This slideshow requires JavaScript.
கருமை நிறக் கண்ணா !என்னுடைய ப்ளாக் தோழி குந்தவை , இந்தக் கருத்தை திரைகடலில் வெளியிட்ட போதே , என்னுடைய கருத்தையும் விரிவாக பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று நினைத்தேன் …பின் இதையே ஒரு பதிவாகப் போட்டு விடலாம் என்று தோன்றியதால் … இந்தப் பதிவு
//
குந்தவை:-
அதை கூட சகித்து கொள்ளலாம்… என்னமோ கருப்பா இருந்தா ஒன்றுமே அவங்களுக்கு கிடைக்காது மாதிரியும்.. சிகப்பா இருந்தால் தன்நம்பிக்கை அதிகரிப்பதுடன் எல்லாமே சாதிக்கமுடியும் போலவும் காட்டுவதை தான் சகிக்கமுடியவில்லை. எனக்கு அந்த விளம்பரத்தை பார்த்தாலே எரிச்சலாக இருக்கும்.
//
கருப்பு நிறமாய் இருந்தால் இந்தியாவில் மதிப்பு கம்மி … பெண் கருப்பாய் இருந்தால் திருமணம் தள்ளிப் போகும்.. ரிசப்ஷனிஸ்ட் முதற் கொண்டு அலுவலகம் கூட்டும் வேலைக்கு ஆள் எடுப்பதாய் இருந்தாலும் மனிதர் சிகப்பாய் ஆள் பார்க்க நன்றாய் இருக்க வேண்டும் …அப்போது தான் நேர் முகத் தேர்வில் ஒரு சுற்று முடிந்து அடுத்த சுற்றிற்கு செல்ல முடியும் .. நல்ல குணமுள்ள ஒருவரை வெள்ளை யுள்ளம் கொண்டவர் என்றும், கொஞ்சம் அப்படி இப்படி என்று போக்கு காட்டுகிறவர்களை , உன் உள்ளமும் உன்னை போலவே கருப்பு என்று கேலி செய்யும் கொடுமை எல்லாம் தாங்க முடிவதில்லை ..
இதெல்லாம் பர வாயில்லை விவரம் புரியாத வயதிலேயே, குழந்தை கொஞ்சம் கருப்பாய் இருந்தால் , உன்னை ஹாஸ்பிடலில் மாற்றி விட்டார்கள் என்கிற வேடிக்கை பேச்சில் இருந்து, பருவ வயதில் விளையாடும் குழந்தைகளை , வெயிலில் விளையாடாதே , முகம் கருத்து அப்பறம் பார்க்க சகிக்க மாட்டாய் என்கிற வரையில் எல்லாமே கருப்பை தாழ்வுணர்ச்சியின் அடையாளமாகவே நம் நாட்டில் பெரும்பாலான மக்கள் சித்தரிக்கிறார்கள்..
அழகு என்றாலே நல்ல நிறமாய் இருப்பது என்கிற ஒரு மாயத் தோற்றம் வந்து விட்டது இப்போது .. !!!
ஆனால் பாருங்கள் .. கோகுலம் இருப்பது நார்த் இந்தியாவில் .. அங்கு தென்னகத்து மக்களை விட மக்கள் நிறத்தில் கொஞ்சல் கூடுதலாய் இருப்பார்கள் என்று கருதுகிறேன் .. அங்கு வளரும் நம் செல்லக் கண்ணன் கருப்போ கருப்பு ..அப்படி ஒரு கருப்பு … அந்த கருப்பை போல யாருமே கண்டது இல்லை ..எனவே அதை ஆழ்ந்த நீல வண்ணக் கருப்பு என்று கொண்டாடிப் பேசி மகிழ்ந்தார்கள் கோகுல வாசிகள் … அவர்கள் யாருமே ரொம்ப படிப்பு வாசமோ, பெரிய செல்வச் செழிப்போ இல்லாத வெகுளி மனிதர்கள் … இருந்தாலும் கண்ணனின் வண்ணமே சிறந்தது என்று அவர்களுக்குப் புரிந்தது .. நம் பெருமானும் தனது வண்ணமாய் கருப்பினையே தேர்ந்தெடுத்துக் கொண்டதில் இருந்தே இதன் சிறப்பை நாம் தெரிந்து கொள்ள வேண்டும் .. உடனே சிகப்பாய் இருந்தால் , வெள்ளையாய் இருந்தால் குற்றமா என்று யாரும் எண்ணி வருந்த வேண்டாம்
கண்ணனுக்கு அதுவும் பிடிக்கும் …மகா லக்ஷ்மி ராதை நல்ல பொன்னிறமாம் ..
ஒரு பெண் கருப்பாய் இருந்தால் , அவளுக்கு கண்ணனின் அம்சம் வந்திருப்பதை எண்ணியும், அவளே சிகப்பாய் இருந்தால் லக்ஷ்மியின் அம்சம் வந்திருப்பதாகவும் எண்ணி எப்படி இருந்தாலும் சந்தோஷப்பட வேண்டும் … நம்ம துருவிற்கு ராதையின் அம்சமும் கண்ணனின் அமசமும் கலந்து இருப்பதாய் எனக்குப் படுகிறது
(நான் தான் பேராசைக் காரியாயிற்றே .. எனவே கிருஷ்ணர் என் பேராசையை நிறைவேற்றி இப்படிக் குட்டிக் கண்ணனாய் என்னிடம் வந்திருக்கிறார் என்று நினைக்கிறேன் )
நம்ம குட்டி துருவ் பிறந்து சொன்ன முதல் வார்த்தை ராதா … அவன் முதன் முதலில் தானாய் எழுந்து ஓடிய நாள் நாங்கள் ஆண்டாள் கல்யாணம் செய்த பங்குனி உத்திரம் நாள் … ஓடி சென்று ராதை எடுத்துக் கையில் வைத்துக் கொண்டு ராதே ராதே என்று பாடினான் … பிறகு நடக்க சுத்தமாய் ஆர்வம் காட்டவே இல்லை .. ஆனால் முட்டி போட்டுக் கொண்டே நடப்பான் .. யானை போல் முட்டிக் கால் போட்டு இல்லை .. பெரிய மனிதர்களை போல, ஏதோ அவனுக்கு யாரோ தண்டனை கொடுத்து விட்டது போல .. அவ்வப்பொழுது கார் பெட்டில் மட்டுமே நடப்பான் .. தரையில் நடக்க ரொம்பவே தயங்குவான் … ஒரு வேளை குழந்தை பால் சரியாய் குடிக்காமல் இருப்பதால் , கால்சியம் குறைபாடு வந்து நடக்க முடிய வில்லையோ என்றெல்லாம் யோசித்துக் கொண்ட இருந்த போது திடீரென்று , நரசிம்மர் ஜெயந்தி முதற் கொண்டு ஒரேயடியாய் ஓடி யாடத் தொடங்கினான் ..
கிருஷ்ணா வை நானா என்பான் .. கோவிந்தாவை தாதா (பெரிய தாதா என்பது போல
) என்பான் .. ராதை மாத்திரம் ராதா என்று அழகாய் சொல்லுவான்.. மிருந்தங்கம் போன்ற அமைப்பில் எது கிடைத்தாலும் வாசிக்கத் தொடங்கிவிடுவான் … “ஆஆஅ ராதே ராதே ராதே.. ஆஆஅ..”என்று கீர்த்தனம் பாடிக் கொண்டே இருப்பான்..
குழந்தை பேசுவது மழலையாய் இருந்தாலும், லோகத்திற்கே தந்தையை சரியாய் நானா என்று சொல்வதில் எனக்கு சந்தோசம் .. எல்லோருக்கும் தலைவனான நம்ம திருமலை வாழ கோவிந்தனை தாதா என்று அழைப்பதில் பூரிப்பு .. எல்லாக் குழந்தையும் அம்மா வென்று சொல்லுமே என்று நானும் ஆசையாய் எதிர் பார்த்துக் கொண்டிருந்தாலும், ராதா என்று லோக மாதாவை முதலில் அழைத்ததால் அளவில்லாத மகிழ்ச்சி என்று யசோதையின் பாவத்தை எனக்கு ரொம்பப் புரிய வைத்த குழந்தை … என்னுடைய குரு … !
கண்ணனைக் காட்டுபவர் தானே நம் குரு ..நான் குழந்தை துருவில் கண்ணனையே காண்கிறேன் ..எனவே அவனே என்னுடைய குரு …
மேக வண்ணச் ஸ்யாமளனைக் காட்டி
கிருஷ்ணா சொல்லு என்றேன்
நானா என்றாய் …!
திருமலை வாழ் பெருமானைக் காட்டி
கோவிந்தா சொல்லு என்றேன்
தாதா என்றாய் !
அப்படி இல்லை இப்படி சொல்லு
என்று மீண்டும் மீண்டும் சொன்னேன் …!
கை கொட்டிச் செல்லக் குட்டி
நீ சிரித்த சிருங்காரச் சிரிப்பில்
சுள்ளென்று உறைத்ததடா,
நீ சொல்லாமல் சொன்ன பாடமெல்லாம் !
லோகத்திற்கு தந்தையை
நானா என்று நீ சொல்வதே சரி !
ஈரேழு லோகத்திற்குத் தலைவனை
தாதா என்று நீ அழைப்பதே உண்மை !
சொல்லித் தருவதை விட்டு விட்டு
கற்றுக் கொள்ள என் ஆசான்
இவர் மூலம் கற்றேன் பாடம்
பேசுவது மழலை சொல்லில்லை கேளீர்
மாயக் கண்ணனாம் இவர் பேச்சு
என் கண் திறக்கச் சொல்லும் வேதம் !
அழகு என்பது மனதில் இருக்கிறது என்பதை பதிவு வாயிலாக அனைவரும் உணரும் வண்ணம் தெரிய படுத்தியதற்கு நன்றி ஜானு
மற்றபடி குழந்தை கண்ணன் இப்படி தான் இருப்பாரோ என்று துருவ் வோட அழகான படங்கள் எண்ண வைக்கிறது .,
ஹரே கிருஷ்ணா
)
ஜானுவின் பதில் எதிர்பார்க்கிறேன்
குழந்தை துருவ் அழகு ; பிரணவ் வை கேட்டதாக சொல்லவும்
Hare Krsna,
will mail u in detail in a week of time .. I always want to write a detailed mail to you as it is a pleasure to write to a genuine freind like you who want to know more about Him .. ..that is the reason I am not getting enough time to mail you .. Hope our divya desa sutrula kojamenum niraiverum inda dadavai : ) vara konjam late aanaalum , we can do a lot if we plan ahead ..at least oru kovilaachchum onnaa polaam
perumal maththathai paarththupaar
Kids are doing great ! Pranav remebers you very well and asked me what you asked about him , LOL when I told him that you asked about him LOL.
Dear Priya,
How are you ? I am very sorry that I could not get back to you asap as intended. As Pranav’s term 2 holidays started, we got busy with that … Then My Amma is leaving in couple of weeks ..still my visa and children’s visa vanda baadillai
ஹரே கிருஷ்ண ஜானு
நலம் ;நலம் அறிந்து மகிழ்ச்சி !
வாங்க வாங்க…….. உங்க வருகையை ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருக்கிறேன்!
குழந்தைகள் பிரணவ்,துருவ் பார்க்கவாவது உங்க (அம்மா) ஊருக்கு வர கிருஷ்ணர் அருளட்டும்!
துருவ் வந்ததில் இருந்து ஏன் பிரணவை பற்றி ஏதும் எழுதுவது இல்லை?!
)))
ஒரு விஷயம் ஜானு
கார்த்திக் கண்ணா ரெம்ப குறும்பு செய்து கொண்டு இருந்தானா
இப்படி எல்லாம் செய்தே உன்னை கனடாவுக்கு அனுப்ப வேண்டி வரும்ன்னு சொன்னேனா
அதற்கு அவன் அம்மா ! அங்கே வேண்டாம்., என்னை ஆஸ்திரேலியா வுக்கு அனுப்பிடுங்க என்றான் சிரித்து கொண்டே!
அங்கே யார்டா இருக்காங்க என்றதற்கு ,தெரியாதா உங்களுக்கு ., உங்க friend இருக்காங்க இல்லே ;அங்க பிரணவ் இருக்கான் இல்லே
என்றான்
)))))))
Hare Krsna,
How sweet , kartik kannna !! You are welcome anytime here
Our visa is getting a bit delayed .. May be we will come in the year end ..Why not you bring your amma, appa and brother here kartik ? May be we can all go together
Priya,
Pranav patthi yezhuthitte irukkalaam .. He has become very matured and the way he talks, asks question etc .. make me feel I am not good enough to handle him !!! Ippa yellaam krsnarai patri yezhutha maathiram time kidachchale pothumnu alavirku ayittuthu .. life is very busy here ! Amma is leaving in 3 days ! so packing shopping nu irukkom! will mail u sooon !
ஹரே கிருஷ்ணா
ஆஹா! ஜானு நீங்க சொல்வது போல் அமைந்தால் எவ்வளோ நன்றாக இருக்கும்
ஹரிஷ் சொல்றான் ! அவன் பெரியவனாகி சம்பாரிச்சு எல்லா இடத்துக்கும் எங்களை கூட்டிட்டு போறானாம்
ஒரு வேளை அப்போ தான் வர முடியுமோ என்னவோ ! எல்லாம் கண்ணன் செயல் !
சரி சரி பிரணவ் பத்தி அப்பப்போ இது மாதிரியாவது ஒரு சில விஷயங்கள் சொல்லுங்க
)
அம்மா அங்கிருந்து கிளம்பி விட்டாரா?
நலமுடன் இந்தியா வந்து சேர்ந்து இருப்பார் என்று நினைக்கிறேன்..