மேனி பொன்னிறமாக … காஞ்சிபுரம் கோவில் இட்லி .. !!
ஹரே கிருஷ்ணா,
இந்தியாவில் மட்டும் அல்ல உலகம் முழு வதும் கிராக்கி அதிகம் உள்ள ஒரு விஷயம் என்னை அதிகம் வியப்பில் ஆழ்த்து கிறது. அதனுடைய விற்பனையும் கொடி கட்டிப் பறக்கிறது. பலரும் தாங்கள் இது வரை பார்த்துக் கொண்டிருக்கும் வெற்றி கரமான வேலையையே விட்டு விட்டும், இதன் உற்பத்தி மற்றும் விளம்பரப் பிரிவில் இணைந்து பெரும் பொருள் சம்பாதிக்கும் அனுபவங்களை கேட்கும் போதெல்லாம் இது போன்ற பொருட்களை எண்ணி மோசம் போகும் அப்பாவி மக்களின் நிலையை எண்ணி எனக்கு வேதனையாகவே இருக்கிறது ..
ஆரோக்கியம் மற்றும் அழகு தொடர்பான மூலிகை மருந்து தயாரிக்கும் கம்பனிகளே இப்படி லாபத்தில் சக்கை போடு போடுகின்றன. ஒவ்வொரு மூலிகை மருந்து மற்றும் இயற்கை மருந்துகள் தயாரிக்கும் கம்பனிகளின் வருடாந்திர லாபக் குறிப்புகளை பார்த்தால் எனக்கு ஆச்சரியத்தில் வாய் பிளக்கிறது .. சரி சரி நான் அப்படி எந்த கம்பனிகளின் வருடாந்திர லாப நஷ்ட கணக்குக் குறிப்புகளை எல்லாம் பார்த்தது இல்லை எனும் உண்மை ஒரு புறம் இருக்கட்டும் .. ஆனால் இவற்றை பற்றி நான் இங்கு குறிப்பிடுவது மட்டும் நிச்சயம் உண்மை ..!
மேனி சிவப்பழகு பெற இந்தக் கிரீமை உபயோகியுங்கள் .. ஆறே வாரத்தில் இவ்வளவு சிகப்பாகி விடலாம் .. !
இதற்கான விளம்பரங்களை பார்த்தால் , ஏற்கனவே நன்கு சிவப்பான ஒரு பெண்ணை அல்லது பிரபல நடிகையை முதலில் கருப்பான மேக் கப்பில் காட்டுவார்கள் .. வாரம் ஒண்ணு … வாரம் ரெண்டு என்று அவர் படிப் படியாக கண்ணை பறிக்கும் சிவப்பாக அல்லது பொன்னிறமாக மாறி விடுவார் ..
அடுத்து .. அளவுக்கு அதிகமாய் சாப்பிட்டு குண்டான ஒருவர் கடுகு சைஸை விட கொஞ்சம் பெரிதான ஏதோ ஒரு மூலிகை மருந்தை சாப்பிட்டதும் ரொம்ப ஒல்லியாய் ஆகிவிடுவார் ..
அடுத்தது சில நாட்டு வைத்தியர்கள் கேன்சர் முதல் மருந்தே கண்டு பிடிக்கப் படாத எயிட்ஸ் வரை எல்லாவற்றையும் தங்களுடைய பச்சிலை மூலிகை வைத்தியத்தால் குணப்படுத்தி விடுவதாய் மார் தட்டிக் கொள்வார்கள்.. !
இந்தக் காய கல்பத்தை சாப்பிட்டால் என்றுமே இளமையாய் வாழலாம் என்கிறார்கள் .. தங்க பஸ்பம் .. குங்குமபூ லேகியம் .. சகல நோக நிவாரணி என்று இவர்கள் ஏதேதோ சொல்லி அடைத்து கொடுக்கும் குப்பிகளையும், குடுவைகளையும் ஆயிரக் கணக்கில் செலவழித்து வாங்கித் தின்ன மக்கள் மந்தை மந்தையாய் போகிறார்கள்..!
ஆடும் மாடும் கூட தனக்குத் தெரியாத , தான் அதிகம் பழகாத எந்த உணவையும் தன் வாய்க்குள் நிரப்பிக் கொள்ளு வதில்லை .. நாமோ நாய் பட்ட பாடாய் , எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்பதாகி, எல்லா அரை குறை வைத்தியர்கள் பின்னால் ஓடிக் கொண்டே நம் காலத்தை கழித்து விடுகிறோம் ..
இது தொடர்பாக ஒரு சிறு கதையை உங்களுடன் பரி மாறிக் கொள்கிறேன் .. அதற்குப் பின் நீங்கள் பெருமாளுக்கு பரி மாற ஒரு அசத்தல் சமையல் குறிப்பினையும் தருகிறேன் ..
**************************
கோவிந்த தாசர் என்று ஒரு மனிதர் . அவர் வரத ராஜப் பெருமாளிடம் சென்று ஒரே அழுகை மற்றும் பெரிய முறையீடு !
” சுவாமி வரத ராஜப் பெருமாள் என்றாலே , வாய் விட்டு கூட இது வேண்டும் அது வேண்டும் என்று கேட்க வேண்டாம்னு சொன்னாங்களே .. மனசுல ஆசை பட்டாலே போதுமாம். உங்க முன்னால வந்து கூட கேட்கணும்னு இல்லை .. நீரே ஓடோடி வந்து அதை நிறை வேத்தி வைத்து விடுவீர்னு சொன்னாங்களே .. .. அப்படி இப்படி சொன்னதெல்லாம் பொய்யா .. நானும் தினசரி உங்க கிட்ட வந்து வேண்டிகிட்டே இருக்கேனே .. நான் ஒன்னும் பெரிய மகானோ அதுவோ இதுவோ இல்லை .. ஆனாலும் இப்படி ஒரு மாசமா வந்து உங்க முன்னாடி இப்படி அழுது வடியறேனே .. அதுக்காகவாவது எனக்கு கொஞ்சமாவது அனுக்ரகம் பண்ணக் கூடாதா .. இனிமே உங்களை வரத ராஜப் பெருமாள்னு கூப்பிடறதுக்கு பதில் , என்ன கூப்பிட்டும் வராத ராஜப் பெருமாள்னு சொல்றேன் நான் ” என்று விடாமால் ஓவென்று அழ ஆரம்பித்து விட்டார் ..
கோவிந்த தாசர் இப்படி அழ தொடங்கியதும் பெருமாளின் நெஞ்சோடு இருக்கும் தாயாருக்கு மனசே தாங்கலியாம் .. என்ன அந்தக் குழந்தை இப்படித் தத்துக்கா பித்துக்கானு உங்களை பார்த்து ஏதேதோ சொல்லிட்டே போறது .. உங்களை அப்படி எல்லாம் பேருக்கு சொன்னால் கூட எனக்கு மனம் தாங்காது .. என் மனசு ரொம்ப கஷ்டப்படும் என்று சொல்ல, பொண்டாட்டி மனசு கஷ்டப் படுவதை பார்த்து பெருமாள் தாங்குவாரா ! சரி உனக்காகவாவது அந்த கோவிந்த தாசருக்கு எதாவது செய்யறேன்னு சொல்லி , அந்தக் கோவிந்த தாசரை பார்த்து அசீரீரியாய் பேசத் தொடங்கினாராம் ..
“குழந்தாய் ..போதும் நீ ரொம்ப இப்படி அழுது படுத்தாதே .. எதுக்காக இப்படி அழறே “என்று அனுசரணையோடு கேட்டாராம் பெருமாள். ..
“நிஜமாகவே நீங்க தான் பேசறதா சுவாமி .. என்னால் நம்பவே முடியலியே .. ” என்று இவர் கண்ணைக் கசக்கிக் கொண்டு பார்க்க , பெருமாள் அர்ச்சா மூர்த்தியாய் சாந்தமாய் எப்பொழுதும் போலவே இருக்க இவருக்கு ஒன்றுமே புரியாமல் , இதெல்லாம் ஒரு வேளை பிரமையோ என்று தோன்ற மீண்டும் அழ ஆரம்பித்து விட்டாராம் ..
“ஏதோ உங்க அம்மா பெருந்தேவித் தாயார் உனக்கு ரொம்ப சப்போர்ட் பண்ணியதால் , நான் பேசறேன் .. அதுக்காக உனக்கு காட்சி எல்லாம் கொடுக்க முடியாது .. நேரத்தை வீணாக்காமல் என்ன வேண்டும்னு கேளுப்பா “என்று சொன்னாராம் .
அதுக்கு நம்ம கோவிந்த தாசர் பெருமாளை நோக்கி ” அப்பா .. எனக்கு வயசாகிட்டே போகுது .. ஒன்றும் பண்ண முடிய வில்லை .. வாய்க்கு ருசியாய் பொண்டாட்டி உருளைக் கிழங்கு வறுவல், சேப்பங்கிழங்கு கறி , வாழக்காய் பஜ்ஜி என்று செய்து போட்டால், அதை சாப்பிட்டால் பக்க வாதம் வந்து ஒரேயடியாய் படுத்தாலும் படுப்பேன் என்று ஏற்கனவே மூட்டு வலியால் கஷ்டப்படும் என் அம்மா சொல்கிறாள் .. சரி அவள் சமைத்த கத்திரிக்காய் பொடி தூவலாவது சாப்பிடலாம்னு பார்த்தால் , சருமம் கெட்டுப் போய் சொறி நோயால் என்னை போல் நீயும் கஷ்டப்படுவேன்னு எங்க அப்பா சொல்றார் ..
சரி கொத்தவரைக்காய் பருப்புசிலி , வெண் பூசணிக்காய் அவியல், புடலாங்காய் கூட்டு , சுரக்காய் பொரியல்னு வேறு மாதிரி வாய்க்கு ருசியாய் அவள் சமைக்க அதாவது சாப்பிடலாம்னா, அதைத் திண்ணு சீதளம் அதிகமாகி எங்களை மாதிரி மார் சளியால் கஷ்டப்படணுமான்னு என்னோட தாத்தா பாட்டியும் புலம்ப ஆரம்பிச்சிடறாங்க ..
வெளியில போனா நண்பர்களும் இப்பவே உனக்கு தலை மயிர் இவ்வளவு நரைச்சு போயிடுச்சே .. இவாளவு கருத்து போயிட்டியே..தொப்பை போட்டுட்டியே .. உடம்புல இவ்வளவு வெயிட் போட்டுட்டியே …. எண்ணை பலகாரம் மற்றும் இனிப்பெல்லாம் அதிகம் சேர்த்துக்காத.. இருதயத்துக்கு நல்லது இல்லைன்னு அது இதுன்னு ஏகமா என்னை ஒரேயடியாய் சதாய்த்து எடுக்கறாங்க .. நான் என்ன தான் சாப்பிடுவேன் .. நீங்களே சொல்லுங்க .. வேளைக்கு சாப்பிடலைனா எப்படி உயிர் வாழ்வேன் .. சாப்பிட்டாலும் பிரச்சனையை சாப்பிடமாமல் போனாலும் பிரச்சனை .. என்ன செய்வேன் .. நீர் தான் எனக்கு ஏதாவது உதவி பண்ணனும் ..என்று கேட்டு கண்ணைத் துடைத்துக் கொண்டாராம் .. “
தாயாருக்கு இவர் பெருமாளிடம் இப்படி கேட்க , கொஞ்சம் மனசு வருத்தப் பட்டதாம் ..
எனவே தாயார் அவரை பார்த்து .. “குழந்தே .. கோவிந்த தாசன்னு பெயர் வச்சிக்கிட்டு , அவருக்கு நீ எந்த சேவகமும் பண்ணாமல், அவர் உனக்கு ஏதாவது பண்ணனும்னு சொல்றியே .. அதுவும் இது போன்ற அல்ப விஷயங்களுக்கெல்லாம் அவரை தொந்தரவு பண்றியே , இது உனக்கே நியாயமாய் படுகிறதா ” என்று கேட்டாராம்.
இவர் .. “இந்த பெயரை எங்க அம்மா அப்பா இல்லை எனக்கு வச்சாங்க .. பெருமாளுக்கு நான் என்ன பண்ணுவேன் .. அவர் தானே இந்த லோகத்தையே பண்ணினார் .. என்னால் என்ன முடியும்.. இதுவரை எங்க குடும்பத்தாரும் சரி ..என்னுடைய நண்பர்களும் சரி கோரிக்கை வச்சு கிட்டு , அது நிறை வேருச்சுன்னா பெருமாளுக்குக் உண்டியலில் காணிக்கை போடறது தான் வழக்கமாய் வச்சி கிட்டு இருக்காங்க .. என்னை மாத்திரம் இப்படி எல்லாம் கேள்வி கேட்கரீங்களேன்னு .. ” இவர் மீண்டும் அழத் தொடங்க , பெருமாள் அதற்கு மேல் இவர் அழுகையை சகிக்க மாட்டாமல், “உனக்கு என்ன வேணும்னு கேளுப்பா .. அந்த வரத்தை தரேன் .. ஆனால் இந்த ஒரு தரம் தான் தருவேன் .. அப்பறம் நீ கூப்பிட்டு இப்படி அழுதால் எல்லாம் சும்மா சும்மா வந்து பேசிட்டு இருக்க மாட்டேன் .. ” என்று சொன்னாராம் ..
அவரும் , இந்த ஒரு வரமே போதும் வேறு ஏதும் கேட்கமாட்டேன் என்று சொல்லி, என்ன சாப்பிட்டாலும் தனக்கு ஒன்றும் ஆகக் கூடாது மேலும் தான் என்றும் இளமையாய் இருக்க வேண்டும்னு கேட்டுக் கிட்டாராம்.. பெருமாளும் சரின்னு சொல்லிட்டு அப்படியே வரம் கொடுத்தாராம் …
******************************************
நம்ம கோவிந்த தாசர் இப்ப வகை வகையாய் வக்கணையாய் சாப்பிடராராம் .. ரொம்ப இளமையாய் வேற தோற்றம் .. அவர் பொண்டாட்டி கூட வயதுக்கு ஏற்றது போல நரைத்த முடி, சுருக்கம் நிறைந்த முகம்னு பாந்தமாய், மங்கள கரமாய் , மரியாதைக்கு உரிய தோற்றத்தோடு இருக்க, இவர் வெளியில் போனால் , எல்லோரும் , இந்த வயசில் கூட எப்படி இந்த ஆளு சோக்காய் தலைக்கு டையெல்லாம் போட்டு கிட்டு திரியறான் பாரேன் .. ஒரு வயசுக்கு மேலாச்சும் திங்கறதுல நாட்டம் போயி பகவானோட பாதத்துல சரணாகதி எடுத்துக்க வேணாம் ! .. இந்த ஆளு சோக்காய் இப்படி பேரன் பேத்திகளுக்கு கல்யாணத்தை முடிச்சும் , சின்ன பைய்யன் மாதிரி வேஷம் போட்டுட்டு இள வட்டம் மாதிரி ஆட்டம் போடறதை பாரேன் .. கொஞ்சம் கூட சகிக்கலைன்னு இவர் காது படவே எந்நேரமும் பேசிக் கொள்கிறார்களாம் ..
***********************
எதையும் அளவோடு பகவானின் பிரசாதமாய் எடுத்துக் கொண்டால் பிரச்சனை இல்லை .. அதோடு நாற்பது வயதில் கொஞ்சம் தலை நரைக்கத் தொடங்கினால் அதை கண்டு ஏன் வருந்தணும் .. இந்தியாவின் சீதோஷ்ண நிலையில் இருப்பவர்கள் கொஞ்சம் மாநிறமாய் தான் இருப்பார்கள் ..அதில் வெட்கப் படுவதற்கு என்ன இருக்கிறது .. கருப்பு நிறக் கண்ணனை போல் தங்களுக்கும் அழகாய் அவரது நிறத்தின் சாயல் கொஞ்சம் வந்திருப்பதை எண்ணி சந்தோஷப் பட வேண்டும் இல்லையா ! அதைப் போய் மாற்ற முயற்சிப்பானேன் !!! !!!!
ஆரோக்கியமாய் இருப்பவர்கள் கொஞ்சம் பூசின மாதிரி இருப்பார்களே ஒழிய, வத்தலும் தொத்தலுமாய் இருக்க மாட்டார்கள் .. பகவானுடைய கைங்கர்யம் என்று ஓடி ஆடி வேலை செய்தால் எப்பவும் ஆரோக்கியமாய் இருக்கலாம் .. மல்டி நேஷனல் ஜிம் எல்லாம் சென்று உறுப்பினராய் சேர்ந்து ஆயிரக் கணக்கில் செலவழிப்பதை விட, ஊர்க் கோவில்களுக்கு சென்று வாரம் ஒரு தரமேனும் அவற்றை கூட்டிப் பெருக்கலாம்.. கோவில் துப்புரவு வேலைகளில் ஈடுபடாலாம்.. பெருமாளுக்கு மாலை கட்டிக் கொடுக்கலாம் .. கோவில் பணிகளில் உற்சாகமாய் ஈடுபடலாம் .. நான்கைந்து கிலோ மீட்டருக்குள் கோவில் இருக்கும் பட்சம், நடந்தே சென்று பெருமாளை சேவிக்கலாம் ..
வரம்னு தான் அப்ப நினைத்தது , இப்ப தனக்கு எத்தனை பெரிய தலை வலியாய் போய்டுச்சே என்று கோவிந்த தாசரும் ரொம்ப வருத்தப் பட்டுக் கொண்டு தொண்ணூறு வயதில் , மருந்து கடைகளுக்குச் சென்று வெள்ளை தலைச் சாயம் கிடைக்குமா என்று விநோதமாய் விசாரிக்க, எல்லோரும் அவரை ஒரு மாதிரி நோட்டம் விடுகிறார்களாம்
**********************
நாம எதுக்கு சுவாமியிடம் போய் கோரிக்கை , வேண்டுதல் இப்படி அப்படி என்று ஏகத்துக்கு demand செய்ய வேண்டும் .. நமக்கு நல்லது எதுன்னு அவருக்குத் தெரியும் ..அவர் அதை நமக்கு நிச்சயம் பண்ணுவார்னு அவர் மேல முழு நம்பிக்கை வைக்கணும் .. அதோட அவரை எப்படி முழுமையாய் இப்படிச் சரணடயணும்னு நம்மை சூழ்ந்துள்ள பக்தர்களை கவனித்து நாமும் கத்துக்கணும் .. நம் தமிழ் நாட்டில் தோன்றிய ஒவ்வொரு ஆழ்வாரும் ஒவ்வொரு விதமாய் சரணாகதி அடைய நமக்குக் கத்துத் தருகிறார்கள் ..
இந்த தொடரில் அவர்களை பற்றி என்னால் முடிந்ததை எழுதணும்னு , பெருந்தேவி தாயாரிடம் பிரார்த்தித்துக் கொள்கிறேன் ..
முக்கியம் 1 : கோவிந்த தாசர் ஒரு கற்பனைப் பாத்திரம் …
ரொம்ப முக்கியம் 2 :
காஞ்சிபுரம் வரத ராஜர் கோவில் இட்லி :- (நான் செய்யும் ரகம் ) தேவயான பொருட்கள் :
பச்சரிசி : மூன்று கப்
முழு தோல் நீக்கிய உளுந்தம் பருப்பு – இரண்டு கப்
நெய் – அரை கப் முதல் ஒரு கப் வரை
கறி வேப்பிலை – ஒரு பெரிய கைப்பிடி
முந்திரி பொடித்தது – ஒரு கப்
சுக்கு போடி – ஒரு ஸ்பூன்
பொடியாய் நறுக்கிய இஞ்சி – ஒரு டேபிள் ஸ்பூன்
மிளகு – ஒரு டேபிள் ஸ்பூன்
சீரகம் – ஒரு டேபிள் ஸ்பூன்
நல்ல மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை
கட்டிப் பெருங்காயம் -பொடித்தது ஒரு மூன்று ஸ்பூன்
தயிர் – இரண்டு கப் அல்லது மூன்று கப்
உப்பு – 2 ஸ்பூன்
பச்சரிசி மற்றும் பருப்பை நன்றாய் ஊற (குறைந்தது ஒரு நான்கைந்து மணி நேரம் ) வைத்துக் கொள்ளவும். பிறகு அதை நற நற என்று ரவைப் பதத்தில் ஒன்றாகவே சேர்த்து அரைத்துக் கொள்ளவும். அரைத்த மாவு கெட்டியாய் இருக்க வேண்டும். நிறைய நீர் சேர்க்கக் கூடாது .. பிறகு இந்த மாவில் தயிர், நெய், மேற் குறிப்பிட்டுள்ள பொருட்கள் எல்லாம் சேர்த்துக் கொள்ளவும்.
இட்லி கிண்ணங்களில் ஊற்றி ஆவியில் வேக வைத்து எடுக்கவும் ..
இதை மிளகாய் பொடி மற்றும் கார சட்னி யுடன் , காதலோடு பெருமாளுக்குப் பரிமாறவும்.
பிறகு அதை சாப்பிட்டு அந்த அனுபவத்தை என்னோடும் பகிர்ந்து கொள்ளுங்களேன் ..
****************************
கொசுறாய் ஒரு சும்மாக் கவிதை
உம் எச்சிலே நான் வேண்டும் அரு மருந்து
உம் மிச்சமே என்னிளமை காக்கும் காய கற்பம்
நிதம் மாறும் என்பு தோல் போர்த்திய
விலை யற்ற இவ்வுடலை நீங்கி நான்
நிகரற்ற நின் தாமரை பாதம் பற்ற நீர்
எமக்குத் தந்த அமிர்தமே உம் திவ்ய பிரசாதம் ..
இதை மட்டுமே சுவைத்து உமக்கே கதியாய்
சிறு அணில் போலச் சிறு துரும்பேனும் உமக்காய்
அசைத்திந்த இழி பிறப்பை நான் கழிக்க
நீர் எமக்குத் தந்ததே புவனியில் பெரும் வரம் ..
ஸ்யாமளக் கண்ணனே அவனியில் ராஜனே !
வேண்டாமல் வரமளிக்கும் வரத ராஜப் பெருமானே !
பெருந்தேவி தாயாரோடு எம் கலி தீர்க்க
எமக்காய் காஞ்சி மாநகரத்தில் அருள்தரவே உறைந்திருக்கும்
நின் செங்கமலப் பாதமே போற்றி! போற்றி! போற்றி !
****************************
//ஆரோக்கியம் மற்றும் அழகு தொடர்பான மூலிகை மருந்து தயாரிக்கும் கம்பனிகளே இப்படி லாபத்தில் சக்கை போடு போடுகின்றன. ஒவ்வொரு மூலிகை மருந்து மற்றும் இயற்கை மருந்துகள் தயாரிக்கும் கம்பனிகளின் வருடாந்திர லாபக் குறிப்புகளை பார்த்தால் எனக்கு ஆச்சரியத்தில் வாய் பிளக்கிறது //
//அடுத்து .. அளவுக்கு அதிகமாய் சாப்பிட்டு குண்டான ஒருவர் கடுகு சைஸை விட கொஞ்சம் பெரிதான ஏதோ ஒரு மூலிகை மருந்தை சாப்பிட்டதும் ரொம்ப ஒல்லியாய் ஆகிவிடுவார் ..//
இதன் தயாரிப்பு செலவு ருபீஸ் 10 என்றால் விற்பனை ருபீஸ் 100 என்பது ஒரு புறம் இருக்க
இதனால் ஏற்படும் சைடு எபக்ட்ஸ் இருக்கும் அழகு கூட குறைந்து போவது தான் வேதனை
நான் cycling machine வாங்கும் போது எனது தோழி சோனா பெல்ட் வாங்கினாள்
பெல்ட் கூட தேய்ந்து விட்டது ;அவள் உடல் எடை குறையவில்லை
இந்த பதிவை படிப்பவர்கள் விழிப்புணர்வு பெறுவார்கள் என்பது உறுதி
ஒருவன் / ஒருத்தி பரிட்சைக்கு அவளுக்கு பிடித்தமான பசு பற்றி நன்கு படித்து இருந்தாளாம்
ஆனால் பரிட்சையில் தென்னை மரம் பற்றி கேட்க பட்டு இருந்ததாம்
இவள் என்ன செய்வது என்று ஒரு நிமிடம் யோசித்து விட்டு
பசுவை பற்றி முழுவதும் எழுதி விட்டு கடைசி வரியில்
இத்தகைய பசு மாட்டை தென்னை மரத்தில் கட்டலாம் என்று எழுதி முடித்தாளாம்
அது போல எதை எழுதினாலும் கடைசியில் ஷ்யாமள கண்ணனிடம் முடிக்கும் சாதுரியத்தை வியக்காமல் இருக்க முடிய வில்லை ஜானு
பதிவுக்கு நன்றிபா..
//ஒருவன் / ஒருத்தி பரிட்சைக்கு அவளுக்கு பிடித்தமான பசு பற்றி நன்கு படித்து இருந்தாளாம்
ஆனால் பரிட்சையில் தென்னை மரம் பற்றி கேட்க பட்டு இருந்ததாம்
இவள் என்ன செய்வது என்று ஒரு நிமிடம் யோசித்து விட்டு
பசுவை பற்றி முழுவதும் எழுதி விட்டு கடைசி வரியில்
இத்தகைய பசு மாட்டை தென்னை மரத்தில் கட்டலாம் என்று எழுதி முடித்தாளாம்
அது போல எதை எழுதினாலும் கடைசியில் ஷ்யாமள கண்ணனிடம் முடிக்கும் சாதுரியத்தை வியக்காமல் இருக்க முடிய வில்லை ஜானு
பதிவுக்கு நன்றிபா..
//
ஹரே கிருஷ்ணா..
.. ப்ரியா.. எல்லாமே கண்ணனில் தொடங்கி கண்ணனில் மட்டுமே முடிகிறது என்று மனமார நம்புகிறேன் நான் ..
எல்லோரும் கண்ணனுக்கு சேவை செய்து, அவரின் பிரசாதத்தையே உண்ணாமல் இப்படிக் கண்ட கண்ட மூலிகை மருந்துகள், ஜிம் மெசின்கள் என்று வாங்கி சீரழிகிறார்களே என்பது தான் என்னுடைய உண்மையான கவலையும் ஆதங்கமும் .. இங்கு பசுவும் கண்ணனே .. தென்னை மரமும் கண்ணனே
//உங்க தோழி சோனா பெல்ட் வாங்கினாரா ? சோனா பெல்ட் என்றால் என்ன ? நான் கேள்வி பட்டது இல்லை ! அப்பறம் நான் அம்மாவோட இந்தியா வருவது கன்பார்ம் ஆகி விட்டது
சோ நீங்க காஞ்சிபுரம் வந்தால் நானும் நீங்களுமாய் சேர்ந்து சில திவ்ய தேசங்களை பார்த்து மகிழலாம் ..
நினைத்தாலே இனிக்கிறதே ….
//மேனி சிவப்பழகு பெற இந்தக் கிரீமை உபயோகியுங்கள் .. ஆறே வாரத்தில் இவ்வளவு சிகப்பாகி விடலாம் .. !
அதை கூட சகித்து கொள்ளலாம்… என்னமோ கருப்பா இருந்தா ஒன்றுமே அவங்களுக்கு கிடைக்காது மாதிரியும்.. சிகப்பா இருந்தால் தன்நம்பிக்கை அதிகரிப்பதுடன் எல்லாமே சாதிக்கமுடியும் போலவும் காட்டுவதை தான் சகிக்கமுடியவில்லை. எனக்கு அந்த விளம்பரத்தை பார்த்தாலே எரிச்சலாக இருக்கும்.
Hare Krsna,
Dear Petrecia,
How are you , your hubby and Kanmani ? Where are you now? In India ?
Yes .. It is a shame the government and public allow such advertisements to be broadcast. The kids who watch these kinds of Ads at very young age might really be badly influenced by this and lose self confidence.
Lucky I have seen these kinds of ads well before 7 years ago .. In sydney, We have no pay tv connections including australian channels.. We hardly watch tv except for some cartoons and news .. !!
What I can’t believe after seeing your comment is, the new dimension of such Ads in affecting the self confidence of people ,etc and as such as you mentioned. It is a pity that after all these years , Indian people are still after all these sort of creams and be influenced by them very easily. That is why these MNCs use the innocense or ignorance of our public to make huge profits .. It won’t happen in other countries..
ஆஹா! வாங்க வாங்க ;உங்களை பார்க்க,பேச எனக்கும் விருப்பம் !
மற்றபடி சோனா பெல்ட் என்பது வயிறு மற்றும் இடுப்பு பகுதியில் தேவை இல்லாத சதையை வைப்ரேசன் மூலமாக குறைக்கும்
பெல்ட் ஆகும் .,எப்போ இந்தியா வருகிறீர்கள் என்று மெயில் அனுப்புங்க ஜானு !
Once kuthavai got net link she will contact(write) you Janu!
i will try the menu
i like the above tiffin and i will do the same
very happy and interesting
welcomwe keep it up
i am very sad for your reply
Hare Krsna,
Dear Santha Devi ,
Welcome to Thiraikadal blog. Thanks for your comments. At the moment , I am little busy with two little children , one is 18 months old , who are keeping me very busy . Also some personall stuff and etc , etc etc….. Bhagavad kaimkaryam panna kooda sariyaa mudiyarathillai .. Alar mel mangai urai maarban thaan yellaaththayum poruththukkaraar ! Honestly I am not getting time to visit thiraikadal at all .. Krisna jayanthi/gokulashtami varuthennu vanden …
I don’t know why you are sad but everyone deserves to be happy as we are all His children who is determined to keep us happy forever.. Send me some of your prasadam recipes too in this blog …it will help everyone especially and including me. janmashtami recipe na, I will try and tell you how it came as well.
Thanks and cheers
Janu