்காவாய் மாறி வடையை திருடிட்டு ஓடிடுச்சாம்.. //
//பாட்டி கிட்ட காக்கா மரியாதைய கேட்கறச்ச பாட்டி வடை கொடுத்து இருக்கலாம்.. பாட்டிக்கு நல்ல பேராவது வந்து இருக்கும் .. ஏமாளி பட்டம் கிடைச்சு இருக்காது ..//
உங்கள் நுண்அரசியலை நான் வியக்கிறேன்!! ஹி ஹி !!
(இப்படிக்கு: பிரச்சனை தீந்தாலும் பெருசாக்கும் சங்கம்!! )
LikeLike
Hi Bhuvanesh
// (இப்படிக்கு: பிரச்சனை தீந்தாலும் பெருசாக்கும் சங்கம்!! )//
we are not making anything big, gandhi also said neeyama murail poraduvathu thappu illai endru. its kind of agaimasai murayana poratam than janu and all of us doing. pls try to understand. 😀 😀 😀 .. and join our club.. hihihi
Thiraikadal:comment moderated . Thanks ani for your patience and support 🙂 .
LikeLike
Hi anith,
No pa..this is really nothing to do with that issue.. 😀 even though every word u said is like a diamond. This is truly my ” saathaarana” pathivu.
Bhuvanesh ..no ul kuththu.. 🙂 I think If i write anything now , it will look only that way .. 😦 Just know this for sure I am not a person who talk things at the back or indirectly of others ..I talk only at the front 😉 and may be that’s my drawback 😉 .
ippadi kaakka nalla murayil ketkaama, thirudittu odichchaam.. apapdi yezhuthi irunthaal thaan utkuththu .. 😀 😀 😉 enga paattikku yellam sema periya manasu. vadai suttal kakkaaiku koduthuttu thaan avangale saapduvaanga.. 😀 😆
Ani I will modify your comments that is posted here pa..I hope u r such a good friend who won’t mind. If u don’t like the modified version , let me know ..I will modify that as well .. 😀 ..
I hundred percent believe vaaimai eppadiyum vellum.
Thanks priya,
you seem to take the story in sportive way . Good girl ..Tell me what ur kid said ..Was she like pranav? Did she come up with any other tough question? Share it here..!!!
LikeLike
hi janu
no hard feelings. i am ok for that. catch u soon.
LikeLike
என்ன இது?? அக்கா நீங்க அபப்டி சொல்லலைன்னு எனக்கு நல்லா தெரியும்!! நான் கதைல ஒரு ட்விஸ்ட் கொடுக்க விளையாட்டா தான் செஞ்சேன்! மனிக்கவும்! மனிக்கவும்!
இனி கொஞ்ச நாள் நான் விளையாடாம இருக்கறது தான் நல்லது! சாரி!
அப்புறம் அனிதா, உங்கள் பதிலுக்கு நன்றி!!
உங்களை பற்றி நான் ஒன்னும் சொல்லவில்லை!! அந்த சங்கம் என்பது என் சங்கம்! நான் உங்களை யாரையும் எதுவும் சொல்லவில்லை! ஜானு அக்கா கூட மட்டும் தான் விளையாடினேன்!!
LikeLike
Hey Bhuvanesh …..I know you were just playing ….no need to ask sorry … Don’t take Anitha also seriously. Anitha also meant them jokingly..Also She is proving to be a friend in need is a friend indeed ..
Inimel bayam irukkattum ..ennai pahthti sonnaal avlothaan hahahaa… 😀 .. Betweeen, Thanks for accepting the invite.
LikeLike
ஹிஹிஹிஹி!
உள் குத்து ஒன்னும் இல்லைதானே!
ரசித்தேன்
LikeLike
Hi nice story with all twists.
u know my dad used to tell me that this story has newton law of gravity anything when dropped comes to ground due to gravitational pull.
@@@@@@@@@@@@@@@@@@@@@
Janu : Thanks krishyyy….I did discuss about newton law recently with pranav.. You know how he responded for that ..? I would put that as a separate post..
LikeLike
//Janu : Thanks krishyyy….I did discuss about newton law recently with pranav.. You know how he responded for that ..? I would put that as a separate post..//
Waiting for that akka !!
LikeLike
unge mooli seri illenu ninikiren neriye vide ungeluku thendire puthy adigem
LikeLike
Hello Ugenrajah,
உங்கள் முதல் பதிவிற்கும் , முதல் வருகைக்கும் நன்றி 😡 😡 😡
LikeLike
பாட்டி வடை சுட்ட கதை நன்றாக இருந்தது .புவனேஷ் -அனிதா உரையாடலையும் ,அதற்கு தாங்கள் பதில் அளித்த விதத்தினையும் நான் மிகவும் ரசித்தேன் .இக் கதையின் வழியாகத் தாங்கள் கூற விரும்பும் மூன்று நீதிகளில் ,மூன்றாவது நீதி எனக்கு மிகவும் பிடித்திருந்தது .இரண்டாவது நீதியினை என் அனுபவத்தில் உணர்ந்து இருக்கிறேன் .முதல் நீதியே தங்களுடைய முத்து மொழி எனலாம்.”பிரணவ” மந்திரம் ஓதியதன் பலனை நான் அடைந்தேன்!தங்கள் மகனுக்கு என் வாழ்த்துக்கள் !
LikeLike
“pattikalukku than peran mel evalavu pasam” intha vakkiyam than ennai aala vaithathu. unmai.
LikeLike
Hare Krishna Elaiyaraja,
Unga Paatti ninaivu vandu vittirukkumnu ninaikkiren.. inga ennudaya kuzhanthaigaloda paati aduththa vaaram indivirku thirumbip poraanga .. ithil en ilaya magan ennoda ammavidam aththanai ottuthal naane ven poraamai padum alavirku !!!! avaridam sendraal yennidam kooda vara maattaan .. naan oodi aadith thirinthu oottinaalum vaai thirakka maattaan ..aanaal avar utkaarntha idaththileye iruppaar… ivan oodi aadith thirinthu pin avaridam sendru vaai kaatti thaane unbaan .. naan devaki pola petrathu thaan ..yen amma thaan yashodai pola… peran galukkum paattigalukkum idayil irukkum intha paasam nichchayam aachchariyap pada vaikkirathu … kuzhanthaigalai samaalippathil naan kooda sila neram aluththuk kolgiren ..aanaal avargalin paattikku aluppe thattuvathu illai ..
krishnar thaan manathu vaiththu kuzhanthaigalukku periyavargalin aaseervaadamum aravanaippum yendrum thakkumbadi seya vendum …
romba nandri vanthu pathivil karuththai pagirnthu kondatharku …
matra yellorukkum ,’
ammaa voor thirumbuvathaal packing’il romba busy .. yengalukkum oor poga vendum aasai iruppathaal visa athu ithu endru busy .. neram kidaithtaal pathividugiren …
kaakka vaikka nernthamaikku mannippai yetruk kollavum 🙂
cheers,
Janu
LikeLike