பத்துப் பொருத்தம்
இது ஒரு கேள்வி பதில் தொகுப்பு .. இந்தக் கேள்வி பதில் வழக்கம் போல கொஞ்சம் (?!) பெரிசா ஒரு பதிவு போல இருந்ததால் இதை பதிவாவே போட்டுட்டேன் …
அன்புள்ள ஜனனிக்கு ,
தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்விற்கும் நன்றி (கருத்தைப் பகிரவைத்ததற்கும்!)
.
//
oru pen thannai vida kuraintha vayathu aanai thirumanam seiyalama? idhu sariya thavara? padhil udane thevai
//
ஒரு சில கேள்விகளை கேட்டு விட்டு பதில் உடனே தேவைன்னு சொல்லி இருக்கீங்க. எனக்கு இது போன்ற கேள்விகளுக்கு பதில் சொல்ல என்ன தகுதி இருக்குன்னு புரியலியே ! அதோட நீங்க ஏதாவது அவசரத்தில் இருக்கீங்களான்னும் புரியலை.
இந்த மார்ச் மாதம் பத்தொன்ம்பதாம் தேதி நான் பகவான் கண்ணனுக்கும் , ஆண்டாள் எனும் பூங்கோதைத் தாயாருக்கும் திருக்கல்யாணம் பண்ணி வைத்ததால், கல்யாணம் என்றால் எத்தனை பொறுப்பு வாய்ந்தது என்று சற்று புரிகிறது.
எது சரி எது தப்பு என்று சொல்வதற்கு எனக்கு ஞானமும் அனுபவமும் ரொம்பவும் கம்மி. ஆனால் நமது பெரியவர்கள் செய்து வைத்திருக்கும் கட்டுப்பாடுகள் என்கிற விதி முறைகள் பெரும்பாலும் நமது நன்மை ஒட்டியே இருக்கின்றது என்று நான் அபிப்ராயப் படுகிறேன். நம்முடைய சாஸ்திரங்களும் நமது நன்மையை ஒட்டியே இருக்கின்றன என்று நம்புகிறேன் .
அதன் படி பார்த்தால், ஒரு பெண் ஆணை விட வயதில் சிறியவளாய் இருந்தால் தான் , இல்லற வாழ்க்கைக்கு உகந்தது என்று பெரியவர்கள் கருதுகிறார்கள்.
பலவிதத்தில் இது சரி என்று எனக்குப் படுகிறது. ஆண்களை விட பெண்கள் மன ரீதியாக மிகவும் சீக்கிரத்திலேயே முதிர்வு அடைந்து விடுகிறார்கள். எனவே ஆண்களின் கல்யாண வயது பெண்களை விட அதிகமாய் இருந்தாலும், அவர்களைக் காட்டிலுமே பெண்கள் பெரும்பாலும் மன ரீதியாக முதிர்ச்சி பெற்றே இருக்கிறார்கள். இதனால் ஆணின் வயதை விட பெண்ணின் திருமண வயது குறைவாய் இருந்தாலும், அவள் திருமணத்திற்கு மனதளவில் தயாராகவே இருக்கிறாள் என்று கருதுகிறேன்.
அதோடு பெண்கள் இருபத்தி ஒன்று முதல் இருபத்தி ஆறு வயதிற்குள் குழந்தை பெற்றுக் கொண்டால் தாயும் சேயும் நலமாக இருப்பார்கள் என்கிறார்கள் . பெரும்பாலும் ஒரு பெண், குழந்தையை கருவுற்று சுமக்கும் போது மசக்கை, தலை சுற்றல், அயர்ச்சி என்று பெருமளவிற்கு உடல் ரீதியாகவும் , மன ரீதியாகவும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகிறாள் . அப்போது அவளை நன்கு கவனித்துக் கொள்ள அன்பான பொறுப்புள ஆட்கள் தேவை. இந்த சமயத்தில் அவள் வெளியில் சென்று வேலை செய்வதை விட, வீட்டில் இருந்து ஓய்வு எடுத்துக் கொண்டு , தன்னையும் குழந்தையும் பார்த்துக் கொள்வதே இருவருக்கும் சிறந்தது.
இதனால் மனைவியையும், குழந்தையும் நன்கு கவனித்துக் கொள்ள வேண்டியது கணவனின் பொறுப்பும் ஆகிறது. ஆண்கள் வயதில் குறைந்தவர்களாக இருந்தால் அவர்களுக்கு இந்த சமயத்தை எதிர் கொள்ளும் பக்குவம் இல்லாமல் போக வாய்ப்பு இருக்கிறது. மனைவி தன்னை கவனித்துக் கொள்வாளா ? தன் குழந்தையை கவனித்துக் கொள்வாளா ? இல்லை தன் கணவனை கவனித்துக் கொள்வாளா?
ஓரிரு வயது வித்தியாசமே என்றால் கூட, ஒரு நாற்பது வயது வரும்போது கணவன் மிகவும் ஆரோக்கியமாகவும், மனைவி அதிக வேலை பளுவாலும், பொறுப்புகளாலும் ரொம்பவும் தளர்வடைந்து தன்னுடைய வயதிற்கும் அதிகமான உடல் ரீதியான முதிர்வும் அது தொடர்பான உபாதைகளுக்கும் உள்ளாகும் வாய்ப்பும் அதிகம் என்று தோன்றுகிறது . சில நேரங்களில் வயதில் சிறியவர்களாய் இருந்தாலும் பல பெண்கள் குழந்தை பெற்றதும் கணவரை விட முதிர்ந்த தோற்றத்தை பெறுவதோடு மட்டும் இல்லாமல், ஆரோக்கியக் குறை பாடுகளுக்கு உள்ளாவதை நானே பல சமயங்களில் கண்டிருக்கிறேன்.
இப்படி பல விஷயங்களை அடுக்கிக் கிட்டே போகலாம். பொதுவாக ஒரு பெண்ணிற்கு தன்னை விட வயதில் குறைந்த ஆண்மகனை சந்திக்கும் போது சகோதரப் பாசமே ஏழும் என்று நான் நினைக்கிறேன்.
என்னமோ நீங்கள் என்ன அவசரத்தில் இருக்கிறீர்கள் என்று புரியவில்லை. திருமணம் என்பது ஆயிரம் காலத்துப் பயிர் என்கிறார்களே அது எத்தனை உண்மை. நாம் திருமணம் செய்து கொள்வது ஏதோ உணர்ச்சி வசப்பட்டு அவசர ரீதியாய் எடுத்த ஒரு முடிவாக இல்லாமல், அது ஒரு உயர்ந்த பண்புகளை உடைய இன்னுமொரு குடும்பத்தை இந்தச் சமூகத்திற்கு அளிக்கும் உன்னத விஷயம் என்ற தெளிவுடன் நிதானமாய் நடக்கும் ஒரு விஷயமாய் இருக்க வேண்டும் என்று அபிப்ராயப்படுகிறேன்.
இந்த அந்நிய நாடுகளில் ஆண்களை விட பெண்கள் வயதில் பெரியவர்களாய் இருக்கும் தம்பதியினரைக் கூட நான் அதிகம் சந்தித்திருக்கிறேன் . இது போன்ற தம்பதிகள் சில காலம் இணைந்து வாழ்கிறார்கள். பிறகு ஆண்டுகள் செல்ல செல்ல , ஆண்கள் தங்களை விட வயது குறைந்த பெண்கள் பால் ஈர்க்கப் பட்டு, அதன் விளைவாக முதல் திருமணத்தை ரத்து செய்து விட்டு இரண்டாவது திருமணம் செய்து கொள்வதையும் நான் பார்த்திருக்கிறேன் .
எல்லாவற்றையும் மீறி மனதார இறைவனை நினைத்துக் கொண்டு அவசரப் படாமல் நாம் மனதிற்கு பெரியவர் என்று ஏற்று மதிக்கும் ஒருவரை கலந்து ஆலோசித்து முடிவெடுத்தால் நிச்சயம் நல்லதே நடக்கும்.
இது ஒரு பொதுவான கருத்து. இதையும் மீறி ஒரு ஆண் தன்னை விட வயதில் பெரிய பெண்ணை (அதுவும் கணவரை விபத்தில் பறி கொடுத்த பெண்ணை அவளது குழந்தையுடன் ஏற்றுக் கொண்டவர்) திருமணம் செய்து கொண்டு, நன்கு மெச்சும்படி வாழ்ந்து கொண்டிருப்பதையும் நான் கேள்வி யுற்றிருக்கிறேன் ஜனனி. எனவே எதுவும் சந்தர்ப்பம் சூழ்நிலை எல்லாம் பார்த்துக் கணிக்கப் படவேண்டியவை.
அதோட முக்கியமான ஒரு விஷயத்தை சொல்ல மறந்துட்டேன் ஜனனி. கல்யாணம் என்கிறது நம்முடைய சம்பிரதாயம் மற்றும் கலாசாரப் படி ரொம்ப உயர்ந்த ஒரு விஷயம். அது ஏதோ சடங்கோ இல்லாட்டி போனா ஆடம்பரத்தை காட்டும் டம்பமோ இல்லை. கணவன் மனைவி என்னும் இரண்டு உறவுகளை தீர்மானிக்கரதோட மட்டும் இல்லாமல், அழகா அவர்களது குழந்தைகள், பின்பு அவர்களின் குழந்தைகள் என்று வளரும் ஒரு ஆலமரம், அதனாலேயே அதை ஆயிரம் காலத்துப் பயிர் என்கிறார்கள்.
அந்தக் காலத்தில் பத்துப் பொருத்தம் பார்த்து திருமணம் நிச்சயிப்பார்களாம். ஏதோ போன வருஷம் ஒரு புடவை வாங்கினேன் . அது விலை அதிகமா இருந்தாலும் சாயம் போய் பல்லை காட்டுது. இனி அந்தக் கடை பக்கமே போக மாட்டேன். அடுத்த வருஷம் அதை விட சூப்பராய் இன்னொரு புடவை வேற கடைல வாங்கணும் என்கிறது போன்ற சமாச்சாரமும் இல்லை . பிடிக்கலேன்னா அப்பறம் மாத்திகறதோ, இல்லாட்டி யாருக்கேனும் கொடுத்துட்டு புதுசா இன்னொன்னை எடுத்துக்கறதோ என்கிறது போன்ற விஷயம் இல்லை கல்யாணம் . ஒருவனுக்கு ஒருத்தி என்பதே நமது பாரம்பரியம்.
கணவன் மனைவி உறவு பழசாக ஆக, அவர்களது புரிதல், அன்னியோன்யம், ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்தல், அன்பு , ஆதரவு எல்லாம் கூடிட்டு போகும், போகணும் … சொல்லும்போதே எனக்கு கண்ணில் நீர் வருதே ஜனனி …! ஹரே கிருஷ்ணா .. ! இதெல்லாம் தான் கல்யாணத்தில் ரொம்ப முக்கியம். இதற்கு நான் சொல்லும் பத்துப் பொருத்தங்களும் உதவி புரிவதாக படுகிறது. ஏன்னா பல நேரங்களில் முன் பின் அதிகம் பழகாத ஒருத்தரை கல்யாணம் பண்ணிக்கும் சூழ்நிலைகளே நமக்கு வாய்க்கிறது . மேலும் இந்தக் காதல் திருமணங்களிலும் , ஒவ்வொருவருடைய நிஜமான சாயமும்(குணமும்) கல்யாணம் முடிந்தால் தான் தெரிகிறது. நீலச் சாயம் கலஞ்சு போய் ராஜ வேஷம் வெளுத்துப் போயி அப்பறம் ஒருத்தரை மாத்தி இன்னொருத்தர் சதா குத்திக் காட்டிக் கொண்டே இருப்பதை நான் என்னுடைய அனுபவத்தில் கண்டிருக்கிறேன்.
இதற்கெல்லாம் இந்தப் பத்துப் பொருத்தம் (நான் கீழே சொல்லி இருக்கும் ) ரொம்ப ஒத்தாசையாய் இருப்பதாகவே எனக்குப் படுகிறது. உதாரணமா சில கல்யாணம் மாப்பிள்ளை அழகாய் இருந்துட்டு பெண் சுமாராய் இருக்கிறதால் சரி வராமல் போய் நான் பார்த்திருக்கிறேன். பெண்ணின் சொத்திற்கு ஆசை பட்டு முதலில் கல்யாணம் செய்து கொள்ளும் ஆண், பிறகு அவளது சொத்தை எடுத்துக் கொண்டு, அவளை ஒதுக்கி வேறொருத்தியின் பின்னால் செல்வது நிகழ்கிறது.
பெண் ரொம்பப் படித்து ஆண் ரொம்பப் படிக்காமல் போனாலும் , “பொண்டாட்டி ரொம்ப படிச்சதால் கர்வி, ராங்கிக் காரி ” என்று சொந்தமும் பந்தமும் ஏற்றி விடுவதால் பல கணவர்மார்கள் பின்பு தாழ்வுணர்ச்சி கொண்டு இல்லற வாழ்க்கையையும் கெடுத்துக் கொள்வதையும் நான் கண்டிருக்கிறேன்..
அந்தஸ்து பேதமும் இப்படித்தான் ஆகிறது. என் பையனுக்கு கோடீஸ்வர சம்பந்தம் எல்லாம் வந்தது .. இந்த பொண்ணு அப்படி என்ன பெரிய ரதி ..இவளை தான் கட்டிப்பேன்னு ஒத்தைக் காலில் நின்று கட்டிக் கொண்டான் .. இப்ப கஷ்டப் படறான் .. என்று ஏற்றி விடுவதும் .. பிறகு இதுவே நாளடைவில் அவர்கள் உறவில் ஒரு விரிசல் ஏற்ப்பட காரணமாகவும் ஆகிறது ..
இதை எல்லாம் மீறி தெய்வ அனுக்கிரகம் இருந்தால் , எல்லாரும் சிறப்பாய் வாழலாம் ஜனனி .. அதுதான் கிருஷ்ணரை நினைத்துக் கொண்டு எல்லாம் அவர் பிரசாதம் என்று ஏற்றுக் கொண்டு அவருக்கே பக்தி செய்து வாழணும்னு பெரியவர்கள் சொல்லுகிறார்கள் .. ஜகத் பிதா இல்லியா.. நமக்கெல்லாம் எது நல்லது எது சரி இல்லைன்னு அவருக்குத் தெரியும் .. பாகவதத்தில் வரும் ருக்மிணி கல்யாணம் படித்தால் , திருமணம் தொடர்பான தடைகள் அகலும் , மனம் போன்ற வாழ்வும், கண்ணனைப் போன்ற உயர்ந்த ஆத்மாவே நமக்கு கணவராக அமையும் பாக்கியமும் கிட்டும்னு சொல்லுகிறார்கள் !
அப்பறம் முக்கியமாய் ஒன்னை தெரிவித்துக் கொள்கிறேன் .. எனக்கு ஜாதகம், ஜாதக ரீதியான பத்துப் பொருத்தத்தில் எல்லாம் ரொம்ப நம்பிக்கை இல்லை . (ஆனால் பலருக்கு இருப்பதால் இதையும் நீங்கள் யோசித்துப் பார்க்க வேண்டும் )நான் சொல்ற பத்துப் பொருத்தம் (அழகு, அறிவு, குணம்,ஆரோகியம்,கருத்தொருமித்தல், அந்தஸ்த்து, குடும்ப சம்பிரதாய முறைகள், பழக்க வழக்கங்கள், விருப்பு வெறுப்புகள், எல்லாவற்றிகும் மேலாக இறை பக்தி போன்கின்ற இவற்றை தான் .. இதெல்லாம் ஏதோ ஒரு தேதியில் பிறந்து விட்டு, ஒரு நட்சத்திரம் நமக்கென்று அமைந்து விட்டால் தானாய் வந்து விடும் என்பதிலும் எனக்கு துளியும் நம்பிக்கை இல்லை. நமக்கெல்லாம் ஓரளவு காமன் சென்ஸ் (பொதுவான நல்லது கெட்டதுகளை அலசிப் பார்க்கும் அறிவு) இருக்கிறபடியால், ஜோசியக் காரர்களை நம்பி ஓடாமல், பகவான் கண்ணனை நம்பி புத்தியோடு யோசித்து தீர்மானித்தல் நலம் என்பது என்னுடைய அபிப்ராயம் .
அழகு என்று நான் சொல்லுவதும் அக அழகை தான் . ஒவ்வொரு கணவருக்கும் தன மனைவி ரதி தேவியாய் தான் தெரிவாள். எதுவா இருந்தாலும் பதட்டப் படாமா, நிதானமா யோசிச்சு முடிவெடுங்க. கிருஷ்ணர் என்னைக்கும் உங்க கூடவே இருப்பார்.
மனிதர்களின் அபிப்ராயம் நாளுக்கு நாள் அனுபவங்கள் கூடக் கூட மாறும் தன்மை உடையது ஜனனி. அதனால் தான் வயதில் மட்டும் இல்லாமல் அனுபவத்திலும் முதிர்ந்தவர்களை இதற்கெல்லாம் கலந்தாலோசிக்க வேண்டும். என்னை அடுத்த வரடம் கேட்டால் வேறு சொல்வேனோ என்னமோ.. பெரிய விஷயங்களுக்கெல்லாம் இது போன்று இணைய தளங்களில் கிடைக்கும் பதில்கள் வைத்தெல்லாம் எதையும் தீர்மானிக்காமல் பகவானை பிரார்த்தித்துக் கொண்டு விடை தேடுங்கள் ஜனனி.
ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே
ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே
*******************
Hi Janu,
Excellent explanation for the question.
DINESH KAVITHA ENGA RENDU PERUKUM OREY ZODIAC (LEO) SO NAAGA KALYANAM PANNALAMA.. PLS SOLLUGA, ADUKU PARIKARAM IRUKA
Hare Krsna,
Ninga thappaana blog pakkam vandutteenga LOL. I understand you may be very serious in asking this but honestly I am not a right person to guide you in this regard. Athoda vazkayil ippadi jadagam parikaramnu thedarathai/oodarathai vida, oruththarai oruththar purinji kittu , vittuk koduththuk kondu, Annmeegamaana arokyamaana pazhakka vazhakkangalai merkondaal, yellorum nallabadi vaazhalaamgarathu en karuththu , kavitha!
Other than sharing some of my point of views, I don’t have any qualification or knowledge to guide anyone !
All the best,
Janu