ஒரு ஊருல ஒரு பாட்டி வடை சுட்டுக் கிட்டு இருந்தாங்களாம் ..ஒரு வடை இல்லை ரெண்டு வடை இல்லை.. நிறைய வடை ..எல்லாம் செம டேஸ்ட்டி வடை ..வகை வகையா ..இருந்தது அவங்க சுட்ட வடைகளனைத்தும் ..
‘சிறுகதைகள்’ பகுப்புக்கான தொகுப்பு
பிரணவ் கிட்ட சொன்ன “பாட்டி வடை சுட்ட கதை “
Posted in என் குடும்பம், கதைகள், சிறுகதைகள், ப்ரணவ் ம(த)ந்திரம், குறிச்சொல் இடப்பட்டது பாட்டி கதை, பாட்டி வடை சுட்ட கதை on மார்ச் 14, 2009 | 16 மறுமொழிகள் »
பஞ்சவர்ணக் கிளியும் ,அண்டங் காக்கையும்
Posted in கதைகள், சிறுகதைகள், ப்ரணவ் ம(த)ந்திரம், மற்றவை on மார்ச் 6, 2009 | 5 மறுமொழிகள் »
ஒரு ஊர்ல ஒரு பஞ்ச வர்ணக் கிளி இருந்துச்சாம். அதுக்கு பக்கத்து வீட்டுல
கன்னங் கரேல்னு ஒரு அண்டங் காக்கா வாழ்ந்துட்டு வந்துச்சாம். பஞ்ச வர்ணக் கிளி பார்க்கவே ரொம்ப ரொம்ப அழகாம். அதனோட அழகு மேல அதுக்கு ரொம்ப பெருமை. வெறும் பெருமை மட்டும் பட்டுகிட்டு சும்மா கிடந்தது இருக்கலாம் அந்தக் கிளி. ஆனா அதுக்கு இந்தக் கன்னங்கரேல்னு இருந்த அண்டங் காக்காவை தன்னோட ஒப்பிட்டுப் பார்த்து தன் அழகு மேல ஒரே கர்வம் வேற வந்துச்சாம்.
நான்.. பெண்.. காத்தாடி..
Posted in கதைகள், சிறுகதைகள் on மார்ச் 2, 2009 | 8 மறுமொழிகள் »
இன்றல்ல நேற்றல்ல ..என்றைக்குமே எனக்கு காத்தாடி என்றால் கொள்ளை பிரியம். காத்தாடியை பார்த்தாலே மனதிற்குள் ஒரு துள்ளல் எழும். பெயருக்கு ஏற்றபடி காற்றில் ஆடி ஆடி காத்தாடி மேலே பறக்கும் அழகே தனி. மெல்லிய நூலால் கட்டப் பட்ட காத்தாடி உயரே பறக்க பறக்க , அவிழ்த்து விட்ட வால் போல அங்கும் இங்கும் பறப்பது பார்க்கவே வெகு ஜோராக இருக்கும்.