திரைகடலில் பாதுகாக்கப் பட்ட பதிவுகளை படிக்க ..!

askfirst

வணக்கம்.நலம். நலமறிய ஆவல். சமீபத்தில் திரைகடலின் சில பதிவுகள் திரைகடலின் அனுமதி இன்றி களவாடப் பட்டுள்ளது. மேலும் பல இணைய தளங்களில் நடக்கும் இந்த மென் திருட்டு மிகவும் வருத்தத்தை அளிக்கும் ஒன்றாக உள்ளது. இதை தடுப்பது மிகவும் கடினமான ஒன்றாய் இருக்கிறது.

திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டினை ஒழிக்க முடியாது என்பார்கள். யார் திருடன் என்றே தெரியாத இணைய தளத்தில் நாம்(ன்!) சில முன்னேற்பாடுகளை செய்து தீர வேண்டியது அவசியமாகிறது . எனவே முதல் கட்டமாக, இங்கு வெளியிடும் கதைகளை , தொடர் கதைகள் மற்றும் சில இதர படைப்புகளை கடவுச் சொல் (Password) கொண்டு பாது காக்கும் முயற்சியில் இறங்கியுள்ளோம் .

நீங்கள் அவற்றை படிக்க விரும்பினால் , திரைகடலின் விதி முறைகளுக்கு உடன் படுவதாகக் கூறி , எங்களுக்கு ஒப்புதல் அளிக்கவும்.

திரைகடல், உங்களது பெயர், மின் அஞ்சல் முகவரி மற்றும் நீங்கள் வெளியிடும் இதர தகவல்கள் யாவையும் எந்த சூழ்நிலையிலும் தங்களின் அனுமதி இன்றி மற்ற எவருக்கும் வெளியிடாது என்று நாங்கள் உறுதி கூறுகிறோம்.

உங்களின் ஆதரவுக்கு எங்களின் மனமார்ந்த நன்றிகள் .

கடவுச் சொற்களை பெற இங்கு தொடுக்கவும் .

-திரைகடல்

(அப்பாடா …. திரை கடல் சார்பாக , கஷ்டப்பட்டு சுந்தரத் தமிழில் எழுதி முடிச்சிட்டோம் . .. ! ஒரு பழைய தமிழ் படத்தை நாலு தடவ பார்த்த effect தான் நீங்க மேல பார்த்து.. :D அதுல கொறை இருந்தா sorry … But please do cooperate with us.)

Your friend,
Janu
(on behalf of Thiraikadal )

)

தீபாவளி நல்வாழ்த்துக்கள்

தீபாவளி நல்வாழ்த்துக்கள்

அனைவருக்கும் எங்களின் உளம் கனிந்த தீபாவளி நல் வாழ்த்துக்கள்.

நான் இப்ப அழகிய வலை பூ பதிவர் !

நான் இப்ப அழகிய வலை பூ பதிவர் !

Beautiful Blogger Award

Beautiful Blogger Award

எனக்கு அழகிய வலை பூ (பதிவர்) விருதை வழங்கிய பதிவர் அடலேருவிற்கு எனது மனமார்ந்த நன்றிகள்.

ப்ரணவிற்கு வாரத்திற்கு இரண்டு அவார்டாவது அவனது ஸ்கூலில் தந்து விடுவார்கள். பிரேமும் வருடத்தில் ஒன்றாவது வாங்கி விடுவார். முதன் முதலில் சக வலைஞர் என்னை கவனித்து உற்சாகப் படுத்திக் கொடுத்த அவார்ட் என்பதால் இது ரொம்ப ஸ்பெஷல். அதுவும் தமிழில் எழுதுவதில் அத்தனை ஈடுபாடும், திறமையும் உள்ள ஒருவர் அளிப்பதில் நிஜமாகவே கவுரவமாய் உணருகிறேன்.

அவார்ட் பற்றி தெரிந்த தினம், பிரணவ் ஸ்கூலில் இருந்து வந்ததும் அவருக்குக் காட்டி கொஞ்சம் ஜாலியாய் ரவுசு பண்ண வேண்டும் என்றெல்லாம் திட்டம் போட்டேன். ஸ்கூல் வானில் இருந்து இறங்கியவர் கழுத்தில் வின்னர் செயின்சால் கட்டிய மாலையோடு கைகளில் நான்கு அவார்டை தூக்கிக் கொண்டு வந்தார் பாருங்கள்.. எனக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை.

அவரது அவார்டை காட்டி வழக்கம் போல பூரிப்போடு பெருமை பேச, நானும் சொன்னேன்..

நான்(முப்பத்தி இரண்டு பல்லையும் காட்டிக்கொண்டு ): ” மம்மி டூ காட் அன் அவார்ட்.. புஜ்ஜி “

பிரணவ்(நம்பிக்கையே இல்லாமல்) : இஸ் இட் பார் ரியல்.. வேர் இஸ் தி அவார்ட்..ஷோ மீ தென் .. ஷோ மீ தென் .. ( என்று ஒரே பர பரத்தார்)

மம்மி கைல எல்லாம் இல்லை புஜ்ஜி.. ஆனால் வெப் சைட்டில் இருக்கு என்று கூற, எதுக்கு உனக்கு அவார்ட் கொடுத்தார்கள் என்று நம்ப முடியாமல் மீண்டும் ஒரு கேள்வி..

நான்: மம்மி ஒரு ப்ளாகை நடத்தறேன் இல்லியா ..அது நல்லாருக்குன்னு சொல்லி ஒரு அங்கிள் கொடுத்தார்..

பிரணவ்: அவரு வேர்ல்ட் வைட் வெப்போட ப்ரின்சிபாலா இல்லாட்டி கேப்டனா ?

நான்: அது மாதிரிதான் .. அவங்க ரொம்ப அழகாய் ப்ளாக் எழுதறவங்க.. ப்ளாக் ரைடிங்க்ல அம்மாக்கு சீனியர்..

பிரணவ்: சரி உன்னோட அவார்டை காட்டேன் .. ஐ வான்ட் டு சி தட்!

நான்: இது தான் அந்த அங்கிள் கொடுத்த அவார்ட் ( என்று சொல்லியபடி அடலேறு அவர்களின் வளைய தளத்தை திறந்து காட்டினேன்.. அதற்குக் கீழே அவர் எழுதிய ஒரு கவிதை , அதன் தொடர்பான ஒரு பெண்ணின் படம்.. பெண்ணின் முகதத்தை கூந்தல் பாதி மறைத்து விட )

பிரணவ்: அது நீயா ? ( அப்போதுதான் அங்கு வந்த பிரேமும் சொல்லி வைத்தார் போல அதே கேள்வியை கேட்க )

நான் ( நாம என்ன அவ்ளோ கியூட்டாவா இருக்கோம் ! ) : இல்லை..இல்லை புஜ்ஜி ..அது வேற ஒரு போஸ்ட்..!

(பிரேமை பார்த்து என்னதான் முகம் புகைப்படத்தில் தெரியாமல் இருந்தாலும், உங்களுக்குக் கூடவா இப்படி ஒரு கேள்வி..கல்யாணமாகி செவன் இயர்ஸ் ஆச்சே..)

பிரேம்: ஐ தாட் இட்’ஸ் யுவர் ப்ளாக்..

பிரணவ்: அப்ப அந்த கேர்ள் யாரு மம்மி ..அந்த அங்கிளோட கேர்ள் பிரெண்டா ?

நான்: தெரியாது புஜ்ஜி.. அம்மாவோட அவார்டை பாரேன் பட்டு.. நல்லாருக்கில்லை ..

பிரணவ்: ம்ம்..நல்லாருக்கு.. பட் அதுல உன் பேரெல்லாம் போடவே இல்லையே .. தென் ஹொவ் கேன் இட் பி யுவர் அவார்ட்?

நான்: கீழே போட்டிருக்கு புஜ்ஜி.. ( என்று அடலேறு குறிப்பிட்டிருந்ததை படித்துக் காட்டினால்)
பிரணவ் : அதுல அம்மம்மா பேரு தானே இருக்கு .. உன் பேரில்லையே ..!

பிரேம் (ஹா ஹா என்று சந்தோஷமாய் சிரிப்பு ..)

நான்: மம்மி அம்மம்மா பேரில் தான் எழுதறேன்.. அது மம்மியோட சர் நேம் மாதிரி ..

பிரேம் (என்ன நினைத்தாரோ தெரியலை. ) : என் கன்னத்தில் முத்தமிட்டு, கங்கராஜுலேஷன்ஸ் என்று சொல்ல, பிரணவும் கேள்விகளை நிப்பாட்டி விட்டு அதையே செய்ய ஒரு வழியாய் தப்பித்தேன்..

ஆனால் பிரணவ் மாத்திரம் ரொம்ப நேரத்திற்கு அடலேறு வோட கார்ல் பிரெண்டை பற்றி என்னிடம் கேள்விகள் கேட்டுக் கொண்டிருந்தார்.. அது அங்கிளோட கேர்ள் பிரேண்டேல்லாம் இல்லை என்று சொன்னால், அது உனக்கெப்படி தெரியும் என்று எதிர் கேள்வி.. ஏன் அந்த அங்கிள் அந்த பெண்ணின் முகத்தை சரியாய் காட்டல என்று மேலும் கேள்வி.. இப்படியே ஏதேதோ கேள்விகள் ..

அடலேறு தான் இதுக்கு பதில் சொல்லணும்.. :)

எது எப்படி இருந்தாலும் அன்று நான் உற்சாகமாய் இருந்தது நிஜம். பிறகு தான் அவர் எனக்கு இது தொடர்பாய் அனுப்பி இருந்த மெயிலைக் கூட பார்க்க நேரிட்டது.. (சிலர் வழக்கம் போல) இதெயெல்லாம் நான் பெருமை அடித்துக் கொள்வதாக எடுத்துக் கொள்வதாய் இருந்தாலும், என் சந்தோஷத்தை இங்கு பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று தோன்றியதால் இந்தப் பதிவு..

Appreciation and approval are like wings to ones effort.. I hope It will help me write with more care and responsibility in future..

Cheers,
Janu

30 வகை வடாம், வத்தல்


30 வகை வடாம், வத்தல்

மரவள்ளி வடாம்

தேவையானவை: வேக வைத்து தோல் உரித்து மசித்த மரவள்ளிக்கிழங்கு – 2 கப், சீரகம் – அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன், மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு, எண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன்.

செய்முறை: மசித்த கிழங்கில் உப்பு, பெருங்காயத்தூள், மிளகாய்த்தூள், சீரகம் சேர்த்து பிசைந்து கொள்ளவும். ஒரு பிளாஸ்டிக் பேப்பரில் சிறிது எண்ணெய் தடவி, தண்ணீர் தெளிக்கவும். பிசைந்த கிழங்கிலிருந்து சிறிது எடுத்து பிளாஸ்டிக் பேப்பரில் மெல்லிய வட்டங்களாக தட்டவும். வெயிலில் நன்றாக காய வைத்து எடுக்கவும்.

——————————————————————————–

ஜவ்வரிசி தளிர் வடாம்

தேவையானவை: ஜவ்வரிசி – 2 கப், பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன், பச்சைமிளகாய் விழுது – ஒரு டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு, எலுமிச்சைச் சாறு – 2 டீஸ்பூன்.

செய்முறை: ஜவ்வரிசியை 3 முதல் 4 மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு வடிய விட்டு உப்பு, பெருங்காயத்தூள் பச்சைமிளகாய் விழுது, எலுமிச்சைச் சாறு சேர்த்து பிசையவும். இலை அல்லது தட்டில் எண்ணெய் தடவி, பிசைந்து வைத்துள்ள ஜவ்வரிசியில் சிறிது எடுத்து மெல்லிய வட்டங்களாக தட்டவும். இவற்றை இடியாப்ப தட்டில் தனித் தனியே வைத்து ஆவியில் வேக விட்டு, வெயிலில் காய வைத்து எடுக்கவும்.

——————————————————————————–

அரிசி ரவை வடாம்

தேவையானவை: அரிசி ரவை – 2 கப், பிரண்டை சாறு (பிரண்டையை நன்றாகக் கழுவி சிறு துண்டுகளாக நறுக்கவும். மிக்ஸியில் போட்டு தேவையான தண்ணீர் விட்டு அரைத்து வடிகட்டவும்) – 6 கப், பெருங்காயத்தூள் – அரை டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: கனமான பாத்திரத்தில் பிரண்டை சாறை ஊற்றி, பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து கொதிக்க விடவும். அதில் அரிசி ரவையை சிறிது சிறிதாக தூவி நன்றாக கிளறவும். அடுப்பிலிருந்து இறக்கி சிறிது நேரம் ஆற விடவும். இதில் சிறிது எடுத்து ஒரு பிளாஸ்டிக் பேப்பரில் லேசாக தட்டி காய விடவும். சின்னச் சின்னதாக கிள்ளிப் போட்டும் காய விடலாம்.

இந்த வடாம், பொரி அரிசி வாசனையுடன் சுவையாக இருக்கும்.

——————————————————————————–

அவல் பொரி வடாம்

தேவையானவை: அவல் பொரி – அரை கப், ஜவ்வரிசி – ஒரு கப், எலுமிச்சைச் சாறு – ஒரு டீஸ்பூன், பச்சைமிளகாய் விழுது – 2 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு, தண்ணீர் – ஒன்றேகால் கப்.

செய்முறை: ஜவ்வரிசியை முதல் நாள் இரவே ஊற வைக்கவும். மறுநாள் ஒரு கனமான பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி, கொதிக்க விடவும். இதில் உப்பு, பச்சைமிளகாய் விழுது சேர்த்து மேலும் சிறிது நேரம் கொதிக்க விடவும். பிறகு, ஊற வைத்திருக்கும் ஜவ்வரிசியை சேர்த்து நன்றாக கிளறி இறக்கவும்.

இறக்கும்போது அவல் பொரி, எலுமிச்சைச் சாறு சேர்க்கவும். லேசாக ஆறியதும், சிறிய கரண்டியில் எடுத்து பிளாஸ்டிக் பேப்பரில் இடவும். வெயிலில் நன்றாக காய்ந்ததும் எடுக்கவும்.

——————————————————————————–

கேழ்வரகு மாவு வடாம்

தேவையானவை: கேழ்வரகு மாவு – 2 கப், ஜவ்வரிசி மாவு – கால் கப், சீரகம் – அரை டீஸ்பூன், பச்சைமிளகாய் விழுது – ஒரு டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு, தண்ணீர் – இரண்டரை கப்.

செய்முறை: அடி கனமான பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க விடவும். நன்றாக கொதித்ததும் உப்பு, பச்சைமிளகாய் விழுது, சீரகம் சேர்த்து மேலும் சிறிது நேரம் கொதிக்க விடவும்.

பிறகு, கேழ்வரகு மாவு, ஜவ்வரிசி மாவு இரண்டையும் ஒன்றாக கலந்து ஒரு கையால் மாவை தூவிக்கொண்டே மறு கையால் கிளறவும். கெட்டியாக வந்ததும் அடுப்பிலிருந்து இறக்கவும். லேசாக ஆறியதும் முறுக்கு அச்சில் மாவை போட்டு பிழிந்து, வெயிலில் காய வைத்து எடுக்கவும்.

——————————————————————————–

பருப்பு வடாம்

தேவையானவை: துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, பயத்தம்பருப்பு, காராமணி – தலா அரை கப், உப்பு – தேவையான அளவு, காய்ந்த மிளகாய் – 8 முதல் 10, பெருங்காயத்தூள் – இரண்டரை டீஸ்பூன்.

செய்முறை: பருப்பு வகைகளுடன் மிளகாய், உப்பு சேர்த்து அரைக்கவும். அதில் பெருங்காயத்தூள் சேர்த்து நன்றாக பிசையவும். பிசைந்து வைத்துள்ள பருப்பு கலவையை சின்ன சின்ன உருண்டைகளாகப் பிடித்து வெயிலில் காய வைக்கவும்.

கூட்டு, சாம்பார் போன்றவற்றில் இதை பொரித்துப் போட்டால் சுவை கூடும்.

——————————————————————————–

கொத்தமல்லி வடாம்

தேவையானவை: ஜவ்வரிசி – 2 கப், பச்சைமிளகாய் விழுது – ஒரு டீஸ்பூன், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி – அரை கப், உப்பு – தேவையான அளவு, தண்ணீர் – 3 கப்.

செய்முறை: ஜவ்வரிசியை முதல் நாள் இரவு ஊற வைக்கவும். அடி கனமான பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க விடவும். கொதிக்க ஆரம்பித்ததும் பச்சைமிளகாய் விழுது, உப்பு சேர்த்து மேலும் 2 நிமிடம் கொதிக்க விடவும்.

அதில், ஊற வைத்த ஜவ்வரிசியை போட்டு வேகும்வரை அடி பிடிக்காமல் கிளறி விடவும். கெட்டியாக ஒட்டாமல் வந்ததும், நறுக்கி வைத்துள்ள கொத்தமல்லி இலைகளை சேர்த்து கிளறி இறக்கவும். லேசாக ஆறியதும் ஒரு பிளாஸ்டிக் பேப்பரில் மெல்லிய வடைகளாக தட்டி காய வைத்து எடுக்கவும்.

——————————————————————————–

கேரட்-ஜவ்வரிசி வடாம்

தேவையானவை: ஜவ்வரிசி – 2 கப், பச்சைமிளகாய் விழுது – ஒரு டீஸ்பூன், எலுமிச்சைச் சாறு – 2 டீஸ்பூன், கேரட் துருவல் – அரை கப், உப்பு – தேவையான அளவு, கேசரி கலர் – கால் டீஸ்பூன், தண்ணீர் – 3 கப்.

செய்முறை: ஜவ்வரிசியை முதல் நாள் இரவே ஊற வைக்கவும். மறுநாள், ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி அடுப்பில் வைத்து கொதிக்க விடவும். அதில் பச்சைமிளகாய் விழுது, உப்பு சேர்த்து மேலும் சிறிது நேரம் கொதிக்க விடவும்.

ஒரு கொதி வந்ததும் ஊறிய ஜவ்வரிசியை கொட்டி கிளறவும். ஜவ்வரிசி சிறிது வெந்ததும் கேரட் துருவல், எலுமிச்சைச் சாறு, கேசரி கலர் சேர்த்துக் கிளறி இறக்கவும். இதை, ஒரு பிளாஸ்டிக் பேப்பரில் சிறிய வில்லைகளாக இட்டு, காய வைத்து எடுக்கவும்.

——————————————————————————–

ஜவ்வரிசி – உருளைக்கிழங்கு வடாம்

தேவையானவை: ஜவ்வரிசி மாவு – 2 கப், வேக வைத்து தோல் நீக்கி, மசித்த உருளைக்கிழங்கு – அரை கப், பச்சை மிளகாய் விழுது – 2 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: மசித்த உருளைக்கிழங்குடன் பச்சைமிளகாய் விழுது, ஜவ்வரிசி மாவு, உப்பு சேர்த்து மிருதுவாக பிசையவும். தேவையானால் சிறிது தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம்.

பிசைந்த மாவை பெரிய துளைகள் உள்ள முறுக்கு அச்சில் போட்டு பிழிந்து, வெயிலில் காய வைத்து எடுக்கவும்.

——————————————————————————–

டபுள் பாய்லிங் அரிசி மாவு வடாம்

தேவையானவை: அரிசி மாவு – 2 கப், தண்ணீர் – இரண்டரை முதல் 3 கப், பச்சைமிளகாய் விழுது – அரை டீஸ்பூன், சீரகம் – ஒரு டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: தண்ணீரை கொதிக்க வைத்து, உப்பு, பச்சைமிளகாய் விழுது சேர்த்து மேலும் 2 நிமிடம் கொதிக்க விடவும். அதில் ஒரு கையால் அரிசி மாவை சிறிது சிறிதாக தூவிக் கொண்டே மறு கையால் கிளறி, அடுப்பை அணைத்து விடவும். மாவை கட்டியில்லாமல் நன்றாகக் கிளறி, குக்கரில் வெயிட் போடாமல் வேக விடவும். பத்து முதல் 15 நிமிடம் வெந்ததும் (கையில் தொட்டால் ஒட்டாத பதத்தில்) எடுக்கவும்.

மாவில் சிறிது எடுத்து உருட்டிக் கொள்ளவும். சப்பாத்தி பிரஷரின் மேல் ஒரு சிறிய பிளாஸ்டிக் பேப்பர் வைத்து அதில் உருண்டையை வைத்து, மேலே மற்றொரு பிளாஸ்டிக் பேப்பரால் மூடி அழுத்தினால் வட்டமான வடாம் கிடைக்கும். சப்பத்தி பிரஷர் இல்லையெனில் கைவிரல்களில் எண்ணெய் தடவி, மெல்லியதாக தட்டி வெயிலில் காய வைத்து எடுக்கவும்.

——————————————————————————–

புழுங்கலரிசி வடாம்

தேவையானவை: புழுங்கலரிசி – 2 கப், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: புழுங்கலரிசியை முதல் நாள் இரவே ஊற வைத்து மறுநாள் உப்பு சேர்த்து கெட்டியாக, நைஸாக அரைத்துக் கொள்ளவும். (தண்ணீர் அதிகமாகி விட்டால் அரைத்த மாவை ஒரு பேப்பர் மேல் இருபது நிமிடம் வைக்கவும். தண்ணீர் முழுவதும் வற்றி, மாவு கெட்டியாகிவிடும்.)

இந்த மாவை முறுக்கு அச்சில் போட்டு பிழிந்து, ஆவியில் வேக வைத்து, வெயிலில் காய வைக்கவும். காரம் சேர்க்காததால் இதை குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.

——————————————————————————–

ஓமப்பொடி வடாம்

தேவையானவை: அரிசி – 2 கப், ஜவ்வரிசி – கால் கப், பச்சை மிளகாய் விழுது – ஒன்றரை கப், எலுமிச்சைச் சாறு – ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் – அரை டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: அரிசியை நன்றாக களைந்து, ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். தண்ணீரை வடிய விட்டு, நிழலில் உலர்த்தி ஜவ்வரிசி யுடன் சேர்த்து மிஷினில் மாவாக அரைத்துக் கொள்ளவும். இந்த மாவை ஜல்லடையால் சலித்து கடாயில் லேசாக வறுக்கவும் (கோல மாவு போல் இருக்க வேண்டும்).

சலித்த மாவை மறுபடியும் கட்டியில்லாமல் சலித்து, பச்சைமிளகாய் விழுது, உப்பு, பெருங்காயத்தூள், எலுமிச்சைச் சாறு சேர்த்து கெட்டியாக பிசைந்து கொள்ளவும். இதை ஓமப்பொடி அச்சில் போட்டு பிழிந்து, ஆவியில் வேக விட்டு, வெயிலில் காய வைத்து எடுக்கவும்.

இந்த வடாம் எண்ணெயில் போட்டதுமே பெரியதாக பொரியும்.

——————————————————————————–

ஸ்வீட் ஜவ்வரிசி வடாம்

தேவையானவை: ஜவ்வரிசி – ஒரு கப், தண்ணீர் – ஒன்றரை கப், சர்க்கரை – அரை கப், முந்திரி, பாதாம் துண்டுகள் – 2 டீஸ்பூன், ஏலக்காய்த்தூள் – அரை டீஸ்பூன்.

செய்முறை: தண்ணீரை கொதிக்க வைத்து அதில் ஜவ் வரிசியை வேக விடவும். ஜவ்வரிசி நன்றாக வெந்ததும் அதில் சர்க்கரை, முந்திரி, பாதாம் துண்டுகள், ஏலக்காய்த்தூள் சேர்த்து கிளறி இறக்கவும்.

இது லேசாக ஆறியதும், ஒரு பிளாஸ்டிக் பேப்பரில் சிறிய வில்லைகளாக இட்டு, காய வைத்து எடுக்கவும்.

——————————————————————————–

அப்பளப்பூ வடாம்

தேவையானவை: அப்பளப்பூ – ஒரு சிறிய பாக்கெட், அரிசி, ஜவ்வரிசி சேர்த்து அரைத்த மாவு – 2 கப் (அரிசியையும் ஜவ்வரிசியையும் 5:1 என்ற அளவில் எடுத்து மிஷினில் கொடுத்து அரைத்துக் கொள்ளவும்), பச்சைமிளகாய் விழுது – 2 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு, தண்ணீர் – 3 கப்.

செய்முறை: அடி கனமான பாத்திரத்தில், தண்ணீரை ஊற்றி, உப்பு சேர்த்து கொதிக்க விடவும். நன்றாக கொதிக்க ஆரம்பித்ததும் அதில் மாவு, பச்சைமிளகாய் விழுதை சேர்த் துக் கிளறவும்.

கெட்டியாக கிளறியதும் அப்பளத்தை பொடித்து, சேர்த்துக் கிளறி இறக்கவும். ஆறியதும் முறுக்கு அச்சில் போட்டு பிழிந்து காய வைக்கவும். பிளாஸ்டிக் பேப்பரில் சிறிய உருண்டைகளாக கிள்ளிப் போட்டும் காய வைக்கலாம்.

——————————————————————————–

பொட்டுக்கடலை வெங்காய வடாம்

தேவையானவை: அரிசி, ஜவ்வரிசி (5:1 விகிதத்தில்) சேர்த்து அரைத்த மாவு – 2 கப், பொட்டுக்கடலை மாவு – அரை கப், பொடியாக நறுக்கிய வெங்காயம் – அரை கப், எலுமிச்சைச் சாறு – ஒன்றரை டீஸ்பூன், பச்சைமிளகாய் விழுது – 2 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு, தண்ணீர் – மூன்றரை கப்.

செய்முறை: அடி கனமான பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி கொதிக்க விடவும். நன்றாக கொதிக்க ஆரம்பித்ததும் உப்பு, பச்சைமிளகாய் விழுது சேர்த்து மேலும் சிறிது நேரம் கொதிக்க விடவும். அதில் மாவுகளை சிறிது சிறிதாக தூவி கிளறவும்.

சிறிது வெந்ததும் வெங்காயம் சேர்த்து அடி பிடிக்காமல் 5 நிமிடம் கிளறவும். பிறகு எலுமிச்சைச் சாறு சேர்த்து கலக்கி இறக்கவும். இதை பிளாஸ்டிக் பேப்பரில் சின்னச் சின்ன உருண்டைகளாக கிள்ளிப் போட்டு காய வைக்கவும்.

——————————————————————————–

ஜவ்வரிசி மோர் வடாம்

தேவையானவை: ஊற வைத்த ஜவ்வரிசி – 2 கப், புளித்த மோர் – ஒரு கப், பச்சைமிளகாய் விழுது – ஒரு டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: மோரில் பச்சைமிளகாய் விழுது, உப்பு, ஊறிய ஜவ்வரிசி சேர்த்து அடுப்பில் வைத்து கிளறவும். கலவை கெட்டியானதும் அடுப்பை அணைத்து விடவும்.

இந்த கலவையை ஒற்றை முறுக்கு அச்சில் போட்டு பிழிந்து காய வைத்து எடுக்கவும்.

சத்து மாவு வடாம்

தேவையானவை: சத்து மாவு – ஒரு கப் (கடைகளில் கிடைக்கும்), பச்சைமிளகாய் விழுது – அரை டீஸ்பூன், ஓமம் – அரை டீஸ்பூன், ஜவ்வரிசி மாவு – கால் கப், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: சத்துமாவுடன் பச்சைமிளகாய் விழுது, ஓமம், ஜவ்வரிசி மாவு, உப்பு அனைத்தையும் சிறிது தண்ணீர் சேர்த்து கெட்டியாக பிசையவும். இந்த மாவை முறுக்கு அச்சில் போட்டுப் பிழிந்து, ஆவியில் வேக விட்டு, வெயிலில் காய வைத்து எடுக்கவும்.

——————————————————————————–

பீட்ரூட் வடாம்

தேவையானவை: பீட்ரூட் சாறு – ஒரு கப், (பீட்ரூட்டை துருவி மிக்ஸியில் அரைத்து சாறு எடுக்கவும்), ஊற வைத்த ஜவ்வரிசி – ஒன்றேகால் கப், பச்சைமிளகாய் விழுது – ஒன்றரை கப், எலுமிச்சைச் சாறு – ஒரு டீஸ்பூன், ஃபுட் கலர் (சிவப்பு) – கால் டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: அடி கனமான பாத்திரத்தில் பீட்ரூட் சாறை ஊற்றி, உப்பு, பச்சைமிளகாய் விழுதை சேர்த்து கொதிக்க விடவும். கொதிக்க ஆரம்பித்ததும் அதில், ஊற வைத்த ஜவ்வரிசியை சேர்த்து அடி பிடிக்காமல் கிளறவும்.

பிறகு ஃபுட் கலர், எலுமிச்சைச் சாறை சேர்த்து கிளறி இறக்கவும். இது லேசாக ஆறியதும் கரண்டியால் எடுத்து பிளாஸ்டிக் பேப்பரில் இடவும். நன்றாக காய்ந்ததும் எடுக்கவும்.

——————————————————————————–

புதினா ஸ்பைசி வடாம்

தேவையானவை: ஊற வைத்த ஜவ்வரிசி – 2 கப், பொடியாக நறுக்கிய புதினா – கால் கப் (மிக்ஸியில் விழுதாக அரைத்துக் கொள்ளவும்), மிளகுத்தூள் – 2 டீஸ்பூன், சீரகத்தூள் – ஒரு டீஸ்பூன், பச்சைமிளகாய் – இஞ்சி விழுது – 2 டீஸ்பூன், எலுமிச்சைச் சாறு – 2 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு, தண்ணீர் – 3 கப் .

செய்முறை: அடி கனமான பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி கொதிக்க விடவும். கொதிக்க ஆரம்பித்ததும் உப்பு, புதினா விழுது, பச்சைமிளகாய் – இஞ்சி விழுது, மிளகுத்தூள், சீரகத்தூள் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.

அதில், ஊறிய ஜவ்வரிசியை கொட்டிக் கிளறி, வெந்ததும் எலுமிச்சைச் சாறு சேர்த்து இறக்கவும். லேசாக ஆறியதும் பிளாஸ்டிக் பேப்பரில் பெரிது பெரிதாக இடவும். நன்றாக காயவைத்து எடுக்கவும்.

காரசாரமான வடாம் இது.

——————————————————————————–

கம்பு மாவு மசாலா வடாம்

தேவையானவை: கம்பு மாவு – 2 கப், பொடியாக நறுக்கிய பூண்டு – 2 டீஸ்பூன், தண்ணீர் – 3 கப், பொடியாக நறுக்கிய வெங்காயம் – 2 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: அடி கனமான பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க விடவும். கம்பு மாவை சிறிது தண்ணீரில் கரைத்து, கொதிக்கும் தண்ணீரில் சேர்த்துக் கிளறவும். பிறகு பூண்டு, வெங்காயம், உப்பு சேர்த்து நன்றாக கிளறவும்.

எல்லாம் சேர்ந்து கெட்டியானதும் அடுப்பிலிருந்து இறக்கவும். பிளாஸ்டிக் பேப்பரில் மெல்லிய வட்டங்களாக தட்டவும். நன்றாக காய்ந்ததும் எடுக்கவும்.

——————————————————————————–

இலை வடாம்

தேவையானவை: அரிசி – 2 கப், கசகசா – 2 கப், சீரகம் – ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் – அரை டீஸ்பூன், பச்சைமிளகாய் விழுது – 2 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: அரிசியை 2 மணி நேரம் ஊற வைத்து கிரைண்டரில் நைஸாக அரைக்கவும். மாவில் உப்பு சேர்த்து 2 நாள் புளிக்க வைக்கவும். மூன்றாம் நாள் மாவு நன்றாக புளித்திருக்கும். இந்த மாவில் கசகசா, பச்சைமிளகாய் விழுது, சீரகம் சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி கலந்து கொள்ளவும். மாவு ரொம்பவும் கெட்டியாகவோ அல்லது தண்ணியாகவோ இருக்கக் கூடாது.

இரண்டு சொட்டு எண்ணெயை தண்ணீரில் விட்டு, அதில் துணியை நனைத்து மந்தார இலை (அ) வாழை இலையில் தடவவும். ஒரு கரண்டியில் சிறிது மாவை எடுத்து இலையில் மெல்லிய வட்டமாக தடவவும். அதை ஆவியில் வேக வைத்து எடுத்து வெயிலில் காய வைக்கவும். காயாத பச்சை வடாமே சாப்பிடுவதற்கு ருசியாக இருக்கும்.

நாள் முழுவதும் வெயிலில் காயவிட வேண்டிய அவசியம் இல்லை. முதல் நாள் 3 மணி நேரம் காயவிடவும். இரவில் அதை பத்து, பத்து வடாமாக அடுக்கி மேலே ஒரு வெயிட் வைக்கவும். மறுநாள் சிறிது நேரம் உலர்த்தவும். மூன்றாம் நாள் மறுபடியும் சிறிது நேரம் உலர்த்தவும். இப்படி உலர்த்துவதால் வடாம் சுருண்டு விடாமல் வட்டமாக இருக்கும். டப்பாவிலும் அதிகமாக வைக்க முடியும்.

——————————————————————————–

ரோஜாப் பூ வடாம்

தேவையானவை: அரிசி, ஜவ்வரிசி (5:1 விகிதத்தில்) சேர்த்து அரைத்த மாவு – 2 கப், சிவப்பு ஃபுட் கலர் – அரை டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: மாவில் தண்ணீர் விட்டு, ஃபுட் கலர், உப்பு சேர்த்து கெட்டியாக பிசையவும். கை விரல்களில் சிறிது எண்ணெய் தடவி, மாவை ரோஜா இதழ்களாக செய்யவும். இதழின் நடுவில் மாவை சிறியதாக உருட்டி மொட்டு போல வைக்கவும். இதை ஆவியில் வேக வைத்து, பிறகு வெயிலில் காய வைத்து எடுக்கவும்.

குழந்தைகள் பிறந்தநாள் விழாவின்போது பொரித்து வைத்தால் பார்க்க அழகாக இருக்கும். குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்.

——————————————————————————–

பூசணிக்காய் குழம்பு வடாம்

தேவையானவை: பூசணி துருவல் – ஒரு கப், உளுத்தம்பருப்பு – ஒரு கப், காய்ந்த மிளகாய் – 5 முதல் 8, உப்பு – தேவையான அளவு, பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன்

செய்முறை: உளுத்தம்பருப்பை அரை மணி நேரம் ஊற வைத்து காய்ந்த மிளகாய் சேர்த்து கெட்டியாக அரைத்துக் கொள்ளவும். அதனுடன் பூசணிக்காய் துருவல், பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து நன்றாக பிசையவும். பிசைந்த மாவை பிளாஸ்டிக் பேப்பரில் சிறிது சிறிதாக கிள்ளிப் போட்டு, நன்றாக காய்ந்ததும் எடுக்கவும்.

குழம்பு செய்யும்போது இதைப் பொரித்துப் போட்டால், சுவையும் மணமும் கூடும்.

——————————————————————————–

வாழைத்தண்டு சாறு வடாம்

தேவையானவை: ஜவ்வரிசி – ஒரு கப், வாழைத்தண்டு சாறு – ஒன்றேகால் கப், உப்பு – தேவையான அளவு, பச்சைமிளகாய் விழுது – ஒரு டீஸ்பூன், எலுமிச்சைச் சாறு – 2 டீஸ்பூன்.

செய்முறை: ஜவ்வரிசியை வாழைத்தண்டு சாறில் ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். அதை அடுப்பில் வைத்து கிளறவும். லேசாக கொதித்த தும் பச்சைமிளகாய் விழுது, உப்பு சேர்த்துக் கிளறி இறக்கவும்.

பிறகு அதில் எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கிளறவும். லேசாக ஆறியதும் பிளாஸ்டிக் பேப்பரில் வட்டமாக இட்டு, காய்ந்ததும் எடுக்கவும்.

——————————————————————————–

சுக்காங்காய் வத்தல்

தேவையானவை: சுக்காங்காய் (மளிகை கடைகளில் கிடைக்கும்) – ஒரு கப், சிறிது புளி, காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து அரைத்த விழுது – 3 டேபிள்ஸ்பூன்.

செய்முறை: சுக்காங்காயை நன்றாகக் கழுவி, சிறிய துண்டுகளாக நறுக்கவும். இதில் புளி – மிளகாய் விழுதைத் தடவி, அரை மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு இதை வெயிலில் காய வைத்து எடுக்க வும்.

இதில் வத்தக் குழம்பு வைத்தால் வாசனை ஊரைக் கூட்டும்.

——————————————————————————–

தாமரைத் தண்டு வத்தல்

தேவையானவை: சிறிய துண்டுகளாக நறுக்கிய தாமரைத் தண்டு – 2 கப், (காய்கறி கடைகளில் சொல்லி வைத்து வாங்கவும்), புளித் தண்ணீர் – அரை டேபிள்ஸ்பூன், மிளகாய்த்தூள் – ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: தாமரைத் தண்டை ஒருநாள் முழுக்க வெயிலில் காய வைக்கவும். மறுநாள் இதனுடன் புளித் தண்ணீர், உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து வேக விடவும். அதிகமாக குழையவிடக் கூடாது.

பிறகு தண்ணீரை வடிகட்டி வெயிலில் நன்றாக 2 (அ) 3 நாட்கள் காய வைத்து எடுக்கவும்.

——————————————————————————–

மேக்ரோனி வடாம்

தேவையானவை: மேக்ரோனி – ஒரு கப், பச்சைமிளகாய் விழுது – 2 டீஸ்பூன், ஊற வைத்த ஜவ்வரிசி – ஒன்றரை கப், மஞ்சள் ஃபுட் கலர் – கால் டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு, தண்ணீர் – 3 கப்.

செய்முறை: ஜவ்வரிசியில் பச்சைமிளகாய் விழுது, உப்பு, தண்ணீர் சேர்த்து நன்றாகக் காய்ச்சவும். மேக்ரோனியை கொதிக்கும் தண்ணீரில் போட்டு 2 முதல் 3 நிமிடம் சமைக்கவும். பிறகு வடிய விட்டு குளிர்ந்த நீரில் அலசி ஆற விடவும்.

காய்ச்சி வைத்துள்ள ஜவ்வரிசி கலவையுடன் வெந்த மேக்ரோனி, ஃபுட் கலர் சேர்த்து 5 நிமிடம் ஊற விடவும். பிறகு வெயிலில் காய வைத்து எடுக்கவும்.

——————————————————————————–

பிரண்டை வடாம்

தேவையானவை: அரிசி, ஜவ்வரிசி (5:1 விகிதத்தில்) கலந்து அரைத்த மாவு – 2 கப், பிரண்டை சாறு – 2 கப், பச்சைமிளகாய் விழுது – ஒரு டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு, பெருங்காயத்தூள் – அரை டீஸ்பூன், எலுமிச்சைச் சாறு – ஒரு டீஸ்பூன்.

செய்முறை: அடி கனமான பாத்திரத்தில் பிரண்டை சாறை ஊற்றிக் கொதிக்க விடவும். அதில் உப்பு, பச்சைமிளகாய் விழுது, பெருங்காயத்தூள் சேர்த்து மேலும் சிறிது நேரம் கொதிக்க விடவும்.

கொதித்ததும் மாவை ஒரு கையினால் தூவி மறு கையால் கெட்டியாக அடி பிடிக்காமல், மிதமான தீயில் கிளறவும். எலுமிச்சைச் சாறு சேர்த்து மேலும் சிறிது நேரம் கிளறி இறக்கவும். அந்த மாவை ‘தென்னம் பூ’ அச்சில் போட்டு பிழியவும். 2 முதல் 3 நாட்கள் வரை காய வைத்து எடுக்கவும்.

——————————————————————————–

தக்காளி வடாம்

தேவையானவை: ஊற வைத்த ஜவ்வரிசி – 2 கப், தக்காளி சாறு – 2 கப், ஆரஞ்சு ஃபுட் கலர் – அரை டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு, பச்சைமிளகாய் விழுது – ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் – அரை டீஸ்பூன்.

செய்முறை: அடி கனமாக பாத்திரத்தில் தக்காளி சாறை ஊற்றி உப்பு, பச்சைமிளகாய் விழுது சேர்த்துக் கொதிக்க விடவும். பிறகு ஜவ்வரிசியை சேர்த்துக் கிளறவும்.

இறக்கும்போது ஃபுட் கலர், பெருங்காயத்தூள் சேர்க்கவும். லேசாக ஆறியதும் மாவை ஒரு கரண்டியால் எடுத்து பிளாஸ்டிக் பேப்பரில் வட்டமாக இடவும். நன்றாக காய வைத்து எடுக்கவும்.

——————————————————————————–

பாகற்காய் வத்தல்

தேவையானவை: பாகற்காய் – 4, புளித் தண்ணீர் – ஒரு கப், மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: பாகற்காயை வட்டமாக நறுக்கி, புளித் தண்ணீரில் வேக வைக்கவும். இதில் உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து மேலும் 2 நிமிடம் வேக விடவும். தண்ணீரை வடிகட்டி, பாகற்காயை வெயிலில் காய வைத்து எடுக்கவும்.

குழம்பில் வறுத்து சேர்க்கலாம். சாதாரணமாகவும் வறுத்து சாப்பிடலாம்.

*************************************************************************************************

30 வகை கேரட் சமையல்

30 வகை கேரட் சமையல்

கேரட் மில்க் ஷேக்

தேவையானவை: துருவிய கேரட் – ஒரு கப், கெட்டியான பால் – ஒன்றரை கப், சர்க்கரை – 2 டீஸ்பூன், குங்குமப்பூ – ஒரு சிட்டிகை.

செய்முறை: கேரட்டை மிக்ஸியில் போட்டு, சர்க்கரை சேர்த்து அரைத் துக் கொள்ளவும். பிறகு பாலை ஊற்றி, மீண்டும் ஒருமுறை மிக்ஸியில் அரைத்து வடிகட்டி எடுத்துக் கொள்ளவும். இதில், குங்குமப்பூவை சேர்த்து (கெட்டியாக இருந்தால் சிறிது தண்ணீர் சேர்த்துக் கொள்ள லாம்) பரிமாறவும்.

தினமும் குடிப்பதாக இருந்தால் குங்குமப்பூ சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை.

——————————————————————————–

கேரட் ரைஸ்

தேவையானவை: பொடியாக நறுக்கிய கேரட் – 2 கப், பாஸ்மதி ரைஸ் – ஒரு கப், பட்டை – ஒரு துண்டு, கிராம்பு – 2, ஏலக்காய் – 1, புதினா – சிறிதளவு, முந்திரி, பாதாம் – தலா 5, காய்ந்த மிளகாய் – 3, நெய் – ஒரு டீஸ்பூன், எண்ணெய் – ஒரு டீஸ்பூன், மல்லித்தழை – அலங்கரிக்க, உப்பு – தேவையான அளவு.

செய்முறை: முந்திரி, பாதாமை லேசாக வறுத்துக் கொள்ளவும். ஒரு டீஸ்பூன் நெய் விட்டு பட்டை, கிராம்பு, ஏலக்காயை வறுக்கவும். கடைசியில் காய்ந்த மிளகாய் சேர்த்து வறுக்கவும். வறுத்த மசாலா பொருட்களை மிக்ஸியில் பொடிக்கவும். அதனுடன், முந்திரி, பாதாமையும் சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுத்துக் கொள்ளவும்.

பாஸ்மதி அரிசியை பத்து நிமிடம் தண்ணீரில் ஊற வைக்கவும் (அதிக தண்ணீர் சேர்க்க வேண்டாம்). பிறகு குக்கரில் எண்ணெய் ஊற்றி, அதில் புதினாவை போட்டு வதக்கி, பிறகு ஊற வைத்த அரிசியைப் போட்டு லேசாக வறுக்கவும். கேரட்டை மிக்ஸியில் அரைத்து சாறெடுக்கவும். இந்த சாறை வறுத்த அரிசியில் விடவும் (அரிசி மூழ்கும் அளவுக்கு தண்ணீர் இருந்தால் போதும். அதற்கேற்ப சாறெடுக்கவும்).

பிறகு உப்பு சேர்த்து, பொடித்து வைத்துள்ளவற்றை போட்டு நன்றாக கலக்கி, குக்கரை மூடி விடவும். ஒரு விசில் வந்ததும் இறக்கி, மேலே மல்லித்தழை தூவி அலங்கரிக்கவும்.

——————————————————————————–

கேரட் ஊறுகாய்

தேவையானவை: சற்று பெரிய துண்டுகளாக நறுக்கிய கேரட் – ஒரு கப், காய்ந்த மிளகாய் – 6, வெந்தயம் – கால் டீஸ்பூன், உப்பு – ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், எலுமிச்சை சாறு – ஒரு டீஸ்பூன், கடுகு – கால் டீஸ்பூன், நல்லெண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன்.

செய்முறை: கேரட் துண்டுகளை அரைவேக்காட்டில் வேக வைத்து, நீரை வடித்துக் கொள்ளவும். வெந்தயத்தை வெறும் கடாயில் எண்ணெய் விடாமல் வறுத்து, மஞ்சள்தூள் சேர்த்து பொடித்துக் கொள்ளவும். மிளகாயை அரை டீஸ்பூன் எண்ணெய் விட்டு, வறுத்து பொடித்துக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் வேக வைத்த கேரட் துண்டுகளைப் போட்டு அதில் வெந்தயப்பொடி, வறுத்த மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து நன்றாக குலுக்கி, பிறகு கடுகு தாளித்துக் கொட்டி, எலுமிச்சை சாறை விட்டு கைப்படாமல் கலக்கி வைக்கவும். தயிர் சாதத்துக்கு தொட்டுக் கொள்ள ருசியான ஊறு காய் இது!

——————————————————————————–

கேரட் கிரேவி

தேவையானவை: கேரட் துண்டுகள், பொடியாக நறுக்கிய தக்காளி – தலா ஒரு கப், பொடியாக நறுக்கிய வெங்காயம் – அரை கப், புதினா, மல்லித்தழை – சிறிதளவு, பச்சைமிளகாய் – 2, தனியாதூள் – ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன், பொடியாக நறுக்கிய இஞ்சி – ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன், கரம் மசாலாத்தூள் – அரை டீஸ்பூன், கடுகு, சீரகம் – தலா கால் டீஸ்பூன், பாதாம், முந்திரி – தலா ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு, விருப்பப்பட்டால் – எலுமிச்சை சாறு – ஒரு டீஸ்பூன்.

செய்முறை: தக்காளி, வெங்காயம், புதினா, மல்லித்தழை, பச்சைமிளகாய், இஞ்சி ஆகியவற்றை ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு லேசாக வதக்கி, ஆறியதும் அரைத்து வைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, அதில் கேரட் துண்டுகளைப் பொரித்துக் கொள்ளவும். அந்த எண்ணெயிலேயே கடுகு, சீரகம் தாளித்து, அதில் அரைத்து வைத்துள்ள தக்காளி கலவையை சேர்க்கவும். நன்றாக கொதித்ததும், கரம் மசாலாத்தூள், மஞ்சள்தூள், தனியாதூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து, சற்று கொதித்ததும் வறுத்து வைத்துள்ள கேரட் துண்டுகளை சேர்க்கவும். எல்லாம் சேர்ந்து நன்றாக கொதித்ததும், பாதாம், முந்திரியை 10 நிமிடம் ஊற வைத்து அரைத்து கடைசியில் சேர்த்து இறக்கி, எலுமிச்சை சாறை விடவும்.

பனீர், மசாலா அயிட்டங்களை விரும்பி சாப்பிடுபவர்களுக்கு ஏற்ற வித்தியாசமான டிஷ் இது!

——————————————————————————–

கேரட் – ராகி அடை

தேவையானவை: கேழ்வரகு மாவு, துருவிய கேரட் – தலா ஒரு கப், பொடி யாக நறுக்கிய மல்லித் தழை, பச்சை மிளகாய் – சிறிதளவு, புளித்த தயிர் – அரை கப், பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: ஒரு டீஸ்பூன் எண்ணெயில் பச்சைமிளகாய், மல்லித்தழையை போட்டு வதக்கி, கேரட்டை சேர்க்கவும். கேரட் சிறிது வதங்கியதும், அதில் புளித்த தயிருடன் அரை கப் தண்ணீர் சேர்த்து உப்பு, பெருங்காயத்தூளை போட்டு கொதிக்க விடவும். நன்றாக கொதித்ததும் கேழ்வரகு மாவை சிறிது சிறிதாக போட்டுக் கிளறி, வெந்ததும் இறக்கி விடவும். பிறகு சிறு உருண்டைகளாக உருட்டி தோசைக்கல்லில் போட்டு அடைகளாக சுட்டெடுக்கவும். விருப்பப்பட்டால் கிளறும்போது சிறிது தேங்காய் துருவல் சேர்த்துக் கொள்ளலாம்.

——————————————————————————–

டெல்லி கேரட் அல்வா

தேவையானவை: துருவிய கேரட் – 2 கப், சர்க்கரை – அரை கப், திக்கான பால் – 3 கப், நெய் – ஒரு டேபிள்ஸ்பூன், துருவிய பாதாம், முந்திரி, பிஸ்தா – ஒரு டேபிள்ஸ்பூன், ஏலக்காய்த்தூள் – கால் டீஸ்பூன்.

செய்முறை: அடி கனமான கடாயில் நெய் ஊற்றி, கேரட் துருவலைப் போட்டு நன்றாக வதக்கவும். மூன்று கப் பாலை ஒரு கப்பாக சுண்டக் காய்ச்சி, வதக்கிய கேரட்டில் விட்டு சர்க்கரை சேர்க்கவும். எல்லாம் சேர்ந்து கெட்டியானவுடன் ஏலக்காய்த்தூள் சேர்த்து இறக்கி, துருவிய பாதாம், முந்திரி, பிஸ்தாவை மேலே தூவவும்.

——————————————————————————–

கேரட் சமோசா

தேவையானவை: பொடியாக நறுக்கிய கேரட் – ஒரு கப், பச்சைபட்டாணி – கால் கப், புதினா, மல்லித்தழை, பச்சைமிளகாய் – சிறிதளவு, ஆம்சூர் பொடி – கால் டீஸ்பூன், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், பிரெட் துண்டுகள் – 2, கரம் மசாலாத்தூள் – அரை டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு, மைதா – முக்கால் கப், கார்ன்ஃப்ளார் – கால் கப், ரவை – ஒரு டீஸ்பூன்.

செய்முறை: மைதா, கார்ன்ஃப்ளார், ரவை மூன்றையும் சிறிது உப்பு சேர்த்து கெட்டியாக கலந்து வைத்துக் கொள்ளவும். கேரட், பட்டாணியை ஒரு பாத்திரத்தில் போட்டு, அதில் தண்ணீர் விடாமல் குக்கரினுள் வைத்து வேக வைக்கவும். இதனுடன், கரம் மசாலாத்தூள், புதினா, மல்லித்தழை, பச்சைமிளகாய் விழுது, ஆம்சூர் பொடி, மஞ்சள்தூள், பிரெட் துண்டுகள் சேர்த்து நன்றாக கலந்து வைத்துக் கொள்ளவும். மைதா கலவையை பூரிக்கு இடுவதுபோல் இட்டு, பாதியாக வெட்டி அதன் மேல் மசாலாவை வைத்து முக்கோண வடிவத்தில் மூடி, எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

இதற்கு கொத்தமல்லி கார சட்னி சூப்பராக இருக்கும்.

——————————————————————————–

கேரட் சப்பாத்தி

தேவையானவை: துருவிய கேரட் – ஒரு கப், பொடியாக நறுக்கிய வெங்காயத்தாள் – கால் கப், பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய் – ஒரு டீஸ்பூன், கோதுமைமாவு – ஒன்றரை கப், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: ஒரு பாத்திரத்தில் துருவிய கேரட், வெங்காயத்தாள், பச்சைமிளகாய், உப்பு சேர்த்து நன்றாக கலந்து, அதனுடன் கோதுமைமாவு, தண்ணீர் சேர்த்து சப்பாத்திக்கு பிசைவது போல் கெட்டியாக பிசைந்து கொள்ளவும். பிறகு வழக்கம்போல் சப்பாத்தியாக சுட்டெடுக்கவும்.

——————————————————————————–

கேரட் அவியல்

தேவையானவை: துருவிய கேரட் – ஒரு கப், பொடியாக நறுக்கிய வெங்காயத்தாள் – கால் கப், பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய் – ஒரு டீஸ்பூன், கோதுமைமாவு – ஒன்றரை கப், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: ஒரு பாத்திரத்தில் துருவிய கேரட், வெங்காயத்தாள், பச்சைமிளகாய், உப்பு சேர்த்து நன்றாக கலந்து, அதனுடன் கோதுமைமாவு, தண்ணீர் சேர்த்து சப்பாத்திக்கு பிசைவது போல் கெட்டியாக பிசைந்து கொள்ளவும். பிறகு வழக்கம்போல் சப்பாத்தியாக சுட்டெடுக்கவும்.

——————————————————————————–

கேரட் அப்பம்

தேவையானவை: மைதாமாவு – ஒரு கப், அரிசிமாவு – 2 டீஸ்பூன், வெல்லம் – கால் கப், கேரட் துருவல் – கால் கப், தேங்காய் துருவல் – ஒரு டீஸ்பூன், ஏலக்காய்த்தூள் – கால் டீஸ்பூன், முந்திரி துண்டுகள் – ஒரு டீஸ்பூன், நெய் – ஒரு டீஸ்பூன், எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை: கேரட் துருவலை நெய் விட்டு லேசாக வதக்கி வைத்துக் கொள்ளவும். வெல்லத்தை சிறிது தண்ணீர் விட்டு கொதிக்க வைத்த பிறகு இறக்கி வடிகட்டவும். அதில் மைதா, அரிசிமாவு, தேங்காய் துருவல், ஏலக்காய்த்தூள், முந்திரி துண்டுகள், வதக்கிய கேரட் சேர்த்து, இட்லி மாவு பதத்துக்கு கரைத்து, ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். எண்ணெயில் போட்டு அப்பமாக சுட்டெடுக்கவும்.

இதை அப்பக்குழியிலும் ஊற்றி செய்யலாம்.

——————————————————————————–

கேரட் கட்லெட்

தேவையானவை: துருவிய கேரட் – ஒரு கப், பொடியாக நறுக்கிய வெங்காயம் – கால் கப், பொடியாக நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய், புதினா, மல்லித் தழை – சிறிதளவு, ரஸ்க் தூள் – கால் கப், மிளகாய்த் தூள் – அரை டீஸ்பூன், கரம் மசாலாத்தூள் – கால் டீஸ்பூன், கடலைமாவு – கால் கப், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: கடலைமாவை தோசைமாவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும். கடாயில் இரண்டு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி புதினா, மல்லித்தழை, பச்சை மிளகாய், இஞ்சி போட்டு வதக்கவும். பிறகு வெங்காயத்தை சேர்த்து வதக்கி, துருவிய கேரட்டை சேர்க்கவும். கேரட் வதங்கியதும் உப்பு, கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள் போட்டு வதக்கி, கடைசியாக கரைத்து வைத்துள்ள கடலைமாவை ஊற்றி நன்றாக கிளறவும். மாவு வெந்து ஒட்டாமல் வந்ததும், ரஸ்க் தூளை சேர்த்து இறக்கவும். இந்தக் கலவை கெட்டியாக இருக்கும். விரும்பிய வடிவத்தில் செய்து கட்லெட்டாக எண்ணெயில் பொரித்தெடுக்கவும் அல்லது தோசைக்கல்லிலும் சுட்டெடுக்கலாம்.

தக்காளி சாஸ் இதற்கு ஏற்ற காம்பினேஷன்!

——————————————————————————–

டெல்லி கேரட் பாயசம்

தேவையானவை: துருவிய கேரட் – ஒரு கப், பால் – 2 கப், மில்க்மெய்ட் – கால் கப், சர்க்கரை – ஒரு டேபிள்ஸ்பூன், வறுத்த ட்ரை ஃப்ரூட்ஸ் – சிறிதளவு, குங்குமப்பூ – ஒரு சிட்டிகை, ஏலக்காய்த்தூள் – கால் டீஸ்பூன், நெய் – ஒரு டேபிள்ஸ்பூன்.

செய்முறை: அடிகனமான கடாயில் நெய் விட்டு, துருவிய கேரட்டை போட்டு நன்றாக வதக்கிக் கொள்ளவும். பிறகு, பாலை சேர்க்கவும். பால் சிறிது கொதித்ததும் சர்க்கரை, மில்க்மெய்டை சேர்க்கவும். எல்லாம் நன்றாக சேர்ந்து கொதித்ததும், அதில் குங்குமப்பூ, ஏலக்காய்த்தூள் சேர்த்து அடுப்பிலிருந்து இறக்கி, வறுத்து வைத்துள்ள ட்ரை ஃப்ரூட்ஸை கலந்து பரிமாறவும்.

சூடாகவோ, ஜில்லென்றோ விருப்பம் போல் சாப்பிடலாம்.

——————————————————————————–

கேரட் பக்கோடா

தேவையானவை: பொடியாக நறுக்கிய கேரட், கடலைமாவு – தலா அரை கப், அரிசிமாவு – ஒரு டேபிள்ஸ்பூன், ரவை – ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன், கறிவேப்பிலை, பச்சைமிளகாய் – சிறிதளவு, பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை: கேரட், கடலைமாவு, அரிசிமாவு, ரவை, உப்பு, பச்சைமிளகாய். கறிவேப்பிலை, மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள் எல்லாவற்றையும் சிறிது தண்ணீர் சேர்த்து கெட்டியாக பிசைந்து, எண்ணெயில் பக்கோடாக்களாக பொரித்தெடுக்கவும்.

——————————————————————————–

கேரட் பொடி

தேவையானவை: பொடி யாக நறுக்கிய கேரட் – அரை கப், கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு – தலா ஒரு டேபிள்ஸ்பூன், பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு, காய்ந்த மிளகாய் – 5.

செய்முறை: கடாயில் கால் டீஸ்பூன் எண்ணெய் விட்டு கேரட்டை வதக்கி வைத்துக் கொள்ளவும். பிறகு அதே கடாயில் அரை டீஸ்பூன் எண்ணெய் விட்டு, கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாயை வறுத்துக் கொள்ளவும். மிக்ஸியில் வறுத்த பருப்புகளை போட்டு பொடித்து, பிறகு உப்பு, வதக்கிய கேரட், பெருங்காயத்தூள் சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.

மிக்ஸியிலிருந்து எடுக்கும்போது கெட்டியாக இருந்தாலும், சற்று நேரத்தில் உதிர்ந்து விடும். சாதத்தில் பிசைந்து சாப்பிட சுவையாக இருக்கும்.

——————————————————————————–

கேரட் கார பொரியல்

தேவையானவை: நறுக்கிய கேரட் – ஒரு கப், எண்ணெய், உப்பு – தேவையான அளவு, பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன்.

வறுத்து அரைக்க: தனியா, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு – தலா 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 4.

தாளிக்க: கடுகு, உளுத்தம்பருப்பு – தலா கால் டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு.

செய்முறை: வறுக்கக் கொடுத்துள்ளவற்றை வறுத்து சற்று கரகரப்பாக பொடித்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, தாளிக்கும் பொருட்களை போட்டு தாளித்து, நறுக்கிய கேரட்டையும் போடவும். அதில் சிறிது தண்ணீர் ஊற்றி கேரட்டை வேக வைக்கவும். தண்ணீர் வற்றி கேரட் வெந்ததும் பொடித்து வைத்துள்ளவை, பெருங் காயத்தூள், உப்பு சேர்த்து கிளறி இறக்கவும்.

தித்திப்பும், காரமுமாக அபாரமாக இருக்கும் இந்த பொரியல்.

——————————————————————————–

கேரட் உசிலி

தேவையானவை: பொடியாக நறுக்கிய கேரட் – ஒரு கப், கடலைப்பருப்பு, துவரம்பருப்பு – தலா கால் கப், காய்ந்த மிளகாய் – 4, பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவை யான அளவு, கடுகு, உளுத்தம்பருப்பு – தலா கால் டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு.

செய்முறை: கேரட்டை சிறிது உப்பு சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும். கடலைப்பருப்பு, துவரம்பருப்பு, மிளகாய் மூன்றையும் அரை மணி நேரம் ஊற வைத்து, உப்பு பெருங்காயத்தூள் சேர்த்து சற்று கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து, அரைத்த பருப்பு விழுதை சேர்த்து குறைந்த தீயில் கிளறவும். பருப்புக் கலவை வெந்து உதிரியாக ஆனவுடன், அதில் வேக வைத்த கேரட்டை சேர்த்து வதக்கி, இரண்டு நிமிடம் கழித்து இறக்கவும்.

வத்தக்குழம்பு சாதத்துக்கு ஏற்ற சைடிஷ்!

கேரட் கார குழம்பு

தேவையானவை: சற்று நீளமான, பெரிய துண்டுகளாக நறுக்கிய கேரட் – அரை கப், புளி – எலுமிச்சை அளவு, மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், தேங்காய் துருவல் – ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

வறுத்து அரைக்க: துவரம்பருப்பு, கடலைப்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன், தனியா – 2 டீஸ்பூன், வெந்தயம், பெருங்காயத்தூள் – தலா கால் டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 6.

தாளிக்க: கடுகு, வெந்தயம் – தலா கால் டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, நல்லெண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன்.

செய்முறை: கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிக்கும் பொருட்களை போட்டு தாளித்து, அதில் கேரட் துண்டுகளை சேர்த்து வதக்கவும். புளியை ஒன்றரை கப் தண்ணீரில் கரைத்து ஊற்றவும். சிறிது மஞ்சள்தூள், உப்பு சேர்க்கவும். அரைக்க கொடுத்துள்ளவற்றை வறுத்து, தேங்காய் துருவலை சேர்த்து நைஸாக அரைத்துக் கொள்ளவும். கேரட் வெந்த பிறகு, அதில் அரைத்த விழுதை சேர்த்து நன்றாக கொதித்து கெட்டியானதும் இறக்கவும்.

——————————————————————————–

கேரட் கார அடை

தேவையானவை: பச்சைபயறு – ஒரு கப், துருவிய கேரட் – அரை கப், பச்சைமிளகாய் – 5, பச்சரிசி – கால் கப், பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு, தேங்காய் துருவல் – ஒரு டேபிள்ஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு.

செய்முறை: அரிசி, பயறு இரண்டையும் மூன்று முதல் நான்கு மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு உப்பு, தேங்காய் துருவல், பச்சைமிளகாய் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். அதனுடன் துருவிய கேரட், கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் சேர்த்து கார அடைகளாக சுட்டெடுக்கவும்.

சுட சுட சாப்பிட சூப்பராக இருக்கும்.

——————————————————————————–

கேரட் கோலா

தேவையானவை: துருவிய கேரட், பொட்டுக்கடலை – தலா ஒரு கப், கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள் – தலா ஒரு டீஸ்பூன், பொடியாக நறுக்கிய வெங்காயம் – கால் கப், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: பொட்டுக்கடலையை மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். கேரட், வெங்காயத்தை மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி எடுத்துக் கொள்ளவும். விருப்பப்பட்டால் 2 பல் பூண்டையும் சேர்த்துக் கொள்ளலாம். பொட்டுக்கடலை மாவு, அரைத்த கேரட் விழுது, கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள், உப்பு எல்லாவற்றையும் சேர்த்து கெட்டியாக கலந்து உருண்டைகளாக செய்து எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

——————————————————————————–

கேரட் சூப்

தேவையானவை: துருவிய கேரட் – 2 கப், நறுக்கிய தக்காளி – கால் கப், வெண் ணெய் – கால் டீஸ்பூன், பொடியாக நறுக்கிய வெங்காயம், மல்லித்தழை – தலா ஒரு டீஸ்பூன், உப்பு, மிளகுத்தூள் – தலா கால் டீஸ்பூன், கார்ன்ஃப்ளார் – ஒரு டீஸ்பூன்.

செய்முறை: கேரட், தக்காளியை இரண்டு கப் தண்ணீரில் இரண்டு முதல் மூன்று நிமிடங்கள் கொதிக்க விடவும். ஆறியதும், மிக்ஸியில் போட்டு அரைத்து வடி கட்டிக் கொள்ளவும். கடாயில் வெண்ணெயை போட்டு, அதில் வெங்காயத்தை போட்டு, பொன்னிறமாக வதங்கியதும், கேரட் சாறை விட்டு உப்பு சேர்க்கவும். எல்லாம் சேர்ந்து நன்றாக கொதித்ததும், கார்ன்ஃப்ளாரை சிறிது தண்ணீரில் கரைத்து விடவும் (சூப் கெட்டியாக இருப்பதற்காக கார்ன்ஃப்ளாரை பயன்படுத்துகிறோம். தேவைப்பட்டால் பிரெட் துண்டுகளை பொரித்துப் போடலாம்.). பிறகு மல்லித்தழை, மிளகுத்தூள் சேர்த்துப் பரிமாறவும்.

——————————————————————————–

கேரட் சிப்ஸ்

தேவையானவை: மெல்லிய வட்டங்களாக நறுக்கிய கேரட் – ஒரு கப், மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு, அரிசிமாவு – ஒரு டேபிள்ஸ்பூன்.

செய்முறை: நறுக்கிய கேரட்டை ஒரு அகலமான பாத்திரத்தில் போட்டு அதில் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து நன்றாக கலந்து பத்து நிமிடம் வைக்கவும். எண்ணெய் காய்ந்ததும், கேரட்டை எண்ணெயில் போடுவதற்கு முன் அரிசிமாவில் புரட்டி எடுத்து, பின் பொரித்தெடுக்கவும்.

ஒவ்வொரு முறையும் அரிசிமாவில் புரட்டி பொரிக்க வேண்டும். மொத்தமாக போட்டால் ஒட்டிக் கொள்ளவும்.

——————————————————————————–

கேரட் ரோல்

தேவையானவை: மைதாமாவு – ஒரு கப், கார்ன்ஃப்ளார் – கால் கப், துருவிய கேரட் – முக்கால் கப், துருவிய வெங்காயம் – கால் கப், பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய் – கால் டீஸ்பூன், அஜினமோட்டோ – ஒரு சிட்டிகை, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: மைதாமாவு, கார்ஃன்ப்ளாருடன் சிறிது உப்பு, தண்ணீர் சேர்த்து கெட்டியாக கலந்து கொள்ளவும். ஒரு டீஸ்பூன் எண்ணெயில் கேரட், வெங்காயம், பச்சைமிளகாய், உப்பு சேர்த்து, அஜினமோட்டோவும் சேர்த்து லேசாக வதக்கி இறக்கவும். மைதாமாவை உருட்டி நீளவாக்கில் இட்டு, அதில் கேரட் கலவையை வைத்து இருபுறமும் லேசாக மூடவும். பிறகு விரல் நீளத்துக்கு உருட்டி ரோல் போல் செய்து எண்ணெயில் பொரித்தெடுக்கவும். விருப்பப்பட்டால் சிறிது மல்லித்தழை சேர்த்துக் கொள்ளலாம்.

——————————————————————————–

கேரட் பணியாரம்

தேவையானவை: பச்சரிசி, புழுங்கலரிசி – தலா அரை கப், ஜவ்வரிசி – 2 டீஸ்பூன், துருவிய கேரட் – அரை கப், பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய் – ஒரு டீஸ்பூன், மல்லித்தழை – சிறிது, தேங்காய் துருவல் – ஒரு டேபிள்ஸ்பூன், பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: புழுங்கலரிசி, பச்சரிசி, ஜவ்வரிசி மூன்றையும் ஒன்றாக கலந்து மூன்று மணி நேரம் ஊற வைக்கவும். நன்றாக ஊறியதும், உப்பு சேர்த்து இட்லி மாவு பதத்தில் அரைத்துக் கொள்ளவும். அதனுடன், கேரட், தேங்காய் துருவல், பச்சைமிளகாய், மல்லித்தழை, பெருங்காயத்தூள் ஆகியவற்றை சேர்த்து பணியார குழியில் பணியாரங்களாக சுட்டெடுக்கவும்.

——————————————————————————–

கேரட் கோசம்பரி

தேவையானவை: துருவிய கேரட் – ஒரு கப், பயத்தம்பருப்பு – ஒரு டீஸ்பூன், தேங்காய் துருவல், பச்சைமிளகாய் – தலா ஒரு டீஸ்பூன், பொடியாக நறுக்கிய மல்லித்தழை – சிறிது, பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன், எலுமிச்சை சாறு – அரை டீஸ்பூன்.

செய்முறை: ஒரு பாத்திரத்தில் துருவிய கேரட், பயத்தம்பருப்பு, உப்பு, தேங்காய் துருவல், பச்சை மிளகாய், மல்லித்தழை, பெருங்காயத்தூள் எல்லாவற்றையும் சேர்த்து எலுமிச்சை சாறு கலந்து அரை மணி நேரம் ஊற விட்டு பரிமாறவும் (பருப்பும் நன்றாக ஊறிவிடும்). தேவைப்பட்டால் மாங்காயை பொடி யாக நறுக்கிப் போடலாம்.

——————————————————————————–

கேரட் மோர்குழம்பு

தேவையானவை: நீளத் துண்டுகளாக நறுக்கிய கேரட் – அரை கப், துவரம்பருப்பு, கடலைப் பருப்பு, தனியா – தலா ஒரு டீஸ்பூன், சீரகம் – அரை டீஸ்பூன், மல்லித்தழை – சிறிதளவு, இஞ்சி – சிறிய துண்டு, பச்சைமிளகாய் – 5, தேங்காய் துருவல் – ஒரு டேபிள்ஸ்பூன், தயிர் – ஒரு கப், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், தேங்காய் எண்ணெய் – 2 டீஸ்பூன், கடுகு – கால் டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, தனியா ஆகியவற்றை கால் மணி நேரம் ஊற வைக்கவும். ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு பச்சைமிளகாய், இஞ்சியை போட்டு ஒரு நிமிடம் வதக்கி, பிறகு அதில் ஊற வைத்த பருப்புக் கலவையை சேர்த்து மீண்டும் ஒரு நிமிடம் வதக்கி இறக்கவும். அதனுடன், தேங்காய் துருவல், சீரகம், மல்லித்தழை சேர்த்து நைஸாக அரைத்துக் கொள்ளவும். கேரட்டை வேக வைத்து அதில் அரைத்த விழுது, உப்பு சேர்த்து குறைந்த தீயில் கிளறவும். தேங்காய் எண்ணெயில் கடுகு, கறிவேப்பிலை தாளித்து கேரட் கலவையில் சேர்க்கவும். தயிரை மஞ்சள்தூள் சேர்த்து நன்றாக கடைந்து, கொதிக்கும் கேரட் கலவையுடன் சேர்த்துக் கலக்கி பரிமாறவும்.

——————————————————————————–

கேரட் கடலை கூட்டு

தேவையானவை: நறுக்கிய கேரட் துண்டுகள் – அரை கப், கொண்டைக் கடலை, துவரம்பருப்பு – தலா கால் கப், புளி – எலுமிச்சை அளவு, சாம்பார் பொடி – ஒன்றரை டீஸ்பூன், எண்ணெய் – 2 டீஸ்பூன், கடுகு – கால் டீஸ்பூன், கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன், மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: கொண்டைக்கடலையை முதல் நாள் இரவே ஊற வைக்கவும். துவரம்பருப்பை மஞ்சள்தூள் சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும். புளியை ஒரு கப் தண்ணீரில் கரைத்து உப்பு சேர்த்து கேரட்டையும் போட்டு வேக விடவும். கடலையை வேக வைத்து, கேரட்டுடன் சேர்க்கவும். கொதித்ததும் அதில் பெருங்காயத்தூள், சாம்பார் பொடி சேர்க்கவும். துவரம்பருப்பை நன்றாக குழைய மசித்து கேரட் கலவையுடன் சேர்க்கவும். எல்லாம் சேர்ந்து கொதித்ததும் இறக்கி, கடுகு, கறிவேப்பிலை தாளித்துக் கொட்டவும்.

——————————————————————————–

கேரட் துவையல்

தேவையானவை: துண்டுகளாக நறுக்கிய கேரட் – ஒரு கப், வேர்க்கடலை – கால் கப், கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 6, பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன், கடுகு – கால் டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: வேர்க்கடலையை வெறும் கடாயில் வறுத்துக் கொள்ளவும். கால் டீஸ்பூன் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய் போட்டு வறுத்துக் கொள்ளவும். கால் டீஸ்பூன் எண்ணெயில் கேரட்டை வதக்கி வைத்துக் கொள்ளவும். கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, மிளகாய் ஆகியவற்றை முதலில் பொடித்து, பிறகு வேர்க்கடலையை சேர்த்துப் பொடிக்கவும். கடைசியாக பெருங்காயத்தூள், வதக்கிய கேரட் சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு கெட்டியான பதத்தில் துவையலாக அரைத்தெடுக்கவும்.

இதை இட்லி, தோசைக்கு தொட்டுக் கொள்ளலாம்.

——————————————————————————–

கேரட் கத்திலி

தேவையானவை: முந்திரி துண்டுகள் – ஒரு கப், துருவிய கேரட், சர்க்கரை – தலா அரை கப், நெய் – 2 டீஸ்பூன், கேசரி கலர் – சிறிதளவு.

செய்முறை: முந்திரி மூழ்கும் அளவுக்கு தண்ணீரில் அரை மணி நேரம் ஊற வைக்கவும். ஊறியதும் கேரட் துருவலுடன் சேர்த்து கெட்டியாக அரைத்துக் கொள்ளவும். ஒரு கடாயில் சர்க்கரையைப் போட்டு, சிறிது தண்ணீர் ஊற்றி கரைந்ததும் அடுப்பில் வைத்து, அரைத்து வைத்துள்ள முந்திரி – கேரட் விழுதை சேர்க்கவும். இரண்டும் சேர்ந்து கெட்டியாக வரும் பதத்தில் நெய் சேர்த்து குறைந்த தீயில் கிளறி இறக்கவும். பிறகு கலர் சேர்த்து விரும்பிய வடிவில் செய்து கொள்ளலாம்.

——————————————————————————–

கேரட் கார ஜூஸ்

தேவையானவை: துருவிய கேரட் – ஒரு கப், கெட்டியான மோர் – கால் கப், பச்சைமிளகாய் – 1, பொடியாக நறுக்கிய மல்லித்தழை – சிறிதளவு, பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன், சீரகத்தூள் – கால் டீஸ்பூன். உப்பு- தேவையான அளவு.

செய்முறை: கேரட்டை அரை கப் தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் அரைத்து சாறெடுக்கவும். மோரை கடைந்து கொள்ளவும். இரண்டையும் சேர்த்து, அதில் சீரகத்தூள், பெருங்காயத்தூள், உப்பு, பொடியாக நறுக்கிய மல்லித்தழை போட்டு, பச்சைமிளகாயை அரைத்து கலந்து பருகவும்.

——————————————————————————–

கேரட் ஜாம்

தேவையானவை: துருவிய கேரட் – ஒரு கப், சர்க்கரை – அரை கப், தேன் – ஒரு டீஸ்பூன், உப்பு – ஒரு சிட்டிகை.

செய்முறை: கேரட்டை குக்கரில் வேக வைத்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். பிறகு சர்க்கரையுடன் சேர்த்து குறைந்த தீயில் வைத்து கடாயில் போட்டுக் கிளறவும். இரண்டும் சேர்ந்து ஜாம் பக்குவத்தில் வந்ததும் இறக்கி, ஆறியதும் தேன் சேர்த்துக் கிளறவும்.

************************************************************************************************

30 வகை கத்தரிக்காய் சமையல்

30 வகை கத்தரிக்காய் சமையல்

கத்தரிக்காய் சாம்பார்

தேவையானவை: நீளமாக நறுக்கிய கத்தரிக்காய் – ஒரு கப், துவரம்பருப்பு – அரை கப், புளி – எலுமிச்சை அளவு, மஞ்சள்தூள் – ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை – சிறிதளவு, கடுகு – கால் டீஸ்பூன், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

வறுத்து அரைக்க: தனியா – 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 5, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, எண்ணெய் – தலா ஒரு டீஸ்பூன், வெந்தயம், கடுகு – கால் டீஸ்பூன், தேங்காய் துருவல் – 2 டீஸ்பூன்.

செய்முறை: துவரம்பருப்பை குக்கரில் குழைய வேகவைத்து எடுக்கவும். வறுக்கக் கொடுத்துள்ளவற்றை அரை டீஸ்பூன் எண்ணெயில் வறுத்து, நைஸாக அரைக்கவும். புளியை ஒரு கப் தண்ணீரில் கரைத்து, அதில் உப்பு, மஞ்சள்தூள் போட்டு கொதிக்க விடவும். ஒரு கொதி வந்ததும் கத்தரிக்காயை அதில் போட்டு பெருங்காயத்தூள் சேர்க்கவும். கத்தரிக்காய் வெந்ததும் அதில் அரைத்த மசாலாவை சேர்க்கவும். நன்றாகக் கொதித்ததும் வேகவைத்த துவரம்பருப்பைக் கடைந்து அதில் சேர்த்து, கொதிக்க வைத்து இறக்கவும். கடுகு, கறிவேப்பிலை தாளித்துக் கொட்டவும்.

——————————————————————————–

கத்தரிக்காய் பொடிதூவல்

தேவையானவை: நீளமாக நறுக்கிய கத்தரிக்காய் – ஒரு கப், புளி – கொட்டைப்பாக்களவு, மஞ்சள்தூள், கடுகு, பெருங்காயத்தூள் – தலா கால் டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிது, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

வறுத்து அரைக்க: தனியா – 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 4, கடலைப்பருப்பு – ஒரு டீஸ்பூன்,

செய்முறை: அரைக்கக் கொடுத்துள்ளவற்றை சிறிது எண்ணெய் விட்டு சிவக்க வறுத்து சற்று கரகரப்பாக அரைக்கவும். புளியை ஒன்றரை கப் தண்ணீரில் கரைத்து மஞ்சள்தூள், உப்பு சேர்த்து கொதிக்க வைக்கவும். கொதிக்க ஆரம்பித்தவுடன் அதில் நறுக்கிய கத்தரிக்காயை போட்டு வேகவைத்து எடுக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை தாளித்து அதில் வேகவைத்த கத்தரிக்காயை போட்டுக் கிளறி, கடைசியாக பொடியை தூவி, கிளறி இறக்கவும்.

——————————————————————————–

கத்தரிக்காய் பொரித்த கூட்டு

தேவையானவை: பொடியாக நறுக்கிய கத்தரிக்காய் – ஒரு கப், பாசிப்பருப்பு – கால் கப், நெய் – ஒரு டீஸ்பூன், உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள் – தலா அரை டீஸ்பூன், மஞ்சள்தூள், கடுகு – தலா கால் டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

அரைக்க: தேங்காய் துருவல் – 2 டீஸ்பூன், சீரகம் – ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 4, கறிவேப்பிலை – சிறிது.

செய்முறை: ஒரு கடாயில் பாசிப்பருப்புடன் மஞ்சள்தூள் சேர்த்து வேகவைக்கவும். பருப்பு முக்கால் பதம் வெந்ததும் அதில் நறுக்கிய கத்தரிக்காய், உப்பை சேர்க்கவும். காய் வெந்ததும் அதில் அரைக்கக் கொடுத்துள்ளவற்றை அரைத்து சேர்த்து கொதிக்க விட்டு இறக்கவும். நெய்யில் கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள் தாளித்து சேர்க்கவும்.

——————————————————————————–

கத்தரிக்காய் பிட்லை

தேவையானவை: குண்டாக நறுக்கிய கத்தரிக்காய் – ஒரு கப், துவரம்பருப்பு, கடலைப்பருப்பு சேர்த்து – கால் கப், மஞ்சள்தூள், பெருங்காயத்தூள், கடுகு – தலா கால் டீஸ்பூன், கடலைப்பருப்பு – ஒரு டீஸ்பூன், புளி – எலுமிச்சை அளவு, கறிவேப்பிலை – சிறிது, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

மசாலா: தனியா, தேங்காய் துருவல் – தலா 2 டீஸ்பூன், கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 6.

செய்முறை: மசாலா பொருட்களை வறுத்து அரைத்து வைக்கவும். கடலைப்பருப்பு, துவரம்பருப்பை மஞ்சள்தூள் சேர்த்து வேகவைக்க வும். புளியை ஒரு கப் நீரில் கரைத்து, உப்பு சேர்த்து கொதிக்க வைக்கவும். கொதி வர ஆரம்பித்ததும், கத்தரிக்காயை சேர்க்கவும். கத்தரிக்காய் வெந்ததும், வேகவைத்த பருப்பையும், அரைத்த மசாலா வையும் சேர்த்து கொதிக்க விட்டு இறக்கி, கடுகு, பெருங்காயத்தூள், கடலைப்பருப்பு, கறிவேப்பிலை தாளித்துக் கொட்டவும்.

——————————————————————————–

கத்தரிக்காய் மிக்சட் மசாலா பொரியல்

தேவையானவை: நறுக்கிய கத்தரிக்காய், கோவைக்காய், கேரட், உருளைக் கிழங்கு, குடமிளகாய் – தலா கால் கப், உப்பு – தேவையான அளவு, எண்ணெய் – ஒரு டேபிள் ஸ்பூன், மஞ்சள்தூள், கடுகு – தலா கால் டீஸ்பூன்.

வறுத்து அரைக்க: மிளகு – அரை டீஸ்பூன், கடுகு, சீரகம் – தலா கால் டீஸ்பூன், மிளகாய் – 4, தனியா – 2 டீஸ்பூன், பட்டை – ஒரு துண்டு.

செய்முறை: வறுக்கக் கொடுத்துள்ள பொருட்களை வெறும் கடாயில் சிவக்க வறுத்து பொடிக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு போட்டு தாளித்து, அதில் எல்லா காய்கறிகளையும் போடவும். மஞ்சள்தூள், உப்பு சேர்த்து தண்ணீர் தெளித்து மூடி வைக்கவும். காய்கள் முக்கால் பதம் வெந்ததும் அதில் வறுத்து அரைத்த பொடியைப் போட்டு நன்றாகக் கிளறி இறக்கவும்.

——————————————————————————–

கத்தரிக்காய் உப்புமா

தேவையானவை: அரிசி ரவை – - ஒரு கப், பொடியாக நறுக்கிய கத்தரிக்காய் – கால் கப், தேங்காய் துருவல் – ஒரு டேபிள்ஸ்பூன், துவரம்பருப்பு – 2 டீஸ்பூன், மிளகு, சீரகம், கடுகு – தலா அரை டீஸ்பூன், தேங்காய் எண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன், கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, காய்ந்த மிளகாய் – 1, உப்பு – தேவையான அளவு.

செய்முறை: துவரம்பருப்பு, மிளகு, சீரகத்தை அரைத்துக் கொள்ளவும். குக்கரில் தேங்காய் எண்ணெய் விட்டு கடுகு, கடலைப் பருப்பு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை தாளித்து தேங்காய் துருவல், கத்தரிக்காய் சேர்த்து வதக்கவும். 2 நிமிடம் வதங்கியதும் 2 கப் தண்ணீர் விட்டு உப்பு சேர்க்கவும். கொதிக்க ஆரம்பித்ததும் அதில் அரைத்த பொடி, அரிசி ரவையை போட்டு மிதமான தீயில் நன்றாகக் கிளறி, சிறிது கெட்டியானதும் குக்கரை மூடி, ஒரு விசில் வந்ததும் இறக்கவும்.

——————————————————————————–

எண்ணெய் கத்தரிக்காய்

தேவையானவை: சிறிய கத்தரிக்காய் – 12, புளி – எலுமிச்சை அளவு, தேங்காய் துருவல் – ஒரு டேபிள்ஸ்பூன், சாம்பார் பொடி – 2 டீஸ்பூன், நல்லெண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, கடுகு, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் – தலா கால் டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: கத்தரிக்காயை நான்காக கீறி பூச்சி இருக்கிறதா என பார்த்துக் கொள்ளவும். புளியை கரைத்து வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, கறி வேப்பிலை, பெருங் காயத்தூள் தாளித்து, கத்தரிக்காயை போட்டு பிய்ந்து விடாமல் மிதமான தீயில் வதக்கவும். கத்தரிக்காய் வதங்கி யதும் சாம்பார் பொடியை சேர்க்கவும். பிறகு நன்றாக வதக்கி புளி தண்ணீரை ஊற்றி, உப்பு, மஞ்சள்தூள் சேர்க்க வும். இவை நன்றாக சேர்ந்து கொதித்ததும் எண்ணெய் பிரிந்து மேலே வரும்போது தேங்காயை நைஸாக அரைத்து ஊற்றி, கொதிக்க விட்டு இறக்கவும்.

——————————————————————————–

வாங்கிபாத்

தேவையானவை: பொடியாக நறுக்கிய கத்தரிக்காய், வடித்த சாதம் – தலா ஒரு கப், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு, தனியா – 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 4, கறிவேப்பிலை – சிறிது, மஞ்சள்தூள், கடுகு, பெருங்காயத்தூள் – தலா கால் டீஸ்பூன், எலுமிச்சைச் சாறு – ஒரு டீஸ்பூன்.

செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்து அதில் கத்தரிக்காயை போட்டு வதக்கவும். பிறகு உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து சுருள வதக்கி இறக்கவும். சிறிது எண்ணெயில் தனியா, காய்ந்த மிளகாயை வறுத்துப் பொடிக்கவும். சாதத்தில் சிறிது உப்பு, வறுத்த அரைத்த பொடி, வதக்கிய கத்தரிக்காய், எலுமிச்சைச் சாறு என எல்லாவற்றையும் சேர்த்து நன்றாகக் கலந்து பரிமாறவும்.

——————————————————————————–

கத்தரிக்காய் துவையல்

தேவையானவை: பெரிய கத்தரிக்காய் – 1, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு – தலா 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 5, பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன், புளி – கொட்டைப் பாக்களவு, உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை: கத்தரிக்காயை எண்ணெய் தடவி சுட்டெடுக்கவும். ஆறியதும் தோலுரித்து, உள்ளே பூச்சியில்லாமல் உள்ளதா என பார்த்து மசித்து வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய் போட்டு சிவக்க வறுத்துக் கொள்ளவும். வறுத்தவற்றை மிக்ஸியில் போட்டு பொடித்து, பிறகு புளி, உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து மசித்த கத்தரிக்காயையும் போட்டு ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.

——————————————————————————–

கத்தரி முருங்கை மசாலா

தேவையானவை: நறுக்கிய கத்தரிக்காய், முருங்கைக்காய் – தலா ஒரு கப், மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு, புளி – கொட்டைப்பாக்களவு, எண்ணெய் – 2 டீஸ்பூன், மஞ்சள்தூள், கடுகு, பெருங்காயத்தூள் – தலா கால் டீஸ்பூன்.

செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, பெருங்காயத்தூள் தாளித்து, அதில் கத்தரிக்காய், முருங்கைக்காயை போட்டு, உப்பு, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் சேர்த்துக் கிளறி, புளியை கால் கப் தண்ணீரில் கரைத்து விட்டு நன்றாகக் கலந்து மூடி விடவும். அவ்வப்போது கிளறி விடவும். வெந்ததும் தண்ணீர் வற்றி விடும். மிதமான தீயில் சுருளக் கிளறி இறக்கவும்.

——————————————————————————–

கத்தரிக்காய் தயிர் பச்சடி

தேவையானவை: பெரிய கத்தரிக்காய், பச்சைமிளகாய், காய்ந்த மிளகாய் – தலா 1, தேங்காய் துருவல் – ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு – தேவையான அளவு, கடுகு, பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன், எண்ணெய் – ஒரு டீஸ்பூன், தயிர் – ஒரு கப்.

செய்முறை: கத்தரிக்காயில் எண்ணெய் தடவி சுட்டெடுக்கவும். ஆறியதும் தோலுரித்து உள்ளே பூச்சியில்லாமல் உள்ளதா என்று பார்த்து மசித்துக் கொள்ளவும். பச்சைமிளகாய், தேங்காய் துருவல் சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ளவும். மசித்த கத்தரிக்காயில் அரைத்த விழுது, உப்பு சேர்த்து தயிருடன் கலந்து கடுகு, பெருங்காயத்தூள், காய்ந்த மிளகாய் தாளித்து சேர்க்கவும்.

——————————————————————————–

கத்தரிக்காய் கொத்சு

தேவையானவை: நறுக்கிய கத்தரிக்காய் – ஒரு கப், நறுக்கிய தக்காளி, பாசிப்பருப்பு – தலா அரை கப், பச்சைமிளகாய் – 3, புளி – கொட்டைப்பாக்களவு, உப்பு – தேவையான அளவு, எண்ணெய் – ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள், கடுகு – தலா கால் டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 2, கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிது.

செய்முறை: பாசிப்பருப்பை மஞ்சள்தூள் சேர்த்து குழைய வேகவைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, காய்ந்த மிளகாய் தாளித்து, பச்சைமிளகாய், கத்தரிக்காய், தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும். கத்தரிக்காய் சிறிது வதங்கியதும், புளியைக் கரைத்து ஊற்றவும். பிறகு வேகவைத்த பருப்பு, உப்பு சேர்த்து மிதமான தீயில் நன்றாக கொதிக்க விடவும். பிறகு கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து இறக்கவும். தேவையெனில் சிறிது வெங்காயமும் சேர்த்துக் கொள்ளலாம்.

——————————————————————————–

கத்தரி-காராமணி பிரட்டல்

தேவையானவை: நறுக்கிய கத்தரிக்காய் – ஒரு கப், காய்ந்த காராமணி – கால் கப், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு, தேங்காய் துருவல், தனியா – தலா ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 2, எண்ணெய் – ஒரு டீஸ்பூன், கொத்தமல்லி – சிறிது, சீரகம், கடுகு, பெருங்காயத்தூள் – தலா கால் டீஸ்பூன்

செய்முறை: காராமணியை முதல்நாள் இரவே ஊறவைத்து, மறு நாள் குக்கரில் வேக வைக்கவும். கத்தரிக்காயை உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வேக விடவும். முக்கால் பதம் வெந்ததும் வடிதட்டில் கொட்டவும். தேங்காய் துருவல், தனியா, காய்ந்த மிளகாயை அரைத்து வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, பெருங்காயத்தூள் தாளித்து, கத்தரிக்காயை போடவும். பிறகு வெந்த காரமணியை போட்டு வதக்கி அரைத்த விழுதையும் சேர்த்துக் கிளறி இறக்கி, கொத்தமல்லியை தூவவும்.

——————————————————————————–

கத்தரிக்காய் பஜ்ஜி

தேவையானவை: வட்டமாக நறுக்கிய கத்திரிக்காய் – ஒரு கப், கடலைமாவு – அரை கப், அரிசிமாவு – ஒரு டேபிள்ஸ்பூன், கார்ன் ஃப்ளார் – ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன், மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன், சமையல் சோடா – ஒரு சிட்டிகை, உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை: கடலைமாவு, அரிசிமாவு, கார்ன்ஃப்ளார், உப்பு, சமையல் சோடா, மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள் எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து வைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெயை காயவைத்து, அதிலிருந்து ஒரு டீஸ்பூன் எடுத்து மாவில் ஊற்றிக் கலந்து, பிறகு தண்ணீர் ஊற்றிக் கலக்கவும். இப்படி செய்தால் பஜ்ஜி அதிகம் எண்ணெய் குடிக்காது. கரைத்த மாவில் கத்தரிக்காய் வில்லைகளை தோய்த்து எடுத்து எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

——————————————————————————–

கத்தரிக்காய் காரக்குழம்பு

தேவையானவை: நறுக்கிய கத்தரிக்காய், வெங்காயம் – தலா அரை கப், தனியாத்தூள், மிளகாய்த்தூள் – தலா ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், புளி – எலுமிச்சை அளவு, உப்பு – தேவையான அளவு, நல்லெண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் – 2, வெந்தயம் – அரை டீஸ்பூன், கடுகு – கால் டீஸ்பூன், கறிவேப்பிலை, வெல்லம் – சிறிதளவு.

செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, காய்ந்த மிளகாய், வெந்தயம், கறிவேப்பிலை தாளித்து, வெங்காயத்தைப் போட்டு வதக்கவும். பிறகு தனியாத்தூள், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து வதக்கவும். சிறிது வதங்கியதும் புளியை கெட்டியாக கரைத்து ஊற்றி, கொதிக்க ஆரம்பித்ததும் கத்தரிக்காயை போடவும். நன்றாக கொதித்து கத்திரிக்காய் வெந்து, குழம்பில் எண்ணெய் பிரிந்து வரும் போது வெல்லத்தை போட்டு ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.

——————————————————————————–

கத்தரி – மொச்சை கூட்டு

தேவையானவை: நறுக்கிய கத்தரிக்காய் – ஒரு கப், மொச்சை, துவரம்பருப்பு – தலா கால் கப், தேங்காய் துருவல் – ஒரு டேபிள்ஸ்பூன், சாம்பார் பொடி – அரை டீஸ்பூன், மஞ்சள்தூள், கடுகு – கால் டீஸ்பூன், எண்ணெய், பொட்டுக்கடலை – ஒரு டீஸ்பூன், புளி – எலுமிச்சை அளவு, உப்பு – தேவையான அளவு

செய்முறை: மொச்சையை முதல்நாள் இரவே ஊறவைத்து, மறுநாள் வேக வைத்துக் கொள்ளவும். துவரம்பருப்பை மஞ்சள்தூள் சேர்த்து குக்கரில் வேகவிடவும். புளியை நன்றாகக் கரைத்து உப்பு சேர்த்து கொதிக்க விடவும். கொதித்ததும் கத்தரிக்காயை அதில் போடவும். காய் நன்றாக வெந்ததும் அதில் வேகவைத்த மொச்சையை போடவும். பிறகு சாம்பார் பொடி சேர்த்து 2 நிமிடம் கொதித்ததும் அதில் வேகவைத்த துவரம் பருப்பை சேர்த்து தேங்காய், பொட்டுக்கடலையை அரைத்து விடவும். கடைசியாக கடுகு, கறிவேப்பிலை தாளித்து இறக்கவும்.

ஸ்டஃப்டு கத்தரிக்காய்

தேவையானவை: சிறிய கத்தரிக்காய் – 15, தேங்காய் துருவல், எண்ணெய் – அரை கப், காய்ந்த மிளகாய் – 5, புளி – கொட்டைப் பாக்களவு, உப்பு – தேவையான அளவு, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள், கடுகு – தலா கால் டீஸ்பூன், தனியா – ஒரு டேபிள் ஸ்பூன்

செய்முறை: தனியா, தேங்காய், உப்பு, காய்ந்த மிளகாய், மஞ்சள்தூள், பெருங்காயத்தூள், புளி எல்லாவற்றையும் சேர்த்து நைஸாக அரைத்துக் கொள்ளவும். கத்தரிக்காயை நான்காக பிளந்து பூச்சியில்லாமல் இருக்கிறதா என பார்த்து, அரைத்து வைத்திருக்கும் மசாலாவை கத்தரிக்காயில் அடைத்து வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து, ஸ்டஃப்டு கத்தரிக்காய்களை போட்டு கிளறி மூடி வைக்கவும். மிதமான தீயில் கிளறி, எண்ணெய் பிரியும்போது இறக்கவும்.

——————————————————————————–

கத்தரி வதக்கல்

தேவையானவை: நறுக்கிய கத்தரிக்காய் – ஒரு கப், நறுக்கிய வெங்காயம் – அரை கப், மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன், மஞ்சள்தூள், கடுகு – தலா கால் டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு, புளி – கொட்டைப்பாக்களவு, எண்ணெய் – 3 டீஸ்பூன்

செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு தாளித்து, வெங்காயத்தை போட்டு வதக்கவும். பிறகு கத்தரிக்காயை போடவும். உப்பு, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் சேர்த்து வதக்கி, புளியை கெட்டியாக கரைத்து விடவும். நன்றாக வதக்கி எண்ணெய் பிரிந்து வந்ததும் இறக்கவும். விருப்பட்டால் புளிக்கு பதிலாக தக்காளி சேர்க்கலாம்.

——————————————————————————–

ரசவாங்கி

தேவையானவை: சின்ன பிஞ்சு கத்தரிக்காய் – 10, தக்காளி – 2, துவரம்பருப்பு, தனியா – தலா ஒரு டேபிள்ஸ்பூன், மிளகு, நெய் – தலா ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள், கடுகு – தலா கால் டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 3, சீரகம் – அரை டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு, புளி – கொட்டைப்பாக்களவு, கொத்தமல்லி, கறிவேப்பிலை – சிறிது

செய்முறை: புளியை நீர்க்கக் கரைத்து உப்பு சேர்த்துக் கொதிக்க வைக்கவும். கத்தரிக்காயை நான்காக நடுவில் சீவி முழு கத்தரிக்காயாக புளி தண்ணீரில் போடவும். தக்காளியையும் பொடியாக நறுக்கி போடவும். துவரம்பருப்புடன் மஞ்சள்தூள் சேர்த்து குக்கரில் வேக விடவும். தனியா, சீரகம், மிளகு, மிளகாய் ஆகியவற்றை வறுத்து, சற்று கரகரப்பாக பொடித்து கத்தரிக்காய் வெந்ததும் அதில் சேர்க்கவும். துவரம்பருப்பை கடைந்து ஊற்றி, பொங்கி வந்ததும் இறக்கி, நெய்யில் கடுகு தாளித்துக் கொட்டவும். கொத்தமல்லி, கறிவேப்பிலை தூவி பரிமாறவும்.

——————————————————————————–

பருப்பு – கத்தரி பொரியல்

தேவையானவை: பொடியாக நறுக்கிய கத்தரிக்காய் – ஒரு கப், பாசிப்பருப்பு – கால் கப், தேங்காய் துருவல் – 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 2, கடுகு, பெருங்காயத்தூள் – தலா கால் டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிது, உப்பு, எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை: பாசிப்பருப்பில் சிறிது மஞ்சள்தூள் சேர்த்து குழைய விடாமல் வேகவைத்து வடித்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, பெருங்காயத்தூள், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை தாளித்து, கத்தரிக்காய், உப்பு சேர்த்து வதக்கவும். காய் வதங்கியதும், வேகவைத்த பாசிப்பருப்பை போட்டு துருவி வைத்த தேங்காயையும் சேர்த்து இறக்கவும்.

தேங்காய் எண்ணெயில் செய்தால் சுவை இன்னும் கூடுதலாக இருக்கும்.

——————————————————————————–

கத்தரிக்காய் தளர்கூட்டு

தேவையானவை: பொடியாக நறுக்கிய கத்தரிக்காய் – ஒரு கப், புளி – கொட்டைப் பாக்களவு, சாம்பார் பொடி – அரை டீஸ்பூன், பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய், அரிசி மாவு, எண்ணெய் – ஒரு டீஸ்பூன், கடுகு, பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு, கறிவேப்பிலை – சிறிது.

செய்முறை: புளியை நீர்க்கக் கரைத்து உப்பு சேர்த்து கொதிக்க விட்டு, கத்தரிக்காயை அதில் போடவும். நன்றாக வெந்து குழைந்தவுடன் அதில் சாம்பார் பொடியை போட்டு, அரிசி மாவை தண்ணீரில் கரைத்து விட்டு கொதித்ததும் இறக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, பெருங்காயத்தூள், பச்சைமிளகாய், கறிவேப்பிலை தாளித்துக் கொட்டவும்.

——————————————————————————–

கத்தரிக்காய் சிதம்பரம் கொத்சு

தேவையானவை: நறுக்கிய கத்தரிக்காய் – ஒரு கப், நறுக்கிய சின்ன வெங்காயம் – அரை கப், தனியா – 3 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 6, வெந்தயம், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், கீறிய பச்சைமிளகாய் – 2, புளி – 2 கொட்டைப் பாக்களவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு, கறிவேப்பிலை— – சிறிதளவு.

செய்முறை: கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு, தனியா, காய்ந்த மிளகாய், வெந்தயம் போட்டு வறுத்து, பொடித்து வைத்துக் கொள்ளவும். மீண்டும் கடாயில் எண்ணெய் விட்டு, கத்தரிக்காயை வறுத்து எடுத்து வைக்கவும். பிறகு வெங்காயத்தை வதக்கி, கீறிய பச்சைமிளகாயையும் மஞ்சள்தூளையும் சேர்க்கவும். வெங்காயம் சுருள வதங்கியதும் அடுப்பை அணைத்து விட்டு அதில் புளியை கெட்டியாக கரைத்து விட்டு, உப்பையும் போடவும். வறுத்துப் பொடித்த பொடியை போட்டு, கடைசியாக வறுத்து வைத்த கத்தரிக்காயை போட்டு நன்றாகக் கலந்து, கறிவேப்பிலையை மேலே தூவவும்.

——————————————————————————–

கத்தரிக்காய் அடை

தேவையானவை: மிகவும் பொடியாக நறுக்கிய பிஞ்சு கத்தரிக்காய், துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, பச்சரிசி, புழுங்கலரிசி – தலா கால் கப், உளுத்தம்பருப்பு – ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 6, இஞ்சி – ஒரு துண்டு, தேங்காய் துருவல் – ஒரு டேபிள்ஸ்பூன், கறிவேப்பிலை – சிறிது, பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை: பருப்பு, அரிசியை ஒரு மணி நேரம் ஊறவைத்து காய்ந்த மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை, தேங்காய் துருவல், பெருங்காயத்தூள் உப்பு சேர்த்து சற்று கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும் (விருப்பப்பட்டால் பொடியாக நறுக்கிய கொத்தமல்லியை மாவில் கலந்து கொள்ளலாம்). இந்த மாவில் நறுக்கிய கத்தரிக்காயை கலந்து தோசைக்கல்லில் எண்ணெய் விட்டு, இரண்டு புறமும் திருப்பிப் போட்டு எடுக்கவும்.

வித்தியாசமான சுவையில் இருக்கும் இந்த அடை.

——————————————————————————–

கத்தரிக்காய் கிரேவி

தேவையானவை: குண்டாக நறுக்கிய கத்தரிக்காய், பொடியாக நறுக்கிய தக்காளி, வெங்காயம் – தலா ஒரு கப், புதினா, கொத்தமல்லி – சிறிது, பச்சைமிளகாய் – 2, கரம் மசாலாத்தூள், மஞ்சள்தூள் – தலா கால் டீஸ்பூன், மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு, தனியாத்தூள் – ஒரு டீஸ்பூன், கடுகு, சீரகம் – தலா கால் டீஸ்பூன், எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் தக்காளி, வெங்காயம், புதினா, கொத்தமல்லி, பச்சைமிளகாய் போட்டு லேசாக வதக்கி தனியே வைத்து ஆற விடவும். எண்ணெயில் கத்தரிக்காயை வறுத்து வைத்துக் கொள்ளவும். கடுகு, சீரகம் தாளித்து அதில் ஆற வைத்த தக்காளி – வெங்காய கலவை, கரம் மசாலாத்தூள், தனியாத்தூள், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கவும். கடைசியாக வறுத்தெடுத்த கத்தரிக்காயை சேர்த்து கிளறி இறக்கவும். மேலே கொத்தமல்லியை தூவி அலங்கரிக்கவும்.

——————————————————————————–

கத்தரிக்காய் மோர்க் குழம்பு

தேவையானவை: நீளமாக நறுக்கிய கத்தரிக்காய் – கால் கப், துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, தனியா – தலா ஒரு டீஸ்பூன், கடுகு, சீரகம் – தலா அரை டீஸ்பூன், வெந்தயம் – கால் டீஸ்பூன், பச்சை மிளகாய் – 5, கொத்தமல்லி – சிறிது, தேங்காய் துருவல் – 2 டீஸ் பூன், தயிர் – ஒரு கப், புளி – கொட்டைப்பாக்களவு, உப்பு – தேவையான அளவு, எண்ணெய் – ஒரு டீஸ்பூன், தேங்காய் எண்ணெய் – 2 டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிது, மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்.

செய்முறை: துவரம்பருப்பு, கடலைப்பருப்பை ஊறவைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு வெந்தயத்தை சிவக்க வறுத்து, அதில் ஊறவைத்த பருப்புகளை சேர்க்கவும். இதனுடன் தனியா, பச்சைமிளகாய், சீரகம், தேங்காய், கொத்தமல்லி சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ளவும். புளியை கரைத்து உப்பு சேர்த்து, கத்தரிக்காயை போட்டு வேக விடவும். வெந்ததும் அரைத்த விழுதை சேர்த்து கொதிக்க விடவும். பிறகு, மஞ்சள்தூள் சேர்த்து கடைந்து இறக்கவும். தேங்காய் எண்ணெயில் கடுகு, கறிவேப்பிலை தாளித்துக் கொட்டவும்.

——————————————————————————–

கத்தரிக்காய் புளி பஜ்ஜி

தேவையானவை: பெரிய குண்டு கத்தரிக்காய், காய்ந்த மிளகாய் – தலா 1, புளி – கொட்டைப்பாக்களவு, எண்ணெய் – ஒரு டீஸ்பூன், கடுகு – கால் டீஸ்பூன், துவரம்பருப்பு – அரை டீஸ்பூன், பச்சைமிளகாய் – 2, பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: கத்தரிக்காயை எண் ணெய் தடவி நன்றாக எல்லா பக்கமும் சுட்டெடுக்-கவும். ஆறியதும் தோலுரித்து பூச்சியில்லாமல் மசித்துக் கொள்ளவும். இதில் புளியை கரைத்து விடவும். கடாயில் எண்ணெய் காயவைத்து அதில், கடுகு, துவரம்பருப்பு, காய்ந்த மிளகாய், பச்சைமிளகாய், பெருங்காயத்தூள் போட்டு தாளித்து மசித்த கத்திரிகாயை போட்டு நன்றாகக் கலக்கவும் அதை ஒரு கிண்ணத்தில் கொட்டி ஒரு சூடான பாத்திரத்தின் மேல் வைத்து மூடிவிடவும்.

——————————————————————————–

கத்தரி -மிளகாய் பச்சடி

தேவையானவை: மிகவும் பொடியாக நறுக்கிய கத்தரிக்காய் – கால் கப், பச்சைமிளகாய் – அரை கப், புளி, வெல்லம் – தலா கொட்டைப்பாக்களவு, மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், கடுகு, பெருங்காயத்தூள் – தலா கால் டீஸ்பூன், உப்பு, நல்லெண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை: பச்சைமிளகாயை உப்பு சேர்த்து நைஸாக அரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, பெருங்காயம் தாளித்து அதில் கத்தரிக்காயை போட்டு வதக்கவும். கத்தரிக்காய் வதங்கியதும் பச்சை மிளகாய் விழுதை சேர்த்து, புளியை கெட்டியாக கரைத்து விடவும். பிறகு வெல்லத்தை போட்டு மஞ்சள்தூள் சேர்த்து நன்றாகக் கிளறவும். எண்ணெய் பிரிந்து விழுதுபோல வரும்போது இறக்கி விடவும்.

——————————————————————————–

கத்தரிக்காய் சட்னி

தேவையானவை: பொடியாக நறுக்கிய கத்தரிக்காய் – கால் கப், காய்ந்த மிளகாய் – 3, தேங்காய் துருவல் – 2 டீஸ்பூன், புளி – கொட்டைப்பாக்களவு, பச்சைமிளகாய் – 2, கடுகு – அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன், எண்ணெய் – ஒரு டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு கத்தரிக்காயை நன்றாக வதக்கிக் கொள்ளவும். அதனுடன் புளி, உப்பு, பச்சைமிளகாய், காய்ந்த மிளகாய், தேங்காய் துருவல் சேர்த்து அரைக்கவும். கடுகு, பெருங்காயம் தாளித்துக் கொட்டவும்.

மாங்காய் கத்தரிக்காய் சாம்பார்

தேவையானவை: நறுக்கிய மாங்காய், கத்தரிக்காய் – தலா அரை கப், தக்காளி – 1, புளி – கொட்டைப்பாக்களவு, துவரம்பருப்பு – அரை கப், பச்சைமிளகாய் – 2, சாம்பார் பொடி, எண்ணெய் – தலா ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள், கடுகு – தலா கால் டீஸ்பூன், கொத்தமல்லி, கறிவேப்பிலை – சிறிது, உப்பு – தேவையான அளவு.

செய்முறை: துவரம்பருப்பில் மஞ்சள்தூள் சேர்த்து குக்கரில் வேக வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு , காய்ந்ததும் கடுகு தாளித்து அதில் தாக்காளியை நறுக்கிப் போடவும். புளியை நீர்க்கக் கரைத்து விட்டு பச்சைமிளகாயை கீறிப் போட்டு, கத்தரிக்காய், மாங்காய், உப்பு சேர்க்கவும். காய்கள் நன்றாக வெந்ததும் சாம்பார் பொடியை சேர்த்து, கொதித்ததும் பருப்பை கடைந்து ஊற்றவும். நன்றாகக் கொதித்ததும் இறக்கி கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்க்கவும்.

——————————————————————————–

கத்தரி வற்றல் சாம்பார்

தேவையானவை: கத்தரிக்காய் வற்றல், துவரம்பருப்பு – தலா கால் கப், பாசிப் பருப்பு – ஒரு டேபிள்ஸ்பூன், புளி – 2 கொட்டை பாக்களவு, சாம்பார் பொடி – ஒரு டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு, கடுகு, பெருங்-காயத்தூள், மஞ்சள்தூள், வெந்தயம் – தலா கால் டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிது.

செய்முறை: கத்தரிக்காய் வற்றல் செய்யும் முறை: கத்தரிக்காயை பெரிய துண்டுகளாக நறுக்கி, மஞ்சள்தூள் சேர்த்து கொதிக்கும் தண்ணீரில் போடவும். முக்கால் பதம் வெந்ததும், நீரை வடித்து வெயிலில் காயவைத்து எடுத்துக் கொள்ளவும்.

கத்தரிக்காய் வற்றலை கொதிக்கும் நீரில் 20 நிமிடம் ஊறவைக்கவும். பருப்புகளை மஞ்சள்தூள் சேர்த்து குக்கரில் வேகவைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் தாளித்து புளியை கரைத்து அதில் ஊற்றி உப்பு சேர்க்கவும். கொதிக்க ஆரம்பித்ததும் சாம்பார் பொடி, கத்தரிக்காயை சேர்த்து நன்றாக கொதிக்க விடவும். கடைசியாக வெந்த பருப்பு வகைகளை சேர்த்து கொதித்ததும் இறக்கவும்.

*****************************************************************

30 வகை நவராத்திரி ஸ்பெஷல் சுண்டல்

30 வகை நவராத்திரி ஸ்பெஷல் சுண்டல்

முன் குறிப்பு :- பண்டிகை காலங்களில் காளான்,வெங்காயம் மற்றும் பூண்டை தவிர்த்து பலகாரங்களை செய்வது பாரம்பரியம்.

கீழே கொடுக்கப்பட்டுள்ள சமையல் குறிப்புகள் மகளிர் பத்திரிக்கைகளில் இருந்து திரட்டியவை.

*************************************************************************************************

காராமணி இனிப்பு சுண்டல்

தேவையானவை: சிவப்பு காரா-மணி – ஒரு கப், பாகு வெல்லம் – அரை கப், வறுத்துப் பொடித்த எள் – 2 டீஸ்பூன், ஏலக்காய்த்தூள், தேங்காய் துருவல் – சிறிதளவு.

செய்முறை: சிவப்பு காரா-மணியை வறுத்து இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும். ஊறிய காரா-மணியை குக்கரில் வைத்து ஒரு விசில் வந்ததும் இறக்கவும். வெல்லத்தை தண்ணீரில் கரைத்து வடிகட்டி, உருட்டும் பதத்தில் கெட்டிப் பாகு காய்ச்சவும். வெந்த காராமணியுடன் பாகைச் சேர்த்து, வறுத்துப் பொடித்த எள், ஏலக்காய்த்தூள், தேங்காய்துருவல் சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.

——————————————————————————–

ரங்கோலி சுண்டல்

தேவையானவை: பச்சைப் பட்டாணி, முளைகட்டிய சோளம், சிவப்பு கலர் ராஜ்மா – தலா அரை கப், கேரட் துருவல், மாங்காய் துருவல் – தலா ஒரு கப், இஞ்சி விழுது, கடுகு, எண்ணெய் – தலா ஒரு டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

வறுத்து அரைக்க: காய்ந்த மிளகாய் – 4, தனியா, கடலைப்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன்.

செய்முறை: ராஜ்மா, பட்டாணியை 6 மணி நேரம் குக்கரில் ஊற வைக்கவும். முளைகட்டிய சோளம், ஊறிய ராஜ்மா, பட்டாணியை குக்கரில் வைத்து தேவையான உப்பு சேர்த்து ஒரு விசில் வந்ததும் இறக்கவும். தண்ணீரை வடித்து விட்டு, கடுகை தாளித்துக் கொட்டி, இஞ்சி விழுது, கேரட் துருவல், மாங்காய் துருவல், வறுத்து அரைத்த பொடி சேர்த்து நன்றாகக் கிளறி இறக்கவும்.

மிகவும் ருசியாக இருக்கும் இந்த கலர்ஃபுல் ரங்கோலி சுண்டல்.

——————————————————————————–

பாசிப்பயிறு சுண்டல்

தேவையானவை: பாசிப்பயறு – ஒரு கப், பாகு வெல்லம் – அரை கப், ஏலக்காய்த்தூள் – சிறிதளவு, சுக்குப்பொடி – கால் டீஸ்பூன், தேங்காய் துருவல் – 4 டீஸ்பூன்

செய்முறை: பாசிப்பயறை சிவக்க வறுத்து, ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். இதை குக்கரில் வைத்து ஒரு விசில் வந்ததும் இறக்கி, தண்ணீரை வடித்து விடவும். வெல்லத்தைக் கரைத்து வடிகட்டி கெட்டிப்பாகு காய்ச்சவும். இதில் வெந்த பயறு, ஏலக்காய்த்தூள், சுக்குப்பொடி, தேங்காய் துருவல் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.

சுக்குப்பொடி சேர்ப்பதால் சுண்டல் கமகமக்கும்!

——————————————————————————–

முப்பருப்பு கலவை சுண்டல்

தேவையானவை: கடலைப்பருப்பு, முளைகட்டிய கொள்ளு, வேர்க்கடலை – தலா ஒரு டேபிள்ஸ்பூன், எள் – 4 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 4, கொப்பரை தேங்காய் துருவல் – ஒரு டீஸ்பூன், கடுகு, எண்ணெய் – தலா ஒரு டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: கடலைப்பருப்பு, கொள்ளு, வேர்க்கடலை மூன்றை யும் உப்பு சேர்த்து குக்கரில் வேகவைக்கவும். ஒரு விசில் வந்ததும் இறக்கி, தண்ணீரை வடிக்கவும். எள், காய்ந்த மிளகாயை வறுத்து பொடித்துப் போடவும். கடுகு தாளித்துக் கொட்டி, கொப்பரை தேங்காய் துருவலை சேர்த்துக் கிளறி இறக்கவும்.

எள், கொப்பரை சேர்ப்பதால் ருசி அருமையாக இருக்கும்.

——————————————————————————–

மொச்சை மசாலா சுண்டல்

தேவையானவை: மொச்சை – அரை கப், இஞ்சி – ஒரு துண்டு, காய்ந்த மிளகாய், பூண்டு பல் – தலா 4, தனியாத்தூள் – ஒரு டீஸ்பூன், நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு, கடுகு, எண்ணெய் – தலா ஒரு டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: மொச்சையை முந்தைய நாள் இரவே ஊற வைக்கவும். காய்ந்த மிளகாயுடன் இஞ்சி, தனியாத்தூள், பூண்டு, உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். இந்த விழுதை ஊறிய மொச்சையில் சேர்த்து, சிறிது தண்ணீர் விட்டு குக்கரில் வைத்து, ஒரு விசில் வந்ததும் இறக்கவும். பிறகு தண்ணீரை வடித்து, கடுகு தாளித்துக் கொட்டி, நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்துக் கலக்கவும்.

——————————————————————————–

க்ரிஸ்பி சுண்டல்

தேவையானவை: முளை கட்டிய கொள்ளு, பொரித்த கார்ன்ஃப்ளார் – தலா ஒரு கப், உப்பு – தேவையான அளவு, ஓமப்பொடி – ஒரு டேபிள்ஸ்பூன்.

செய்முறை: கொள்ளில் சிறிது உப்பு போட்டு குக்கரில் வேக வைத்து, ஒரு விசில் வந்ததும் இறக்கி, தண்ணீரை வடித்து விடவும். பொரித்த கார்ன்ஃப்ளார், ஓமப்பொடி சேர்த்து கலந்து கொடுக்கவும்.

குழந்தைகள் விரும்பி சாப்பிடும் வித்தியாசமான சுண்டல் இது.

——————————————————————————–

காராமணி கார சுண்டல்

தேவையானவை: முளை கட்டிய காராமணி – ஒரு கப், இஞ்சி விழுது, மிளகுத்தூள், கடுகு, எண்ணெய் – தலா ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு.

செய்முறை: காராமணியில் உப்பு சேர்த்து குக்கரில் வேகவைத்து ஒரு விசில் வந்ததும் இறக்கி தண்ணீரை வடித்து விடவும். இஞ்சி விழுது, மிளகுத்தூள், பெருங்காயத்தூள் சேர்த்து, கடுகு தாளித்துக் கொட்டி பரிமாறவும்.

இதன் சுவையும் மணமும் அமோகமாக இருக்கும்.

——————————————————————————–

ரத்ன சுண்டல்

தேவையானவை: கொள்ளு, கொண்டைக்கடலை, பச்சைப் பயறு, காராமணி, சோளம் (எல்லாமே முளை கட்டியது) – தலா ஒரு டேபிள்ஸ்பூன், தனியாத்தூள், கடலைப்பருப்பு – தலா 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 2, பெருங்காயத்தூள் – சிறிதளவு, கடுகு, எண்ணெய் – தலா ஒரு டீஸ்பூன். உப்பு – தேவையான அளவு.

செய்முறை: முளைகட்டிய பயறு வகைகளுடன் தேவையான உப்பு சேர்த்து குக்கரில் வேகவைத்து, ஒரு விசில் வந்ததும் இறக்கி, தண்ணீரை வடித்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, தனியாத்தூள், கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய் போட்டு வறுத்து அரைத்துக் கொள்ள-வும். வேகவைத்த தானியங்களுடன் அரைத்த பொடி, பெருங்காயத்தூள் சேர்த்து, கடுகு தாளித்துக் கொட்டி, நன்கு கிளறி இறக்கவும்

குறிப்பு: பொடிக்குப் பதிலாக கொத்தமல்லி, கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி சேர்த்து, கொஞ்சம் கேரட் துருவலும் சேர்த்து ஒரு மூடி எலுமிச்சம் பழ ஜூஸை விட்டு கலந்தும் செய்யலாம். சத்தான சுண்டல் இது.

——————————————————————————–

பீச் சுண்டல்

தேவையானவை: வெள்ளைப் பட்டாணி – கால் கப், பொடியாக நறுக்கிய (அ) துருவிய தேங்காய், மாங்காய், – தலா ஒரு கப், நறுக்கிய கொத்தமல்லி – சிறிதளவு, தனியா, கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய் சம அளவு எடுத்து வறுத்து அரைத்த பொடி – 2 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு, கடுகு, எண்ணெய் – தலா ஒரு டீஸ்பூன்.

செய்முறை: பட்டாணியை 4 மணி நேரம் ஊறவைக்கவும். குக்கரில் பட்டாணி மூழ்கும் அளவுக்குத் தண்ணீர் விட்டு, தேவையான உப்பு சேர்த்து, ஒரு விசில் வந்ததும் இறக்கவும். பிறகு தண்ணீரை வடித்து, வறுத்து அரைத்த பொடியை சேர்த்து, கடுகு தாளித்துக் கொட்டவும். தேங்காய், மாங்காய் துருவல், கொத்தமல்லி சேர்த்து நன்றாகக் கலக்கவும்.

விரும்பினால் துருவிய வெள்ளரிக்காய், கேரட் சேர்க்கலாம்.

——————————————————————————–

கார்ன் வெஜிடபிள் சுண்டல்

தேவையானவை: முளை கட்டிய சோளம், பொடியாக நறுக்கிய கேரட், வெள்ளரிக்காய், வெங்காயம் – தலா ஒரு கப், நறுக்கிய கொத்தமல்லி – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு.

செய்முறை: முளை கட்டிய சோளத்தை குக்கரில் வைத்து தேவையான உப்பு சேர்த்து, ஒரு விசில் வந்ததும் இறக்கவும். வெந்த சோளத்திலுள்ள தண்ணீரை வடிய விட்டு, நறுக்கிய கேரட், வெள்ளரிக்காய், வெங்காயம் சேர்த்து, நறுக்கிய கொத்தமல்லியைத் தூவி கலக்கவும்.

குழந்தைகள் விரும்பும் சுண்டல் இது.

——————————————————————————–

ராஜ்மா சுண்டல்

தேவையானவை: சிவப்பு ராஜ்மா – 2 கப், உப்பு – தேவையான அளவு, பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை – சிறிதளவு, கடுகு, எண்ணெய் – ஒரு டீஸ்பூன்.

வறுத்து அரைக்க: கடலைப்பருப்பு, தனியா, எள், மிளகு – தலா 4 டீஸ்பூன்.

செய்முறை: ராஜ்மாவை முந்தைய நாள் இரவே ஊறவைக்கவும். ஊறிய ராஜ்மாவை குக்கரில் வைத்து உப்பு சேர்த்து, இரண்டு விசில் வந்ததும் இறக்கி, தண்ணீரை வடித்து விடவும். கடுகு தாளித்து, வறுத்து அரைத்த பொடியைப் போட்டு, கறிவேப்பிலை சேர்த்து நன்கு கலந்து இறக்கவும்.

சத்தும் சுவையும் நிறைந்தது இந்த ராஜ்மா சுண்டல்.

——————————————————————————–

ட்ரை ஃப்ரூட்ஸ் சுண்டல்

தேவையானவை: முளை கட்டிய பாசிப்பபயறு – ஒரு கப், வறுத்த முந்திரிப்பருப்பு – 10, உலர்ந்த திராட்சை – ஒரு டேபிள் ஸ்பூன், விதை நீக்கிய பேரீச்சம்பழம் – 4, டூட்டிஃப்ரூட்டி – ஒரு சிறிய பாக்கெட், அத்திப்பழம் – 2 துண்டு, பிஸ்தா – 10.

செய்முறை: முளை கட்டிய பயறை குக்கரில் வைத்து ஒரு விசில் வந்ததும் இறக்கி தண்ணீரை வடிய விடவும். மற்ற எல்லாப் பொருட்களையும் நன்றாகக் கலக்கவும்.

சத்தான, சுவையான சுண்டல் இது.

——————————————————————————–

வெஜிடபிள் சுண்டல்

தேவையானவை: பேபிகார்ன் – 4, முளைகட்டிய பாசிப்-பயறு, வெள்ளரிக்காய் துண்டுகள், பொடி-யாக நறுக்கிய மாங்காய், நறுக்கிய கேரட் துண்டுகள், நறுக்கிய கொத்த-மல்லி – தலா ஒரு கப், மிளகுத்தூள் – கால் டீஸ்பூன், உப்பு – சிறிதளவு.

செய்முறை: பேபி-கார்னை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். முளைகட்டிய பாசிப்பயறை ஆவியில் வேக வைத்துக் கொளளவும். இதனுடன் வெள்ளரிக்காய், பேபிகார்ன், கேரட், கொத்தமல்லி, மிளகுத்தூள், உப்பு சேர்த்து நன்றாகக் கலந்து மாங்காய்த் துண்டுகளை மேலாகத் தூவி பரிமாறவும்.

——————————————————————————–

கடலை பருப்பு – புதினா சுண்டல்

தேவையானவை: கடலைப்-பருப்பு – ஒரு கப் (ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்), புதினா – ஒரு கைப்பிடி, மசாலாத்தூள், மிளகுத்தூள், இஞ்சி விழுது – தலா கால் டீஸ்பூன், கடுகு, நெய், எண்ணெய் – தலா ஒரு டீஸ்பூன்.

செய்முறை: கடலைப்பருப்பை குக்கரில் வைத்து உப்பு சேர்த்து, ஒரு விசில் வந்ததும் இறக்கி, தண்ணீரை வடித்து விடவும். புதினாவை பொடியாக நறுக்கி நெய்யில் வதக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து, வெந்த கடலைப்பருப்பை போட்டு வதக்கி, வறுத்த புதினா, மசாலாத்தூள், மிளகுத்தூள், இஞ்சி விழுது சேர்த்துக் கிளறி இறக்கவும். கலக்கலான கடலைப்பருப்பு சுண்டல் ரெடி! விருப்பப்பட்டால் தேங்காய் சேர்த்துக் கொள்ளலாம்.

——————————————————————————–

சென்னா சுண்டல்

தேவையானவை: சென்னா – 2 கப், கொள்ளு – ஒரு டேபிஸ்பூன், மிளகுத்தூள் – அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய், கொப்பரைத்-துண்டுகள் – தலா 2, கடுகு, எண்ணெய் – தலா ஒரு டீஸ்பூன், பொடியாக நறுக்கிய கறிவேப்-பிலை – சிறிதளவு, உப்பு – தேவை-யான அளவு.

செய்முறை: சென்னாவை முந்தைய நாள் இரவே ஊற வைக்-கவும். கொள்ளு, காய்ந்த மிளகாய், கொப்பரைத் துண்டுகளை வறுத்து மிக்ஸியில் பொடிக்கவும். சென்னாவை குக்கரில் வைத்து உப்பு சேர்த்து, ஒரு விசில் வந்ததும் இறக்கி தண்-ணீரை வடிகட்டவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து, கறிவேப்பிலை, சென்னா, வறுத்து அரைத்த பொடியை போட்டு நன்கு கிளறி மிளகுத்தூளை மேலாக தூவவும்.

——————————————————————————–

பனீர் சுண்டல்

தேவையானவை: முளைகட்டிய பாசிப்பயறு – 2 கப், பனீர் துண்டு-கள் – 2 டேபிள்ஸ்பூன், கேரட் துருவல், நறுக்கிய கொத்தமல்லி – தலா ஒரு கப், எலுமிச்சம் பழச்சாறு – 2 டீஸ்பூன், உப்பு – தேவை-யான அளவு, மிளகுத்தூள் – ஒரு டீஸ்பூன், நெய் – 4 டீஸ்பூன்.

செய்முறை: பனீர் -துண்டுகளை வெந்நீரில் போட்டு, சிறிது உப்பு சேர்த்து 10 நிமிடம் மூடி வைத்து, தண்ணீரை வடித்து விடவும். மிளகுத்தூள் சேர்த்துப் பிசறி நெய்யில் போட்டுப் பொரித்தெடுக்-கவும்.

முளைகட்டிய பயறுடன் பொரித்த பனீர் துண்டுகள், துருவிய கேரட், நறுக்கிய கொத்தமல்லி, மிளகுத்தூள், உப்பு, எலுமிச்சைச் சாறு சேர்த்து நன்கு கலக்கவும்.

ஈஸியாக செய்யக் கூடிய டேஸ்ட்டியான சுண்டல் இது.
——————————————————————————–

தாளிப்பு தயிர் சுண்டல்

தேவையானவை: கொண்டைக்கடலை, பாசிப்பயறு, கொள்ளு (எல்லாமே முளை கட்டியது), பொடியாக நறுக்கிய பேபிகார்ன், கேரட் துருவல் – தலா ஒரு கப், மிளகுத்தூள் – ஒரு டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு, பொடியாக நறுக்கிய இஞ்சி, கடுகு, எண்ணெய் – தலா ஒரு டீஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லி – சிறிதளவு, புளிக்காத தயிர் – 2 கப்.

செய்முறை: கொண்டைக்கடலை, பாசிப்பயறு, கொள்ளு, பேபிகார்ன் ஆகியவற்றை தயிரில் போட்டு, உப்பு, மிளகுத்தூள் சேர்த்து 30 நிமிடம் ஊற வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, இஞ்சி தாளிக்கவும். ஊறிய பயறு வகைகளை ஒரு அகலமான பேஸினில் போட்டு, தாளித்த கடுகு, இஞ்சி, துருவிய கேரட், கொத்தமல்லி சேர்த்துக் கலக்கவும்.

டக்கராக இருக்கும் இந்த தாளிப்பு தயிர் சுண்டல்.

——————————————————————————–

பாசிப்பருப்பு பட்டாணி சுண்டல்

தேவையானவை: பாசிப்பருப்பு – 2 கப், தேங்காய் துருவல் – 4 டீஸ்பூன், தோல் உரித்த பட்டாணி – ஒரு கப், கடுகு, எண்ணெய் – தலா ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு, கறிவேப்பிலை, இஞ்சி – சிறிதளவு, நெய் – ஒரு டீஸ்பூன், மிளகுத்தூள் – அரை டீஸ்பூன்.

செய்முறை: பாசிப்பருப்பை சிவக்க வறுத்து அரை மணி நேரம் ஊறவைக்கவும். ஊறிய பருப்பை குக்கரினுள் இட்லி தட்டில் பரப்பி, ஒரு விசில் வந்ததும் இறக்கவும். இதனால், பருப்பு குழையாமல் இருக் கும். கடாயில் நெய் விட்டு, உரித்த பட்டாணி, நறுக்கிய இஞ்சி, மிளகுத் தூள், உப்பு சேர்த்து வதக்கிக் கொள்ளவும். கடுகு தாளித்து, வேகவைத்த பாசிப்பருப்புடன், வதக்கிய பட்டாணி, தேங்காய் துருவல், நறுக்கிய கறிவேப்பிலை சேர்த்துக் கிளறி இறக்கவும்.

பட்டாணியும் பாசிப்பருப்பும் சேர்த்துச் செய்வதால் வித்தியாசமான சுவையில் இருக்கும் இந்த சுண்டல்.

——————————————————————————–

காரப் பொறி சுண்டல்

தேவையானவை: கார அரிசிப்பொரி, முளைகட்டிய பாசிப்பயறு – தலா ஒரு கப், வறுத்த வேர்க்கடலை, வறுத்த பொட்டுக்கடலை – தலா ஒரு டேபிள்ஸ்பூன், நெய்யில் பொரித்த கறிவேப்பிலை – ஒரு கைப்பிடி, மிளகுத்தூள் – ஒரு டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு, பெருங்காயத்தூள் – சிறிதளவு.

செய்முறை: எல்லாவற்றையும் சேர்த்து நன்றாக கலந்து பரிமாறவும். விருப்பப்பட்டால் கொஞ்சம் ஓமப்பொடி சேர்க்கலாம்.

——————————————————————————–

மூலிகை சுண்டல்

தேவையானவை: முளைகட்டிய கொண்டைக்கடலை – 2 கப், ஓமம், கடுகு, எண்ணெய், பெருங்காயத்தூள் – தலா ஒரு டீஸ்பூன், துளசி – ஒரு கைப்பிடி, வெற்றிலை – 2, பூண்டு பல் – 4, இஞ்சி – ஒரு துண்டு, மிளகு – 10, புதினா – ஒரு கைப்பிடி, உப்பு – தேவையான அளவு.

செய்முறை: ஓமம், துளசி, வெற்றிலை, பூண்டு, இஞ்சி, மிளகு, புதினா, உப்பு இவற்றை அரைத்து, முளைகட்டிய கொண்டைக்கடலையுடன் சேர்த்து குக்கரில் வைத்து வேக விடவும். ஒரு விசில் வந்ததும் இறக்கி கடுகு, பெருங்காயத்தூள் தாளித்துக் கிளறி இறக்கவும்.

மருத்துவ குணம் அடங்கிய மணக்கும் சுண்டல் இது.

——————————————————————————–
பானிப் பூரி சுண்டல்

தேவையானவை: உப்பு சேர்த்து வேக வைத்த சோளம், ஓமப்பொடி, நறுக்கிய வெள்ளரித் துண்டுகள், துருவிய கேரட், வெங்காயம் – தலா ஒரு கப், பானிபூரி – 20, மிளகுத்தூள், இஞ்சி விழுது – ஒரு டீஸ்பூன், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி – சிறிதளவு.

செய்முறை: பானிபூரியை உடைத்துப் போட்டு மற்ற எல்லாவற்றையும் இதனுடன் சேர்த்துக் கலக்கவும். பிரமாதமாக இருக்கும் இந்த பானிபூரி சுண்டல்.

——————————————————————————–

சுண்டல் புட்டிங்

தேவையானவை: பாசிப்பயறு, சோளம், கொண்டைக்கடலை (எல்லாமே முளை கட்டியது) – தலா ஒரு கப், இஞ்சி – ஒரு துண்டு, பூண்டு – 4 பல், மிளகு – 10, காய்ந்த மிளகாய் – 2, உப்பு – தேவையான அளவு, வட்டமாக நறுக்கிய வெள்ளரித் துண்டுகள் – 10, தக்காளித் துண்டுகள் – 5, கேரட் துண்டுகள் – 10, வட்டமாக நறுக்கிய வெங்காயத் துண்டுகள் – 6 துண்டுகள், கடுகு, எண்ணெய் – ஒரு டீஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லி – சிறிதளவு.

செய்முறை: பயறு, சோளம், கொள்ளு, கொண்டைக்கடலை, இஞ்சி, பூண்டு, காய்ந்த மிளகாய், மிளகு இவற்றைக் கரகரப்பாக அரைத்து, உப்பு சேர்த்துப் பிசைந்து கொள்ளவும். இட்லித் தட்டில் எண்ணெய் தடவி, பிசைந்த பயறு மாவில் சிறிது எடுத்து ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.

இவற்றை சிறு சிறு துண்டுகளாக வெட்டி ஒரு தட்டின் நடுவில் வைத்து கடுகைத் தாளித்து பரவலாகத் தூவி, கொத்தமல்லி, வெங்காயம், தக்காளி, கேரட், வெள்ளரித் துண்டுகளை சுற்றிலும் வைத்து அலங்கரித்துப் பரிமாறவும்.

பார்த்ததும் சாப்பிடத் தூண்டும் இந்த சுண்டல் புட்டிங்.

——————————————————————————–
கோதுமை சுண்டல்

தேவையானவை: முளைகட்டிய கோதுமை, துருவிய மாங்காய், நறுக்கிய வெள்ளரிக்காய், நறுக்கிய பேபிகார்ன், பொடியாக நறுக்கிய கொத்த-மல்லி – தலா ஒரு கப், இஞ்சி விழுது – ஒரு டீஸ்பூன், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், கடுகு, எண்ணெய் – தலா ஒரு டீஸ்பூன், எலுமிச்சம்பழம் – ஒரு மூடி, உப்பு – தேவையான அளவு.

செய்முறை: முளை கட்டிய கோதுமையுடன் உப்பு சேர்த்து குக்கரில் வைத்து, ஒரு விசில் வந்ததும் இறக்கவும். இதனுடன் துருவிய மாங்காய், வெள்ளரிக்காய், பேபிகார்ன் சேர்க்கவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து பச்சைமிளகாய், இஞ்சி விழுது, உப்பு, வெந்த கோதுமை-மாங்காய் கலவை, கொத்தமல்லி சேர்த்து, எலுமிச்சம்பழம் பிழிந்து கலக்கவும்.

சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற சுண்டல் இது.

——————————————————————————–

பார்லி சுண்டல்

தேவையானவை: பார்லி, வறுத்த வேர்க்கடலை – தலா ஒரு கப், வறுத்த முந்திரிப்பருப்பு – 20, வறுத்த பிஸ்தா – 10, பொட்டுக்கடலை – 4 டீஸ்பூன், உப்பு, நறுக்கிய கொத்துமல்லி – சிறிதளவு, இஞ்சி விழுது, மிளகுத்தூள் – தலா ஒரு டீஸ்பூன்.

செய்முறை: பார்லியுடன் இஞ்சி விழுது, மிளகுத்தூள் சேர்த்துக் கலந்து, கொதிக்-கும் தண்ணீரில் நன்றாக ஊற வைக்கவும். இதனுடன் உப்பு சேர்த்து குக்கர் தட்டில் வைத்து 10 நிமிடம் ஆவியில் வேக விடவும். பார்லி உதிர் உதிராக வெந்து விடும். இதை அகலமான பாத்திரத்தில் போட்டு, வறுத்த முந்திரி, பிஸ்தா, வேர்க்கடலை, பொட்டுக்கடலை, நறுக்கிய கொத்தமல்லி சேர்த்துக் கலக்கவும்.

கர்ப்பிணிப் பெண்களுக்கு உகந்த சுண்டல் இது.

——————————————————————————–
சாபுதானா சுண்டல் (ஜவ்வரிசி சுண்டல்)

தேவையானவை: ஜவ்வரிசி – 2 கப், முளைகட்டிய பயறு, முளைகட்டிய சோளம் – தலா ஒரு கப், பொடியாக நறுக்கிய குட-மிளகாய் – அரை கப், இஞ்சி விழுது, மிளகுத்தூள் – தலா ஒரு டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு, வறுத்த முந்திரிப்பருப்பு – 10, நெய் – 4 டீஸ்பூன்.

செய்முறை: ஜவ்வரிசியை தண்ணீர் தெளித்து பஞ்சு போல் மிருதுவாகும் வரை மூடி வைக்கவும். இதில், இஞ்சி விழுது, சிறிது உப்பு, மிளகுத்தூள் சேர்த்து பிசறவும். கடாயில் நெய் விட்டு, ஊறிய ஜவ்வரிசி கலவையைப் போட்டு மிதமான தீயில் கிளறி வேக விடவும். குடமிளகாயை நெய்யில் வதக்கி சேர்க்கவும். இதில் முளை-கட்டிய சோளம், பயறு, உப்பு சேர்த்து நன்றாகக் கலந்து மேலே முந்திரிப்பருப்பை தூவி அலங்கரிக்கவும்.

மணிகளைப் போல் மின்னும் இந்த சுண்டல்.

——————————————————————————–

சென்னா லெமன் சுண்டல்

தேவையானவை: முளைகட்டிய கொண்டைக்கடலை, பொடியாக நறுக்கிய வெங்காயம் – தலா ஒரு கப், இஞ்சி – ஒரு துண்டு, தக்காளி – 1, தனியா – ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 1, புதினா – ஒரு கைப்பிடி, பூண்டு – 4 பல், உப்பு – தேவையான அளவு, எலுமிச்சம்பழம் – ஒரு மூடி, எண்ணெய் – ஒரு டீஸ்பூன், கொத்தமல்லி – சிறிதளவு.

செய்முறை: கொண்டைக்கடலையுடன் தேவையான உப்பு சேர்த்து குக்கரில் வைத்து ஒரு விசில் வந்ததும் இறக்கவும். தனியா, காய்ந்த மிளகாய், பூண்டு, இஞ்சி, புதினா ஆகியற்றை எண்ணெய் விட்டு வதக்கி நன்கு அரைக்கவும். இந்த விழுதை வேகவைத்த கொண்டைக்கடலையுடன் சேர்த்து, உப்புப் போட்டு 5 நிமிடம் கொதிக்க விடவும். நன்றாகக் கெட்டி-யானதும் எலுமிச்சம்பழம் பிழிந்து, நறுக்கிய கொத்தமல்லி, வெங்காயம் சேர்த்துக் கலக்கவும். தக்காளி துண்டுகளை மேலே பரவலாகப் போடவும்.

பிரெட்டுக்கு தொட்டுக் கொள்ள சூப்பராக இருக்கும் இந்த சுண்டல்.

——————————————————————————–

மீல் மேகர் சுண்டல்

தேவையானவை: முளைகட்டிய சோளம் – ஒரு கப், மீல் மேக்கர் – 20, உப்பு – தேவையான அளவு, கடுகு, எண்ணெய் – ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் – சிறிதளவு, மிளகுத்தூள் – ஒரு டீஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை – சிறிதளவு.

செய்முறை: முளைகட்டிய சோளத்தை குக்கரில் வைத்து உப்பு சேர்த்து, ஒரு விசில் வந்ததும் இறக்கி, தண்ணீரை வடித்து விடவும். மீல் மேக்கரை சுடு நீரில் போட்டு வடிகட்டவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து, மீல்மேக்கர், வெந்த சோளம், பெருங்காயத்தூள், மிளகுத்தூள், கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.

சிறிது எலுமிச்சைச் சாறு பிழிந்தால் சுவை கூடும்.

——————————————————————————–

கீரை ஆனியன் சுண்டல்

தேவையானவை: வெங்காயத்தாள் – ஒரு கட்டு, புதினா, கொத்தமல்லி – தலா ஒரு கைப்பிடி, நறுக்கிய வெங்காயம், முளை கட்டிய பாசிப்பயறு, வேக வைத்த வேர்க்கடலை – தலா ஒரு கப், உப்பு – தேவையான அளவு, நெய், மிளகுத்தூள் – ஒரு டீஸ்பூன், எலுமிச்சம்பழம் – ஒரு மூடி.

செய்முறை: வெங்காயத்தாள், புதினாவைப் பொடியாக நறுக்கி நெய்யில் வதக்கவும். முளைகட்டிய பயறை வேக வைத்து, அதனுடன் வேர்க்கடலை, புதினா, வெங்காயத்தாள், வெங்காயம், கொத்தமல்லி, உப்பு சேர்த்து கலக்கவும். மேலே எலுமிச்சம்பழத்தைப் பிழிந்து மிளகுத்தூள் சேர்த்துக் கலந்து பரிமாறவும்.

——————————————————————————–

ஃப்ரூட் சுண்டல்

தேவையானவை: முளை கட்டிய பாசிப்பயறு, கொய்யாப்பழத் துண்டுகள், வாழைப்பழத் துண்டுகள், பைனாப்பிள் துண்டுகள் – தலா ஒரு கப், ஆப்பிள் (நறுக்கியது) – 1, உலர்ந்த திராட்சை – 10.

செய்முறை: முளைகட்டிய பயறை 5 நிமிடம் ஆவியில் வேக வைத்துக் கொள்ளவும். இதனுடன் மற்ற எல்லாவற்றையும் சேர்த்துக் கலந்து பரிமாறவும்.

இந்த சுண்டல் செய்வதும் ஈஸி.. நாவுக்கும் ருசி!

——————————————————————————–

கார்ன் காளான் கதம்ப சுண்டல்

தேவையானவை: உப்பு சேர்த்து வேக வைத்த சோளம், காளான், முளைகட்டிய பயறு, வேகவைத்த வேர்க்கடலை, நறுக்கிய கொத்தமல்லி – தலா ஒரு கப், இஞ்சி விழுது – ஒரு டீஸ்பூன், மிளகு – ஒரு டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு, நெய் – 4 டீஸ்பூன்.

செய்முறை: காளானை சிறிது உப்பு சேர்த்து நெய்யில் வதக்கவும். இதனுடன் மற்ற எல்லாவற்றையும் சேர்த்து, காளான் உடையாமல் நன்றாகக் குலுக்கி கலக்கவும்.

கலக்கலாக இருக்கும் இந்தக் கதம்ப சுண்டல்.

——————————————————————————–

30 வகை சைட் டிஷ்!

30 வகை சைட் டிஷ்!

வெண்டைக்காய் சப்ஜி

(ஒரிஸ்ஸா ஸ்பெஷல்)

தேவையானவை: வெண்டைக்காய் – கால் கிலோ, பெரிய வெங்காயம் – 4, தக்காளி – 2, பூண்டு – 4 அல்லது 5 பல், சீரகம் – 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 3 அல்லது 4, மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், சமையல் எண்ணெய் – 4 டீஸ்பூன், கொத்தமல்லி – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு.

செய்முறை: வெண்டைக்காய் சிறியதாக இருந்தால் அதை அப்படியே எடுத்துக் கொள்ளவும். பெரியதாக இருந்தால் இரண்டாக நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் காய்ந்ததும் வெண்டைக்காயை வதக்கவும். வெங்காயம், தக்காளி, பூண்டு, சீரகம், காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து அரைத்துக் கொள்ளவும். மீண்டும் எண்ணெய் விட்டு அரைத்து வைத்திருக்கும் மசாலாவை வாசனை போகும் வரை சுருள வதக்கிக் கொள்ளவும்.

பிறகு வதக்கி வைத்திருக்கும் வெண்டைக்காயை சேர்க்கவும். அதில், உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து நன்றாக கிளறவும். இது கரண்டியால் எடுத்து விட்டுக் கொள்ளும் பதத்துக்கு இருக்க வேண்டும். தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்க்கலாம். இந்த கிரேவி ஒரு கொதி வந்ததும் கொத்தமல்லி தூவி இறக்கவும். இதே போல் கோவைக்காயிலும் சப்ஜி செய்யலாம்.

——————————————————————————–

கத்தரிக்காய் ஸ்டஃப்டு வதக்கல்

தேவையானவை: கத்தரிக்காய் – கால் கிலோ, இஞ்சி – பெரிய துண்டு, பச்சைமிளகாய் – 2 அல்லது 3, கொத்தமல்லி – ஒரு சிறிய கட்டு, கடுகு – அரை டீஸ்பூன், சீரகம் – அரை டீஸ்பூன், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், எண்ணெய் – 4 அல்லது 5 டீஸ்பூன், உளுத்தம்பருப்பு – அரை டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: கத்தரிக்காயை ஸ்டஃப் செய்யவதற்கு ஏற்ற வகையில் வெட்டி, லேசாக வேக வைக்கவும். இஞ்சி, கொத்தமல்லி, பச்சை மிளகாயை தண்ணீர் விடாமல் அரைத்து, அதனுடன் உப்பு, மஞ்சள் தூள் சேர்க்கவும். இந்தக் கலவையை கத்தரிக்காயின் உள்ளே அடைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, சீரகம், உளுத்தம்பருப்பு தாளித்து அதில் மசாலா அடைத்து வைத்துள்ள கத்தரிக்காய்களை போட்டு அடுப்பை மிதமான தீயில் வைத்து சுருள வதக்கவும்.

——————————————————————————–

காராமணி சப்ஜி

தேவையானவை: காராமணி – அரை கிலோ, பெரிய வெங்காயம் – 2, உருளைக்கிழங்கு – 2, தக்காளி – 3, பச்சைமிளகாய் – 2, இஞ்சி – ஒரு துண்டு, பூண்டு – 4 பல், கொத்தமல்லி, பட்டை – சிறிதளவு, சோம்பு – அரை டீஸ்பூன், பெரிய ஏலக்காய் – 2, கிராம்பு – 2, மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன், ஆம்சூர் பொடி – அரை டீஸ்பூன், தனியாதூள் – அரை டீஸ்பூன், எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: காராமணியை நன்றாக கழுவி, ஒரு அங்குல நீள துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். உருளைக்கிழங்கை குக்கரில் வேக வைத்து, சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். நான்கு துண்டு வெங்காயம், பூண்டு, இஞ்சி, பட்டை, சோம்பு, ஏலக்காய், கிராம்பு, பச்சைமிளகாய் ஆகியவற்றை மிக்ஸியில் விழுதாக அரைக்கவும். இதை சிறிது எண்ணெய் விட்டு வதக்கி வைத்துக் கொள்ளவும். மீதமுள்ள வெங்காயத்தை பொடியாக நறுக்கி, எண்ணெயில் வதக்கி தனியாக வைத்துக் கொள்ளவும். நறுக்கி வைத்திருக்கும் காராமணியை பச்சை வாசனை போகும் வரை வதக்கி, தண்ணீர் சேர்த்து அதில் மஞ்சள்தூள், உப்பு, ஆம்சூர் பொடி, தனியாதூள் ஆகியவற்றை சேர்க்கவும். காராமணி வெந்ததும் அரைத்து வைத்திருக்கும் மசாலா கலவை, வதக்கிய வெங்காயம், உருளைக்கிழங்கு, பொடியாக நறுக்கிய தக்காளி, கொத்தமல்லி ஆகியவற்றை சேர்த்து கிளறி ஐந்து நிமிடம் அடுப்பில் வைத்து இறக்கவும்.

——————————————————————————–

கோஸ் மசாலா

தேவையானவை: முட்டைகோஸ் – அரை கிலோ, பொடியாக நறுக்கிய வெங்காயம் – ஒரு கப், தக்காளி – 1, இஞ்சி – ஒரு துண்டு, பூண்டு – 2 பல், உருளைக்கிழங்கு – 2, தக்காளி – 2, பச்சைமிளகாய் – 1, கொத்தமல்லி – சிறிதளவு, மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன், எண்ணெய், நெய் கலவை – தேவையான அளவு, பட்டை – 4 துண்டு, கிராம்பு – 2, கருஞ்சீரகம் – அரை டீஸ்பூன், உப்பு – தேவை யான அளவு.

செய்முறை: உருளைக்கிழங்கை வேக வைத்து பெரிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். முட்டைகோஸை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். இஞ்சி, பூண்டு, பச்சைமிளகாய், பொடியாக நறுக்கிய வெங்காயம் 2 டீஸ்பூன் ஆகியவற்றை நைஸாக அரைத்துக் கொள்ளவும். பட்டை, கிராம்பு, கருஞ்சீரகத்தை எண்ணெய் விடாமல் வறுத்து, பொடித்துக் கொள்ளவும்.

உருளைக்கிழங்கையும் வெங்காயத்தையும் தனித்தனியாக எண்ணெயில் வதக்கி எடுத்து வைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் காய்ந்ததும் முட்டை கோஸ் போட்டு வதக்கி, அதில் இஞ்சி, பூண்டு, பச்சைமிளகாய் விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பிறகு மஞ்சள்தூள், உப்பு, சிறிது தண்ணீர் சேர்த்து வேக விடவும். நன்றாக வெந்ததும் வதக்கி வைத்திருக்கும் உருளைக்கிழங்கையும் பொடித்து வைத்திருக்கும் மசாலாவையும் சேர்த்துக் கிளறவும். கடைசியில் பொடியாக நறுக்கிய தக்காளி, வதக்கிய வெங்காயம், கொத்தமல்லியை சேர்த்து, ஒரு கொதி வந்ததும் இறக்கி பரிமாறவும்.

——————————————————————————–

சுரைக்காய் கோஃப்தா

தேவையானவை: சுரைக்காய் – அரை கிலோ, பனீர் – 200 கிராம், சீரகத்தூள் – ஒரு டீஸ்பூன், பச்சைமிளகாய் – 3, கடலைமாவு – ஒரு கப், இஞ்சி – ஒரு துண்டு, தனியாதூள் – ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: சுரைக்காயை தோல் சீவி துருவிக் கொள்ளவும். பனீரை உதிர்த்துக் கொள்ளவும். சுரைக்காய், பனீர் இவற்றுடன் கடலைமாவு, சீரகத்தூள், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து பிசைந்து கொள்ளவும். அவற்றை உருண்டைகளாக உருட்டி எண்ணெயில் பொரித்தெடுத்து தனியாக வைக்கவும்.

கிரேவி செய்ய தேவையானவை: பெரிய வெங்காயம் – 2, தக்காளி – 4, பூண்டு – 4 பல், காய்ந்த மிளகாய் – 2, சீரகம் – கால் டீஸ்பூன், துருவிய இஞ்சி – சிறிதளவு, தனியாதூள், மஞ்சள்தூள் – தலா கால் டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: வெங்காயம், பூண்டு, இஞ்சி, தக்காளியை மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். வெறும் கடாயில் காய்ந்த மிளகாய், சீரகத்தை வறுத்து நைஸாக பொடித்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் காய்ந்ததும் அரைத்த விழுதை சேர்த்து சுருள வதக்கவும். பிறகு பொடித்து வைத்திருக்கும் மசாலா பொடியை சேர்க்கவும். அதில் சிறிது தண்ணீர் சேர்த்து உப்பு, மஞ்சள்தூள், தனியாதூள் போட்டு மிதமான தீயில் கொதிக்க விடவும். பிறகு பொரித்து வைத்திருக்கும் கோஃப்தாக்களைப் போட்டு கொத்தமல்லியைத் தூவி பரிமாறவும்.

——————————————————————————–

முள்ளங்கி மசாலா கறி

தேவையானவை: வெள்ளை முள்ளங்கி – அரை கிலோ, உருளைக்கிழங்கு – 1, வெங்காயம் – 1, இஞ்சி – ஒரு துண்டு, கரம் மசாலாத்தூள் – ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் – 2, கொத்தமல்லி – சிறிதளவு, கடுகு – அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு – அரை டீஸ்பூன், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், எண்ணெய் – 2 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: முள்ளங்கி, உருளைக்கிழங்கை வேக வைத்து கைகளால் பொடிமாஸ் போல் உதிர்த்துக் கொள்ளவும். வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். கடாயில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, இஞ்சி, பச்சைமிளகாயை தாளித்து வெங்காயத்தைப் போட்டுப் பொன்னிறமாக வதக்கவும்.

உதிர்த்து வைத்திருக்கும் முள்ளங்கி, உருளைக்கிழங்கை சேர்க்கவும். பிறகு உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து கிளறவும். கடைசியில் கரம் மசாலாத்தூள் சேர்த்து, ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு நன்றாக கிளறவும். கொத்தமல்லியைத் தூவி பரிமாறவும்.

——————————————————————————–

முள்ளங்கி இலை கறி

தேவையானவை: வெள்ளை முள்ளங்கி இலை – ஒரு சிறிய கட்டு, பச்சைமிளகாய் – 2, வெங்காயம் – 2, கடுகு – அரை டீஸ்பூன், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், உளுத்தம்பருப்பு – கால் டீஸ்பூன், சீரகம் – அரை டீஸ்பூன், எண்ணெய் – 2 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: முள்ளங்கி இலையை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகத்தை தாளித்து, பொடியாக நறுக்கிய வெங்காயம், நீளவாக்கில் கீறிய பச்சைமிளகாயை சேர்த்து வதக்கவும். பிறகு முள்ளங்கி இலையை போட்டு, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் தெளித்து சுருள கிளறி இறக்கவும்.

——————————————————————————–

கோவைக்காய் – உருளை வதக்கல்

தேவையானவை: கோவைக்காய் – அரை கிலோ, உருளைக்கிழங்கு – 2, மிளகாய்த்தூள் – ஒன்றரை டீஸ்பூன், மஞ்சள்தூள், கடுகு, உளுத்தம்பருப்பு – தலா அரை டீஸ்பூன், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை: கோவைக்காயையும் உருளைக்கிழங்கையும் நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கிக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, அதில் கோவைக்காய், உருளைக்கிழங்கை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பிறகு மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து, சிறிது தண்ணீர் தெளித்து மூடவும். இடையிடையே நீர் தெளித்து நன்றாக வேக விடவும். கடைசியில் தேவைப்பட்டால் சிறிது எண்ணெய் விட்டு சுருள வதக்கவும்.

——————————————————————————–

பீன்ஸ் சப்ஜி

தேவையானவை: பீன்ஸ் – கால் கிலோ, வெங்காயம் – 2, பூண்டு – 2 பல், காய்ந்த மிளகாய் – 2, தனியா – ஒரு டீஸ்பூன், பட்டை – 2 துண்டு, சோம்பு, கசகசா – தலா ஒரு டீஸ்பூன், வெல்லம் – ஒரு சிறிய கட்டி, மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன், புளி – நெல்லிக்காய் அளவு, எண்ணெய் – 2 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: பீன்ஸ் மற்றும் வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். காய்ந்த மிளகாய், தனியா, பட்டை, சோம்பு, கசகசாவை சிறிது எண்ணெயில் வறுத்து, புளி சேர்த்து அரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் காய்ந்ததும் இரண்டு பல் பூண்டை தட்டிப் போட்டு, பொடியாக நறுக்கிய வெங்காயத்தைப் போடவும். வெங்காயம் வதங்கியதும் பொடியாக நறுக்கிய பீன்ஸை சேர்க்கவும். சிறிது வதக்கியதும் அரைத்து வைத்துள்ள மசாலா, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து தண்ணீர் விட்டு வேக விடவும். பீன்ஸ் நன்றாக வெந்ததும் சிறு துண்டு வெல்லம் சேர்க்கவும். காரம் தூக்கலாக தேவைப்பட்டால் சிறிது மிளகாய்த்தூள் சேர்த்துக் கொள்ளலாம்.

கடைசியில் சிறிதளவு நெய் விட்டால் நன்றாக இருக்கும்.

——————————————————————————–

பீட்ரூட் மசாலா கறி

தேவையானவை: பீட்ரூட் – கால் கிலோ, வெங்காயம் – 2, தக்காளி – 2, சோம்பு – ஒரு டீஸ்பூன், பிரிஞ்சி இலை – 1, மிளகுத்தூள் – முக்கால் டீஸ்பூன், மஞ்சள்தூள் – ஒரு டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: பீட்ரூட்டை தோல் சீவி பொடியாக நறுக்கிக் கொள்ளவும். வெங்காயம், தக்காளி இரண்டையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் காய்ந்ததும் பிரிஞ்சி இலை, சோம்பு தாளித்து, வெங்காயம், தக்காளி இரண்டையும் வதக்கிக் கொள்ளவும். நறுக்கிய பீட்ரூட்டை போட்டு வேகும் அளவுக்கு சிறிது தண்ணீர் சேர்த்து மூடவும். காய் நன்றாக வெந்ததும் உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து மிளகுத்தூளை போட்டு 5 நிமிடம் வதக்கவும். காரம் தேவைப்பட்டால் மேலும் சிறிது மிளகுத்தூள் சேர்த்துக் கொள்ளலாம்.

——————————————————————————–

புடலங்காய்-புதினா மசாலா

தேவையானவை: புடலங்காய் – கால் கிலோ, புதினா இலைகள் – 2 டீஸ்பூன், வெங்காயம் – 2, இஞ்சி – ஒரு துண்டு, பச்சைமிளகாய் – 2, பூண்டு – 2 பல், ஏலக்காய் – 2, கிராம்பு – 2 அல்லது 3, ஒமம் – அரை டீஸ்பூன், சோம்பு – அரை டீஸ்பூன், பொட்டுக்கடலை – அரை டீஸ்பூன், தேங்காய் துருவல் – 2 டேபிள்ஸ்பூன், எண்ணெய் – 2 டீஸ்பூன், மஞ்சள்தூள் – ஒரு டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: புடலங்காயை விரல் நீளத்துக்கு நறுக்கிக் கொள்ளவும். இஞ்சி, பூண்டு, பச்சைமிளகாயை அரைத்துக் கொள்ளவும். தேங்காய் துருவல், பொட்டுக்கடலையை தனியாக அரைத்துக் கொள்ளவும்.

கடாயில் சிறிது எண்ணெய் விட்டு சோம்பு, ஏலக்காய், கிராம்பு, ஓமம், வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கவும். அதில் புடலங்காயை சேர்த்து வதக்கி, தண்ணீர் விட்டு வேக விடவும்.

மஞ்சள்தூள், உப்பு, பொட்டுக்கடலை – தேங்காய் விழுதை சேர்த்து கொதிக்க விடவும். இறக்கும் சமயத்தில் புதினா இலையை பொடியாக நறுக்கி சேர்த்து பரிமாறவும்.

——————————————————————————–

கேரட் – பனீர் குருமா

தேவையானவை: கேரட் – கால் கிலோ, பனீர் – அரை கப், இஞ்சி – ஒரு துண்டு, பச்சைமிளகாய் – 2, பூண்டு – 2 பல், வெங்காயம் – 4, தக்காளி – 4, கொத்தமல்லி – சிறிதளவு, எண்ணெய் – 3 டீஸ்பூன், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், சோம்பு – ஒரு டீஸ்பூன், பட்டை – 4 துண்டு, ஏலக்காய் – 2, கிராம்பு – 2, பிரிஞ்சி இலை – 2, கரம் மசாலாத்தூள் – அரை டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: கேரட்டை அவியலுக்கு நறுக்குவது போல் நீளமாகவும், வெங்காயத்தை பொடியாகவும் நறுக்கவும். இஞ்சி, பூண்டு, பச்சைமிளகாயை விழுதாக அரைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு சோம்பு தாளித்து, சிறிது வெங்காயத்துடன் அரைத்து வைத்துள்ள விழுதுப் போட்டு வதக்கவும். கேரட், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து வதக்கி, சிறிது தண்ணீர் விட்டு வேக விடவும். தக்காளி, மீதமுள்ள வெங்காயம் இரண்டையும் லேசாக வதக்கி சேர்க்கவும். பட்டை, ஏலக்காய், கிராம்பை பொடித்து இதில் கலக்கவும். தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம். கரம் மசாலாத்தூள் சேர்த்து நன்றாக கொதிக்கவிடவும். இறுதியில் பனீரை சிறு துண்டுகளாக நறுக்கி, வதக்கி சேர்க்கவும். கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

——————————————————————————–

ஆலு கடுகு சப்ஜி

தேவையானவை: உருளைக்கிழங்கு – அரை கிலோ, காய்ந்த மிளகாய் – 5, கடுகு – ஒரு டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், எண்ணெய் – 4 டீஸ்பூன், தக்காளி – 2, கொத்தமல்லி – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு.

செய்முறை: உருளைக்கிழங்கை தோல் சீவி சிறிய துண்டுகளாக நறுக்கவும். கடுகு, மிளகாய் இரண்டையும் அம்மியில் வைத்து அரைக்கவும் (இது மிக்ஸியில் சரியாக அரைபடாது). கடாயில் எண்ணெய் காய்ந்ததும் உருளைக்கிழங்கை நன்றாக வதக்கி, உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து இரண்டு டம்ளர் தண்ணீர் விடவும். அரைத்து வைத்திருக்கும் விழுதை அதில் கொட்டிக் கிளறவும். நன்றாக கொதித்ததும் பொடியாக நறுக்கிய தக்காளி, கொத்தமல்லி சேர்த்து இறக்கவும்.

——————————————————————————–

ஆலு-மட்டர்-பனீர் மசாலா

தேவையானவை: உருளைக்-கிழங்கு – அரை கிலோ, உரித்த பச்சை பட்டாணி – ஒரு கப், தக்காளி – 4, பனீர் (அ) சீஸ் – அரை கப், கொத்தமல்லி – சிறிதளவு, எண்ணெய் – 4 டீஸ்பூன், ஏலக்காய் – 2, பிரிஞ்சி இலை – 1, பூண்டு – 5 பல், இஞ்சி – ஒரு துண்டு, பச்சைமிளகாய் – 3, வெங்காயம் – 2, கரம் மசாலாத்தூள் – அரை டீஸ்பூன், ஆம்சூர் பொடி – கால் டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: உருளைக்கிழங்கை வேக வைத்து உரித்து ஒன்றிரண்டாக உதிர்க்கவும். வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கவும். பனீரை சிறு துண்டுகளாக நறுக்கவும். ஏலக்காய், பூண்டு, இஞ்சி, பச்சைமிளகாய், நறுக்கிய வெங்காயத்தில் பாதியை சேர்த்து தண்ணீர் விட்டு விழுதாக அரைக்கவும்.

கடாயில் சிறிது எண்ணெய் விட்டு வெங்காயத்தை வதக்கி தனியே வைக்கவும். வெறும் கடாயில் பனீர் துண்டுகளை சிவக்க வறுக்கவும். மீண்டும் கடாயில் எண்ணெய் விட்டு பிரிஞ்சி இலை, பட்டாணியை வதக்கி, அரைத்த விழுதை சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும். தக்காளியை சேர்த்து சுருள கிளறவும். தக்காளி வதங்கியதும் உதிர்த்த உருளைக்கிழங்கை சேர்க்கவும்.

பிறகு தண்ணீர் சேர்த்து உப்பு, மஞ்சள்தூள், கரம் மசாலாத்தூள், ஆம்சூர் பொடி போட்டு கொதிக்க விடவும். கிரேவி கெட்டியாகும்போது பனீர் துண்டுகள், வெங்காயத்தை சேர்த்துக் கிளறி, கொதி வந்ததும் இறக்கவும். கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

——————————————————————————–

உருளை-பட்டாணி மசாலா

தேவையானவை: வெங்காயம் – 2, உருளைக்கிழங்கு – 5, பச்சை பட்டாணி – அரை கப், தக்காளி – 2, பூண்டு – 4 பல், இஞ்சி – ஒரு துண்டு, கொத்தமல்லி – சிறிதளவு, பச்சைமிளகாய் – 2, சோம்பு – ஒரு டீஸ்பூன், கிராம்பு – 2, பட்டை – 4, 5 துண்டுகள், பிரிஞ்சி இலை – 2, கடுகு – அரை டீஸ்பூன், ஏலக்காய் – 2 மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை: உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் உரித்துக் கொள்ளவும். கடாயில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு, பிரிஞ்சி இலை தாளித்து, பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். இதில் இஞ்சி, பூண்டு பச்சை மிளகாய், சோம்பு, கிராம்பு, ஏலக்காய், பட்டையை அரைத்து சேர்த்துக் கிளறி, பச்சை பட்டாணி, தக்காளி, மஞ்சள்தூள், உப்பு சேர்த்து வதக்கி உருளைக்கிழங்கை கையால் உதிர்த்து சேர்க்கவும். எல்லாவற்றையும் நன்றாக கலந்து கிளறி, கொத்த மல்லியை தூவி பரிமாறவும்.

——————————————————————————–

ஆலு-மட்டர் தால்

தேவையானவை: துவரம்பருப்பு – கால் கிலோ, சோம்பு – ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், சீரகத்தூள் – கால் டீஸ்பூன், கரம் மசாலாத்தூள் – கால் டீஸ்பூன், வெங்காயம் – 2, பூண்டு – 6 பல், இஞ்சி – ஒரு துண்டு, பச்சைமிளகாய் – 2, தக்காளி – 2, உருளைக்கிழங்கு – 2, பட்டாணி – அரை கப், பொடியாக நறுக்கிய மல்லித்தழை – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: பருப்பு, உருளைக்கிழங்கு, பட்டாணியை குக்கரில் மசிய வேக வைத்துக் கொள்ளவும். வெங்காயம், தக்காளி, இஞ்சி, பச்சைமிளகாயை தனித்தனியே பொடியாக நறுக்கிக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் காய்ந்ததும், சோம்பு, பூண்டை வதக்கி, வெங்காயத்தையும் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். இதனுடன் வெந்த பருப்பையும் சேர்க்கவும். உருளைக் கிழங்கை மசித்து போடவும். பிறகு மஞ்சள்தூள், சீரகத்தூள், கரம் மசாலாத்தூள், உப்பு சேர்த்துக் கிளறி, ஒரு கொதி வந்ததும் தக்காளியை சேர்க்கவும். நன்றாக கொதித்ததும் இறக்கவும். இது கரண்டியால் எடுத்து விடும் அளவுக்கு நீர்க்க இருத்தல் வேண்டும். கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

உருளைக்கிழங்கு மசியல்

தேவையானவை: உருளைக்கிழங்கு – அரை கிலோ, பெரிய எலுமிச்சம் பழம் – 1, கசகசா – ஒரு டீஸ்பூன், தேங்காய், – ஒரு சிறிய மூடி, இஞ்சி – ஒரு துண்டு, பச்சைமிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் – தலா கால் டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: உருளைக்கிழங்கை வேக வைத்து உரித்து மசிக்கவும். தேங்காய், கசகசாவை அரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் காய்ந்ததும் பெருங்காயத்தூள், கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய இஞ்சி, பச்சைமிளகாயை தாளித்து, மசித்த உருளைக்கிழங்கு, உப்பு, மஞ்சள்தூள் சேர்க்கவும். கரண்டியால் எடுத்து விடும் பதத்துக்கு தண்ணீர் சேர்க்கவும். இரண்டு கொதி வந்ததும் தேங்காய், கசகசா விழுது, கொத்தமல்லி சேர்க்கவும். பிறகு, இரண்டு கொதி வந்ததும் இறக்கி, எலுமிச்சை சாறு சேர்த்து பரிமாறவும்.

——————————————————————————–

நவரத்ன குருமா

தேவையானவை: வெங்காயம் – 2, தக்காளி – 3, பச்சை பட்டாணி – ஒரு டீஸ்பூன், இஞ்சி – ஒரு துண்டு, பச்சைமிளகாய் – 2, பூண்டு – 4 பல், சர்க்கரை – ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன், உருளைக்கிழங்கு – 2, கரம் மசாலாத்தூள் – ஒரு டீஸ்பூன், கொத்தமல்லி – சிறிதளவு, கசகசா – ஒரு டேபிள்ஸ்பூன், முந்திரிப்பருப்பு – 2 டேபிள்ஸ்பூன், பீன்ஸ் – சிறிதளவு, கேரட் – 2, மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை: வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். தக்காளியை அரைத்துக் கொள்ளவும். இஞ்சி, பூண்டு, பச்சைமிளகாய் மூன்றையும் நைஸாக அரைத்துக் கொள்ளவும். பிறகு கசகசா, முந்திரிப்பருப்பு இரண்டையும் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.

பட்டாணி, உருளைக்கிழங்கு, பீன்ஸ், கேரட் அனைத்தையும் ஒரே அளவில் நறுக்கி, வேக வைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் காய்ந்ததும் வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கி, அரைத்து வைத்துள்ள இஞ்சி – பூண்டு விழுதைச் சேர்த்து வதக்கவும். அரைத்த தக்காளியை சேர்த்து கொதிக்க விடவும். மஞ்சள்தூள், உப்பு சேர்த்து ஒரு கொதி வந்ததும் வெந்த காய்களை சேர்க்கவும்.

இதில் கசகசா, முந்திரிப்பருப்பு விழுது, மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், சர்க்கரை சேர்த்து கொதிக்க விடவும். தனியாக ஒரு கடாயில் முந்திரியை வறுத்து இதனுடன் சேர்க்கவும். கொத்தமல்லி தூவி இறக்கவும்.

——————————————————————————–

முருங்கை தால்

தேவையானவை: முருங்கைக்காய் – 7 அல்லது 8, துவரம்பருப்பு – ஒரு டேபிள்ஸ்பூன், வெங்காயம் – 2, தக்காளி – 2, உருளைக்கிழங்கு – 1, இஞ்சி – ஒரு துண்டு, பச்சைமிளகாய் – 2, பூண்டு – 2 பல், கரம் மசாலாத்தூள் – அரை டீஸ்பூன், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், கொத்தமல்லி – சிறிதளவு, எண்ணெய் – 2 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: முருங்கைக்காயைச் சாம்பாருக்கு நறுக்குவது போல் நறுக்கிக் கொள்ளவும். துவரம்பருப்பு, முருங்கைக்காய், உருளைக்கிழங்கை வேக வைக்கவும். வெந்த முருங்கைத் துண்டுகளில் இருக்கும் சதைப் பகுதியை ஒரு ஸ்பூனால் எடுத்துக் கொள்ளவும். உருளைக்கிழங்கை தோல் உரித்து உதிர்த்துக் கொள்ளவும்.

வெங்காயம், தக்காளி, இஞ்சி, பூண்டு, பச்சைமிளகாயைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் காய்ந்ததும் வெங்காயம், இஞ்சி, பூண்டு, பச்சைமிளகாயை வதக்கி, அதில் தக்காளி, முருங்கைக்காயின் சதைப் பகுதி, துவரம்பருப்பைப் போட்டு உப்பு, மஞ்சள்தூள், கரம் மசாலாத்தூள் சேர்க்கவும். உதிர்த்து வைத்த உருளைக்கிழங்கை சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

——————————————————————————–

பச்சை பயறு குருமா

தேவையானவை: பச்சை பயறு – அரை கப், உருளைக்கிழங்கு – 2, கொத்தமல்லி – சிறிதளவு, வெங்காயம் – 2, தக்காளி – 1, இஞ்சி – ஒரு துண்டு, பூண்டு – 2 பல், பச்சைமிளகாய் – 2, பட்டை – ஒரு துண்டு, பிரிஞ்சி இலை – 1, கிராம்பு – 2, ஏலக்காய் – 2, சோம்பு – ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன், எண்ணெய் – 2 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: பச்சை பயறை ஊற வைத்து முளைக் கட்டவும். ஊறிய பயறை மெல்லிய துணியில் மூட்டையாக கட்டி, கொதிக்கும் நீரில் அரை மணி நேரம் போடவும். இப்படி செய்வதால் பயறு அரை வேக்காடாக வெந்துவிடும். உருளைக்கிழங்கை வேக வைத்துக் கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் காய்ந்ததும் பிரிஞ்சி இலை, பட்டை, கிராம்பு, சோம்பு, ஏலக்காய், தட்டிய இஞ்சி, பூண்டு, கீறிய பச்சைமிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கவும். பிறகு பச்சை பயறையும் சேர்த்து வதக்கி, உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து ஒரு கொதி வந்ததும் வேக வைத்த உருளைக்கிழங்கை சதுரமாக நறுக்கி சேர்க்கவும். தேவைப்பட்டால் காரப்பொடி சேர்த்துக் கொள்ளலாம். தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கடைசியில் சேர்க்கவும்.

——————————————————————————–

வெண்டை – உருளை கிரேவி

தேவையானவை: வெண்டைக்காய் – கால் கிலோ, உருளைக்கிழங்கு – 2, தக்காளி – 1, கடுகு – அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 2, மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன், சீரகத்தூள் – அரை டீஸ்பூன், பிரிஞ்சி இலை – 1, மிளகுத்தூள் – அரை டீஸ்பூன், தனியாத்தூள் – அரை டீஸ்பூன், ஆம்சூர் பொடி- அரை டீஸ்பூன், கொத்தமல்லி – சிறிதளவு, உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை: வெண்டைக்காயை கழுவி, பெரியதாக இருந்தால் இரண்டாக நறுக்கிக் கொள்ளவும். சிறியதாக இருந்தால் அப்படியே மேல்புறம் லேசாக கீறிக் கொள்ளவும். ஈரம் காய்ந்ததும் எண்ணெயில் பொரித்துக் கொள்ளவும். உருளைக்கிழங்கை வேக வைத்து உரித்து, சிறு சதுர துண்டுகளாக நறுக்கி, எண்ணெயில் வதக்கிக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் காய்ந்ததும் கடுகு, பிரிஞ்சி இலை, காய்ந்த மிளகாய் சேர்த்து தாளிக்கவும். இதில் பொரித்த வெண்டைக்காய் (எண்ணையை நன்றாக வடித்துக் கொள்ளவும்), வதக்கிய உருளைக்கிழங்கை சேர்த்து உப்பு, மஞ்சள்தூள், சீரகத்தூள், மிளகுத்தூள், தனியாத்தூள், ஆம்சூர் பொடி, பொடியாக நறுக்கிய தக்காளி இவற்றை சேர்த்து வதக்கவும். கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

——————————————————————————–

சௌசௌ சப்ஜி

தேவையானவை: சௌசௌ – 2, உருளைக்கிழங்கு – 1, வெங்காயம் – 2, பச்சை பட்டாணி – அரை கப் , இஞ்சி – ஒரு துண்டு, கறிவேப்பிலை – சிறிதளவு, தேங்காய்துருவல் – 3 டீஸ்பூன், சீரகம் – அரை டீஸ்பூன், பச்சைமிளகாய் – 2, கடுகு – அரை டீஸ்பூன், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், கடலைப்பருப்பு – அரை டீஸ்பூன், எண்ணெய் – 2 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: சௌசௌவை பொடியாக நறுக்கவும். பச்சை பட்டாணியையும் உருளைகிழங்கையும் வேக வைக்கவும். தேங்காய்துருவல், சீரகம், இஞ்சி, பச்சை மிளகாயை அரைத்துக் கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை, கடலைப்பருப்பு தாளித்து, வெங்காயம் சேர்த்து வதக்கவும். இதில் வேக வைத்துள்ள காய்கறிகளையும் அரைத்து வைத்துள்ள மசாலாவையும் சேர்த்து உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.

——————————————————————————–

உருளை நவதான்ய மசாலா

தேவையானவை: காய்ந்த பச்சை பட்டாணி, வெள்ளை பட்டாணி, ராஜ்மா, காராமணி, மொச்சை, பச்சை பயறு, வெள்ளை கொண்டைக்கடலை, கறுப்பு கொண்டைக்கடலை, பீன்ஸ் விதை – தலா ஒரு டேபிள்ஸ்பூன், உருளைக்கிழங்கு, தக்காளி – தலா 2, இஞ்சி – ஒரு துண்டு, பூண்டு – 4 அல்லது 5 பல், பச்சைமிளகாய், வெங்காயம் – தலா 2, பட்டை – 2 துண்டு, சிறிய ஏலக்காய், பெரிய ஏலக்காய், கிராம்பு – தலா 2, சோம்பு, கசகசா – தலா அரை டீஸ்பூன், தேங்காய் துருவல் – 3 டீஸ்பூன், மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன், பிரிஞ்சி இலை – 1, கரம் மசாலாத்தூள் – ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன், கொத்தமல்லி – சிறிதளவு, உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை: மேலே கொடுக்கப்பட்டுள்ள கடலைகளை முதல் நாளே ஊற வைத்துக் கொள்ளவும். உருளைகிழங்குடன் கடலைகளை குக்கரில் வேக வைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் காய்ந்ததும் பிரிஞ்சி இலை போட்டு, நறுக்கிய வெங்காயத்தில் பாதியை சேர்த்து வதக்கிக் கொள்ளவும். இஞ்சி, பூண்டு, பச்சைமிளகாய் விழுதை சேர்த்து வதக்கவும்.

பட்டை, கிராம்பு, சோம்பு, ஏலக்காய், பெரிய ஏலக்காய், கசகசா, தேங்காய் இவற்றை அரைத்து சேர்க்கவும். வேக வைத்துள்ள கடலைகளையும் சேர்க்கவும். உப்பு, மஞ்சள்தூள், கரம் மசாலாத்தூள் போட்டு, நன்கு கொதித்தவுடன் உருளைக்-கிழங்கை உதிர்த்து சேர்க்கவும்.

பரிமாறும்போது பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி தூவவும். தேவைப்பட்டால் எலுமிச்சை சாறு பிழிந்து கொள்ளலாம்.

——————————————————————————–

ஆலு தம்

தேவையானவை: சிறிய உருளைக்கிழங்கு – அரை கிலோ, தக்காளி – 2, காய்ந்த மிளகாய் – 4 அல்லது 5, இஞ்சி – ஒரு துண்டு, எண்ணெய் – 2 டீஸ்பூன், சீரகம் – ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன், பட்டை – 4 துண்டு, பூண்டு – 4 பல், வெங்காயம் – 1, பெரிய ஏலக்காய் – 2, கிராம்பு – 4, உப்பு – தேவையான அளவு.

செய்முறை: உருளைக்கிழங்கை வேக வைத்து முழுதாக உரித்து வைக்கவும். தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். காய்ந்த மிளகாய், இஞ்சி, சீரகம், பட்டை, பூண்டு பல், வெங்காயத்தை விழுதாக அரைத்துக் கொள்ளவும். பெரிய ஏலக்காய், கிராம்பு இரண்டையும் எண்ணெய் விடாமல் வறுத்துப் பொடித்துக் கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் காய்ந்ததும் தக்காளி, மஞ்சள்தூள் போட்டு வதக்கவும். நன்கு வதங்கியதும், வேக வைத்த உருளைக்கிழங்கு, உப்பு போட்டு நன்கு கிளறவும். அரைத்த மசாலாவை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி கிராம்பு, ஏலக்காய்த்தூள் சேர்க்கவும். சிறிது தண்ணீர் விட்டு ஒரு கொதி வந்ததும் இறக்கவும். இது, கரண்டியால் எடுத்து விட்டுக் கொள்ளும் பதத்துக்கு இருக்க வேண்டும்.

——————————————————————————–

காய்கறி ஸ்பெஷல் மசாலா

தேவையானவை: சர்க்கரை வள்ளிக் கிழங்கு – 2, நறுக்கிய கொத்தவரங்காய் – அரை கப், அவரைக்காய் – கால் கப், சேப்பங்கிழங்கு – கால் கப், கத்தரிக்காய் – கால் கப், பரங்கிக்காய் – அரை கப், பூசணிக்காய் – கால் கப், கறிவேப்பிலை – சிறிது, புளி – நெல்லிக்காய் அளவு, கடுகு – ஒரு டீஸ்பூன், கரம் மசாலாத்தூள் – அரை டீஸ்பூன், சீரகம் – ஒரு டீஸ்பூன், துவரம்பருப்பு – 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 2, தனியா, மிளகு – தலா அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு – ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன், சமையல் எண்ணெய் – 2 டீஸ்பூன், தேங்காய்துருவல் – அரை கப், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: எல்லா காய்களையும் புளி தண்ணீர், உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து பதமாக வேக வைக்கவும். கடாயில் எண்ணெய் காய்ந்ததும் சீரகம், துவரம்பருப்பு, காய்ந்த மிளகாய், தேங்காய்துருவல், தனியா, மிளகு போட்டு வறுத்து, அரைத்து, வெந்து கொண்டிருக்கும் காய்கறிகளுடன் சேர்க்கவும். அதில் கரம் மசாலாத்தூள் போடவும். நன்றாக கொதித்ததும் கடுகு, பெருங்காயம், உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளிக்கவும். மேலே சிறிது நெய் விட்டு பரிமாறவும்.

——————————————————————————–

ஸ்பெஷல் கலவை மசாலா கறி

தேவையானவை: காலிஃப்ளவர் அல்லது முட்டைகோஸ் – கால் கிலோ, பட்டாணி அல்லது பீன்ஸ் – ஒரு டேபிள்ஸ்பூன், சிறிய கேரட் – 2, வெங்காயம் – 2, குடைமிளகாய் – 2, கறிவேப்பிலை – சிறிதளவு, காய்ந்த மிளகாய் – 1, தனியா – அரை டீஸ்பூன், பெரிய ஏலக்காய் – 1, கிராம்பு – 2, சின்ன ஏலக்காய் – 2, பட்டை – 1 துண்டு, சோம்பு – கால் டீஸ்பூன், மிளகு – கால் டீஸ்பூன், சீரகத்தூள், கடுகு, சுக்கு – தலா கால் டீஸ்பூன், மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன், எண்ணெய் – அரை டீஸ்பூன், தாளிக்க சீரகம் – அரை டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: காய்கறிகளை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். கடுகை தவிர மற்ற மசாலா பொருட்களை வெறும் கடாயில் வறுத்துப் பொடிக்கவும்.

கடாயில் எண்ணெய் காய்ந்ததும் கடுகு, சீரகம், கறிவேப்பிலை தாளித்து வெங் காயத்தை பொன்னிறமாக வதக்கி, காய்கறி களை சேர்க்கவும். சிறிது வதங்கியதும் உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து தண்ணீர் தெளித்து சுருள வதக்கவும். காய்கள் முக்கால் பதம் வெந்ததும் பொடித்த மசாலாவை சேர்க்கவும். மசாலா நன்கு சேர்ந்து வந்ததும் இறக்கவும்.

——————————————————————————–

காலிஃப்ளவர் பெங்காலி சப்ஜி

தேவையானவை: நடுத்தர காலிஃப்ளவர் – 2, தக்காளி – கால் கிலோ, உருளைக்கிழங்கு – கால் கிலோ, இஞ்சி துருவல் – சிறிதளவு, ஆம்சூர் பொடி – ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன், சீரகத்தூள் – 2 டீஸ்பூன், தேங்காய் துருவல் – சிறிதளவு, பச்சை பட்டாணி – ஒரு டீஸ்பூன், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை: காலிஃப்ளவரை நறுக்காமல் கையால் சிறு துண்டுகளாக ஆய்ந்து கொள்ளவும். சிறிது உப்பு கலந்து மிதமான வெந்நீரில் இருபது நிமிடம் ஊற வைக்கவும். உருளைக்கிழங்கை வேக வைத்து, உரித்து பெரிய துண்டுகளாக நறுக்கவும்.

கடாயில் எண்ணெய் காய்ந்ததும் உருளைக்கிழங்கை சிவக்கும் வரை வதக்கி தனியாக வைத்துக் கொள்ளவும். 4 டீஸ்பூன் எண்ணெயில் காலிஃப்ளவரை பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். மீண்டும் கடாயில் எண்ணெய் காய்ந்ததும் தேங்காய்துருவல், சீரகத்தூளை சேர்த்து, காலிஃப்ளவர், தேவையான அளவு தண்ணீர், உப்பு, மஞ்சள்தூள், ஆம்சூர் பொடியை சேர்க்கவும். கலவை வெந்ததும் பச்சை பட்டாணியை சேர்த்துக் கிளறவும். நன்றாகக் கொதி வந்ததும் உருளைக்கிழங்கு, பொடியாக நறுக்கிய தக்காளி, கொத்தமல்லியை சேர்த்து 5 நிமிடத்துக்குப் பிறகு இறக்கவும்.

——————————————————————————–

முருங்கை மசாலா சப்ஜி

தேவையானவை: நன்கு முற்றிய முருங்கைக்காய் – 10 அல்லது 15, தக்காளி – 1, பெரிய உருளைக்கிழங்கு – 2, இஞ்சி – ஒரு துண்டு, காய்ந்த மிளகாய் – 2, பூண்டு – 4 பல், கொத்தமல்லி – சிறிதளவு, பிரிஞ்சி இலை – 2, பட்டை – சிறு துண்டு, கசகசா – ஒரு டேபிள்ஸ்பூன், பெரிய ஏலம் – 2, கிராம்பு – 2, ஆம்சூர் பொடி – ஒரு டீஸ்பூன், பச்சை பட்டாணி – ஒரு டீஸ்பூன், கரம் மசாலாத்தூள் – ஒரு டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: முருங்கைக் காயை நன்கு கழுவியதும், சாம்பாருக்கு வெட்டுவது போல் வெட்டி, குக்கரில் வேக வைக்கவும். இஞ்சி, பூண்டு, காய்ந்த மிளகாயைத் தனியாக அரைத்துக் கொள்ளவும். பட்டை, கசகசா, கிராம்பு மற்றும் ஏலக்காயை எண்ணெய் விடாமல் லேசாக வறுத்துப் பொடித்து வைத்துக் கொள்ளவும். இந்த மசாலாத்தூள் நல்ல வாசனையாக இருக்கும். வெந்த முருங்கைக்காயின் சதைப்பகுதியை மட்டும் ஒரு கத்தியால் கீறி எடுக்கவும். இதைத் தனியாக ஒரு கிண்ணத்தில் வைக்கவும்.

உருளைக்கிழங்கை தோல் உரித்து கையால் ஒன்றிரண்டாக மசித்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் காய்ந்ததும் பிரிஞ்சி இலையைக் கிள்ளிப் போட்டு சிவக்க விடவும். இஞ்சி, பூண்டு விழுதைப் போட்டு, பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பிறகு அதில் உருளைக்கிழங்கு, முருங்கைக் கலவை, பச்சை பட்டாணி, பொடித்து வைத்த மசாலாத்தூள், மஞ்சள்தூள் சேர்த்து இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டு அடி பிடிக்காமல் கிளறவும். தீயை குறைத்து உப்பு, கரம் மசாலாத்தூள், ஆம்சூர் பொடியை போட்டு நன்றாக கலக்கவும். தக்காளி யையும் கொத்துமல்லியையும் பொடிப்பொடியாக நறுக்கி போட்டு நன்றாகக் கலந்து, பட்டாணி வெந்ததும் இரண்டு நிமிடம் கொதிக்க விட்டு இறக்கவும்.

——————————————————————————–

காலிஃப்ளவர் மசாலா சப்ஜி

தேவையானவை: நடுத்தர காலிஃப்ளவர் – 2, தக்காளி – கால் கிலோ, உருளைக்கிழங்கு – கால் கிலோ, இஞ்சித் துருவல் – சிறிதளவு, கரம் மசாலாத்தூள் – ஒரு டீஸ்பூன், பச்சைமிளகாய் – 2, பூண்டு – 7 அல்லது 8 பல், வெங்காயம் – 4, கிராம்பு – 4, தனியாத்தூள், மஞ்சள்தூள், சீரகத்தூள், – தலா ஒரு டீஸ்பூன், பச்சை பட்டாணி – ஒரு டீஸ்பூன், ஏலக்காய் – 2, உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை: காலிஃப்ளவரை கைகளால் ஆய்ந்து, உப்பு கலந்த மிதமான வெந்நீரில் 20 நிமிடம் ஊற வைக்கவும். நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தில் சிறிதளவு, இஞ்சி, பூண்டு, பச்சைமிளகாய், ஏலக்காய், கிராம்பு ஆகியவற்றை சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும். மீதமுள்ள வெங்காயத்தை எண்ணெய் விட்டு பொன்னிறமாக வதக்கிக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் கலவையை விட்டு மசாலா விழுதைப் போட்டு சுருளாக வதக்கிக் கொள்ளவும். உருளையை சிவக்க வதக்கி காலிஃப்ளவரைப் போட்டுக் கிளறவும். மசாலா விழுது, உப்பு, மஞ்சள்தூள், தனியாத்தூள், சீரகத்தூள், கரம் மசாலாத்தூள் சேர்த்து சிறிது தண்ணீர் வீட்டு அடுப்பை ‘சிம்’மில் வைத்து மூடவும். நன்றாக கொதித்ததும் பட்டாணி சேர்த்துக் கிளறவும். வதக்கிய வெங்காயத்தைச் சேர்த்து ஒரு நிமிடம் கொதிக்க விடவும். கூட்டு மாதிரி வரும். பிறகு இறக்கி நறுக்கிய தக்காளி, கொத்தமல்லியால் அலங்கரிக்கவும்.

——————————————————————————–

சின்ன வெங்காயம் – தக்காளி மசாலா

தேவையானவை: சின்ன வெங்காயம், தக்காளி – கால் கிலோ, பச்சை மிளகாய் – 2, கரம் மசாலாத்தூள் – அரை டீஸ்பூன், மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன், பிரிஞ்சி இலை – 2, சர்க்கரை – ஒரு டீஸ்பூன், எண்ணெய் – 2 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: வெங்காயத்தை உரித்துக் கொள்ளவும். இதில் பாதி எடுத்து தக்காளி சேர்த்து லேசாக வதக்கி அரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் காய்ந்ததும் பிரிஞ்சி இலை, மீதமுள்ள வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கவும். முழு பச்சைமிளகாயை சேர்க்கவும். இந்த வதக்கலுடன் அரைத்து வைத்துள்ள தக்காளியை சேர்க்கவும். மஞ்சள்தூள், உப்பு, கரம் மசாலாத்தூள், சர்க்கரை சேர்த்து கிளறி நன்கு கொதி வந்ததும் இறக்கவும். தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க விடலாம். காரம் தேவைப்பட்டால் ஒரு டீஸ்பூன் மிளகாய்த்தூள் சேர்த்துக் கொள்ளலாம்.

*****************************************************************

30 வகை கொழுக்கட்டை

30 வகை கொழுக்கட்டை

பனை ஓலை கொழுக்கட்டை

தேவையானவை: பச்சரிசி – முக்கால் கிலோ, கருப்பட்டி – அரை கிலோ, ஏலக்காய் – 10, தேங்காய் – ஒரு

மூடி, பனை (அ) தென்னை ஓலை – 1.

செய்முறை: பச்சரிசியை ஊற வைத்து, களைந்து நிழலில் உலர்த்தி, மிஷினில் கொடுத்து அரைத்துக் கொள்ளவும். தேங்காயைத் துருவிக் கொள்ளவும். கடாயை காய வைத்து, துருவிய தேங்காயை ஈரம் போக வறுத்துக் கொள்ளவும்.

அகலமான பாத்திரத்தில் அரைத்த மாவு, ஏலக்காய்த்தூள், தேங்காய் துருவலைப் போடவும். கருப்பட்டியில் ஒரு கப் தண்ணீர் சேர்த்து இளம்பாகு பதத்தில் காய்ச்சவும். இறக்கி வடிகட்டி, மாவுடன் சேர்த்து நன்றாகப் பிசையவும்.

ஓலையை அரை அடி நீளத்துக்கு நறுக்கி, பிசைந்த மாவை அதன் நடுவில் வைத்து, இட்லி தட்டில் வேக விட்டு எடுக்கவும்.

————————————————————————–

——

பால் கொழுக்கட்டை

தேவையானவை: பச்சரிசி – அரை கிலோ, பால் – அரை லிட்டர், சர்க்கரை – ஒன்றரை கப், ஏலக்காய் – 6,

முந்திரி பருப்பு – 10, நெய் – 2 டீஸ்பூன்.

செய்முறை: பச்சரிசியை ஒன்றரை மணி நேரம் ஊறவைத்து வடிகட்டி நிழலில் உலர்த்தி, மிஷினில் கொடுத்து அரைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் மாவைக் கொட்டி தேவையான அளவு தண்ணீர் விட்டு, கொழுக்கட்டை பிடிக்கும் பதத்தில் பிசைந்து, அதை சீடை அளவில் சிறு உருண்டைகளாகப் பிடிக்கவும்.

ஒரு பாத்திரத்தில் அரை லிட்டர் தண்ணீரை கொதிக்க வைத்து, அதில் உருட்டிய கொழுக்கட்டைகளைப் போடவும். வெந்ததும் வடித்துக் கொள்ளவும். வடித்த தண்ணீரில் பாலை சேர்த்துக் காய்ச்சி, சர்க்கரையை சேர்க்கவும். சர்க்கரை கரைந்தவுடன் வேக வைத்த கொழுக்கட்டை, பொடித்த ஏலக்காயை சேர்க்கவும்.

முந்திரியை நெய்யில் வறுத்து சேர்த்து இறக்கிப் பரிமாறவும்.

————————————————————————–

——

பச்சரிசி சர்க்கரை கொழுக்கட்டை

தேவையானவை: பச்சரிசி – அரை கிலோ, தேங்காய் – ஒரு மூடி, சர்க்கரை – ஒன்றரை கப், ஏலக்காய் – 3,

பச்சை கற்பூரம் – சிறிதளவு.

செய்முறை: பச்சரிசியை ஒன்றரை மணி நேரம் ஊறவைத்து, வடிகட்டி நிழலில் உலர்த்தி, மிஷினில் கொடுத்து அரைத்துக் கொள்ளவும். தேங்காயை துருவி லேசாக வறுத்துக் கொள்ளவும். ஏலக்காய், பச்சை கற்பூரத்தைப் பொடித்துக் கொள்ளவும்.

பச்சரிசி மாவில் தேங்காய் துருவல், சர்க்கரை, ஏலம், பச்சை கற்பூரத்தை சேர்த்து, தண்ணீர் தெளித்து பதமாகப் பிசைந்து கொள்ளவும். பிறகு கொழுக்கட்டைகளாகப் பிடித்து, இட்லி தட்டுகளில் பரப்பி வேக வைக்கவும்.

வெந்ததும் இறக்கிப் பரிமாறவும்.

————————————————————————–

——

பச்சரிசி கருப்பட்டி கொழுக்கட்டை

தேவையானவை: பச்சரிசி – அரை கிலோ, தேங்காய் – ஒரு மூடி, கருப்பட்டி – ஒன்றரை கப், ஏலக்காய் – 6,

எள் – ஒரு டீஸ்பூன்.

செய்முறை: பச்சரிசியை நன்றாக ஊறவைத்து களைந்து, நிழலில் உலர்த்தி மிஷினில் கொடுத்து அரைத்துக் கொள்ளவும். கருப்பட்டியை இளம்பாகு பதத்தில் காய்ச்சி வடிகட்டிக் கொள்ளவும். தேங்காயைத் துருவி லேசாக

வறுத்துக் கொள்ளவும். மாவுடன் பொடித்த ஏலக்காய், எள், கருப்பட்டிப் பாகு, தேங்காய் துருவலை சேர்த்து கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும். பிறகு கொழுக்கட்டைகளாகப் பிடித்து இட்லி தட்டில் பரப்பி வேக வைக்கவும்.

வெந்ததும் இறக்கிப் பரிமாறவும்.

————————————————————————–

——

புழுங்கலரிசி தேங்காய் கொழுக்கட்டை

தேவையானவை: புழுங்கலரிசி – அரை கிலோ, தேங்காய் – ஒரு மூடி, சர்க்கரை – ஒன்றரை கப், ஏலக்காய் – 6.

செய்முறை: புழுங்கலரிசியை கல், தூசு நீக்கி மிஷினில் கொடுத்து அரைத்துக் கொள்ளவும். ஏலக்காயை பொடித்துக் கொள்ளவும். தேங்காயை துருவி வறுத்துக் கொள்ளவும். அரைத்த மாவுடன், ஏலக்காய், தேங்காய் துருவல், சர்க்கரை சேர்த்து தண்ணீர் விட்டு பிசையவும். கொழுக்கட்டைகளாகப் பிடித்து, இட்லி தட்டில் வேக
வைத்து எடுக்கவும்.

————————————————————————–

——

கோதுமை சர்க்கரை கொழுக்கட்டை

தேவையானவை: கோதுமை – அரை கிலோ, தேங்காய் – ஒரு மூடி, சர்க்கரை – ஒன்றரை கப், ஏலக்காய் – 6.

செய்முறை: கோதுமையை லேசாக வறுத்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். தேங்காயை துருவி, வறுத்துக் கொள்ளவும். ஏலக்காயை பொடித்துக் கொள்ளவும். கோதுமை மாவுடன் வறுத்த தேங்காய், சர்க்கரை, பொடித்த ஏலக்காய், தண்ணீர் சேர்த்துப் பிசைந்து கொள்ளவும். பிறகு கொழுக்கட்டைகளாகப் பிடித்து இட்லி தட்டில் அடுக்கி வேக வைக்கவும். வெந்ததும் இறக்கிப் பரிமாறவும்.

————————————————————————–

——

தேங்காய் ரவை கொழுக்கட்டை

தேவையானவை: ரவை, சர்க்கரை – தலா ஒன்றரை கப், அரிசி மாவு – ஒரு கப், தேங்காய் – ஒரு மூடி, ஏலக்காய் – 6, வெனிலா எசன்ஸ் – 2 துளி.

செய்முறை: தேங்காயை துருவி வறுத்துக் கொள்ளவும். ஏலக்காயை பொடித்துக் கொள்ளவும். ரவையுடன் அரிசி மாவு, சர்க்கரை, பொடித்த ஏலக்காய், தேங்காய் துருவல், வெனிலா எசன்ஸ் சேர்த்து வெந்நீர் விட்டுப் பிசைந்து கொள்ளவும். பிறகு கொழுக்கட்டைகளாகப் பிடித்து இட்லி தட்டில் வேக வைத்து எடுக்கவும்.

————————————————————————–

——

தேங்காய் பூந்தி கொழுக்கட்டை

தேவையானவை: பச்சரிசி – அரை கிலோ, இனிப்பு பூந்தி – ஒரு கப், சர்க்கரை – அரை கப், தேங்காய் – ஒரு மூடி, ஏலக்காய் – 6.

செய்முறை: பச்சரிசியை மிஷினில் கொடுத்து அரைத்துக் கொள்ளவும். தேங்காயை துருவி வறுக்கவும்.

ஏலக்காயைப் பொடிக்கவும். இவற்றை பூந்தி, சர்க்கரையுடன் சேர்த்து, லேசாக மசித்துக் கொள்ளவும்.

அரைத்த மாவில் தண்ணீர் சேர்த்து கொழுக்கட்டை மாவு பக்குவத்தில் பிசைந்து மெல்லிய கிண்ணம்போல் செய்து கொள்ளவும். அதில் மசித்து வைத்துள்ள பூந்திக் கலவையில் சிறிது போட்டு மூடவும். பிறகு இட்லி தட்டில் வேக வைத்து எடுத்துப் பரிமாறவும்

————————————————————————–

——

வெல்ல மோதக கொழுக்கட்டை

தேவையானவை: பச்சரிசி – அரை கிலோ, வெல்லம் – ஒன்றரை கப், ஏலக்காய் – 6, தேங்காய் – 1.

செய்முறை: பச்சரியை மிஷினில் கொடுத்து அரைத்துக் கொள்ளவும். தேங்காயை துருவி வறுத்துக் கொள்ளவும்.

ஏலக்காயை பொடித்துக் கொள்ளவும். வெல்லத்தை இளம் பாகாய்க் காய்ச்சி வடிகட்டிக் கொள்ளவும். தேங்காய் துருவலுடன், ஏலக்காய் பொடி, வெல்லப்பாகு சேர்த்து உருண்டை உருட்டும் பதத்தில் கலந்து கொள்ளவும்.

மாவுடன் தண்ணீர் சேர்த்துப் பிசைந்து, மெல்லியதாக தட்டிக் கொள்ளவும். செய்து வைத்துள்ள தேங்காய் பூரணத்தில் சிறிது எடுத்து மாவினுள் வைத்து ஓரங்களை மூடி இட்லி தட்டில் வேக வைத்து எடுத்துப் பரிமாறவும்.

————————————————————————–

——

பழ கொழுக்கட்டை

தேவையானவை: பச்சரிசி மாவு – ஒன்றரை கப், உப்பு – ஒரு சிட்டிகை, நல்லெண்ணெய் – ஒரு டீஸ்பூன், பொடித்த வெல்லம் – அரை கப், துருவிய தேங்காய் – அரை மூடி, பலாச்சுளை – 15, ஆப்பிள், மாம்பழம், பச்சை
வாழைப்பழம் – தலா 1, டால்டா – 2 டீஸ்பூன்.

செய்முறை: பலாச்சுளையின் கொட்டையை நீக்கி பொடியாக நறுக்கவும். வாழைப்பழம், ஆப்பிள், மாம்பழத்தின் தோலை எடுத்துவிட்டு பொடியாக நறுக்கிக் கொள்ளவும். நறுக்கிய பழங்களை வாய் அகன்ற பாத்திரத்தில் போட்டு ஒன்றரை கப் தண்ணீர் விட்டு அடுப்பில் வைக்கவும். ஒரு கொதி வந்ததும், துருவிய தேங்காயையும், பொடி செய்த வெல்லத்தையும் போட்டு தண்ணீர் வற்றும் வரை மிதமான தீயில் கிளறிக் கொண்டேயிருக்கவும். பிறகு டால்டாவை விட்டு சுருளக் கிளறி, இறக்கி ஆற விடவும். இதை சிறிய கொழுக்கட்டைகளாகப் பிடித்து ஒரு
தட்டில் வைக்கவும்.

ஒரு பாத்திரத்தில் ஒன்றரை கப் தண்ணீரை அளவாக வைத்து கொதிக்க விட்டு அதில் எண்ணெய், உப்பு, சேர்க்கவும். பிறகு அரிசி மாவை இதில் கொட்டி கெட்டியாகும் வரை கிளறி இறக்கவும். சற்று ஆறியதும் கிண்ணம் போல் செய்து, அதன் நடுவில் பழக்கலவையை வைத்து மூடவும். இப்படி எல்லாவற்றையும் செய்த பிறகு இட்லி தட்டில் வேக வைத்து எடுத்துப் பரிமாறவும்.

————————————————————————–

——

பேரீச்சம்பழ கொழுக்கட்டை

தேவையானவை: பச்சரிசி மாவு – அரை கிலோ, கொட்டை நீக்கி பொடியாக நறுக்கிய பேரீச்சம்பழ துண்டுகள் – ஒரு கப், முந்திரி துண்டுகள் – 2 டீஸ்பூன், ஏலக்காய்த்தூள் – கால் டீஸ்பூன், பொடித்த வெல்லம் – ஒரு கப், நெய் – ஒரு டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு,

செய்முறை: கடாயை அடுப்பில் வைத்து நெய் விட்டு, சூடானதும் முந்திரி, பேரீச்சம்பழத்தைப் போட்டு வதக்கவும். ஒரு நிமிடம் கழித்து வெல்லத்தூள் சேர்த்து கிளறி, பூரணம் பதம் வந்ததும் ஏலக்காய்த்தூள் சேர்த்து இறக்கி வைக்கவும்.

கொதிக்கும் தண்ணீரில் அரிசிமாவு, உப்பு சேர்த்துக் கிளறி வேகவிட்டு இறக்கவும். வெந்த மாவில் சிறிது எடுத்து கிண்ணம் போல் செய்து பேரீச்சம் பழ பூரணத்தை வைத்து மூடி, இட்லி தட்டில் வேக வைத்து எடுக்கவும்.

இரும்பு சத்து நிறைந்த சத்தான கொழுக்கட்டை இது.

————————————————————————–

——

கம்பரிசி இனிப்பு கொழுக்கட்டை

தேவையானவை: கம்பரிசி – அரை கிலோ, தேங்காய் – ஒரு மூடி, கருப்பட்டி – அரை கிலோ, ஏலக்காய் – 6.

செய்முறை: கம்பரிசியை லேசாக வறுத்து மிஷினில் கொடுத்து அரைத்துக் கொள்ளவும். ஏலக்காயை பொடித்துக் கொள்ளவும். தேங்காயை துருவி வறுத்துக் கொள்ளவும். கருப்பட்டியை இளம்பாகு பதத்தில் காய்ச்சி வடிகட்டவும். பொடித்த ஏலக்காய், தேங்காய் துருவல், கருப்பட்டி பாகை மாவுடன் சேர்த்து (வறுத்த மாவு

என்பதால், தண்ணீர் அதிகம் தேவைப்படும். பாகுடன் சிறிது வெந்நீர் சேர்த்துக் கொள்ளலாம்) கொழுக்கட்டை பதத்தில் பிசையவும். பிறகு கொழுக்கட்டைகளாகப் பிடித்து இட்லித் தட்டில் வைத்து, வெந்ததும் இறக்கிப் பரிமாறவும்.

————————————————————————–

——

ரவை கொழுக்கட்டை

தேவையானவை: ரவை – ஒன்றரை கப், அரிசி மாவு – ஒரு கப், கடலைப் பருப்பு – கால் கப், கேரட் – 2 (துருவிக் கொள்ளவும்), பச்சை மிளகாய் – 4 (மிக்ஸியில் தண்ணீர் விடாமல் அரைத்துக் கொள்ளவும்), உப்பு – தேவையான அளவு.

செய்முறை: கடலைப் பருப்பை முக்கால் பதத்தில் வேக வைத்துக் கொள்ளவும். ரவையுடன் அரிசிமாவு, வேக வைத்த கடலைப் பருப்பு, துருவிய கேரட், அரைத்த மிளகாய், உப்பு சேர்த்து வெந்நீர் விட்டு நன்றாகப் பிசையவும். பிறகு கொழுக்கட்டைகளாகப் பிடித்து இட்லித் தட்டில் வேக வைத்து எடுத்துப் பரிமாறவும்.

————————————————————————–

——

உப்பில்லா கொழுக்கட்டை

தேவையானவை: பச்சரிசி மாவு – அரை கிலோ, நெய் – 25 கிராம், தேங்காய் – அரை மூடி.

செய்முறை: பச்சரிசி மாவில் தண்ணீர் விட்டு, கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும். ஈரத் துணியில் வைத்து சிறு தட்டைகளாக தட்டிக் கொள்ளவும். அகலமான பாத்திரத்தில் சிறிது தண்ணீர் ஊற்றிக் கொதிக்க விடவும். தட்டி
வைத்துள்ள கொழுக்கட்டைகளை ஒவ்வொன்றாக கொதி நீரில் போடவும். வெந்ததும் தண்ணீரை வடிகட்டி கொழுக்கட்டைகளை ஒரு பாத்திரத்தில் போட்டு நெய், தேங்காய் துருவல் கலந்துபிசறி சாப்பிடவும்.

————————————————————————–

——

பருப்பு கொழுக்கட்டை கொழுக்கட்டை

தேவையானவை: பச்சரிசி – அரை கிலோ, கடலைப் பருப்பு – 100 கிராம், வெல்லம் – 300 கிராம், தேங்காய் – ஒரு மூடி, ஏலக்காய் – 6.

செய்முறை: பச்சரிசியை மிஷினில் கொடுத்து அரைத்துக் கொள்ளவும். தேங்காயைத் துருவி வறுத்துக் கொள்ளவும், ஏலக்காயை மிக்ஸியில் ஓன்றிரண்டாகப் பொடித்துக் கொள்ளவும். வெல்லத்தை இளம்பாகாகக்
காய்ச்சி வடிகட்டிக் கொள்ளவும். பிறகு இதில் தேங்காய் துருவல், ஏலக்காய் பொடி, கடலைப் பருப்பு சேர்த்து உருட்டும் பதத்தில் செய்து கொள்ளவும்.

பச்சரிசி மாவைப் பிசைந்து மெல்லியதாக கிண்ணம் போல் செய்து, அதில் பூரணத்தை வைத்து ஓரங்களை மூடி, இட்லித் தட்டில் வேக வைத்து எடுத்து பரிமாறவும்.

————————————————————————–

——

அவல் கார கொழுக்கட்டை

தேவையானவை: அவல் – கால் கிலோ, பச்சரிசி மாவு – அரை கிலோ, உப்பு – தேவையான அளவு, பெரிய வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கவும்), பச்சை மிளகாய் – 3, இஞ்சி, கறிவேப்பிலை, கொத்தமல்லி (பொடியாக

நறுக்கிக் கொள்ளவும்) – சிறிதளவு, துருவிய கேரட் – ஒரு கப், கடுகு, உளுத்தம் பருப்பு, நல்லெண்ணெய் – தலா ஒரு டீஸ்பூன்.

செய்முறை: அவலை தண்ணீரில் நன்றாகக் களைந்து பிழிந்து வைக்கவும். கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்து அவல், வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை, கொத்தமல்லி, கேரட், உப்பு சேர்த்து வதக்கவும். கார பூரணம் ரெடி!

கொதிக்கும் தண்ணீரில் பச்சரிசி மாவு, உப்பு சேர்த்து கட்டியில்லாமல் மரக் கரண்டியால் கிளறவும். வெந்ததும் இறக்கி, மாவை கிண்ணம் போல் செய்து, அதில் அவல் பூரணத்தை வைத்து மூடி, இட்லித் தட்டில் வேக வைத்து இறக்கிப் பரிமாறவும்.

நீர் கொழுக்கட்டை

தேவையானவை: பச்சரிசி மாவு – ஒரு கப், கெட்டியான தேங்காய்ப் பால் – அரை கப், இரண்டாவது தேங்காய்ப் பால் – 2 கப், உப்பு – தேவையான அளவு, சீரகம் – கால் டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு.

செய்முறை: 2 கப் தண்ணீரை கொதிக்க வைக்கவும். கொதித்த தண்ணீரை சிறிது சிறிதாக மாவில் விட்டு, சிறிது உப்பு சேர்த்து, கெட்டியாகக் கிளறவும்.

கிளறிய மாவை நீளவாக்கில் உருட்டிக் கொள்ளவும். இரண்டாவது தேங்காய்ப் பாலை அடுப்பில் வைத்துக் கொதிக்க விடவும். கொதிக்கும் பாலில் சீரகம், உருண்டைகளைப் போட்டு மிதமான தீயில் 8 நிமிடம் வேகவிடவும். நன்கு வெந்ததும் முதல் பாலை விட்டு கறிவேப்பிலை சேர்த்து இறக்கவும்.

————————————————————————–

——

புதினா கொழுக்கட்டை

தேவையானவை: புதினா – ஒரு கட்டு, பச்சை மிளகாய், தக்காளி – தலா 1, பச்சரிசி மாவு – அரை கிலோ, பெரிய வெங்காயம் – 3, சீரகம் – ஒரு டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: புதினாவை ஆய்ந்து, கழுவி சுத்தம் செய்து, பச்சை மிளகாய், தக்காளி சேர்த்து, தண்ணீர் விடாமல் மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். தண்ணீரை நன்றாகக்

கொதிக்க வைத்து அதில் உப்பு, அரைத்த புதினா விழுது, வெங்காயம், சீரகம் சேர்த்து, மாவை சிறிது சிறிதாகப் போட்டுக் கட்டியில்லாமல் கிளறி, வெந்ததும் இறக்கவும்.

இந்த மாவை சிறிது எடுத்து உள்ளங்கையில் வைத்து 4 விரல்களும் பதியும் படி மூடி திறக்கவும். எல்லா மாவையும் இதுபோலவே பிடி கொழுக்கட்டைகளாக செய்து இட்லித் தட்டில் வேக வைத்து எடுக்கவும்.

————————————————————————–

——

கோவா கொழுக்கட்டை

தேவையானவை: மைதா மாவு – ஒரு கப், சர்க்கரை – அரை கப், பால்கோவா – கால் கப், ஏலக்காய்த்தூள் – அரை டீஸ்பூன், உப்பு – ஒரு சிட்டிகை, குங்குமப்பூ – சிறிது, பால் – அரை லிட்டர்.

செய்முறை: மைதாவை சலித்து உப்பு, தண்ணீர் சேர்த்து, கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும். பாலில் சர்க்கரை சேர்த்து சுண்டக் காய்ச்சி, குங்குமப்பூ, ஏலக்காய்த்தூள் சேர்க்கவும். பிசைந்த மாவில் சிறிது எடுத்து கிண்ணம்

போல் செய்து, அதில் சிறிது பால்கோவாவை வைத்து சமோசா வடிவில் மடித்து ஓரங்களை ஒட்டவும். கடாயில் சிறிது எண்ணெய் விட்டு காய்ந்ததும் கொழுக்கட்டைகளைப் போட்டு பொரித்தெடுக்கவும்.

இந்த கொழுக்கட்டைகளை காய்ச்சிய பாலில் போட்டுப் பரிமாறவும்.

————————————————————————–

——

இனிப்பு அவல் கொழுக்கட்டை

தேவையானவை: அவல் – கால் கிலோ, தேங்காய் துருவல் – ஒரு கப், அரிசி மாவு – அரை கிலோ, ஏலக்காய்த்தூள் – கால் டீஸ்பூன், நல்லெண்ணெய் – ஒரு டீஸ்பூன், உப்பு, சர்க்கரை – தேவையான அளவு.

செய்முறை: அவலை சுத்தம் செய்து தண்ணீரில் சில நிமிடங்கள் ஊறவைத்து வடித்து, தேங்காய் துருவல், சர்க்கரை, ஏலக்காய்த்தூள் கலந்து வைத்துக் கொள்ளவும்.

தண்ணீரை கொதிக்க வைத்து ஒரு சிட்டிகை உப்பு, ஒரு டீஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு, அரிசிமாவைப் போட்டு கட்டியில்லாமல் கிளறவும். இந்த மாவில் கிண்ணம் போல் செய்து, அதனுள் அவல் பூரணத்தை வைத்து மூடி,

இட்லித் தட்டில் வேக வைத்து எடுக்கவும்.

————————————————————————–

——

வெஜிடபிள் கொழுக்கட்டை

தேவையானவை: உருளைக்கிழங்கு – 4, கேரட், பீட்ரூட், நூல்கோல் – தலா 1, முட்டைகோஸ், பீன்ஸ் – தலா 50 கிராம், காலிஃபிளவர் – சில துண்டுகள், இஞ்சி – ஒரு துண்டு, பெரிய வெங்காயம் – 2, பச்சை மிளகாய் –

8, எலுமிச்சம்பழம் – 1, நல்லெண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன், கடுகு, உளுத்தம் பருப்பு – தலா ஒரு டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு, கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு.

செய்முறை: எல்லா காய்களையும் நன்றாகக் கழுவி சுத்தம் செய்து, பொடியாக நறுக்கி தண்ணீர் விடாமல் ஆவியில் வேக வைத்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு

தாளித்து, பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் இஞ்சி, கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து வதக்கவும். வதங்கியதும் காய்கறி கலவை, சிறிது உப்பு சேர்க்கவும். கடலை மாவை சிறிதளவு தண்ணீரில்

கரைத்து இதில் விடவும். கொதித்து கெட்டியாக உருட்டும் பதத்தில் வந்ததும் எலுமிச்சம்பழத்தைப் பிழிந்து விடவும். காய்கறி பூரணம் ரெடி!

கொதிக்கும் தண்ணீரில் ஒரு டீஸ்பூன் எண்ணெய், அரிசி மாவு, உப்பு சேர்த்து, கட்டியில்லாமல் நன்றாகக் கிளறவும். இந்த மாவில் சிறிது எடுத்து கிண்ணம் போல் செய்து, இதில் பூரணத்தை வைத்து மூடி, இட்லித்

தட்டில் வேக வைத்து எடுக்கவும்.

————————————————————————–

——

மிளகு கொழுக்கட்டை

தேவையானவை: புழுங்கலரிசி – அரை கிலோ, சிறிய தேங்காய் – 1, உப்பு – தேவையான அளவு, மிளகு – ஒரு டேபிள்ஸ்பூன், நெய் – கால் கப், எண்ணெய் – ஒரு டீஸ்பூன்.

செய்முறை: புழுங்கலரிசியை 2 மணி நேரம் களைந்து ஊறவிடவும். ஊறியதும், தேங்காயை கீறிப் போட்டு உப்பு சேர்த்து, தண்ணீர் விடாமல் கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும். வெறும் கடாயில் மிளகை வறுத்து நைசாகப்
பொடித்துக் கொள்ளவும்.

அடி கனமான பாத்திரத்தில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் அரைத்த மாவைப் போட்டு சுருளக் கிளறி, கையில் ஒட்டாத பதத்தில் இறக்கி ஆற விடவும். இந்த மாவில் நெல்லிக்காய் அளவு எடுத்து உருட்டி, இட்லித் தட்டில் வேக வைத்து எடுக்கவும். கொழுக்கட்டையில் மிளகுத்தூள், நெய் சேர்த்து நன்கு பிரட்டி எடுத்துப் பரிமாறவும்.

————————————————————————–

——

பாசிப்பருப்பு மடக்கு கொழுக்கட்டை

தேவையானவை: அரிசி மாவு – அரை கிலோ, பாசிப்பருப்பு – கால் கிலோ, ஏலக்காய்த்தூள் – அரை டீஸ்பூன், தேங்காய் துருவல் – 2 கப், நாட்டுச் சர்க்கரை, உப்பு – தேவையான அளவு, முந்திரி பருப்பு – 10 கிராம்.

செய்முறை: பாசிப்பருப்பை வறுத்து முக்கால் பதத்தில் வேக வைத்துக் கொள்ளவும். தண்ணீரை வடித்து விட்டு நாட்டுச் சர்க்கரை, தேங்காய் துருவல், ஏலக்காய்த்தூள், முந்திரி துண்டுகளை சேர்த்து கிளறிக் கொள்ளவும்.

பூரணம் ரெடி!

அரிசி மாவில் வெந்நீர், உப்பு, ஒரு டீஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்துப் பிசையவும். மாவு கையில் ஒட்டாத பதம் வந்ததும் கிண்ணம் போல் செய்து, அதில் பூரணத்தை வைத்து ஓரங்களை மடித்து விட்டு, இட்லித் தட்டில் வேக
வைத்து எடுக்கவும்.

————————————————————————–

——

உருளைக்கிழங்கு கொழுக்கட்டை

தேவையானவை: அரிசி மாவு – ஒன்றரை கப், உருளைக்கிழங்கு – 200 கிராம், சீரகத்தூள் – 2 டீஸ்பூன், பச்சை மிளகாய் – 6 (மிக்ஸியில் தண்ணீர் விடாமல் அரைத்துக் கொள்ளவும்), உப்பு – தேவையான அளவு, பொடியாக

நறுக்கிய கொத்தமல்லி – சிறிதளவு.

செய்முறை: உருளைக்கிழங்கை வேக வைத்து தோலுரித்து மசித்து கொள்ளவும். அரிசி மாவுடன் பச்சை மிளகாய், வெந்த உருளைக்கிழங்கு, சீரகத்தூள், கொத்தமல்லி, உப்பு சேர்த்துப் பிசையவும். இதில் சிறிது எடுத்து
கொழுக்கட்டைகளாகப் பிடித்து இட்லித் தட்டில் வேக வைத்து எடுத்துப் பரிமாறவும்.

————————————————————————–

——

சென்னா கொழுக்கட்டை

தேவையானவை: பச்சரிசி – ஒரு கப், எண்ணெய் – 2 டீஸ்பூன், உப்பு – ஒரு சிட்டிகை.

பூரணத்துக்கு: ஊற வைத்து வேக வைத்த சென்னா – அரை கப், பொடியாக நறுக்கிய தேங்காய், பொடியாகநறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி – ஒரு டேபிள்ஸ்பூன், பொடியாக நறுக்கிய மாங்காய் – அரை டேபிள்ஸ்பூன், எலுமிச்சைச் சாறு – 2 டீஸ்பூன், சீரகத்தூள் – அரை டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: பச்சரிசியை ஒரு மணி நேரம் ஊற வைத்து, தண்ணீரை வடித்து, நிழலில் உலர்த்தி மிக்ஸியில் நைசாக அரைத்து சலித்துக் கொள்ளவும். ஒரு கப் (ஒரு கப் மாவுக்கு ஒரு கப் தண்ணீர் விகிதம்) தண்ணீரை அடுப்பில் வைத்து கொதிக்கவிடவும். கொதிக்கும்போது ஒரு சிட்டிகை உப்பு, எண்ணெய் சேர்த்து, கொதித்ததும் மாவைத் தூவி, கட்டியில்லாமல் கிளறவும். பிறகு ஆற வைத்துப் பிசைந்து, ஈரத் துணியால் மூடி வைக்கவும்.

சென்னாவை ஒன்றிரண்டாக மிக்ஸியில் அரைத்து, அதனுடன் மற்ற பொருட்களையும் கலந்து, பூரணமாக செய்து கொள்ளவும்.

பிசைந்த மாவில் சிறிது எடுத்து சிறிய கிண்ணம் போல் செய்து சென்னா பூரணத்தை நிரப்பி மூடி, இட்லித் தட்டில் வேகவிட்டு எடுக்கவும்.

————————————————————————–

——

மக்காச்சோள கொழுக்கட்டை

தேவையானவை: மக்காச்சோளம் – அரை கிலோ, சர்க்கரை – ஒன்றரை கப், தேங்காய் – ஒரு மூடி, ஏலக்காய் – 6.

செய்முறை: மக்காச்சோளத்தை மிஷினில் கொடுத்து அரைத்துக் கொள்ளவும். கடாயை காய வைத்து மாவை லேசாக வறுத்துக் கொள்ளவும். தேங்காயை துருவி வறுத்துக்கொள்ளவும். தேங்காய், சர்க்கரை, பொடித்த ஏலக்காயை மாவுடன் சேர்த்துப் பிசையவும். இந்த மாவில் சிறிது எடுத்து கொழுக்கட்டைகளாகப் பிடித்து, இட்லித் தட்டில் வேக வைத்து எடுக்கவும்.

————————————————————————–

——

கலர்ஃபுல் கொழுக்கட்டை

தேவையானவை: ஊற வைத்து நிழலில் உலர்த்தி, அரைத்து வறுத்த பச்சரிசி மாவு – 2 கப், 5 முதல் 6 மணி நேரம் ஊறிய ஜவ்வரிசி – ஒன்றரை டேபிள்ஸ்பூன், தேங்காய் துருவல் – அரை கப், குழையாமல் வேகவைத்த பாசிப்பருப்பு, நெய் – தலா ஒரு டேபிள்ஸ்பூன், கறிவேப்பிலை – சிறிது, சீரகம் – ஒரு டீஸ்பூன், சர்க்கரை – 2 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு, விருப்பப்பட்ட ஃபுட் கலரிங் – 2 (அ) 3 துளிகள்.

செய்முறை: கலர் நீங்கலாக.. மாவுடன் மற்ற எல்லாப் பொருட்களையும் சேர்த்து, வெந்நீரை ஊற்றி கெட்டியாகப் பிசையவும். பிசைந்த மாவை வைத்துள்ள கலர்களுக்கேற்ப பகுதிகளாகப் பிரித்துக் கொள்ளவும். ஒவ்வொரு வண்ணத்தையும் ஒவ்வொரு பகுதியுடன் சேர்த்துப் பிசைந்து, சிறு உருண்டைகளாக உருட்டி வேக வைத்துப் பரிமாறவும்.

————————————————————————–

——

ராகி கொழுக்கட்டை

தேவையானவை: ராகி மாவு – ஒரு கப், பொடித்த வெல்லம் (அ) கருப்பட்டி – அரை கப், தேங்காய் துருவல் – கால் கப், மிகவும் பொடியாக நறுக்கி நெய்யில் வறுத்த முந்திரி – ஒரு டேபிள்ஸ்பூன், ஏலக்காய்த்தூள் – அரை டீஸ்பூன், நெய் – ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு – ஒரு சிட்டிகை.

செய்முறை: ராகி மாவை அரை டேபிள்ஸ்பூன் நெய்யில் வறுத்து ஆறவிட்டு, அதனுடன் வெல்லம் நீங்கலாக மற்ற எல்லாவற்றையும் கலந்து கொள்ளவும். வெல்லத்தில் கால் கப் தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்துக் கரைய விடவும். கரைந்ததும் வடிகட்டி மாவில் விட்டு நன்கு பிசையவும். பாகு போதவில்லையெனில் சிறிது வெந்நீரை சேர்த்துக் கொள்ளலாம். இந்த மாவில் சிறிது எடுத்து உள்ளங்கையில் வைத்து மடித்து, இட்லித் தட்டில் வேக விட்டு எடுக்கவும்.

————————————————————————–

——

டிரை ஃப்ரூட்ஸ் கொழுக்கட்டை

தேவையானவை: பச்சரிசி – ஒரு கப், உப்பு – ஒரு சிட்டிகை, எண்ணெய் – 2 டீஸ்பூன், பொடியாக நறுக்கிய காய்ந்த அத்திப்பழம், பேரீச்சம்பழம், பாதாம், முந்திரி, வெள்ளரி விதை, துருவிய கொப்பரை எல்லாம் சேர்ந்தது -
அரை கப், தேன் – 2 டேபிள்ஸ்பூன், சுக்குப்பொடி – ஒரு சிட்டிகை.

செய்முறை: அத்திப்பழம், பேரீச்சம்பழம், முந்திரி, பாதாம், வெள்ளரி விதை, கொப்பரை எல்லாவற்றையும் தேனுடன் சேர்த்துப் பிசைந்து, பூரணமாகக் கலந்து வைக்கவும்.

பச்சரிசியை ஊற வைத்து, களைந்து, நிழலில் உலர்த்தி, மிஷினில் அரைத்துக் கொள்ளவும். ஒரு கப் தண்ணீரை

கொதிக்க வைத்து அதில் உப்பு, எண்ணெய் சேர்த்து, அரைத்த மாவைத் தூவி கட்டியில்லாமல் கிளறவும். இறக்கி ஆற வைத்து ஈரத் துணியால் மூடி வைக்கவும்.

இந்த மாவிலிருந்து சிறிது எடுத்து கிண்ணம் போல் செய்து, சிறிது பூரணத்தை வைத்து மூடி இட்லித் தட்டில் வேக வைத்து எடுக்கவும்.

————————————————————————–

——

தாளித்த கொழுக்கட்டை

தேவையானவை: புழுங்கல் அரிசி – ஒரு கப், வேக வைத்த கடலைப் பருப்பு, சர்க்கரை – ஒரு டீஸ்பூன், வேக வைத்த பாசிப்பருப்பு – அரை டேபிள்ஸ்பூன், தேங்காய் துருவல் – 2 டேபிள்ஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு –

தலா அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 3, கறிவேப்பிலை – சிறிது, எண்ணெய் (அ) நெய் – ஒரு டேபிள்ஸ்பூன்.

செய்முறை: அரிசியை ஒரு மணி நேரம் ஊற வைத்து, ஆட்டுக்கல்லில் நன்றாக அரைத்துக் கொள்ளவும். இந்த மாவை தோசை மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் காய வைத்து கடுகு,

உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை தாளித்து, கரைத்த மாவு, வேக வைத்த பருப்புகள், சர்க்கரை, தேங்காய் துருவல், உப்பு சேர்த்து, கையில் ஒட்டாமல் வரும் வரை கிளறி இறக்கவும். பிறகு ஆற விட்டு, சிறு

உருண்டைகளாகப் பிடித்து இட்லித் தட்டில் வேக வைத்து எடுக்கவும்.

***********************************************************************************************

30 வகை முறுக்கு!

30 வகை முறுக்கு!

அவல் முறுக்கு

தேவையானவை: அவல் – 2 கப், கோதுமை மாவு (அ) மைதா மாவு – கால் கப், கெட்டியான மோர் – 2 கப்,

உப்பு, எள், எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை: அவலை நன்றாகக் கழுவி மோருடன் கலந்து முதல் நாள் இரவே ஊற வைக்கவும். மறுநாள் எடுத்து

உப்பு சேர்த்து முறுக்கு பிழியும் அளவுக்கு கெட்டியாக அரைத்து, கோதுமை மாவு, எள்ளை சேர்க்கவும். அதை

முறுக்கு அச்சில் போட்டு, ஒரு துணியில் பிழியவும். இரண்டு அல்லது மூன்று முறை திருப்பிப் போடவும். ஈரம்

சிறிது காய்ந்ததும் எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.

————————————————————————–

——

வெண்ணெய் முறுக்கு

தேவையானவை: கடலை மாவு, மைதா மாவு, அரிசி மாவு – தலா ஒன்றேகால் கப், சோடா உப்பு – 2 சிட்டிகை,

வெண்ணெய் – அரை கப், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை: கடலை மாவு, மைதா மாவு, அரிசி மாவு மூன் றையும் சுத்தம் செய்து உப்பு, வெண்ணெய், சோடா

உப்பு சேர்த்து, சிறிது தண்ணீர் விட்டு கெட்டியாகப் பிசையவும்.

பிசைந்த மாவை முறுக்கு அச்சில் போட்டு, காய்ந்த எண்ணெயில் பிழிந்து, வெந்ததும் எடுக்கவும்.

————————————————————————–

——

கோயில் முறுக்கு

தேவையானவை: இடித்த பச்சரிசி மாவு – 4 கப், வெண்ணெய் – கால் கப், பொட்டுக்கடலை மாவு – 4 டீஸ்பூன்,

சீரகம் – ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள், மிளகாய்த்தூள் – தலா கால் டீஸ்பூன், உப்பு, எண்ணெய் –

தேவையான அளவு.

செய்முறை: பச்சரிசி மாவு, வெண்ணெய், பொட்டுக்கடலை மாவு, பெருங்காயத்தூள், உப்பு, சீரகம், மிளகாய்த்தூள்

எல்லாவற்றையும் ஒன்றாக ஒரு பாத்திரத்தில் போட்டு முறுக்கு மாவு பதத்துக்கு தண்ணீர் சேர்த்துப் பிசையவும்.

அந்த மாவில் சிறிது எடுத்து, 3 அங்குல நீளத்துக்கு உருட்டி, இரண்டு முனைகளையும் இணைக்கவும். இதே

போல் எல்லா மாவையும் உருட்டி எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

மாவை உருட்டி வெகு நேரம் வைத்திருந்தால் காய்ந்து உடைந்து விடும். அதனால், சிறிது ஈரப்பசை

இருக்கும்போதே பொரித்தெடுக்க- வேண்டும்.

————————————————————————–

——

மைதா முறுக்கு

தேவையானவை: மைதா மாவு – 2 கப், உளுந்து பொடி – 2 டேபிள்ஸ்பூன், வெண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன்,

உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை: மைதா மாவை வெள்ளைத் துணியில் சுற்றி, ஆவியில் வைத்து எடுத்து உளுந்து பொடி,

வெண்ணெய், உப்பு சேர்த்து பிசையவும். பிசைந்த மாவை பெரிய கண் உள்ள முறுக்கு அச்சில் போட்டு, காய்ந்த

எண்ணெயில் பிழிந்து பொரித்து எடுக்கவும்.

————————————————————————–

——

கோதுமை மாவு முறுக்கு

தேவையானவை: கோதுமை மாவு – ஒரு கப், அரிசி மாவு – அரை கப், சீரகம் – கால் டீஸ்பூன், வெண்ணெய் –

ஒரு டேபிள்ஸ்பூன், பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை, உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை: கோதுமை மாவையும் அரிசி மாவையும் ஒரு பாத்திரத்தில் போட்டு உப்பு, சீரகம், வெண்ணெய்,

பெருங்காயத்-தூள், தேவையான தண்ணீர் விட்டு முறுக்கு மாவு பதத்துக்குப் பிசைந்து கொள்ளவும்.

பிசைந்த மாவை, முறுக்கு அச்சில் போட்டு, காய்ந்த எண்ணெயில் பிழியவும். பொன்னிறமாக வெந்தவுடன்

வடித்-தெடுக்கவும்.

————————————————————————–

——

மரவள்ளிங்கிழங்கு முறுக்கு

தேவையானவை: மரவள்ளிக்கிழங்கு மாவு – ஒரு கப், அரிசி மாவு, கடலை மாவு – தலா கால் கப்,

மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள் – சிறிதளவு, எள் – 2 டீஸ்பூன், உப்பு, எண்ணெய் –

தேவையான அளவு.

செய்முறை: ஒரு பாத்திரத்தில் எல்லா மாவுகளையும் போட்டு எள், மிளகாய்த்தூளை சேர்க்கவும். உப்பு,

பெருங்காயத்தை சிறிது தண்ணீரில் கரைத்து மாவு கலவையில் ஊற்றி, முறுக்கு மாவு பதத்தில் பிசைந்து

கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பிசைந்த மாவை முறுக்கு குழாயில் போட்டு பிழிந்து, பொன்னிறமாக

பொரித்து எடுக்கவும். எள்ளுக்குப் பதில் ஓமம் சேர்த்தும் செய்யலாம்.

மரவள்ளிக்கிழங்கு மாவு கிடைக்கவில்லை என்றால் மரவள்ளிக்-கிழங்கை வேக வைத்து தோலுரித்து, முறுக்கு

மாவு பதத்தில் கெட்டியாக அரைத்துக் கொள்ளலாம்.

————————————————————————–

——

இனிப்பு முறுக்கு

தேவையானவை: உளுந்து – ஒரு கப், மாவு அரிசி – அரை கப், எண்ணெய் – தேவையான அளவு, வெல்லம் –

ஒரு கப்.

செய்முறை: உளுந்து, அரிசி இரண்டையும் அரை மணி நேரம் ஊற வைத்து சிறிது தண்ணீர், உப்பு சேர்த்து

கெட்டியாக அரைத்தெடுக்கவும்.

அரைத்த மாவை முறுக்கு அச்சில் போட்டு காய்ந்த எண்ணெயில் பிழியவும். இருபுறமும் வெந்ததும் எடுத்து ஆற

விடவும்.

வெல்லத்தைப் பொடித்து, சிறிது தண்ணீரில் கரைத்து வடிகட்டவும். அதை ஒரு அகன்ற பாத்திரத்தில் ஊற்றி,

அடுப்பில் வைத்து பாகு உருட்டும் பதத்தில் காய்ச்சவும். அதை பொரித்து வைத்துள்ள முறுக்குகளின் மேல்

ஊற்றிக் கிளறவும்.

இது, ஒரு வாரம் வரை கெடாமல் இருக்கும்.

————————————————————————–

——

ரவா தேன் குழல்

தேவையானவை: ரவை – ஒரு கப், தேங்காய் துருவல் – அரை கப், கோதுமை மாவு – 2 டேபிள்ஸ்பூன், மிளகு,

சீரகம் – தலா ஒரு டீஸ்பூன், தேங்காய் எண்ணெய் – சிறிதளவு, உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை: ஒரு கப் தண்ணீரை கொதிக்க வைத்து, அதில் ரவை, தேங்காய் துருவல், உப்பு சேர்த்து கிளறி

இறக்கவும். பிறகு கோதுமை மாவு, மிளகு, சீரகத்தை பொடி செய்து சேர்த்துப் பிசையவும். வாசனைக்காக சிறிது

தேங்காய் எண்ணெயைச் சேர்க்கவும்.

பிசைந்த மாவை தேன்குழல் அச்சில் போட்டு, எண்ணெய் காய்ந்ததும் பிழியவும். நன்றாக வேகவிட்டு எடுக்கவும்.

————————————————————————–

——

முள் முறுக்கு

தேவையானவை: அரிசி – 3 கப், கடலைப்பருப்பு – ஒரு கப், பயத்தம்பருப்பு – கால் கப், எள் (தேய்த்து

காய்ந்தது), சீரகம், கட்டிப் பெருங்காயம் – சிறிதளவு, வெண்ணெய் – சிறிய எலுமிச்சம்பழம் அளவு, உப்பு,

எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை: அரிசி, கடலைப்பருப்பு, பயத்தம்பருப்பு மூன்றையும் மிஷினில் மாவாக அரைத்துக் கொள்ளவும்.

இந்த மாவுடன் உப்பு, பெருங்காயத்தை சிறிது தண்ணீரில் கரைத்து ஊற்றவும். பிறகு, வெண்ணெய், எள், சீரகம்

சேர்த்து தேவையான தண்ணீர் ஊற்றி முறுக்கு மாவு பதத்துக்குப் பிசையவும்.

முறுக்கு அச்சில் முள் முறுக்கு அச்சை வைத்து, அதில் மாவைப் போட்டு காய்ந்த எண்ணெயில் பிழியவும்.

பொன்னிறமாக வெந்ததும் எடுக்கவும்.

————————————————————————–

——

பயத்தம்பருப்பு முறுக்கு

தேவையானவை: பச்சரிசி – 4 கப், பயத்தம்பருப்பு – ஒரு கப், வெண்ணெய் – சிறிய எலுமிச்சம்பழம் அளவு, எள்,

சீரகம், பெருங்காயம் – சிறிதளவு, உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை: அரிசி, பயத்தம்பருப்பை மிஷினில் அரைத்துக் கொள்ளவும். இதனுடன் எள், சீரகம், வெண்ணெய்,

பெருங்காயம், உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு முறுக்கு மாவு பதத்தில் பிசையவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் பிசைந்து வைத்திருக்கும் மாவை முறுக்கு அச்சில் போட்டு எண்ணெயில்

பிழிந்து வேகவிட்டு எடுக்கவும்.

————————————————————————–

——

மெட்டி முறுக்கு

தேவையானவை: அரிசி மாவு – 2 கப், மைதா மாவு – அரை கப், காய்ந்த மிளகாய், சீரகம், எண்ணெய் –

தேவையான அளவு, சன்ன ரவை – ஒரு டேபிள்ஸ்பூன், வெண்ணெய் – பெரிய எலுமிச்சம்பழம் அளவு, தேங்காய்

துருவல் – அரை கப், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை: தேங்காய் துருவலுடன் 2 மிளகாயை வைத்து சற்று கரகரப்பாக அரைத்து எடுக்கவும். ஒரு

பாத்திரத்தில் அரிசி மாவு, மைதா மாவு, சன்ன ரவை, சீரகம், வெண்ணெய், உப்பு போடவும். அதில் அரைத்த

விழுதை சேர்த்து, தேவையான தண்ணீர் ஊற்றி கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும்.

பிசைந்த மாவில் சிறிது எடுத்து, நீளமாக உருட்டி, பின் மெட்டியைப் போல இரண்டு சுற்று சுற்றி காய்ந்த

எண்ணெயில் போட்டு வேகவிட்டு எடுக்கவும்.

————————————————————————–

——

புரொட்டீன் முறுக்கு

தேவையானவை: பயத்தம் பருப்பு – ஒரு கப், பச்சை பட்டாணி – அரை கப், வறுத்து அரைத்த உளுந்து மாவு –

கால் கப், பச்சரிசி மாவு – 4 கப், எள் – ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை: பயத்தம்பருப்பை ஒரு பாத்திரத்தில் போட்டு தண்ணீர் விட்டு வேக வைத்து ஆற விடவும். பச்சை

பட்டாணியை மிக்ஸியில் கெட்டியாக அரைக்கவும். வேக வைத்த பருப்பு, பட்டாணி விழுது, அரிசி மாவு, உளுந்து

மாவு, எள், உப்பு, மிளகாய்த்தூள் எல்லாவற்றையும் கெட்டியாகப் பிசையவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், முறுக்கு அச்சில் மாவை நிரப்பி எண்ணெயில் பிழிந்து வேக விட்டு

எடுக்கவும். காய்ந்த பட்டாணியாக இருந்தால் முந்தைய நாள் இரவே ஊற வைத்து அரைக்க வேண்டும்.

————————————————————————–

——

புழுங்கலரிசி முறுக்கு

தேவையானவை: புழுங்கலரிசி – 4 கப், பொட்டுக்கடலை மாவு – ஒரு கப், சீரகம் – அரை டீஸ்பூன், எள் – 2

டீஸ்பூன், வெண்ணெய் – 4 டேபிள்ஸ்பூன், ஊற வைத்த பாசிப்பருப்பு – ஒரு கைப்பிடி, மிளகு – அரை டீஸ்பூன்,

உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை: புழுங்கலரிசியை 2 மணி நேரம் ஊற வைத்து கிரைண்டரில் நைஸாக அரைக்கவும். அதில்

பொட்டுக்கடலை மாவு, சீரகம், மிளகுத்தூள், எள், ஊற வைத்த பாசிப்பருப்பு, வெண்ணெய், உப்பு சேர்த்து

பிசையவும்.

வெள்ளை துணியின் மீது ஒரு டம்ளரை கவிழ்த்து, பிசைந்து வைத்துள்ள மாவில் சிறிது எடுத்து, டம்ளரை சுற்றி

கையினால் முறுக்கு சுற்ற வேண்டும். சுற்றிய முறுக்குகள் ஈரம் காய்ந்ததும் எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.

சீரகம், மிளகுத்தூளுக்கு பதிலாக மிளகாய்த்தூள் சேர்த்தும் செய்யலாம்.

————————————————————————–

——

பச்சரிசி கார முறுக்கு

தேவையானவை: பச்சரிசி மாவு – 4 கப், பொட்டுக்கடலை மாவு – ஒரு கப், உப்பு, மிளகாய்த்தூள், தண்ணீர்,

எண்ணெய் – தேவையான அளவு, பெருங்காயத்தூள் – சிறிதளவு.

செய்முறை: ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து 4 கப் தண்ணீர் ஊற்றவும். அதில் உப்பு போட்டு, மெதுவாக

கொதிக்க ஆரம்பிக்கும்போது அரிசி மாவை கொட்டி, அடுப்பிலேயே வைத்துக் கிளறி, பின்னர் அடுப்பை

அணைத்து விடவும்.

இந்த மாவை தட்டில் போட்டு பிசைந்து, சூடு ஆறியதும் பொட்டுக்கடலை மாவு, மிளகாய்த்தூள் சேர்த்துப்

பிசையவும்.இந்த மாவை முறுக்கு அச்சில் போட்டு, காய்ந்த எண்ணெயில் பிழிந்து சுட்டெடுக்கவும்.

————————————————————————–

——

ஸ்பெஷல் தூள் முறுக்கு

தேவையானவை: அரிசி மாவு, கடலை மாவு, பொட்டுக்கடலை மாவு – தலா ஒரு கப், சீரகம் – சிறிதளவு,

காய்ச்சிய எண்ணெய் – அரை கரண்டி, உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை: ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு, கடலை மாவு, பொட்டுக்கடலை மாவு, உப்பு, சீரகம் போட்டு

காய்ச்சிய எண்ணெயை ஊற்றி கலக்கவும்.

கலவையை உதிரியாக பிசைந்து, அடிக்கடி தண்ணீர் சேர்த்து நன்றாக பிசையவும். பிறகு அந்த மாவை முறுக்கு

அச்சில் போட்டு, காய்ந்த எண்ணெயில் பிழிந்து, வெந்ததும் எடுக்கவும். இது தூள் முறுக்காக வரும்.

————————————————————————–

——

தயிர் முறுக்கு

தேவையானவை: அரிசி – 3 கப், உளுத்தம்பருப்பு – அரை கப், உப்பு போட்டு அரைத்த பச்சைமிளகாய் விழுது –

கால் கப், நெய் – ஒரு டேபிள்ஸ்பூன், புளித்த தயிர் – அரை கப், எள் – சிறிதளவு, எண்ணெய் – தேவையான

அளவு.

செய்முறை: அரிசி, உளுத்தம்பருப்பு இரண்டையும் மிஷினில் நைஸாக அரைத்துக் கொள்ளவும். இந்த மாவுடன்

பச்சைமிளகாய் விழுது, நெய், எள், புளித்த தயிரை சேர்த்துப் பிசையவும்.

தேவையானால் சிறிது தண்ணீர் ஊற்றி பிசைந்து, தேன்குழல் அச்சில் போட்டு, எண்ணெயில் பிழியவும்.

பொன்னிறமானதும் எடுக்கவும்.

பச்சைப்பயறு முறுக்கு

தேவையானவை: அரிசி மாவு – 2 கப், முளைவிட்ட பச்சைப் பயறு – அரை கப், மிளகாய்த்தூள்- ஒரு டீஸ்பூன்,

பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன், வெண்ணெய் – ஒரு டேபிள் ஸ்பூன், உப்பு, எண்ணெய் – தேவையான

அளவு, ஓமம் – சிறிதளவு.

செய்முறை: முளைவிட்ட பச்சைப்பயறை குக்கரில் வேக வைத்து, ஆறியதும் மிக்ஸியில் நைஸாக அரைத்துக்

கொள்ளவும். இந்த விழுதுடன் அரிசி மாவு, மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள், வெண்ணெய், உப்பு சேர்த்து

பிசையவும்.

முறுக்கு குழலில் நட்சத்திர அச்சைப் போட்டு, பிசைந்த மாவை அதில் போட்டு சின்ன முறுக்குகளாகப் பிழியவும்.

வெந்ததும் எடுக்கவும்.

————————————————————————–

——

சோயா தேன்குழல்

தேவையானவை: சோயா மாவு – 4 கப், அரிசி மாவு – ஒரு கப், வறுத்துப் பொடித்த உளுந்து மாவு – ஒரு

டேபிள்ஸ்பூன், நெய் – கால் கப், சீரகம் – 2 டீஸ்பூன், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை: நெய்யை சூடாக்கிக் கொள்ளவும். சோயா மாவு, அரிசி மாவு, உளுந்து மாவு, உப்பு, சீரகம், நெய்

எல்லாவற்றையும் சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி முறுக்கு மாவு பதத்துக்கு பிசைந்து கொள்ளவும். மாவில்

சிறிதளவு சூடான எண்ணெயை ஊற்றிப் பிசையவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பிசைந்த மாவை முறுக்கு அச்சில் போட்டு பிழியவும். பொன்னிறமாக

வெந்ததும் எடுக்கவும்.

————————————————————————–

——

சோயா முள் முறுக்கு

தேவையானவை: பொட்டுக்கடலை மாவு, சோயா மாவு, அரிசி மாவு – தலா ஒரு கப், சீரகம் – 2 டீஸ்பூன், நெய்

- ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை: ஒரு பாத்திரத்தில் பொட்டுக்கடலை மாவு, சோயா மாவு, அரிசி மாவு, சீரகம், உப்பு போட்டு நன்றாக

கலந்து கொள்ளவும். அதில் நெய்யை போட்டுப் பிசறி, சிறிது தண்ணீர் தெளித்து நன்றாக பிசையவும்.

முறுக்குக் குழாயில் முள்ளு முறுக்கு அச்சைப் போட்டு, அதில் மாவை நிரப்பி எண்ணெயில் பிழிந்து பொரித்து

எடுக்கவும்.

————————————————————————–

——

சோயா ரிப்பன் முறுக்கு

தேவையானவை: சோயா மாவு – ஒரு கப், கடலை மாவு, அரிசி மாவு – தலா அரை கப், எள், நெய் – தலா ஒரு

டேபிள்ஸ்பூன், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை: எல்லா மாவுகளையும் சலித்து ஒரு பாத்திரத்தில் போட்டு, நெய்யை சூடாக்கி ஊற்றவும். அதில் எள்,

உப்பு சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டுப் பிசைந்து கொள்ளவும்.

முறுக்குக் குழாயில் ரிப்பன் அச்சைப் போட்டு அதில் மாவை நிரப்பி, காய்ந்த எண்ணெயில் பிழியவும். நன்றாக

வெந்ததும் எடுக்கவும்.

————————————————————————–

——

திடீர் முறுக்கு

தேவையானவை: உளுத்தம்பருப்பு – அரை கப், அரிசி மாவு – இரண்டரை கப் (அரிசி, உளுந்து 5:1 என்ற

விகிதத்தில் இருக்க வேண்டும்), சீரகம் – 2 டீஸ்பூன், வெண்ணெய் – 2 டீஸ்பூன், காய்ச்சிய எண்ணெய் – அரை

டேபிள்ஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: உளுத்தம்பருப்பை கழுவி, மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி குக்கரில் வேக வைக்கவும். மூன்று

முறை விசில் வந்ததும் அடுப்பை அணைக்கவும். ஆறிய பிறகு மிக்ஸியில் போட்டு நன்றாக வெண்ணெய்போல்

அரைக்கவும்.

அரிசி மாவில் வெண்ணெய், உப்பு, காய்ச்சிய எண்ணெய், சீரகம் சேர்த்து நன்றாக பிசறவும். பிறகு அதில்

அரைத்த உளுந்து மாவை சேர்க்கவும். தேவையானால் சிறிது சிறிதாக தண்ணீர் தெளித்து முறுக்கு மாவு

பதத்துக்குப் பிசையவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்தவுடன் முறுக்கு அச்சில் மாவைப் போட்டு பிழியவும். இது, வெள்ளையாக

இருக்கும். சீரகத்துக்கு பதிலாக எள் சேர்த்தும் செய்யலாம்.

————————————————————————–

——

உருளைக்கிழங்கு தேன்குழல்

தேவையானவை: உருளைக்கிழங்கு – கால் கிலோ, வறுத்த உளுந்து மாவு – ஒரு டீஸ்பூன், வெண்ணெய் – 2

டேபிள்ஸ்பூன், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை: உருளைக்கிழங்கை வேக வைத்து, தோல் உரித்துக் கொள்ளவும். அதை மிக்ஸியில் கெட்டியாக

அரைக்கவும். அதோடு உளுந்து மாவு, உப்பு, வெண்ணெய் சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தேன்குழல் அச்சில் மாவைப் போட்டு எண்ணெயில் பிழியவும்.

சிவந்தவுடன் எடுக்கவும்.

————————————————————————–

——

வாழைக்காய் தேன்குழல்

தேவையானவை: வாழைக்காய் – 2, வறுத்த உளுந்து மாவு – 2 டேபிள்ஸ்பூன், பெருங்காயத்தூள் – சிறிதளவு,

வெண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை: வாழைக்காயை வேக வைத்து, தோல் உரித்து மிக்ஸியில் கெட்டியாக அரைத்துக் கொள்ளவும்.

அதனுடன் உளுந்துமாவு, பெருங்காயத்தூள், உப்பு, வெண்ணெய் சேர்த்து முறுக்கு பதத்துக்கு பிசைந்து

கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் தேன் குழல் அச்சில் மாவைப் போட்டு எண்ணெயில் பிழியவும்.

சிவந்ததும் எடுக்கவும்.

————————————————————————–

——

கருப்பட்டி முறுக்கு

தேவையானவை: பச்சரிசி மாவு – 5 கப், வறுத்த உளுந்து மாவு – ஒன்றரை கப், எள் – 2 டேபிள்ஸ்பூன், நெய் –

2 டேபிள்ஸ்பூன், கருப்பட்டி – 2 கப், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை: ஒரு பாத்திரத்தில் பச்சரிசி மாவு, வறுத்த உளுந்து மாவு, எள், உப்பு, நெய் ஆகியவற்றைப் போட்டு

கலந்து கொள்ளவும். கருப்பட்டியை தூள் செய்து தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்து கொதிக்க விடவும்.

அதில் மாவு கலவையை கொட்டிக் கிளறவும். ஆறிய பிறகு நன்றாகப் பிசையவும். கடாயில் எண்ணெய் ஊற்றி

காய்ந்ததும், மாவை முறுக்குக் குழலில் போட்டு எண்ணெயில் பிழியவும். வெந்தவுடன் எடுக்கவும்.

————————————————————————–

——

பச்சரிசி ஜீரா முறுக்கு

தேவையானவை: பச்சரிசி – இரண்டரை கப், சர்க்கரை – 5 கப், உளுத்தம்பருப்பு – ஒரு கப், வெண்ணெய் – 2

டேபிள்ஸ்பூன், எள்- ஒன்றரை டீஸ்பூன், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை: பச்சரிசியை தண்ணீரில் ஊற வைத்து கழுவி, நீரை வடித்து இடித்து சலித்துக் கொள்ளவும்.

உளுத்தம்பருப்பை வறுத்து ஆறிய பிறகு நைஸாக அரைத்துக் கொள்ளவும். இரண்டு மாவையும் ஒன்றாகக்

கலந்து, உப்பு, எள், வெண்ணெய், தண்ணீர் சேர்த்து, கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், முறுக்குக் குழாயில் மாவைப் போட்டு எண்ணெயில் பிழிந்து

வெந்தவுடன் எடுக்கவும்.

சர்க்கரையை ஒரு பாத்திரத்தில் போட்டு தண்ணீர் சேர்த்து, 2 கம்பி பாகு பதத்தில் முற்றிய பாகு காய்ச்சவும்.

முறுக்கை ஓடித்து ஜீராவில் கொட்டி நன்றாகக் கிளறி விடவும். இளஞ்சூடாக இருக்கும்போதே உருண்டையாகப்

பிடிக்கலாம். அல்லது உதிர்த்து விட்டு உதிராகவும் வைக்கலாம்.

————————————————————————–

——

வளைய முறுக்கு

தேவையானவை: பாசிப்பருப்பு – அரை கப், மைதா மாவு – 2 டேபிள்ஸ்பூன், அரிசி மாவு – 2 கப்,

மிளகாய்த்தூள் – 2 டேபிள்ஸ்பூன், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை: பாசிப்பருப்பை வேக வைத்துக் கொள்ளவும். அரிசி மாவை கடாயில் போட்டு சிறிது சிவக்க

வறுக்கவும். அதில் உப்பு, மிளகாய்த்தூள், வெந்த பாசிப்பருப்பு சேர்த்து வேக விடவும். இந்தக் கலவை கெட்டியாக

வந்தவுடன் அடுப்பிலிருந்து இறக்கவும்.

அதில் மைதா மாவை சேர்த்துப் பிசைந்து சிறு வளையங்களாக செய்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி

காய்ந்ததும், வளையங்களை அதில் போட்டு சிவந்து வந்தவுடன் எடுக்கவும்.

————————————————————————–

——

தேங்காய்ப்பால் முறுக்கு

தேவையானவை: அரிசி மாவு – 2 கப், உளுத்தம்பருப்பு மாவு – 2 கப், வெண்ணெய் – 2 டீஸ்பூன்,

தேங்காய்ப்பால் – ஒரு கப், சீரகம், மிளகு – தலா அரை டீஸ்பூன், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை: உளுத்தம்பருப்பை வெறும் கடாயில் வறுத்து மாவாக பொடிக்கவும். இதனுடன் அரிசி மாவு,

தேங்காய்ப்பால், உப்பு, பொடித்த மிளகு, சீரகம், வெண்ணெய் சேர்த்துப் பிசையவும்.

முறுக்கு அச்சில் மாவைப் போட்டு ஈரத்துணி மீது அல்லது பாலித்தீன் ஷீட்டில் சிறு சிறு முறுக்குகளாகப்

பிழியவும். கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், முறுக்குகளை போட்டு பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.

தேங்காய் எண்ணெயில் பொரித்தால் சுவையும் மணமும் அமோகமாக இருக்கும்.

————————————————————————–

——

மனோகரம்

தேவையானவை: பாசிப்பருப்பு – ஒரு கப், பச்சரிசி – 2 கப், உப்பு – அரை டீஸ்பூன், பல்லு பல்லாக நறுக்கிய

தேங்காய் – அரை கப், பொடித்த வெல்லம் – ஒரு கப், ஏலக்காய்த்தூள் – சிறிதளவு, நெய் – 2 டீஸ்பூன்,

எண்ணெய் – தேவையான அளவு,

செய்முறை: அரிசி, பருப்பை நைஸாக அரைத்து, உப்பு, தண்ணீர், நெய் சேர்த்து நன்றாகப் பிசையவும். கடாயில்

எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தேன்குழல் அச்சில் மாவைப் போட்டு பிழிந்து வேகவிட்டு எடுக்கவும்.

வெல்லத்தை உருட்டும் பதத்தில் காய்ச்சவும். நொறுக்கி வைத்துள்ள தேன்குழலில் ஏலக்காய்த்தூள்,

தேங்காய்ப்பால் சேர்த்து, பாகை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றிக் கிளறவும். பாகு நன்றாக கலந்தவுடன்

உருண்டையாகப் பிடிக்கலாம். இளம் சூடாக இருக்கும் போது தனித்தனியாக உதிர்த்தும் வைத்துக் கொள்ளலாம்.

————————————————————————–

——

நெய் முறுக்கு

தேவையானவை: பச்சரிசி மாவு – ஒரு கப், கடலை மாவு – கால் கப், ஏலக்காய்த்தூள் – அரை டீஸ்பூன்,

வெண்ணெய் – நெல்லிக்காய் அளவு, நெய் – 4 டேபிள்ஸ்பூன், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை: பச்சரிசியை ஊற வைத்து இடித்து, சலித்து, காய வைத்துக் கொள்ளவும். இந்த மாவுடன் கடலை

மாவு, உப்பு வெண்ணெய், நெய், ஏலக்காய்த்தூள் சேர்க்கவும். அதில் தேவையான தண்ணீர் ஊற்றி முறுக்கு மாவு

பதத்துக்குப் பிசையவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி, அதனுடன் வாசனைக்கு சிறிது நெய்யும் ஊற்றவும். எண்ணெய் காய்ந்ததும், முள்

முறுக்கு அச்சில் மாவைப் போட்டுப் பிழியவும். வெந்தவுடன் எடுக்கவும்.

————————————————————————–

——

கை முறுக்கு

தேவையானவை: பிசுக்குள்ள பச்சரிசி – 2 கப், உளுத்தம்பருப்பு – கால் கப், வெண்ணெய் – 6 டேபிள்ஸ்பூன், எள்

- ஒரு டேபிள்ஸ்பூன், பெருங்காயத்தூள் – சிறிதளவு, உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை: கை முறுக்கு சுற்ற பிசுக்குள்ள அரிசியாக இருந்-தால் நல்லது. அரிசியை தண்ணீ-ரில் அரை மணி

நேரம் ஊற வைக்கவும். ஊறிய பிறகு வெள்ளைத் துணியில் முடிந்து வைத்தால் தண்ணீர் வடிந்து விடும். பிறகு

அதை மிக்ஸியில் போட்டு மாவாக்கி நைஸாக சலிக்கவும். உளுத்தம்பருப்பை பொன்னிறமாக வறுத்து, அரைத்து

சலித்துக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு, உளுந்து மாவு, எள், பெருங்காயத்தூள், உப்பு, வெண்ணெய் சேர்த்து பிசையவும்.

மாவு பதம் நன்றாக இருந்தால்தான் நன்றாக முறுக்கு சுற்ற முடியும். வெள்ளைத் துணி மேல் ஒரு பாட்டில்

மூடியை வைத்து, அதைச் சுற்றி முறுக்கு சுற்றவும்.

கடாயில் எண்ணெய் காய்ந்ததும், அதில் ஒவ்வொரு முறுக்காக மெதுவாக எடுத்து நிதானமாக போடவும்.

முதலில் சடசடவென சத்தம் வரும். ஒரு பக்கம் வெந்ததும், முறுக்குகளைத் திருப்பிப் போட வேண்டும். வெந்த

முறுக்கு எண்ணெயில் மிதக்கும். சடசட சத்தம் அடங்கியதும், எண்ணெயை வடிய விட்டு முறுக்கை எடுக்கவும்.

தேங்காய் எண்ணெயில் செய்தால் மொறு மொறுப்பாகவும், மணமாகவும் இருக்கும்.

************************************************************************************************

30 வகை போளி!

30 வகை போளி!

கடலைப்பருப்பு வெல்ல போளி

தேவையானவை: கடலைப்பருப்பு – ஒரு கப், வெல்லம் – முக்கால் கப், தேங்காய் துருவல் – கால் கப், ஏலக்காய்த்தூள் – கால் டீஸ்பூன், மைதா – ஒண்ணே கால் கப், உப்பு, மஞ்சள்தூள் – தலா கால் டீஸ்பூன், நெய் – தேவையான அளவு.

செய்முறை: கடலைப்பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். மைதாவை உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து கெட்டியாக பிசைந்து ஒரு டீஸ்பூன் நெய் தடவி மூடி 2 மணி நேரம் ஊற வைக்கவும். ஊறிய கடலைப்பருப்பை காய் பக்குவத்தில் வேக வைத்து வடிய வைக்கவும். ஆறியதும், அதனுடன் தேங்காய் துருவல் சேர்த்து கெட்டியாக அரைத்துக் கொள்ளவும்.

வெல்லத்தை சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி, திரும்பவும் நன்றாக அடுப்பில் வைத்து கொதிக்க விடவும். அதில் அரைத்து வைத்துள்ள கடலைப்பருப்பு கலவை, ஏலக்காய்த்தூளை சேர்த்து கிளறவும். கெட்டியாக வரும் பக்குவத்தில் சிறிது நெய் விட்டு, நன்றாக கிளறி இறக்கவும். பிசைந்த மைதாவை சிறிது எடுத்து அப்பளம் போல் செய்து கடலைப்பருப்பு பூரணத்தை வைத்து மூடி, அப்பள குழவியால் போளி போல் தட்டி தோசைக்கல்லில் போட்டு இருபுறமும் நெய் விட்டு சுட்டெடுக்கவும்.

ரவை போளி

தேவையானவை: ரவை – ஒரு கப், வெல்லம் – ஒரு கப், தேங்காய் துருவல் – ஒரு கப், முந்திரி துண்டுகள் – ஒரு டேபிள்ஸ்பூன், நெய் – கால் கப் , ஏலக்காய்த்தூள் – கால் டீஸ்பூன், மைதாமாவு டீஸ்பூ- ஒரு கப், கோதுமைமாவு – கால் கப், உப்பு – கால் டீஸ்பூன்.

செய்முறை: மைதாமாவு, கோதுமைமாவு, உப்பு மூன்றையும் சிறிது தண்ணீர் ஊற்றி, கெட்டியாக பிசைந்து நெய் தடவி 2 மணி நேரம் ஊற வைக்கவும். ஒரு அடி கனமான பாத்திரத்தில் சிறிது நெய் ஊற்றி, காய்ந்ததும் முந்திரி துண்டுகளை போடவும். உடனே, ரவையைப் போட்டு, சிவக்க வறுத்து தேங்காய் துருவலை சேர்க்கவும். வெல்லத்தை ஒரு கரண்டி தண்ணீரில் போட்டு, அடுப்பில் வைத்து, கரைந்ததும் வடிகட்டிக் கொள்ளவும். இந்த வெல்ல கரைசலை ரவையில் கொட்டி, கெட்டியாகக் கிளறி இறக்கி ஏலக்காய்த்தூளை சேர்க்கவும். பிசைந்து வைத்துள்ள மாவை சிறிய அப்பளங்களாக இட்டு, அதில் ரவை பூரணத்தை வைத்து மூடி போளி போல் தட்டி, தோசைக் கல்லில் போட்டு நெய் விட்டு இருபுறமும் சுட்டெடுக்கவும்.

குறிப்பு: மாவு பிசையும்போது முதலில் தண்ணீரை விட்டு கலந்த பிறகே எண்ணெய் (அ) நெய் சேர்க்க வேண்டும். இல்லையென்றால், மாவு சேர்ந்தாற்போல் வராமல் பிரிந்துவிடும்.

——————————————————————————–

பால் போளி

தேவையானவை: பொடித்த முந்திரி, பாதாம், பிஸ்தா – தலா கால் கப், ஏலக்காய்த்தூள் – கால் டீஸ்பூன், சர்க்கரை சேர்க்காத கோவா – கால் கப், சர்க்கரை – கால் கப் + ஒரு டேபிள்ஸ்பூன், மைதா மாவு – முக்கால் கப், கார்ன்ஃப்ளார் – கால் கப், உப்பு – ஒரு சிட்டிகை, நெய் – ஒரு டீஸ்பூன், எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு, பால் – 7 கப், குங்குமப்பூ – ஒரு சிட்டிகை.

செய்முறை: கார்ன்ஃப்ளார், மைதாமாவு, உப்பு மூன்றையும் தண்ணீர் ஊற்றிப் பிசைந்து, நெய் விட்டு கலந்து ஒரு மணி நேரம் மூடி வைக்கவும். பாலை அடுப்பில் வைத்து பாதியாக சுண்ட காய்ச்சவும். அதில், ஒரு டேபிள்ஸ்பூன் சர்க்கரை, குங்குமப்பூவை கலந்து இறக்கி தனியாக வைக்கவும். கோவா, முந்திரி, பாதாம், பிஸ்தா, சர்க்கரை, ஏலக்காய்த்தூள் எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து வைத்துக் கொள்ளவும். மைதாமாவை சிறிய அப்பளங்களாக இட்டு, அதில் ஒரு டீஸ்பூன் இந்த பருப்பு கலவையை வைத்து நன்றாக அழுத்தி மூடவும். (எண்ணெயில் பொரிக்கும்போது வெளியில் வராத அளவுக்கு) எண்ணெய் காய்ந்ததும், மிதமான தீயில் எல்லா போளிகளையும் பொரித்து எடுக்கவும். பிறகு சுண்ட காய்ச்சிய பால் கலவையில் போடவும்.

குறிப்பு: பாலில் ஊறி சாப்பிட சுவையாக இருக்கும். சூடாகவும் சாப்பிடலாம். ஜில்லென்றும் பரி மாறலாம்.

——————————————————————————–

வெஜிடபிள் போளி

தேவையானவை: கோஸ், கேரட், பட்டாணி, வெங்காயத்தாள், குடமிளகாய், இஞ்சி, பச்சை மிளகாய் – விருப்பத்துக்கேற்ப, கடலை மாவு – ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு – தேவையான அளவு, எண்ணெய் – 2 டீஸ்பூன், மைதா – ஒரு கப், சிறிய ரவை – கால் கப், எண்ணெய் – ஒரு டீஸ்பூன்.

செய்முறை: ரவையில் உப்பு சேர்த்து வெந்நீர் ஊற்றி கலந்து, அதில் மைதாவை சேர்த்து கெட்டியாக பிசைந்து ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். கோஸ், கேரட்டை துருவி பட்டாணியை ஒன்றிரண்டாக மிக்ஸியில் போட்டு எடுக்கவும். இதனுடன் வெங்காயத்தாளை பொடியாக நறுக்கி சேர்க்கவும். குடமிளகாய் விதைகளை எடுத்துவிட்டு, மெல்லியதாக சீவி கோஸ் கலவையுடன் சேர்க்கவும். கடாயில் 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு, பொடியாக நறுக்கிய இஞ்சி, பச்சைமிளகாய் உப்பு சேர்த்து வதக்கி, பிறகு காய்கறி கலவையை சேர்க்கவும். 5 நிமிடம் வதக்கியதும், கடலைமாவை தூவி, கிளறி இறக்கவும். ஊற வைத்துள்ள மாவை சிறிய அப்பளங்களாக இட்டு, அதில் காய்கறி கலவையை வைத்து போளிகளாக தட்டி எண்ணெய் விட்டு இருபுறமும் சுட்டெடுக்கவும்.

மரவள்ளிக்கிழங்கு கார போளி

தேவையானவை: மர வள்ளிக்–கிழங்கு துண்டுகள் – 2 கப், கொத்த- மல்லி – சிறிது, மஞ்சள்தூள் – கால் -டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு, எண்ணெய் – சுட்டெடுக்க தேவையான அளவு, மைதாமாவு – ஒரு கப், கார்ன்ஃப்ளார் – ஒரு டேபிள்ஸ்பூன், கோதுமை மாவு – கால் கப், நெய் – ஒரு டீஸ்பூன், பெருங் காயத்தூள் – கால் டீஸ்பூன்.

மசாலாத்தூள்: தனியா – 2 டீஸ்பூன், கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 5 இவற்றை வறுத்து அரைத்த பொடி.

செய்முறை: மைதாமாவு, கார்ன்ஃப்ளார், கோதுமைமாவு, உப்புடன் தண்ணீர் சேர்த்து கெட்டியாக பிசைந்து, நெய் தடவி ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். மரவள்ளிக்கிழங்கை வேக வைத்து மசித்துக் கொள்ளவும். இதனுடன் கொத்தமல்லி, மஞ்சள்தூள், மசாலாத்தூள், உப்பு, பெருங்காயத்தூள் எல்லாவற்றையும் நன்றாக கலந்து வைத்துக் கொள்ளவும். பிசைந்த மைதாவை சிறிய அப்பளமாக இட்டு, அதில் மரவள்ளிக்கிழங்கு பூரணத்தை வைத்து மூடி போளியாக தட்டி எண்ணெய் ஊற்றி இருபுறமும் திருப்பி எடுக்கவும்.

——————————————————————————–

பழ போளி

தேவையானவை: நீர் சத்து குறைந்த நறுக்கிய 4, 5 பழ வகைகள் – ஒரு கப், கோதுமைமாவு – ஒரு கப், நெய் – தேவையான அளவு, சர்க்கரை – ஒரு டேபிள்ஸ்பூன், மைதாமாவு – ஒரு கப், கார்ன்ஃப்ளார் – கால் கப்,

செய்முறை: கோதுமைமாவை நெய் விட்டு குறைந்த தீயில் வறுத்துக் கொள்ளவும். இதனுடன், பழக்கலவை, சர்க்கரை சேர்த்து கிளறி இறக்கவும். மைதாமாவு, கார்ன்ஃப்ளாருடன் தண்ணீர் சேர்த்து கெட்டியாக பிசைந்து நெய் தடவி ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு சிறிய அப்பளமாக இட்டு, அதில் பழக்கலவையை வைத்து மூடி லேசாக கையால் தட்டி, இருபுறமும் நெய் விட்டு சுட்டெடுக்கவும்.

——————————————————————————–

ரிச் போளி

தேவையானவை: பாதாம், முந்திரி, பிஸ்தா, அக்ரூட், வெள்ளரி விதை – தலா கால் கப், சர்க்கரை – அரை கப், மைதா – ஒரு கப், நெய் – தேவையான அளவு, உப்பு – ஒரு சிட்டிகை, ஏலக்காய்த்தூள் – கால் டீஸ்பூன்.

செய்முறை: மைதாவுடன் உப்பு, ஏலக்காய்த்தூள் சேர்த்து கெட்டியாக கலந்து நெய் தடவி ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். பாதாம் பருப்பை சிறிது சுடுநீரில் போட்டு தோல் உரித்து பிறகு எல்லா பருப்புகளையும் 2 மணி நேரம் சிறிது தண்ணீரில் ஊற வைக்கவும். பிறகு கெட்டியான விழுதாக அரைத்துக் கொள்ளவும். அடி கனமான பாத்திரத்தில் சர்க்கரை, நெய், பருப்பு விழுது சேர்த்து குறைந்த தீயில் வைத்து கெட்டியாக கிளறவும். மைதாவை சிறிய அப்பளங்களாக இட்டு, அதில் பருப்பு பூரணத்தை வைத்து போளி போல் தட்டி, இரு புறமும் நெய் விட்டு சுட்டெடுக்கவும்.

——————————————————————————–

தேங்காய் கோவா போளி

தேவையானவை: தேங்காய் துருவல் – ஒரு கப், சர்க்கரை – ஒரு டேபிள்ஸ்பூன், சர்க்கரை சேர்த்த கோவா – ஒரு கப், ஏலக்காய்த்தூள் – கால் டீஸ்பூன், நெய் – தேவையான அளவு, மைதாமாவு – அரை கப், கோதுமைமாவு – கால் கப், கார்ன்ஃப்ளார்- கால் கப், உப்பு – கால் டீஸ்பூன்.

செய்முறை: அடி கனமான ஒரு பாத்திரத்தில் தேங்காய் துருவல், சர்க்கரை இரண்டையும் சேர்த்து குறைந்த தீயில் கிளறவும். கெட்டியாக வரும் பக்குவத்தில் அதனுடன் கோவா, ஏலக்காய்த்தூள் சேர்க்கவும். கடைசியாக ஒரு டீஸ்பூன் நெய் சேர்த்து சுருள கிளறி இறக்கவும். மைதாமாவு, கோதுமைமாவு, கார்ன்ஃப்ளார் மூன்றையும் உப்பு சேர்த்து கெட்டியாக பிசைந்து ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். இந்த மாவில் சிறிது எடுத்து அப்பளம் போல் இட்டு, அதில் தேங்காய் பூரணத்தை வைத்து மூடி, போளியாக தட்டி இருபுறமும் நெய் விட்டு சுட்டெடுக்கவும்.

——————————————————————————–

சர்க்கரை போளி

தேவையானவை: கடலைப்பருப்பு – ஒரு கப், சர்க்கரை – கால் கப், ஏலக்காய்த்தூள் – கால் டீஸ்பூன், மைதாமாவு – ஒரு கப், நெய் – தேவையான அளவு, உப்பு – ஒரு சிட்டிகை.

செய்முறை: மைதாமாவுடன் உப்பு சேர்த்து கெட்டியாக பிசைந்து ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். கடலைப்பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைத்து, அரை வேக்காட்டில் வேக வைத்து வடிய வைக்கவும். சர்க்கரையை தூளாக்கி கொள்ளவும். பிறகு, வேகவைத்த கடலைப்பருப்பை மிக்ஸியில் போட்டு அரைத்து அதனுடன் பொடித்த சர்க்கரையை சேர்த்து ஒரு சுற்று சுற்றி, ஏலக்காய்த்தூளை சேர்த்து கலந்து வைக்கவும். பிசைந்து வைத்துள்ள மாவை சிறு அப்பளங்களாக இட்டு, அதில் கடலைப்பருப்பு கலவையை வைத்து மெல்லிய போளிகளாக தட்டி தோசைக்கல்லில் போட்டு நெய் விட்டு, இருபுறமும் சுட்டெடுக்கவும்.

——————————————————————————–

வேர்க்கடலை – கசகசா போளி

தேவையானவை: வேர்க்கடலை ஒரு கப், கசகசா – அரை கப், வெல்லம் – அரை கப், ஏலக்காய்த்தூள் – கால் டீஸ்பூன், மைதாமாவு – ஒரு கப், கார்ன்ஃப்ளார் – கால் கப், நெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: வேர்க்கடலையை வறுத்து தோல் எடுத்து கரகரப்பாக பொடிக்கவும். கசகசாவை வறுத்துக் கொள்ளவும். வெல்லத்தில் சிறிது தண்ணீர்விட்டு கொதித்ததும் வடிகட்டி பாகாக காய்ச்சவும். வெல்லம் கெட்டிபாகு பதம் வந்தவுடன் வேர்க்கடலைப்பொடி, கசகசா, ஏலக்காய்த்தூள் மூன்றையும் சேர்த்து நன்றாக கிளறி இறக்கவும். மைதாமாவு, கார்ன்ஃப்ளார், உப்பு, தண்ணீர் சேர்த்து கெட்டியாக பிசைந்து நெய் தடவி ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு இந்த மாவில் சிறிய அப்பளங்களாக இட்டு, அதில் வேர்க்கடலை பூரணத்தை வைத்து மூடி, போளிகளாக தட்டி, தோசைக்கல்லில் போட்டு நெய் விட்டு சுட்டெடுக்கவும்.

——————————————————————————–

ஜவ்வரிசி போளி

தேவையானவை: ஜவ்வரிசி – ஒரு கப், சர்க்கரை – அரை கப், ஏலக்காய்த்தூள் – கால் டீஸ்பூன், முந்திரி துண்டுகள் – ஒரு டேபிள்ஸ்பூன், மைதாமாவு – ஒரு கப், கார்ன்ஃப்ளார் – கால் கப், உப்பு – ஒரு சிட்டிகை, நெய் – தேவையான அளவு.

செய்முறை: ஜவ்வரிசியை வெறும் கடாயில் நன்றாக பொரித்துக் கொள்ளவும். மைதாமாவு, கார்ன்ஃப்ளார், உப்புடன் தண்ணீர் சேர்த்து கெட்டியாக பிசைந்து ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். சர்க்கரையுடன் சிறிது தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைக்கவும். ஜவ்வரிசியை மிக்ஸியில் பொடித்து, கொதிக்கும் சர்க்கரை தண்ணீரில் சேர்த்து, கெட்டியாக கிளறவும். ஒரு டீஸ்பூன் நெய்யில் முந்திரியை வறுத்து சேர்த்து, நன்றாக கிளறி இறக்கவும். கடைசியில் ஏலக்காய்த்தூள் சேர்க்கவும். மைதா கலவையை சிறிது எடுத்து அப்பளம் போல் இட்டு, ஜவ்வரிசி பூரணத்தை வைத்து போளிகளாக தட்டி தோசைக்கல்லில் போட்டு நெய்விட்டு இருபுறமும் சுட்டெடுக்கவும்.

அரிசிமாவு போளி

தேவையானவை: பச்சரிசி – ஒரு கப், வெல்லம் – கால் கப், முந்திரி துண்டுகள் – ஒரு டீஸ்பூன், ஏலக்காய்த்தூள் – கால் டீஸ்பூன் தேங்காய் துருவல் – கால் கப், மைதாமாவு – ஒரு கப், மெல்லிய ரவை – கால் கப், நெய் – தேவையான அளவு, உப்பு – கால் டீஸ்பூன்.

செய்முறை: அரிசியை ஒரு மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து நிழலில் உலர்த்தி மாவாக அரைத்துக் கொள்ளவும். வெல்லத்தை கால் கப் தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி, திரும்பவும் அடுப்பில் வைக்கவும். இதில் தேங்காய் துருவல், ஏலக்காய்த்தூள், முந்திரி சேர்த்து, அரைத்து வைத்துள்ள அரிசிமாவை சிறிது சிறிதாக கொட்டி, கிளறி சிறிது நெய் ஊற்றி இறக்கவும். ரவையில் வெந்நீரை விட்டு கிளறி (ரவையில் வெந்நீரில் கலப்பதால் மிருதுவாக இருக்கும்) அதில் மைதா, உப்பு சேர்த்து கெட்டியாக பிசைந்து கொள்ளவும். இதை சிறிய அப்பளங்களாக இட்டு, அரிசி மாவு பூரணத்தை வைத்து போளிகளாக தட்டி தோசைக்கல்லில் போட்டு நெய் விட்டு இருபுறமும் சுட்டெடுக்கவும்.

——————————————————————————–

புதினா போளி

தேவையானவை: பொடியாக நறுக்கிய புதினா – ஒரு கப், கோதுமைமாவு – அரை கப், மைதாமாவு – முக்கால் கப், உப்பு – கால் டீஸ்பூன், நறுக்கிய உருளைக்கிழங்கு – ஒரு கப், மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு, எண்ணெய் – கால் கப்.

செய்முறை: உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்துக் கொள்ளவும். புதினாவுடன், உப்பு, மிளகாய்தூள், மஞ்சள்தூள் சேர்த்து வதக்கி உருளைக்கிழங்குடன் சேர்த்து நன்றாக கலக்கவும். மைதாமாவுடன் கோதுமைமாவு, உப்பு சேர்த்து கெட்டியாக பிசைந்து ஒரு டீஸ்பூன் நெய் தடவி ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு மைதா கலவையை சிறிது எடுத்து அதில் புதினா பூரணத்தை வைத்து போளிகளாக தட்டி, தோசைக்கல்லில் போட்டு இருபுறமும் எண்ணெய் விட்டு சுட்டெடுக்கவும்.

——————————————————————————–

பேரீச்சம்பழ போளி

தேவையானவை: பேரீச்சம்பழம் – ஒரு கப், சர்க்கரை – ஒரு டேபிள்ஸ்பூன், பால் பவுடர் – அரை கப், மைதாமாவு – ஒரு கப், கார்ன் ஃப்ளார் – கால் கப், உப்பு – கால் டீஸ்பூன்.

செய்முறை: பேரீச்சம்பழத்தை சிறிது வெந்நீரில் ஊற வைக்கவும். பிறகு அதை மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி அதனுடன் சர்க்கரை, பால் பவுடர் கலந்து வைத்துக் கொள்ளவும் (தளர இருந்தால் மேலும் சிறிது பால் பவுடர் சேர்த்துக் கொள்ளலாம்). தேவையெனில் டிரை ஃப்ரூட்ஸ் சேர்க்கலாம். மைதா, கார்ன்ஃப்ளார் இரண்டையும் உப்பு சேர்த்து தண்ணீர் விட்டு கெட்டியாக பிசைந்து ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு இந்த மாவில் சிறிது எடுத்து சிறிய அப்பளங்களாக இட்டு அதில் பேரீச்சம்பழக் கலவையை வைத்து மூடி, சிறிய போளிகளாக தட்டி இருபுறமும் நெய் விட்டு சுட்டெடுக்கவும்.

——————————————————————————–

வெந்தயக்கீரை போளி

தேவையானவை: வெந்தயக் கீரை – ஒரு கப், கடலைமாவு – ஒரு கப், பச்சைமிளகாய் – 4, மைதாமாவு – அரை கப், கார்ன்ஃப்ளார் – கால் கப், கோதுமைமாவு – அரை கப், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: மைதாமாவு, கோதுமைமாவு, கார்ன்ஃப்ளாருடன் சிறிது உப்பு சேர்த்து கலந்து கெட்டியாக பிசைந்து எண்ணெய் தடவி ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி, கடலை மாவை வறுத்து தனியாக வைத்துக் கொள்ளவும். அதே கடாயில் 2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி பொடியாக நறுக்கிய வெந்தயக்கீரை, பச்சைமிளகாய், உப்பு சேர்த்து வதக்கவும். சிறிது வதங்கியதும் வறுத்து வைத்துள்ள கடலைமாவை அதில் சேர்த்து கிளறவும். தேவையெனில் ஒரு டீஸ்பூன் எலுமிச்சை சாறை விடலாம். மைதா கலவையை சிறிய அப்பளமாக இட்டு, அதில் வெந்தயக்கீரை பூரணத்தை வைத்து மூடி போளிகளாக தட்டி இருபுறமும் எண்ணெய் விட்டு சுட்டெடுக்கவும்.

——————————————————————————–

தானிய போளி

தேவையானவை: பச்சைப்பயறு, கொள்ளு, கொண்டைக்கடலை, காராமணி, எள்ளு ஐந்தும் சேர்த்து – ஒரு கப், தேங்காய் துருவல் – ஒரு டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் – 5, பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன், தனியா – 2 டீஸ்பூன், எலுமிச்சம்பழம் – அரை மூடி, மைதாமாவு – ஒண்ணேகால் கப், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: தானியங்களை முதல் நாள் இரவே ஊற வைத்து மறுநாள் அரை வேக்காடு பதத்தில் வேக வைத்து வடித்துக் கொள்ளவும். தேங்காய், தனியா, மிளகாய், பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைத்து அதில் எலுமிச்சை சாறு விட்டு, வேக வைத்து வடித்துள்ள தானியங்களைப் போட்டு ஒரு சுற்று சுற்றி எடுக்கவும். மைதா மாவுடன் உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றி கெட்டியாக பிசைந்து, எண்ணெய் தடவி ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு இந்த மாவை சிறிய அப்பளங்களாக இட்டு, அதில் பூரணத்தை வைத்து மூடி, போளிகளாக தட்டி இருபுறமும் எண்ணெய் விட்டு சுட்டெடுக்கவும்.

கணவனும் மனைவியும் எப்படி வாழ வேண்டும் என்பதற்கு அர்த்தநாரீஸ்வரரை விடவும் சிறந்த எடுத்துக் காட்டு உண்டா என்ன? ஆண் பாதி பெண் பாதியாக.. ஆணே பெண்ணாக.. பெண்ணே ஆணாக.. ஆணும் பெண்ணும் சேர்ந்த ஒற்றை உயிராக.. பிரித்தறிய முடியாமல் பிணைந்திருப்பதுதான் தாம்பத்யம்.

மசாலா போளி

தேவையானவை: பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை பட்டாணி – தலா கால் கப், உருளைக்கிழங்கு – ஒரு கப், பொடியாக நறுக்கிய இஞ்சி – ஒரு டீஸ்பூன், பச்சைமிளகாய் – ஒரு டீஸ்பூன், கரம் மசாலாத்தூள் – அரை டீஸ்பூன், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், ரஸ்க் தூள் – கால் கப், கடலைமாவு – கால் கப், மைதாமாவு – முக்கால் கப், கார்ன்ஃப்ளார் – அரை கப், கொத்தமல்லி – ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி பச்சைமிளகாய், இஞ்சி சேர்த்து வதக்கி அதனுடன் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். பிறகு பச்சை பட்டாணி சேர்க்கவும் (காய்ந்த பட்டாணி என்றால் ஊற வைத்து, வேக வைத்து சேர்க்கலாம்). சற்று வதங்கியதும், வேக வைத்த உருளைக்கிழங்கு, கரம் மசாலாத்தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து வதக்கவும். லேசாக வதங்கியதும் கடலைமாவை தோசை மாவு பதத்தில் கரைத்து அடுப்பில் உள்ள கலவையில் ஊற்றவும். எல்லாம் சேர்ந்து கெட்டியாக வரும்போது ரஸ்க் தூள், கொத்தமல்லி சேர்த்து கிளறி இறக்கவும். மைதாமாவு, கார்ஃப்ளாருடன் உப்பு சேர்த்து பிசைந்து, ஒரு மணி நேரம் ஊற வைத்து, சிறிய அப்பளங்களாக இடவும். மசாலா பூரணத்தை வைத்து மூடி, போளிகளாக தட்டி இருபுறமும் எண்ணெய் விட்டு சுட்டெடுக்கவும்.

——————————————————————————–

பரங்கி போளி

தேவையானவை: துருவிய பரங்கிக்காய் – ஒரு கப், வெல்லம் – கால் கப், பொட்டுக்கடலை மாவு – கால் கப், ஏலக்காய்த்தூள் – கால் டீஸ்பூன், மைதாமாவு – ஒரு கப், அரிசிமாவு – கால் கப், உப்பு – கால் டீஸ்பூன், நெய் – தேவையான அளவு.

செய்முறை: அடிகனமான பாத்திரத்தில் 2 டீஸ்பூன் நெய் ஊற்றி துருவிய பரங்கிக்காயை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பிறகு வெல்லத்தை பொடித்து அதனுடன் சேர்க்கவும். இரண்டும் சேர்ந்து நன்றாக கொதித்ததும் பொட்டுக்கடலைமாவை சிறிது சிறிதாக சேர்த்து, கடைசியில் ஏலக்காய்த்தூள் சேர்த்து இறக்கவும். மைதாமாவு, அரிசிமாவுடன் உப்பு சேர்த்து கெட்டியாக பிசைந்து ஒரு மணி நேரம் ஊற விடவும். பிறகு இந்த மாவை அப்பளங்களாக இட்டு, அதில் பரங்கி பூரணத்தை வைத்து போளிகளாக தட்டி, தோசைக்கல்லில் போட்டு இருபுறமும் நெய் விட்டு சுட்டெடுக்கவும்.

——————————————————————————–

கேழ்வரகு போளி

தேவையானவை: கேழ்வரகுமாவு – ஒரு கப், பொடியாக நறுக்கிய வெங்காயம் – கால் கப், இஞ்சி, பச்சைமிளகாய் – சிறிதளவு, துருவிய முள்ளங்கி – கால் கப், மைதாமாவு, கோதுமைமாவு – தலா அரை கப், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை: கடாயில் எண்ணெய் ஊற்றி பச்சைமிளகாய், இஞ்சியை வதக்கவும். பிறகு வெங்காயத்தை போட்டு வதக்கி, கடைசியில் துருவிய முள்ளங்கியை சேர்த்து வாசனை போக வதங்கியதும், அதில் கால் கப் தன்ணீரை ஊற்றி அரை டீஸ்பூன் உப்பு சேர்த்து நன்றாக கொதிக்க விடவும். கேழ்வரகுமாவை சிறிது சிறிதாக அதில் போட்டு, கெட்டியாக கிளறி இறக்கவும். மைதாமாவு, கோதுமைமாவு இரண்டையும் சேர்த்து தண்ணீர் ஊற்றி நன்றாக பிசைந்து ஒரு மணி நேரம் ஊற விடவும். இதை சிறிய அப்பளங்களாக இட்டு, அதில் கேழ்வரகு பூரணத்தை வைத்து போளிகளாக தட்டி, தோசைக்கல்லில் போட்டு இருபுறமும் எண்ணெய் விட்டு சுட்டெடுக்கவும்.

——————————————————————————–

சேமியா போளி

தேவையானவை: சேமியா – ஒரு கப், சர்க்கரை – அரை கப், ஏலக்காய்த்தூள் – கால் டீஸ்பூன், துருவிய முந்திரி, பாதாம் – சிறிதளவு, மைதா – ஒரு கப், கேசரி கலர் – ஒரு சிட்டிகை, உப்பு – கால் டீஸ்பூன், நெய் – தேவையான அளவு.

செய்முறை: சேமியாவை குறைந்த தீயில் நெய் விட்டு சிவக்க வறுத்துக் கொள்ளவும். கொதிக்கும் நீரில் வறுத்த சேமியாவை போட்டு, சர்க்கரை, துருவிய பருப்பு வகைகள், ஏலக்காய்த் தூள் சேர்த்து கெட்டியாக கிளறி இறக்கவும். மைதா, கேசரி கலர், உப்பு சேர்த்து நன்றாக பிசைந்து ஒரு மணி நேரம் ஊற விடவும். இந்த மாவை சிறிய அப்பளங் களாக இட்டு, அதில் சேமியா பூரணத்தை வைத்து மூடி, தோசைக்கல்லில் போட்டு, இருபுறமும் நெய் விட்டு சுட்டெடுக்கவும்.

——————————————————————————–

சில்லி போளி

தேவையானவை: பொடியாக நறுக்கிய பஜ்ஜி மிளகாய் – ஒரு கப், சர்க்கரை வள்ளிக்கிழங்கு – ஒரு கப், பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், மைதாமாவு – ஒரு கப், அம்சூர் பவுடர் – அரை டீஸ்பூன், கார்ன்ஃப்ளார் – கால் கப், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: சர்க்கரை வள்ளிக்கிழங்கை தோல் சீவி, வேக வைத்து எடுக்கவும். பஜ்ஜி மிளகாயுடன், ஆம்சூர் பவுடர், உப்பு சேர்த்து ஒரு டீஸ்பூன் எண்ணெயில் நன்றாக வதக்கிக் கொள்ளவும். பிறகு வேக வைத்த கிழங்குடன் வதக்கிய மிளகாய், பெருங்காயத்தூள், மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கலந்து பிசையவும். மைதாவுடன் கார்ன்ஃப்ளார், உப்பு சேர்த்து தண்ணீர் விட்டு நன்றாக பிசைந்து எண்ணெய் தடவி ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு சிறிய அப்பளங்களாக இட்டு, அதில் மிளகாய் பூரணத்தை வைத்து மூடி, போளிகளாக தட்டி தோசைகல்லில் இருபுறமும் திருப்பிப்போட்டு சுட்டெடுக்க வும்.

——————————————————————————–

பிரெட் வெஜ் போளி

தேவையானவை: பிரெட் துண்டுகள் – 6, விரும்பிய காய்கறிகள் கலவை – ஒரு கப், மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், கோதுமை மாவு – ஒன்றரை கப், கார்ன்ஃப்ளார் – அரை கப், பால் – கால் கப், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: காய்கறிகளை நன்றாக வேக வைத்துக் கொள்ளவும். பிரெட்டை மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று சுற்றவும். இதை காய்கறி கலவையுடன் சேர்த்து, உப்பு, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் சேர்த்து கெட்டியாக பிசைந்து கொள்ளவும். கோதுமைமாவு, கார்ன்ஃப்ளார் இரண்டை யும் உப்பு சேர்த்து பாலை ஊற்றி பிசைந்து (தேவையெனில் தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம்) ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். இந்த மாவை சிறிய அப்பளங்களாக இடவும். அதில் பூரணத்தை வைத்து முடி, போளிகளாக தட்டி தோசைக்கல்லில் இருபுறமும் எண்ணெய் விட்டு சுட்டெடுக்கவும்.

——————————————————————————–

கோதுமை ரவை போளி

தேவையானவை: கோதுமை ரவை – ஒரு கப், சர்க்கரை – அரை கப், ஏலக்காய்த்தூள் – கால் டீஸ்பூன், மைதா – அரை கப், கடலைமாவு, கோதுமைமாவு, கார்ன்ஃப்ளார் – தலா கால் கப், நெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: கோதுமை ரவையை ஒரு டேபிள்ஸ்பூன் நெய் விட்டு சிவக்க வறுக்கவும். முக்கால் கப் தண்ணீரை கொதிக்க வைத்து அதை வறுத்த ரவையில் ஊற்றி வேகும் வரை கிளறி சர்க்கரை சேர்க்கவும். நன்றாக கிளறி கெட்டியாக வந்ததும், ஏலக்காய்த்தூள் சேர்த்து இறக்கவும். மைதாமாவு, கடலைமாவு, கோதுமைமாவு, கார்ன்ஃப்ளாருடன் சிறிது உப்பு சேர்த்து, தண்ணீர் விட்டுப் பிசைந்து ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். இந்த மாவை சிறிய அப்பளங்களாக இட்டு, அதில் கோதுமை ரவை பூரணத்தை வைத்து மூடி, போளிகளாக தட்டி, தோசைக்கல்லில் இருபுறமும் நெய் விட்டு சுட்டெடுக்கவும்.

——————————————————————————–

ஹெர்பல் போளி

தேவையானவை: துளசி இலை, கற்பூரவல்லி இலை, தூதுவளை இலை, கண்டந்திப்பிலி, வல்லாரை, வெற்றிலை எல்லாம் சேர்த்து – ஒரு கப், ரவை – ஒரு கப், மிளகுத்தூள், சீரகத்தூள் – தலா அரை டீஸ்பூன், மைதா – ஒரு கப், கோதுமைமாவு – கால் கப், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: எல்லா இலைகளையும் நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும். ரவையை தனியாக வறுத்து வைத்துக் கொள்ளவும். ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு அதில் நறுக்கிய இலைகளை வதக்கி முக்கால் கப் தண்ணீர் விடவும். பிறகு உப்பு, மிளகுத்தூள், சீரகத்தூள் சேர்த்து கடைசியாக வறுத்த ரவையை சேர்த்து கிளறவும். மைதாமாவு, கோதுமை மாவை உப்பு சேர்த்து பிசைந்து ஒரு மணி நேரம் ஊற விடவும். இந்த மாவை சிறிய அப்பளங்களாக செய்து அதில் ஹெர்பல் பூரணத்தை வைத்து மூடி, போளிகளாக தட்டி தோசைக்கல்லில் போட்டு இருபுறமும் எண்ணெய் விட்டு சுட்டெடுக்கவும்.

——————————————————————————–

அறுசுவை போளி

தேவையானவை: வெல்லம் – கால் கப், துருவிய மாங்காய், நெல்லிக்காய் – தலா கால் கப், பச்சைமிளகாய் – 2, வேப்பம்பூ – ஒரு டீஸ்பூன், கோதுமைமாவு – ஒரு கப், நெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: ஒரு டீஸ்பூன் நெய்யில் வேப்பம்பூவை வறுத்து தனியாக எடுத்து கொள்ளவும். ஒரு டீஸ்பூன் நெய்யில் பச்சைமிளகாயை கிள்ளிப் போட்டு, துருவிய நெல்லிக்காய், மாங்காயை சேர்க்கவும். சற்று வதங்கியதும் வெல்லம், உப்பு சேர்த்து கிளறவும். கடைசியாக வறுத்த வேப்பம்பூவை போட்டு கிளறி இறக்கவும் (பூரணம் சற்று தளர இருந்தால், சிறிது அரிசிமாவை தூவி இறக்கலாம்). கோதுமைமாவுடன் உப்பு சேர்த்து கெட்டியாக பிசைந்து ஒரு மணி நேரம் ஊற விடவும். இதை சிறிய அப்பளங்களாக செய்து, அதில் பூரணத்தை வைத்து மூடி, போளிகளாக தட்டி இருபுறமும் நெய் விட்டு சுட்டெடுக்கவும்.

——————————————————————————–

ஜீரா போளி

தேவையானவை: மைதாமாவு, சர்க்கரை – தலா ஒரு கப், நெய் அல்லது எண்ணெய் – தேவையான அளவு, ஏலக்காய்த்தூள் – கால் டீஸ்பூன், உப்பு – சிறிதளவு.

செய்முறை: மைதாமாவை சிறிது உப்பு சேர்த்து கெட்டியாக பிசைந்து வைத்துக் கொள்ளவும். சர்க்கரையுடன் ஏலக்காய்த்தூள், ஒரு கப் தண்ணீர் சேர்த்து 2 கம்பி பதத்தில் பாகு காய்ச்சிக் கொள்ளவும். பிசைந்து வைத்துள்ள மைதாவை மெல்லிய போளிகளாக தட்டி எண்ணெயில் பொரித்தெடுத்து சர்க்கரை பாகில் போட்டு எடுத்து வைக்கவும். ட்ரை ஃப்ரூட்ஸால் அலங்கரித்துக் கொள்ளலாம்.

——————————————————————————–

பாசிப்பருப்பு கார போளி

தேவையானவை: பாசிப்பருப்பு – ஒரு கப், பச்சை மிளகாய் – 4, எலுமிச்சம்பழம் – அரை மூடி, பெருங்காயத் தூள் – கால் டீஸ்பூன், கோதுமைமாவு, மைதா – தலா அரை கப், எண்ணெய் அல்லது நெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: பாசிப்பருப்பை 20 நிமிடம் ஊற வைத்து நீரை வடிய வைக்கவும். பிறகு அதனுடன் பச்சைமிளகாய், உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து சற்று கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும். அரைத்த கலவையை ஆவியில் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். எலுமிச்சம்பழ சாறு பிழிந்து பிசறி வைக்கவும். கோதுமைமாவு, மைதாமாவுடன் சிறிது உப்பு சேர்த்து கெட்டியாக பிசைந்து ஒரு மணி நேரம் ஊற விடவும். இந்த மாவை சிறிய அப்பளங்களாக செய்து அதில் பாசிப்பருப்பு பூரணத்தை வைத்து மூடி எண்ணெய் விட்டு, தோசைக்கல்லில் போட்டு இருபுறமும் சுட்டெடுக்க வும்.

——————————————————————————–

உளுத்தம்பருப்பு போளி

தேவையானவை: உளுத்தம்பருப்பு – ஒரு கப், கருப்பட்டி – கால் கப், ஏலக்காய்த்தூள் – கால் டீஸ்பூன், மைதாமாவு – ஒரு கப், உப்பு, நெய் – தேவையான அளவு.

செய்முறை: உளுத்தம்பருப்பை வறுத்து பொடித்து வைத்துக் கொள்ளவும். கருப்பட்டியை கால் கப் தண்ணீர் விட்டு கொதிக்க வைக்கவும். அதில் ஏலக்காய்த்தூள் சேர்த்து பொடித்து வைத்துள்ள உளுத்தமாவை அதில் சேர்த்து சிறிது நெய் விட்டு கெட்டியாக கிளறவும். மைதாமாவு, உப்புடன் தண்ணீர் சேர்த்து கெட்டியாக பிசைந்து ஒரு மணி நேரம் ஊறவிடவும். பிறகு அப்பளங் களாக இட்டு, அதில் உளுந்து பூரணத்தை வைத்து போளிகளாக தட்டி, தோசைக்கல்லில் போட்டு இருபுறமும் நெய் விட்டு சுட்டெடுக்கவும்.

——————————————————————————–

ஸ்வீட் கார்ன் போளி

தேவையானவை: ஸ்வீட் கார்ன் – ஒரு கப், சாஸ் – ஒரு டீஸ்பூன், கரம் மசாலாத்தூள் – அரை டீஸ்பூன், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு, மைதாமாவு – ஒரு கப், நெய் – சிறிதளவு, கார்ன்ஃப்ளார் – ஒரு டேபிள்ஸ்பூன்.

செய்முறை: ஸ்வீட் கார்னை ஆவியில் வேக வைத்து எடுக்கவும். பிறகு அதை மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி எடுத்துக் கொண்டு உப்பு, சாஸ், கரம் மசாலாத்தூள் சேர்த்து கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு லேசாக கிளறவும். மைதாமாவு, கார்ன்ஃப்ளாருடன் உப்பு சேர்த்து கெட்டியாக பிசைந்து நெய் தடவி ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு சிறிய அப்பளங்களாக செய்து அதில் ஸ்வீட் கார்ன் பூரணத்தை வைத்து போளி களாக தட்டி தோசைக்கல்லில் போட்டு இருபுறமும் எண்ணெய் விட்டு சுட்டெடுக்கவும்.

——————————————————————————–

பாஸ்மதி அரிசி போளி

தேவையானவை: பாஸ்மதி அரிசி – அரை கப், சர்க்கரை – கால் கப், பால் – ஒரு கப், ஏலக்காய்த்தூள் – கால் டீஸ்பூன், துருவிய பருப்புகள் (பாதாம், முந்திரி) – சிறிதளவு, உலர்ந்த திராட்சை – சிறிதளவு, மைதாமாவு – ஒரு கப், உப்பு – சிட்டிகை, நெய் – தேவையான அளவு.

செய்முறை: பாஸ்மதி அரிசியை சிவக்க வறுத்து ரவையாக பொடித்துக் கொள்ளவும். பாலை அடுப்பில் வைத்து கொதி வந்ததும், அதில் சர்க்கரை, ஏலக்காய்த்தூள் சேர்த்து, பொடித்து வைத்துள்ள அரிசியை போட்டு, நன்றாக கிளறி இறக்கவும். இதில் ஒரு டீஸ்பூன் நெய் விட்டு, துருவிய பருப்புகள், திராட்சை சேர்க்கவும். மைதாமாவை உப்பு சேர்த்து தண்ணீர் விட்டு கெட்டியாக பிசைந்து ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். இந்த மாவை சிறிய அப்பளங்களாக இட்டு, அதில் அரிசி பூரணத்தை வைத்து மூடி, போளிகளாக தட்டி தோசைக்கல்லில் போட்டு இருபுறமும் நெய் விட்டு சுட்டெடுக்கவும்.

**********************************************************

சோதனை மேல் சோதனை!

சோதனை மேல் சோதனை!

செவிக்கு உணவில்லாத போது சிறிது வயிற்றுக்காவது ஈயப்ப்படும்னு புலம்பற ரகம் நான். அந்நிய தேசத்தில் (“எட்டு வருடமாய் குப்பை கொட்டியும் , இன்னுமா ஆஸ்திரேலியா உனக்கு அன்னியம்..? அநியாயமா இப்படி சொல்லாதே ஸ்வீட்டினு “, அவர் சொல்றதை வழக்கம் போல இக்னோர் செய்கிறேன் ..ஹிஹி ) , செவிக்கு இதமாக பேசுவதற்கு ஆட்கள் வெகு குறைவாய் இருக்கிற நேரத்தில், வயிற்றுக்காவது எதையாவது ஈந்து பார்க்கலாம் என்றால், இது அதை விடக் கொடுமையாய் இருக்கிறது..!

நானோ அவரோ , இல்லை என்றால் ஏதாவதொரு உணவகத்தின் (ஹோட்டல்) உபயத்திலோ தான் வயிற்றுக்கு எதையாவது ஈய முடியும் என்கிற சூழல் .. உண்மையில் ஆஸ்திரேலிய இந்திய உணவகங்களுக்கு சென்று சைவ உணவை உண்பது போன்ற பெரிய தண்டனை எதுவும் இருக்க முடியாது..!

அவர் அவருக்கு தெரிந்ததை மட்டுமே சமைக்கும் சாமர்த்திய சாலி. நானோ எதையாவது புதுமையாய் வித்தியாசமாய் சமைக்கத் துடிக்கும் (சோ)சாதனைப் பெண்களில் ஒருத்தி..!

எல்லாச் சோதனைகளும் பெரும்பாலும் வெற்றியில் முடிவதில்லை .. என்னுடைய சோதனைகள் பெரும்பாலும் முழுமையே அடைவதில்லை.. எனவே முடிவாகக் கிண்டியதை கொண்டு, பெரும்பாலும் அவரையே பரிசோதனை எலியாக்கிப் படுத்தி எடுத்து விட்டு, நான் சமைப்பவர்கள் எல்லாம் சொல்லும் இந்த அபயக் கூக்குரலோடு தப்பித்து கொள்வேன்..

“என்னமோ தெரியலைபா.. கஷ்டப்பட்டு சமைக்கரதால, சமைச்சு முடிச்சதும் சாப்பிட தோணமாட்டேங்குது..அக்கடான்னு ரெஸ்ட் எடுத்துக்கத் தான் தோணுது …
எனக்காக எதையும் மிச்சம் வெக்க வேண்டாம் பிரேம்..உங்களுக்கு வேண்டியதை சாப்பிட்டுட்டு , மீதியை நாளைக்கு லஞ்சிற்குப் பேக் செய்துக்கோங்க..
இன்னொருதரம் செய்யும்போது (மனதிற்குள் அதை சாப்பிட்டுவிட்டு உங்கள் முகம் கொஞ்சம் பார்கிராற்போல் இருந்தால் என்று நினைத்துக் கொண்டே ) , நான் நிறைய எடுத்துக்கரேன் ..”

நான் இப்படிக் கூறியவுடன், ஆஹா என்ன ஒரு பெருந்தன்மை நம் (பி)பெட்டர் ஹாபிற்கு என்று புல்லரித்துப் போய் , அவர் , “உனக்கெதற்கு வீண் சிரமம் ஸ்வீட்டி ..லன்ச்சை நான் வெளியில் முடித்துக் கொள்கிறேன் “, என்று சொல்லித் தப்பிக்க முயற்சிப்பார்..

“என்ன பெரிசா வெளியில் முடிச்சுப்பீங்க.. பிரெஞ்சு ப்ரையோ இல்லாட்டிபோன காஞ்சு போன சப்வே வெஜ்ஜி டிலைடோ சாப்டு கஷ்டப்படுவீர்கள் “, என்று சாமர்த்தியமாய், மீறும் உணவை அப்படியே அவர் தலையில் கட்டி, மன்னிக்கவும் லன்ச் பாக்ஸில் கட்டி நான் தப்பித்துக் கொள்வதால் , வாய்க்கு ருசியாய் வகை வகையாய் சாப்பிடும் அனுபவங்களே வர வர ரொம்பவும் குறைந்து விட்டது.. :(

எங்கள் பாட்டி முதற்கொண்டு அம்மாவரை குடும்பத்தில் எல்லோரும் விதம் விதமாய் சமைத்து அசத்துவதில் பேர் போனவர்கள். எங்கள் தாத்தா காஞ்சிபுரத்தில் அந்த காலத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற சமையல்கலை நிபுணராய் இருந்தவர். சொந்தமாய் ஹோட்டல் வைத்து தன் நள பாகத்தால் தர்பார் நடத்தியவர் என்றெல்லாம் கேள்விப் பட்டிருக்கிறேன்.. எனவே ஒவ்வொரு பண்டிகை காலத்திலும் அதேற்கே உரிய சிறப்பான உணவுகளுடன் வீட்டில் விருந்து களை கட்டும் ..

ஆனால் அப்போதெலாம், அந்த வயதிற்கே உரிய வருங்காலத்தைப் பற்றிய பயமெதும் இல்லாமல், உணவு பரிமாறும் நேரத்தில் வீட்டிலிருந்து மாயமாகிவிடுவேன்.. இல்லையென்றால் வயிறு வலிக்கிறது ..வாந்தி வருகிறது என்று சொல்லி ரொம்பவும் ரகளை செய்து இரண்டு ரச வடையை வயிற்றுக்குள் தள்ளிவிட்டு , தப்பித்துக் கொள்வேன்..

இப்போது பாருங்கள் , பாட்டியின் அக்கார வடிசிலிற்கும் , அம்மாவின் மெத்து மெத்தான நெய் போளிக்கும் வாய் ஏங்கித் தவிக்கிறது.. விநாயகச் சதூர்த்தி , கிருஷ்ண ஜெயந்தி, நவ ராத்திரி , தீபாவளி என்று ஒன்று மாற்றி ஒன்றாய் பண்டிகைகள் வந்து போகும் இந்நேரத்தில் வாழ்க்கையில் எதையோ இழந்து விட்டது போல ஒரு வருத்தம் மனதிற்குள் பரவுகிறது..

கடந்த விநாயகச் சதூர்த்திக்கு எப்படியோ கஷ்டப்பட்டு கொழுகட்டை, சுண்டல் எல்லாம் பண்ணி விட்டு ப்ரணவிற்கு ஆசையாய் ஒரு கொழு கட்டையை தந்து விட்டு மற்ற வேலைகளை கவனித்துக் கொண்டிருந்தேன்..

சற்று நேரத்தில் வீட்டில் ஒரே அமளி துமளி.. அதை ஏதோ புதுவித பந்தென்று நினைத்துத் தூக்கிப் போட்டு விளையாடி , அதிலிருந்த தேங்காய் பூரணம் ஹாலெல்லாம் சிதறி.. எனக்குக் கண்களில் நீர் திரண்டு ..ச்சே ச்சே ..

உடனே அம்மா நியாபகம் வந்து , அவரை தொலை பேசியில் அழைத்துக் கர கரப் பிரியாவில் நான் என் சோகக் கீர்த்தனங்களைப் பாட , அவர் பூரணக் கொழு கட்டையை வட்டமாய் இல்லாமல் அரை வட்டமாய் பிடிக்கணும் ஸ்வீட்டி.. கொழு கட்டை உடையாமல் இருக்கணும்னா மாவு பதம் இந்தப் பக்குவத்தில் இருக்கணும் , பூரணம் அந்தப் பக்குவத்தில் இருக்கணும் என்றெல்லாம் சொல்லி என்னை மேலும் அழ வைத்தார். .

” என்னமோமா ..எனக்குத் தெரிஞ்சதை பண்ணேன் இப்பத்தான் உன் கையால் சாப்பிடனும்னு ஆசையாய் இருக்கும்மா..” என்று நான் சொன்னதை அவர் கர்ப்ப ஸ்த்ரீகளுக்கு ஏற்படும் விசேஷ க்ரேவிங்காய் (craving) நினைத்துக் கொண்டு , தன்னால் எனக்கு இந்நேரத்தில் எதுவும் செய்து கொடுக்க முடியவில்லையே என்று பெரிதாக வருத்தப் படத் தொடங்கிவிட்டார் …

அம்மா-பெண்ணின் இந்த உணர்ச்சி மயமான டிராமாவில் தாங்க முடியாத கடுப்படைந்த பிரேம், வழக்கம்போல அதை அடக்கிக் கொண்டு ” அம்மா நீங்க செய்யற ரெசிபீஸ் எல்லாம் அவளுக்கு முடிஞ்சால் எழுதி அனுப்புங்க .. ப்ராபரா ரெசிபீ இருந்தா உங்க பொண்ணு உங்களை மாதிரியே பிரமாதமாய் சமைப்பா .. ” என்று என்னை சமாதானப் படுத்தும் விதத்தில் தன்னையே சமாதானப் படுத்திக் கொண்டார் :D

இதன் விளைவாய் .. அம்மா முதற்கொண்டு அக்கா வரை எல்லோரும் ரெசிபிகளை ரெடி பண்ணி எனக்கு மெயிலிக் கொண்டு இருக்கிறார்கள்.. இதில் கூடவே “இந்த நேரத்தில் , பக்கத்தில் இருந்து உனக்கு ஆசையாய் சமைத்துத் தர முடியலை.. உனக்கு வேண்டியதை இந்த ரெசிபீஸ் பார்த்து சமச்சுக்கோடா தங்கம் ” என்கிற இந்தப் பன்ச் டயலாக் வேற .. :x :x

விஷயம் கேள்விப்பட்டு , என் அக்கா,தங்கை மற்றும் நண்பர்கள் எல்லோரும் எனக்கு அனுப்பி வைக்கும் உணவுக் குறிப்புகளை உங்களிடமும் பகிர்ந்து கொள்கிறேன் பிரெண்ட்ஸ்..இதெல்லாம் பெரியவர்கள் தங்கள் அனுபவத்தால் கண்டறிந்த ரெசிபீஸ் ..என்னுடைய பங்களிப்பு அதை இங்கு போஸ்ட் பண்ணுவது மட்டுமே.. நீங்களும் பங்களிக்க விரும்பினால், சமைத்ததை எனக்குப் பார்சல் அனுப்பவும்.. :)

சமையல் குறிப்புகள் பக்கத்திக்கு செல்ல இங்கு சொடுக்கவும்..

அன்புடன்,
ஜானு

வயிற்றுக்குள் குட்டி உலகம்

வயிற்றுக்குள் குட்டி உலகம்

*****************************

திடீரென்று சிலநாளாய்
கால் பந்தாட்ட
மைதானமாகிவிட்டது
என் வயிறு !
வயிற்றுக்குள் எட்டி
உதைத்து விளையாடும்
குட்டி சாம்பியனுக்கு
அதற்குள்
மூன்று ரசிகர்கள் வெளியே!

நாளை எங்களுக்கென்றே
பிரத்யேகமாய் ஒரு லைவ் ஷோ
சில மணித்துளிகளே நீடிக்கும்
அந்த நேரடி ஒளிபரப்பு
முடிந்ததும் எங்களின்
கைக்கு வரும்
சாம்பியனின் குட்டி ஆட்டோக்ராப்.
விலை மதிப்பில்லா போட்டோக்ராபாய்..

*****************************

யாருமற்ற மதியம்,
உள்ளிருந்து நீ என்னை
உதைத்தும்,
பதிலுக்கு வெளியில்
நான் உன்னை அணைத்தும்
புதுவிதமாய்
நடத்திக் கொண்டிருந்தோம்
குத்துச் சண்டை
போட்டி ஒன்றை !

சற்றே களைப்பில்,
ஆனந்தத் திளைப்பில்
தோற்று விட்டேன்
என்று ஒப்புக்கு கூறிவிட்டு
குட்டி தூக்கம் போட்டபோது
பிடிவாதமாய் மீண்டும் ஒரு
குத்து விட்டாய்..
தகர்ந்தது என் மமதை ..
ஜெயித்தது நீ தான்
ஒப்புக் கொள்கிறேன்,
என் செல்லக் குட்டியே !

*****************************

சின்னச் சின்னதாய்
கைகளும், கால்களும்
அதை விடக் குட்டியாய்
விரல்களும் கொண்டு
கைக்குள் அடங்கிவிடும்
அளவிற்கே உன் உருவம் !
கண்ணுக்குத் தெரியாத
உன் மனசு மாத்திரம்
ரொம்பப் பெரிசாய்
இருக்குமோ?

அத்தனை சின்ன உலகத்தில்
இத்தனை நாட்களாய்
அடைபட்டும் உல்லாசமாகவே
துள்ளித் திரிகிறாய் ..
வெளியில் இத்தனை
பெரிய உலகில்
பொழுதே போகாமல்
நாளை வெளியில் போலாமா
என்று (உன்) அப்பாவிடம்
கேட்ட நேரத்தில்
வாமனனாய்
உள்ளிருந்து நீ விட்ட உதை
மாபலியாக்கியது என் அறியாமையை..

*****************************

ஜானு
(அவ்வப்பொழுது தொடரும் )

இந்தப் பூமியில் நிலையாய்..

இந்தப் பூமியில் நிலையாய் ..

நேற்று சரி என்று பட்டது
இன்று தவறாகத் தெரிகிறது!
இன்று தவறாய் தோன்றும் சில
நாளை சரியாகிப் போகலாம்..

நேற்றைக்கும் இன்றைக்கும் இடையில்
வாழ்ந்த காலங்கள் இறந்த காலமாய்
நிற்கும் இவ்வேளையில்
நாளைக்கும் இன்றைக்கும் இடைப்படும்
தருணங்களும் இறந்த காலமாய்
நிரந்தரமாய் முடிந்து போகும் ..!

நாளை நாளை என்று வருங்காலம்
பேசிக் கொண்டு இன்றைய
நிகழ்வுகளை இறக்க விடுகிறோம்..
நேற்றைய பொழுதுகளில் நிஜமாக
நடந்தவற்றை போனது போகட்டும்
வருவதை வரவேற்போம் என்று
மறக்கத் தயாராகிறோம்..!

ஜனனத்திற்கும் மரணத்திற்கும்
இடைப்பட்ட காலத்தை
வாழ்க்கை என்று வம்பளத்து
வரலாற்றை பதிவிடுவோம்..
இருந்தாலும் என்ன பயன்..
என்றைக்கு என்ற தெரியாத
அக்கணத்தில் தீடீரென்று ஓர்நொடி
வீணாகி மண்ணில் மடிவது
மட்டுமே நிஜம்..!

இன்றைக்கு கைகளில் இருக்கும்
மற்றைய பொழுது களிலேனும்
பக்கத்தில் இருக்கும்
என்னை போன்ற உன்னோடு
சிநேகமாய் வாழ்வதில் மட்டுமே
அர்த்தமுள்ளதாய் சுழல்கிறது பூமி..

-ஜானு

ஏனிந்த (சும்மா)கவிதை?

என்னமோ மனதில் இந்த வரிகள் திடீரென்று குதித்தது.. எப்பொழுதும் தர்க்கங்களை பேசிக் கொண்டு, பர பரவென்று நிரந்தரமல்லாத சிலவற்றில் அதிக அக்கறை வைத்துத் துரத்தி துரத்தி வாழ்க்கை முடிந்து விடுகிறது.. பணம், பதவி,பகட்டு, பெருமை, அந்தஸ்து , முதலிடம் , ராஜாங்கம், தனிச்சிறப்பு என்றெல்லாம் எதை எதையோ தேடித் தேடி மனம் விட்டு சிரிக்கும் சில நொடிகளை இழந்து போகிறோம் ..

நாம் அசரும் வேளையில் நம்முடைய வாய்ப்பை யாரேனும் தட்டிப் போவார்கள் என்றெண்ணி விழிப்புணர்வோடு இருக்கின்ற வேளைகளில், மயிலிறகு போல் மனதை வருடும் இதமான தூக்கத்தில் மட்டுமே நிம்மதியாய் இருப்பதை வசதியாக மறந்து விடுகிறோம்..!

சக மனிதர்களை போட்டியாகவே பார்த்து பழகிப் போய்விட்டோம்.. வெளியில் புகழ்ந்து உள்ளே புகைந்து, முன்னால் சிரித்து, பின்னால் கரித்து ஏனிந்த போலி வாழ்க்கை.. மனிதர்கள் வாழ்கிறதால் தான் பூமிக்குத் தனிச் சிறப்பு.. பின் ஏன் தனித்துவமாய் தெரிவதிலேயே வாழ்க்கையை வீணாக்கி விடுகிறோம்?

அச்சச்சோ.. இத்துடன் கிறுக்கலை நிறுத்திக் கொள்கிறேன்..மனம் பாட்டுக்கு மெகா சீரியல் கதாசிரியர் போல ஏதேதோ அதுக்கு மாத்திரமே புரிகிற பாஷையில் உளறிக் கொண்டே போகிறது..

வாழ்க்கையை எனக்குத் தெரிந்த விதத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் .. நானாச்சு அதாச்சு :)

சியர்ஸ்
ஜானு

இதை கண்டிப்பா எழுதணும்.

இதை கண்டிப்பா எழுதணும்..

பிரணவ் fussy eater’ங்கறது எல்லோருக்கும் தெரிஞ்சது தானே. நானும் பல கதைகள், சம்பவங்கள் எல்லாம் சொல்லி அவனை இன்ஸ்பயர் பண்ண முயற்சித்திருக்கிறேன். ம்ஹூம் ..நத்திங் டூயிங் !

விதம் விதமாய் சமைத்து, (நம்புங்க மக்களே ) சாப்பிட்டு நான் குண்டானது தான் மிச்சம். அப்பாவும் பையனும் டிமிக்கி கொடுத்துடறாங்க. கோபத்தை எல்லாம் பிரேம் மேல் தான் காட்டறது.

நான் :”நீங்க எல்லாம் சாபிட்டால் தானே அவன் சாப்பிடுவான். உங்களை பார்த்து தான் அவன் இப்படி ஆறதே !”

அவர்: “என்ன பண்றது ஸ்வீட்டி ..மறு நாள் ஆபீசுக்கு போயி வேலை பார்க்கணும் இல்லை.. “

நான் : நர நர :x :x

நான்(ப்ரணவிடம்): புஜ்ஜி ..நாம எல்லாம் சாப்பிட ட்ரை பண்ணனும் பட்டு..இது வேண்டாம்..அது வேண்டாம்னு எல்லாம் சொல்லக் கூடாது. ஒவ்வொரு உணவிலும் ஒரு சத்து இருக்கிறது(பருப்பு,காய், கனிகளை மனதில் வைத்துக் கொண்டு) ..

பிரணவ்: எல்லாம் பிடிக்கும்னு யாருமே கிடையாது மம்மி ..கடவுளுக்குக் கூட எல்லாம் பிடிப்பது இல்லை..(No one likes every thing mummy . You know.. Even God doesn’t like every thing)

நான்(ஆச்சரியத்துடன்): சுவாமிக்கு பிடிக்காதது என்ன?(What doesn’t God like?)

பிரணவ்(Coolly ):மீட் (Meat)..He doen’t eat meat..does he?

நான்: நர நர :x :x

சம்பாஷனை ஆங்கிலத்தில் தான் நடந்து . ஆனாலும் மனிதர்களை தவிர மற்ற எல்லாவற்றையும் சாப்பிடும் நாட்டில் வசித்துக் கொண்டு, நாலு காய் கனிகளை கூட நம் மகன் சாப்பிடுவதில்லையே என்று நானும் எவ்வளவோ மல்லு கட்டறேன். அவன் மசியரதாய் காணோம்..

சாப்பிட்டு விட்டு , வழக்கம் போல மார்னிங் ஸிக்நெஸால் நான் வாமிட் பண்ணினால்,

பிரணவ்: பாருங்க மம்மி ..Even baby doen’t like the food you had.. !

என்னோட ரீயாக்ஷனை எழுதவும் வேணுமா.. !! உரலுக்கு ஒரு பக்கம் இடி, மத்தளத்துக்கு ரெண்டு பக்கம் இடி ..எனக்கு மூணு பக்கமும் .. :(

Healthy packaged food available in super markets (Vegetarian/vegan)

Healthy packaged food available in super markets (Vegetarian/vegan)

Hello freinds,

I have got a mail from Prem listing some of the healthy instant/pacakged foods availbale in the aisles of Big brand Supermarkets . I hope these are international brands and may be found almost every where in the present globalised consumer market. Give them a try and see how good they are by yourself. Don’t forget to add some of your favorite healthy choices as well.

1 VEGETABLE JUICE

V8 Low Sodium Vegetable Juice Not going to reach your vegetable intake today? Have a glass of this – it provides three serves of veg, and is lower in sugar than fruit juice. Per 250ml serve 213kJ, 2.2g protein, 0.1g fat (0.1g sat), 9.1g carbs, 6.5g sugar, 2g fibre, 275mg sodium

2 FRUIT JUICE

Nudie Crushie Mango, Passionfruit & More Fibre content equivalent to two serves of fruit. Per 250ml bottle 548kJ, 2g protein, 0.5g fat (0g sat), 26.5g carbs, 25.3g sugar, 6.8g fibre, 8.5mg sodium

3 ICE TEA

Lipton Ice Tea White Tea and Raspberry This is lower in kilojoules and sugar than regular softies, and it has the added benefits of antioxidants. Per 500ml bottle 465kJ, less than 0.1g protein, fat and sat fat, 27g carbs and sugar, less than 5mg sodium

4 TEA
Sat Jul 25
Tetley Big Cuppa tea bags Big tea fan? These bags contain 20 per cent more leaves than ordinary bags. Per serve 0kJ and no bad stuff

5 HERBAL TEA

Just Rooibos African Tea Naturally caffeine free and organically grown. Per serve 0kJ and no bad stuff

6 TOMATO SAUCE

Pop’s Tomato Sauce Highest tomato content at 88 per cent (not reconstituted), and lowest sodium, with no preservatives or gluten. Per 25g serve: 123kJ, 5.2g protein, less than 0.1g fat and sat fat, 6.6g carbs, 6.6g sugar, 57mg sodium

7 PEANUT BUTTER
Sanitarium Natural Peanut Butter Crunchy Made from peanuts alone – no added sugar or salt. Per 1 tbs (25g) 628kJ, 7.1g protein, 12g fat (2g sat), 2.8g carbs, 1.5g sugar, 1.8g fibre, 2mg sodium

8 Spreadable fruit jams

St. Dalfour 100% spreadable fruit jams Get your sugar-fix the fruity way – this brand of jam has the highest percentage of fruit and the least additives. Per tsp (all flavours) 53kJ, 0g protein, fat, sat fat and sodium, 3.2g carbs, 3.2g sugar

9 DIP

Black Swan Skinny Tzatziki Get Greeky with this low-kJ tzatziki. (See what we did there?) It’s low in salt, and made with real yoghurt and cucumber. Per 10g serve 37kJ, 0.6g protein, 0.3g fat (0.2g sat), 0.9g carbs, 0.6g sugar, 18mg sodium

10 Soy Sauce

Kikkoman 43% Less Salt Soy Sauce This less-salty soy won’t make you reach for water all night long. Per 15ml serve 51kJ, 1.4g protein, 0g fat and sat fat, 1.7g carbs, 0.6g sugar, 534mg sodium

11 CANNED SOUP

Heinz Very Vegetable Sweet Potato & Pumpkin Made of 58 per cent vegies, suitable for vegans, gluten-free, and no added colours, flavours or preservatives. Per serve (535g can) 1124kJ, 4.8g protein, 4.8g fat (2.7g sat), 48.7g carbs, 19.3g sugar, 4.8g fibre, 696mg sodium

12 TETRA-PACK SOUP

Campbell’s Velish Provincial Vegetable soup Talk about super soup: this delivers two serves of vegies and 10 per cent of your daily fibre needs in one bowl. Per 250g serve 443kJ, 3g protein, 1.8g fat (1g sat), 17.5g carbs, 9.5g sugar, 3.8g fibre, 730mg sodium

13 MULTIGRAIN CRISPBREADS

Ryvita Multi-Grain Wholegrain Rye Crispbread One of the highest fibre crispbreads. All-natural ingredients and relatively low in sodium. Per 2 crackers 338kJ, 2.2g protein, 1.1g fat (0.2g sat), 13.4g carbs, 0.8g sugar, 3.7g fibre, 75mg sodium

14 CORN CRISPBREADS

Orgran Corn Crispibread Gluten free, very low in fat, sodium, sugar and kilojoules with no artificial flavours, colours or preservatives. What a goody-goody! Per 2 crackers 210kJ, 1g protein, 0.2g fat (0g sat), 11g carbs, 0.1g sugar, 0.4g fibre, 50mg sodium

15 RICE CRACKERS

Sakata Rice Crackers Plain These are made with just three natural ingredients and they have the best crunch. Per 25g serve 415kJ, 1.8g protein, 0.7g fat (0.1g sat), 21.3g carbs, 0.1g sugar, 0.2g fibre, 98mg sodium

16 CORN CHIPS

Freedom Foods Baked Corn Chips Organic Make these your Mexican-meal mate – they’re a lot lower in sodium and total/saturated fat than standard corn chips. Per serve (50g) 855kJ, 4.9g protein, 1.5g fat, less than 1g sat fat, 40.2g carbs, 0.5g sugars, 56mg sodium

17 NUT MIX

Sunbeam Just Nuts Natural Mix sachets Ingenious portion-controlled snacking. Keep one in your bag. Per 30g sachet 786kJ, 5.6g protein, 14.5g fat (1.6g sat), 2.9g carbs, 1.3g sugar, 2.1g fibre, 2mg sodium

18 FRUIT BAR

Angas Park 100% Fruit bar Pretty much all dried fruit with no added sugar in a convenient ready-for-the-road bar. Per 35g bar 324kJ, 1g protein, 0.1g fat (0.1g sat), 17.4g carbs, 16.4g sugar, 3.5g fibre, 8.8mg sodium

19 BREAKFAST BAR

Norganic Crunchola Wholegrain Breakfast Bars Apple & Blueberry Highest fibre breakfast bar on the shelves, with a delish chewy texture. Also wheat free. Per 35g bar 536kJ, 2.4g protein, 1.5g fat (0.35g sat), 24.5g carbs, 5.6g sugar, 2.8g fibre, 17mg sodium

20 MUESLI BAR

Carman’s Apricot and Almond Muesli Bars High in fibre and made from whole, natural ingredients. Plus, no added sugar. Per bar 873kJ, 5.6g protein, 10.1g fat (1.1g sat), 21.6g carbs, 4.7g sugar, 4.8g fibre, 20mg sodium

21 FRUIT PIES

Nanna’s Lite Mixed Berry and Apple Pies Warm up with this berry-licious lower fat version of a staple winter comfort food. Per snack pie 1190kJ, 3.9g protein, 7.2g fat (3.3g sat), 50g carbs, 25g sugar, 240mg sodium

22 Ice-creams

Peter’s Light & Creamy One of the lowest kilojoule ice-creams with a dreamy creamy flavour. Per 45g scoop 305kJ, 1.5g protein, 1.3g fat (less than 1g sat), 13.5g carbs, 12.5g sugar, 45mg sodium

23 NON-DAIRY ICE-CREAM

So Good Non-Dairy Frozen Dessert Vanilla Bliss Creamy yet low fat – good for dairy-intolerant people. Per 63g (approx 2 scoops) 391kJ, 1.8g protein, 1.8g fat (0.3g sat), 17.5g carbs, 9.5g sugar, 0.3g fibre, 38mg sodium

24 CANNED FRUIT

Goulburn Valley Two Fruits Highest percentage of fruit and fibre in products of its kind. Per 125g serve 273kJ, 0.5g protein, 0.1g fat (less than 0.1g sat), 15.3g carbs, 11.3g sugar, 1.8g fibre, 6mg sodium

25 FRUIT PURÉE

Goulburn Valley Mixed Berry Harvest Spoon onto low-fat ice-cream for a quick, healthy dessert with the benefits of antioxidants. Yum! Per 125g serve 309kJ, 0.1g protein, 0.1g fat (less than 0.1g sat), 17.8g carbs, 14.4g sugar, 8mg sodium

26 DRIED FRUIT TREAT

Ocean Spray Craisins Go for dried cranberries for a fat-free, antioxidant-rich fruity treat. Don’t go OTT, though – they’re naturally high in sugar. Per 40g 546kJ, 0g protein, fat and sat fat, 33g carbs, 26g sugar, 2g fibre, 0mg sodium

27 MIXED DRIED FRUIT

Sunbeam Fruit on the Go Fruit Salad Five varieties of dried fruit in a handy ready-to-run pack. Per 50g snack pack 625kJ, 1.2g protein, less than 1g fat and sat fat, 33.9g carbs, 28.3g sugar, 3g fibre, 36mg sodium

28 VEGIE BURGER

Australian Eatwell Red Lentil Vegetable Burger Create a delicious meat-free meal faster than you can throw a snag on the barbie – just add a side salad. Per 125g pattie 644kJ, 7g protein, 0.7g fat (0.1g sat), 27.2g carbs, 6.5g sugar, 4.6g fibre, 270mg sodium

29 FRUIT YOGHURT

Attiki Acidophilus Skim Milk Yoghurt Lower in kilojoules and sugars than similar yoghurts, with no saturated fat. Per 200g tub (Strawberry) 436kJ, 7.8g protein, 0.2g fat (0g sat), 14.8g carbs, 14g sugar, 116mg sodium, 220mg calcium

30 LACTOSE-FREE YOGHURT

Vaalia Lactose Free Probiotic Yoghurt, Apricot & Mango This is a great-tasting lactose-free yoghurt, with three active cultures to help you maintain stellar digestive health. Per 175g tub 679kJ, 7.9g protein, 2.4g fat (1.4g sat), 25.9g carbs, 25.4g sugar, 126mg sodium, 262.5mg calcium

31 DRINKING YOGHURT

Bulla Fruit ’n Yogurt with AB cultures, Strawberry Smooth and creamy yet low in fat and filled with healthy bugs for your insides. Per 200g bottle: 723kJ, 9.8g protein, 1.8g fat (1.2g sat), 28.8g carbs, 26.6g sugar, 190mg sodium, 300mg calcium

32 SMOOTHIE

Jalna Vitalize Vitamins+ smoothie This delivers all the benefits of yoghurt, fruit, good bugs and extra nutrients for a strong immune system. Per 250ml bottle 900kJ, 9.3g protein, 5g fat (3.5g sat), 32.8g carbs, 31.5g sugar, 3.3g fibre, 193mg sodium, 350mg calcium

33 HARD CHEESE

Nimbin Natural Reduced Salt Cheese The only lower-salt cheese found in supermarket fridges that has a delicious natural cheesy taste. Per 25g serve: 410kJ, 6.5g protein, 8g fat (5.6g sat), less than 1g carbs and 1g sugar, 75mg sodium, 185mg calcium

34 REDUCED-FAT HARD CHEESE

Bega So Extra Light Tasty cheese Significantly lower in fat than regular cheese while also being lower in sodium. Per 25g serve: 288kJ, 8.6g protein, 3.8g fat (2.4g sat), less than 1g carbs and sugar, 142mg sodium, 248.8mg calcium

35 CHEESE SLICES

Kraft Singles Free cheese slices with Vitamin D Put down the knife – these are the lowest fat cheese slices, and they contain added vitamin D to help calcium absorption. Per 2 slices (41g) 274kJ, 10g protein, 0.9g fat (0.6g sat), 4g carbs, 4.1g sugar, 533mg sodium, 328mg calcium

36 CREAM CHEESE

Philadelphia Extra Light cream cheese Lowest fat cream-cheese spread with a (seriously) creamy texture. Per 1 tbs serve 131kJ, 3.2g protein, 1.3g fat (0.9g sat), 1.6g carbs, 1.5g sugar, 67mg sodium, 25mg calcium

37 CREAM CHEESE

Philadelphia Extra Light cream cheese Lowest fat cream-cheese spread with a (seriously) creamy texture. Per 1 tbs serve 131kJ, 3.2g protein, 1.3g fat (0.9g sat), 1.6g carbs, 1.5g sugar, 67mg sodium, 25mg calcium

38 DAIRY DESSERT

Nestlé Diet Crème Caramel The calcium in this low-kilojoule dessert gives you a good excuse to indulge. Per 125g tub 331kJ, 3.9g protein, 1g fat (0.8g sat), 12.5g carbs, 11.1g sugar, 89mg sodium, 101mg calcium

39 PLAIN YOGHURT

Vaalia Low-Fat Natural Probiotic Yoghurt Natural yoghurt with three active cultures for a super-healthy digestive system. It delivers 27 per cent of your calcium RDI per tub. Per 100g serve 334kJ, 6g protein, 1.9g fat (1.2g sat), 8.7g carbs, 8.7g sugar, 100mg sodium, 215mg calcium

Cheers,
Janu

காக்கப்பட்டுள்ளது: எல்லோருக்கும் வணக்கம்!

இந்தப் பதிவு கடவுச்சொல் பாதுகாப்புக்கு உட்படுத்தப்பட்டது. இதைப் பார்ப்பதற்கு தயவு செய்து கீழே உங்கள் கடவுச் சொல்லை உள்ளிடவும்:


டியர் டாடி அண்ட் மம்மி, ஹாப்பி சஷ்டிபூர்த்தி!

டியர் டாடி அண்ட் மம்மி , ஹாப்பி சஷ்டிபூர்த்தி..!

உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல
உன்னை எண்ணாத நெஞ்சும் நெஞ்சல்ல
நீ சொல்லாத சொல்லும் சொல்லல்ல
நீ இல்லாமல் நானும் நானல்ல …

இங்கு நீயொரு பாதி நானொரு பாதி
இதில் யார் பிரிந்தாலும் வேதனை பாதி
காலங்கள் மாறும் காட்சிகள் மாறும்
காதலின் முன்னே நீயும் நானும் வேறல்ல

ஒரு தெய்வமில்லமல் கோவிலுமில்லை
ஒரு கோவில்லாமல் தீபமுமில்லை
நீ அந்தக் கோவில் நான் அங்கு தீபம்
தெய்வத்தின் முன்னே நீயும் நானும் வேறல்ல

என் மேனியில் உன்னைப் பிள்ளையைப் போலே – நான்
வாரியணைத்தேன் ஆசையினாலே
நீ தருவாயோ நான் தருவேனோ
யார் தந்த போதும் நீயும் நானும் வேறல்ல

உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல
உன்னை எண்ணாத நெஞ்சும் நெஞ்சல்ல
நீ சொல்லாத சொல்லும் சொல்லல்ல
நீ இல்லாமல் நானும் நானல்ல …!

அப்பா, அம்மாவின் அறுபதாவது கல்யாண நாளை ஒட்டி பதிவு எழுதணும்னு நினைத்தவுடனே என் வாய் தன்னால் இந்தப் பாடலை முணு முணுத்தது. இந்தப் பாடலை கேட்கும் போதெல்லாம் எனக்கு என்னுடைய அமாவும், அப்பாவுமே நினைவுக்கு வருவார்கள். எங்களின் சிறு வயதில், அம்மா இந்தப் பாடலை அடிக்கடி பாடிக் கொண்டிருப்பார். அவங்க குரல் ரொம்ப வித்தியாசமான அழகோட இருக்கும். தானொரு நல்ல பாடகி என்பதில் அம்மாவுக்கு ரொம்பத் தன்னம்பிக்கை அதிகம். யாருடைய விமரிசனத்தையும் பொருட் படுத்தாமல் அவர் நிறைய பாடல்களை இது போன்று அன்றாடம் நேரம் வாய்க்கும் போதெல்லாம் பாடிக் கொண்டே இருப்பார். அவர் பாடுவது அவரின் மன திருப்திக்காகத்தான் என்பதால் மற்றவர்கள் நினைப்பது பற்றியெல்லாம் ரொம்ப அலட்டிக் கொள்ளமாட்டார் !

சமீபத்தில் சிட்னி வந்திருந்தபோது இந்தப் பாடலைத்தான் அடிக்கடிப் பாடிக்கொண்டிருப்பார்.


“நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு மறக்கத் தெரியாதா
பழகத் தெரிந்த உயிரே உனக்கு விலகத் தெரியாதா
உயிரே விலகத் தெரியாதா…”
என்று தொடங்கி மறக்காமல் , இந்த ஆழமான பொருள் பொதிந்த இறுதி வரிகளுடன் தான் பாடலை முடிப்பார்.


“கொதிக்கத் தெரிந்த நிலவே உனக்கு குளிரத் தெரியாதா
குளிரும் தென்றல் காற்றே உனக்கு பிரிக்கத் தெரியாதா
பிரிக்கத் தெரிந்த இறைவா உனக்கு இணைக்கத் தெரியாதா
இணையத் தெரிந்த தலைவா உனக்கு என்னைப் புரியாதா
தலைவா என்னைப் புரியாதா..”

நான் இதை ஒவ்வொருதரம் தொலை பேசியில் உரையாடும் போதும் , அப்பாவிடம் சொல்லி சொல்லி அவரை கலாய்த்து எடுப்பது வழக்கம். மறுமுனையில் அப்பா பதில் ஒன்றும் சொல்லாமல், ஒரு வெட்கச் சிரிப்பு சிரிப்பார் பாருங்கள் ! அதில் ” என் பொண்டாட்டிக்குத் தான் என் மீது எத்தனை அன்பு” என்கிற ஒரு அழகான கர்வம் தெரியும். அதற்காகவே ஒவ்வொரு தடவையும் அவரிடம் பேசும்போது “இத்துடன் எண்பத்தி ஏழாவது தடவை” என்று புள்ளி விவரக் கணக்கெல்லாம் சொல்லி அவரை கலாட்டா செய்வேன்.

அம்மாவிற்கு சற்றும் சளைத்தவர் இல்லை என் அப்பா !


“அவள் பறந்து போனாளே என்னை மறந்து போனாளே
நான் பார்க்கும் போது கண்களிரெண்டைக் கவர்ந்து போனாளே

என் காதுக்கு மொழியில்லை
என் நாவுக்கு சுவையில்லை
என் நெஞ்சுக்கு நினைவில்லை
என் நிழலுக்கு உறக்கமில்லை
என் நிழலுக்கு உறக்கமில்லை..”

என்ற இந்தப் பாடலை அவர் அடிக்கடிப் பாடிக் கொண்டிருக்கிறார் என்று என் அக்கா அங்கிருந்தபடி சொல்லி என் அம்மாவை கேலி செய்வாள். அதை கேட்டு என் அம்மாவின் முகத்தில் வெட்கமும், வருத்தமும், பூரிப்பும் கலந்த ஒரு கலவை வரும் பாருங்கள்! பார்க்கவே கொள்ளை அழகாய் இருக்கும்.

ரெண்டுபேரும் ஆதர்ஸ தம்பதிகளா என்றெல்லாம் எனக்குத் தெரியாது. ஆனால் அன்பான தம்பதிகள். அதுதானே கல்யாண வாழ்க்கைக்கு அடிப்படை. அவர்கள் இருவரிடமிருந்து கற்றுக் கொண்டது நிறைய. இருவருடைய பொதுவான குணம், மற்றவர்களுக்கு தங்களால் முடிந்த அளவிற்கு மட்டுமல்லாது முடியாத போதும் உதவுவது, பழம் பெருமைகளை பேசி ஜல்லியடிக்காமல் இருப்பது, உறவினர்களையும் நண்பர்களையும் சமமாகவே பாவிப்பது, ஆடம்பரங்களில் அதிக ஈர்ப்பும், விருப்பமும் இல்லாமல் இருப்பது, இறைவனை நல்ல சிந்தனையில் தேடுவது , மூடப் பழக்கங்களை மதிக்காமல் இருப்பது எல்லாவற்றிகும் மேலாக தங்கள் பெண் குழந்தைகளை உணர்வுள்ள மனுஷிகளாய் மதித்து, என்றுமே அவர்களின் விருப்பங்களுக்கு தங்களால் முடிந்த அளவிற்கு உறுதுணையாய் இருந்தது … என்று இப்படி பலவற்றை அடுக்கிக் கொண்டே போகலாம்.

தவிர்க்க முடியாத காரணத்தால், இந்த அற்புதமான தருணத்தில் இந்தியாவிற்கு செல்ல முடியாமல் போயிற்று. ஆனால் பல ஆண்டுகளாய் அவர்களுக்கு அறுபதாம் கல்யாணத்தை சிறப்பாகச் செய்ய வேண்டும் என்று ஆசை இருந்தது. ஆனால் அப்பாவும் அம்மாவும் எளிமையாகவே தங்களில் அறுபதாம் கல்யாணத்தை நடத்த விரும்புவதாகச் சொல்லிவிட்டார்கள். எனவே அவர்களின் விருப்பப்படியே விழா நடந்தது.

என் அம்மா பிரமாதமாய் சமைப்பார் என்கிறபடியால், வீட்டிலேயே நண்பர்களை அழைத்து எளிமையான விருந்தினை ஏற்பாடு செய்திருந்தார்கள். என் அக்கா அதே ஊரில் வசிப்பதால் அவள் என் பெற்றோர்கள் விருப்பப்படி, வேலூரில் புகழ் பெற்ற தர்மஸ்தாபனமான “உதவும் உள்ளங்கள்” என்னும் இல்லத்திற்கு சென்று அங்கிருந்த குழந்தைகளுக்கு மதிய உணவை இனிப்பு, காரம், ஐஸ்க்ரீமுடன் ஒரு அழகான விருந்தாக அமையுமாறு ஏற்பாடு செய்திருந்தாள்.

பிறகு பார்வையற்றோர் இல்லத்திலும் இதே போன்று ஒரு எளிய மதிய உணவை ஏற்பாடு செய்தார்களாம். அம்மாவும் அப்பாவும் ஆதரவற்ற குழந்தைகளிடம் சென்று ஆசி பெற்று வந்தததையே பெருமையாகக் கருதுகிறார்கள். அறுபதாம் கல்யாணமென்ற பெயரில், திருமண மண்டபத்தில் பந்துக்களை அழைத்து தாம் தூம் என்று செலவு செய்வதை விட இதுவே தங்களுக்குத் திருப்தியை தரும் என்று என் பெற்றோர்கள் தெளிவாய், தீர்க்கமாய் முடிவெடுத்ததை எண்ணிப் பெருமையாய் இருந்தது.

என்னால் வர முடியவில்லையே என்று அப்பாவிடம் வருத்திச் சொல்லியபோது, நீ தான் பெண்ணுரிமை வாதியாயிற்றே , எனவே அம்மாவின் அறுபதாம் கல்யாணத்திற்கு வந்து விடு..அதை இதைக்காட்டிலும் பிரமாதமாய் கொண்டாடி ஜமாய்த்து விடலாம் என்று சிரித்துக் கொண்டே சொன்னார் அவர். அதானே :)

டியர் டாடி அண்ட் மம்மி , ஹாப்பி சஷ்டிபூர்த்தி .. இருவரும் பல்லாண்டு காலம் சகல சௌபாக்கியங்களை பெற்று நிறைந்த மனதுடன் நீடூழி என்றும் வாழ இறைவனிடம் பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

a special happy birth day to you dad . I love you daddy and mummy so ..so much and please take care of you!

யுவர்ஸ் ,
ஷ்யாம்லி

கற்றது கைம்மண்ணளவு, கல்லாதது மதமளவு!

கற்றது கைம்மண்ணளவு, கல்லாதது மதமளவு!

“கிருஷ்ணா ராமான்னு
கத்திப் பார்த்தேன்
அல்லா அல்லானு
கூவிப் பார்த்தேன்
ஜீசுஸ் ஜெஹோவான்னு
தட்டிப் பார்த்தேன் ..
ஒருத்தர் காதுலயும் உழல
ஒரு கதவுந் திறக்கல்ல !

கீத, குரானு
பைபிளு படிச்சும்
மூணு வேளைக்கும்
பசிக்குது சாமி
வவுத்துப் பாடு
தீரல சாமி ..
வவுத்துப் பசி
கொல்லுது சாமி..

அப்பம்பேரு தெரியாது
ஆத்தா மூஞ்சி நெனப்பில் இல்ல..
கோணிப்பய்யி என்வூடு ,
பசிக்குது தர்மம் பண்ணு
மகா ராசான்னு
கேட்டப்ப, மகா ராசன்
அவம்பசிய தீர்த்துபுட்டு
சக்கயா வுட்டுபுட்டு போனதால,
வந்த வவுத்துக் குழந்தை
என் சொத்து ..!!

இன்னா நியாயமின்னு
மதம் (ப)புடிச்ச குருமார
கேள்வி கேட்டு கண்ணீர் வுட்டா
கிருஷ்ணருக்கும், நபிகளுக்கும்
பொண்ணுங்களுக்கு கணக்கு இல்ல..
ராமரோ கட்டின பொண்டாட்டி யவே
காட்டுக்கு துரத்திப் பிட்டான்..
கைபிடிச்ச பத்தினிய
நடு ராத்திரி சுகத்தோட
வயுத்துல புள்ளயோட
கைவிட்ட புண்ணியவான்
புத்தருக்கோ எதுலயும் ஆச இல்ல..!

இறை தூதருங்க (சங்)கதி எல்லா(ம்)
இப்படி ஏறு மாறா இருக்க ,
சுயநல மனுஷன் கிட்ட
தருமங் கேட்டுப் போனா
வவுத்துல புள்ள வராம
புனித நூலா வரும் தரித்திரமேன்னு
திட்டி துரத்தி உட்டாங்க..!

மதம் புடிச்ச யானயயும் ,
வெறி புடிச்ச நாயயும்
கல்லெடுத்து அடிச்சு போடும்
பகுத்தறிவு மனுஷங்க
மதம்புடிச்ச மனுசனுங்கள மட்டும்
இறை அன்பர்கள்னு சொல்லுவதேன் ?

கையிலிருக்கும் குழந்தை கிட்ட
புலம்பிகினே கேட்டப்ப பொக்க வாய
அது காட்டி வக்கனயா சிரிச்சுதுங்க. ..
கொஞ்ச நேரத்துல வளக்கம்போல
பசியால அழுவுச்சுங்க..!

கட்ட வொடச்சி, கல்லு தூக்கி
கவுரவமா வேல பண்ணி,
செஞ்ச வேலக்கி கூலி கேட்டா,
காலியா நடக்கறாங்க ..!
மானத்த வாங்கிட்டு தான்,
கஞ்சியே ஊத்தறாங்க..!

பொண்ண போகப் பொருளா,
புள்ள பெரும் யந்திரமா
ஆணுக்கு அடுத்தே மட்டும்
எப்பவும் வச்சி பேசி
சம உரிமையெல்லாம் மறுக்கும்
ஆணாதிக்க புத்திய
கடவுள் பேரால
காட்டிக்கும் ஆளுங்க(ள) மட்டும்
எல்லாம் தெரிஞ்ச இறை தூதரா
அனுப்பினாயே என் இறைவா..!

உசுர கொடுத்து உசுர வளர்க்கும்
பாவப்பட்ட இந்த பெண் ஜன்மம்
ஒங்கண்ணுக்கும் படலியா..?
ஒரே ஒரு மதத்திலாச்சும்
ஒப்புக்கு மட்டுமாச்சும்
எதாச்சும் ஒரு பொண்ண
மருவாத பண்ணி(யி)ருந்தா
பொண்ணுங்க கதி கொஞ்சம்
சுமாராவாச்சும் இருந்திருக்கும்..!

என்னாட்டப் பொண்ணுங்க
செஞ்ச பாவமென்ன
மேல சொர்க்கத்தில் சொகமாக
இருக்கிற கடவுளே நீ சொல்லு ..
எதுத்துக் கேள்வி
கேட்டா நரகந்தா
வாழ்வுயின்னா இப்பவே
அங்க வரேன்..
இதுக்கு அது பரவாயில்ல..! “

இப்படியாய், புகைவண்டிப் பயணத்தில் ,
கையில் குழந்தையோடு,
கந்தல் சேலை உடுத்தி
பக்கத்தில் பயணித்த
அபலைப் பெண்ணின்
மனக்குமுறல்கள் கேட்டு
வெட்கத்தில்
தலை கவிழ்ந்தேன்..

எங்கும் பரவியிருக்கும்
இறைவனை பார்த்தோ,
என்னுள் நிறைந்திருக்கும்
இறைவனை பார்த்தோ,
எந்தன் மனதிற்குள்
ஊமையாய் சில கேள்விகள் ..!

மிருகங்கள் என்று இழித்துப் பேசும்
விலங்கினங்கள் எல்லாமே
தன் வேலை மட்டும் பார்த்து
நம்மை விட ஒத்துமையாய்
தன் இனத்தை காக்கும்போது
தான் பிடிக்கும் முயலுக்கு
என்றுமே மூன்று கால்தான்..
தான் சேர்ந்த மதமாயிருந்தால்
எல்லாமே நல்லது தான் …
தனக்குப் பிடித்தவராயிருந்தால்
எது செய்தாலும் நல்லதற்கே என்று
மதங்களின் பேரை சொல்லி
தீண்டாமை, வன்முறை, பிரிவினை வாதம்
மற்றும் அடிமைத்தனம்
வளர்க்கும் மனிதர்களை என்ன செய்ய?

மதங்களை இனங்களை முறித்து,
ஆண் பெண் பேதம் தவிர்த்து ,
உயர் குலம் தாழ்குலம் களைத்து
ஒருவரை ஒருவர் மதித்து
முடிந்தால் – உதவிகள் பல(வும்) புரிந்து
மனிதர்களாய் மட்டும் வாழ்வோம்…
இறுதியில் வரும் தீர்ப்பை
என்றோ வரப்போகும்
எல்லாம் வல்ல இறைவன்
பார்த்துக் கொள்வார்
என்றது என் மனசாட்சி ..!!

-இப்படிக்கு
மதங்களின் பெயரால், மனிதர்களை பிரிக்கும், பிரிவினை வாதத்தினை தூண்டும் , தன் மதத்தினில் உள்ள ஓட்டையை சொன்னால், உன் மதம் மாத்திரம் என்ன ஒழுங்கா என்று ஆதாரங்களை புட்டு புட்டு வைக்கும், பெண்களை என்றைக்கும் ஆண்களுக்குக் கீழேயே வைத்து, ஆண்களை சார்ந்தே வாழ வேண்டி நிர்பந்திக்கும், சில மனிதர்களால் , அவர்கள் காட்டுகின்ற மத நெறிகளால் நொந்து நூடுல்சாகிப் போயிருக்கும் ஒரு சக மனுஷி.

ஏனிந்த கவிதை?

இந்த எழுத்தின் பின்புலம் என்னவாயிருக்கும் என்று யோசிப்பவர்களுக்கு.

சமீபத்தில் ஒரு இணைய தளத்தில் , இந்து சகோதரர்களும், முஸ்லீம் சகோதரர்களும் அடுத்தவர் மதத்தை குறை சொல்லி, ஒருவரை ஒருவர் தாக்கி , கடுமையாய் விவாதித்துக் கொண்டதை படிக்க நேரிட்டது. பல கிருத்துவ பிரச்சாரங்களிலும் மற்ற மதங்களை இப்படியே தாக்கி பேசுவதையும் நானே கேட்டுள்ளேன். இதனால் மனம் வருந்திய நேரத்தில், தோன்றிய எண்ணத் தாக்கத்தை இங்கு பதிவிட்டு இருக்கிறேன். மற்றபடி யாரையும் வருத்தவோ, இறை நம்பிக்கையை குறைக்கவோ எழுதியது இல்லை.

எத்தனையோ பேர் வேளைக்கு சோறின்றி, நிற்க இடமின்றி , பிழைக்க வழி இன்றி வாழ்வா சாவா என்று வாழ்கிற போது, வழி சொல்லாத மதங்களும், இறை தூதர்களும் அல்லது கடவுள்களும் தான் இருந்து என்ன பயன்? எல்லா வற்றிற்கும் , கண்ணுக்குத் தெரியாத சாத்தானின் மீது பழி போட்டு கதை எழுதும் மனிதர்கள், வாழ்ந்து தான் என்ன பயன்?

மனிதனாய் , மனிதருக்கு மனிதராய் உதவி செய்து உதவி செய்து ஒரு நாளாவது வாழ்ந்திட்டால், கடவுளும் தேவை இல்லை. புனித நூலும் வேண்டியதில்ல. தன் இனத்தை தாக்காத மிருகங்கங்களுக்கு தெரிந்த நீதி, புனித நூல்கள் கற்று தேர்ந்த மனிதனிடம் இல்லாமை ரொம்பவும் வருத்தம் தருகிறது.

மற்றபடி கிருஷ்ணர், ராமர், ஈஸ்வரன், அல்லா, ஜீசஸ், ஜெஹோவா மற்றும் இதர கடவுள்கள் மீது எனக்கெந்த காழ்ப்புணர்வும் இல்லை. எத்தனை தரம் கூப்பிட்டாலும் வரவே வராத, அவர்கள் பேர் சொல்லி இன்னமும் எத்தனை நாட்களுக்கு இருக்கும் மனிதர்கள் நாம் இப்படியே சண்டையிட்டு மடிந்திடுவோம்?

மாற்ற முடியாதது எதுவுமே இல்லை என்கிறார்கள். மனிதனைத்தான் இன்னமும் மனிதனாய் மாற்ற முடியவில்லை என்கிற வருத்தம் , இதுபோன்ற மதவெறி இனவெறிக் கலவரங்களையும், வன்முறைகளையும் காணுகின்றபோது மனதை வருத்துகிறது.

இதை படித்து விட்டு, நான் ஏதோ திராவிட கழக வாதி , பெரியாரை ஆதரிப்பவள் என்றெல்லாம் என்னை முத்திரையிட்டு விடாதீர்கள். நான், கடவுளை அன்பில் தேடும், அன்பில் மாத்திரம் தேடும் ஒரு சக மனுஷி, எல்லோருக்கும் தோழியாய் இருக்க விரும்பும் ஒரு சாதரண , உங்களில் ஒருத்தி , அவ்ளோதான்.

கிருஷ்ணர், ராமர், நபிகள், ஜீசஸ், புத்தர் , அல்லாஹ் , ஜெஹோவா மற்றும் இதர கடவுள்கள் தவிர சக மனிதர்களில் வேறு யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும். இதை வேடிக்கையாய் அன்றி மனப்பூர்வமாகவே கேட்கிறேன்.

அன்புள்ள கடவுள்களுக்கும், இறை தூதர்களுக்கும்,

உங்களிடம் சற்று கோபம் கொண்டு, நீங்கள் எழுதி அனுப்பியதாய் கூறும் மறை நூல்களின் அடிப்படையில் எழுகிற விவாதங்களையும், வன்முறைகளையும் பார்த்து மனம் வெதும்பி என் மனக் குறையை இவ்வாறு கொட்டி இருக்கிறேன். உங்களுக்கு அவைகள் ஏற்காத பட்சத்தில் நீங்கள் மாத்திரம் என்னிடம் நேரிலேயே கேள்விகள் கேட்கலாம். இணையத்தில் கேட்டால், மக்கள் தான் (எல்லாம் நம்ம சொந்த பந்தங்கள் ) கேட்கிறார்கள்னு நான் நம்பாம போயிடுவேன் :)

பிட் நோடீஸ் : நான் ஆன்மீகத்தில் நம்பிக்கை உடைய , ஆத்திகவாதி என்று இங்கு தெரிவித்து விடுகிறேன் . மனதிற்கு தவறாய் படுவது எந்த மதத்தில் இருந்தாலும், ஏற்காமல் ஒதுக்கி, அதே எல்லா மதங்களில் உள்ள நல்லவைகளை மாத்திரம் எடுத்துக் கொள்ளும் அன்ன பட்சி நான் . That’s it.

ஹாப்பி ஆனிவெர்சரி பிரேம்.

இன்றுடன் கல்யாணம் ஆகி ஏழு வருடங்கள் ஓடி விட்டன. சில நேரங்களில் நேற்று தான் திருமணம் நடந்தது போலிருக்கும். பல நேரங்களில் பிரேமை ஏதோ ஜன்ம ஜென்மமாய் தெரிந்திருப்பது போல தோன்றும். திருமணத்திற்கு பிறகு நான் ரொம்ப நிதானமாய் ஆகி விட்டேன் என்று தோன்றும்( ஐயோ இப்பவே இப்படின்னா , அப்ப எப்படியோன்னு கேட்பவர்களுக்கு, என் பதில் ஹிஹி ..)

பல நேரங்களில் சண்டை போடும்போது , அடுத்த ஜன்மத்தில் சத்தியமாய் உங்க பொண்டாட்டியை வரக் கூடாதுன்னு தான் ஸ்வாமிகிட்ட வேண்டிக்கிறேன் என்று சொல்லி விட்டு, அவரை ஹர்ட் பண்ணுகிறேன் என்பதை அவருக்குக் காட்டும் விதமாய், அவர் முன்னாலேயே கண் கூப்பி, பக்திகரமாய், பகிரங்கமாய் , சாமிக்கு ஒரு பிரார்த்தனையும் சத்தம் போட்டு பண்ணிக் கொள்வேன்.

“நீதான் கோவிலுக்குப் போனாலே பராக்குப் பார்த்துக் கொண்டிருக்கும் ரகம், அதனால சுவாமி உன்னை எல்லாம் கண்டுக்க மாட்டார், அதோடு இப்படி சத்தமாய் பண்ணும் ப்ரார்த்தனைகளுக்குப் பலனே இருக்காது தெரியுமா ?”, என்று அவர் பாட்டிற்கு ஏதோ சமாதானம் சொல்வார்.

“நான் சத்தியமாய் சொல்றேன். இது தான் என் ஆசை ..!” என்று விடாப்பிடியாய் சொல்வேன் ..இது போன்ற சத்தியங்களை நான் சர்க்கரை பொங்கல் அளவிற்கு கூட மதிப்பதில்லை என்றாலும், சில நேரங்களில் அவரின் முகம் வாடவே செய்யும். இருந்தாலும் மனம் தளராமல் சொல்லுவார் .. ” எனக்கும் அதான் ஆசை ஸ்வீட்டி ..ஒரு தரமாச்சும் நான் நீயாகவும், நீ நானாகவும் பிறக்கணும்.. அப்பத்தான் உனக்கும் தெரியும் .. “, என்று. எனக்கு உள்ளூர ஏதோ நிம்மதியாய் இருக்கும். இந்தக் கடவுளிடம் வேண்டும் பிரார்த்தனைகளுக்கு எந்த மதிப்பும் இல்லை என்று நான் பல தடவைகள் உணர்ந்திருப்பதாலேயே , இப்படி தைரியமாய் பிரார்த்தனை பண்ணுகிறேனோ என்னமோ? ஆனாலும் , பிரார்த்தனை செய்து முடித்தவுடன், மனதிற்குள் ஒரு வித திகில் பரவும் கணம் தான் புரியும் ..” ஏன் எல்லோரும் ஏழு ஜன்மம் ஆனாலும் ஒரே துணையே வேண்டும் என்று கேட்கிறார்கள் என்று .. “

இன்று காலையில், சுவாமியிடம் மீண்டும் சில பிரார்த்தனைகள் செய்தேன். நான் ஸ்டுபிட் மாதிரி பிரார்த்தனை நிறைய செய்திருக்கிறேன். நீ தான் பொறுப்பான சுவாமி யாச்சே ..அதனால எனக்கு நல்லதை மாத்திரம் பண்ணு. அவருக்கு நல்லது பண்றதா நெனச்சி , அடுத்த ஜன்மத்தில் எங்களை பிரிச்சுடற வேலை எல்லாம் வேணாம் ..இப்படி பல ரகங்களில் மிரட்டலாய் சுவாமிக்கு பிரார்த்தனைகள் பண்ணி முடித்ததும் தான் மனதிற்குள் திருப்தி.. பரவியது ..!

பிரணவ் எழுந்ததும் கன்னத்தில் முத்தமிட்டு ” ஹாப்பி ஆனிவர்சரி ” என்று இருவருக்கும் சொன்னான். பிறகு பர ,பரவென்று அலமாரியின் , இழுவை அறையினை திறந்து எதையோ தீவிரமாய் தேடினான்.

பிறகு அவனுக்கு பிறந்த நாளிற்கு வாங்கிய கார்டில் , எங்களுக்கு ஹாப்பி ஆனிவெர்சரி என்று அழகாய் எழுதி , ஏதோ படம் எல்லாம் போட்டு இருந்ததை இருவருக்கும் தந்தான்.

” ஹொவ் ஸ்வீட் பிரணவ் :D ” . இருவருமே இதை கொஞ்சமும் எதிர் பார்க்கவில்லை . எங்களுக்குத் தெரியாமல் எழுதி ஒளித்து வைத்திருக்கிறான் குழந்தை. நானும் பிரேமும் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை :D .

நான் திருமணமே செய்து கொள்ளக் கூடாது என்று பிடிவாதமாய் நினைத்தவள் தான். ஆண்கள் பெண்களை அடிமை போல் நடத்தும் சமூகத்தில் பிறந்ததாலும், நினைத்ததை மாத்திரம் செய்கிற பழக்கம் உடையவள் என்பதாலும், அது தான் நல்லது என்றே நினைக்கவும் செய்தேன். அப்படி இருந்திருந்தால் அது எத்தனை பெரிய முட்டாள் தனமாய் இருந்திருக்கும். பிரேம் போன்ற ஒரு அற்புதமான மனிதரையும், பிரணவ் போன்ற ஒரு அருமையான குழந்தையை சந்திக்கும் வாய்ப்பே எனக்கு இருந்திருக்காது இல்லை..!

நிறைய எழுதலாம் என்று இருக்கிறது.. எங்கள் திருமண வாழ்க்கை முழுவதுமே ஒரு பொக்கிஷம் ..இந்த நல்ல நாளில் எல்லோரும் எங்களை போல நன்றாக வாழ வேண்டும் என்கிற பிரார்த்தனையுடன்,

-ஸ்வீட்டி

இத மறந்துட்டேனே ..

நேற்று எங்க க்ளோஸ் பாமிலி பிரெண்ட்ஸ் , வீட்டிற்கு வந்து எங்களை விஷ் செய்துட்டு போனார்கள்..இன்னிக்கு நாங்க வெளியில் போறதால, நேற்றே வீட்டில் அவருக்குப் பிடித்ததை டின்னர்கு செய்தேன்..

மெனு..

ஆன் ட்ரே
உளுந்து வடை , சட்னி (ஸ்பான்ஸர்ட் பை மை பிரென்ட் பாரதி :) )

மெயின் (எல்லாம் நான் பண்ணது எச்செப்ட் சாலட் ..அதை எனக்காக பிரேம் பண்ணினார் :) )
பாவ் பாஜி
பீஸ் புலாவ்
கர்ட் ரைஸ்
வட பப்பு ( எ கைண்ட் ஆப் டால் சாலட்)
குகும்பர் சாலட்

டெசெர்ட்

பாதாம் கேசரி ( நான் பண்ணது )
கேக் (ஸ்பான்ஸர்ட் பை மை பிரென்ட் பாரதி :) )

ட்ரிங்க்ஸ்
ஆரஞ் ஜூஸ்
ஆப்பிள் க்ரேன்பெர்ரி ஜூஸ்
வாட்டர்

சாதம், உப்பு , சக்கரை , ஊறுகாய் எல்லாம் விட்டுடீங்களே ஜானு என்பவர்களுக்கு, ஹிஹி … எனக்கு இதெல்லாம் சகஜமப்பா .. :D

இன்னைக்கு அனுபவத்தை நாளைக்கு பகிர்ந்து கொள்கிறேன்..

ஒரு சின்ன ஹைக்கூ ( இதெல்லாம் ஹைகூவா என்று யோசிப்பவர்களுக்கு, நான் கத்தி இப்படிக் கூப்பாடு போடுறதால் இதும்பேரு ஹைகூ .. ;) )

காதல் என்றால்
ப்ரேம் …!

(ஐயோ ..இது மொக்கைனு கத்துபவர்களுக்கு , இவ்வளவு நாளாய் ப்ளாகிற்கு வந்துட்டிருக்கீங்க..இதெல்லாம் பழகிட்டு இருக்குமே .. :D )

ஹாப்பி ஆனிவெர்சரி பிரேம்..!!

P.S : I will upload pranav’s greeting card as soon as possible.

Pranav and Newton’s’ law of gravity.

Pranav and Newton’s’ law of gravity.

Pranav loves Science to the core of his heart. I have seen children wanting to become a Doctor, teacher, sport persons and even a movie actor. But if anyone asked Pranav what he wanted to become, his immediate response would be this : “I want to become a Space Scientist.”

At six, his passion about knowing our solar system and stars beyond our solar system is pretty amazing. He reads books that discuss about planets with such dedication. He knows lots of stuff about stars, planets, comets, meteorites and such asteroids that I don’t know or hardly remember. He says me why Pluto is not a planet anymore.

Our sample discussion.

Pranav: Ma , I love saturn ..it’s my most favorite planet.
I: I know ..you would . yes..sata( r) n , of course !
Pranav: you know why?
I: ???
Pranav: Saturn has got thousands of rings around and around it…and each rings ..is full of gases..and …they are ..
I: My head would spin .
Pranav: have any idea How many moons Jupiter has?
I : 63?
Pranav( not satisfied with my answer) : they are just the beginning mom, we(the scientists) are yet to explore the other side.

I: :x :x :x

One day I was talking to him very seriously about the great scientists and mathematicians the world have ever had. I was wondering whether he would be amazed if I say What made sir Newton discover the law of gravity. I went to my kitchen and brought a beautiful apple to our study. My face was glowing with the thought how Pranav would be excited to see the Apple falling down and me explaining the mere fact that led Sir. Newton to discover the law of gravity..!

Pranav darl, I am going to demonstrate you an experiment that propelled a great scientist like Newton to invent the law of gravity. ( Gravity is always there…so it is not an invention :( ) . Saying this, I took the Apple and dropped it down. My face was beaming and I was slowly turning towards Pranav . Then I asked him whether he had any idea why the apple fell down.

Pranav simply said: Because the apple can’t fly, mom !

I: I was just stupefied and pulled over by the gravity of his response. Could not proceed :(

Newton in his famous confessing letter to Bentley: “”That one body may act upon another at a distance through a vacuum without the mediation of anything else, by and through which their action and force may be conveyed from one another, is to me so great an absurdity that, I believe, no man who has in philosophic matters a competent faculty of thinking could ever fall into it.”

See how simply Pranav explained the above.

Children rule.

Quiz: If you went to moon and dropped an apple and a feather simultaneously, which would reach the ground first and why?

Pranav knows the answer :D

*************************************************************

காதல் வந்துச்சோ – Part III

~~~~~~~~~~~~ * * * * * * * * ~~~~~~~~~~~~

அத்தியாயம்-36

ஸ்ரீ ராமை பார்த்ததும் ஒன்றிற்கு முரணாக ஏதோதோ சிந்தனைகள் குந்தவையின் மனதை அலை கழித்தது. மனதிற்குள் புத்திக்கும் உணர்வுகளுக்கும் இடையில் நடந்த பட்டி மன்றத்தில் எந்த ஒரு முடிவும் சரியான ஒன்றாய் தோன்றவில்லை அவளுக்கு.

அறைக்குள் விக்ரமுடன் பேசிக் கொண்டே புன்னகையுடன் நுழைந்த தன்னை பார்த்ததும் ‘ தனக்கு ஒன்றும் இல்லை’ என்ற நிம்மதியுடன் மலர்ந்த அவன் முகத்தை பார்த்து சிநேகமாக புன்னகைக்க கூட அவளுக்கு சிரமமாக இருந்தது. அவனுக்குத் தவறான நம்பிக்கை எதனையும் தான் தரக் கூடாது என்பதில் அவள் உறுதியாய் இருந்தாள்.

அவன் அங்கு இல்லாமல் இருந்து இருந்தால் நன்றாய் இருந்திருக்கும் என்றும் தோன்றியது அவளுக்கு. தன்னால் கொஞ்சம் நிதானமாய் , அவன் நல்லதிற்கும் சேர்த்து பொறுமையுடன் யோசிக்க முடியுமோ என்று தோன்றியது குந்தவைக்கு. அவனை கண்டதும் மனதில் எப்போதும் தோன்றுவது போன்றதொரு அமைதியின்மை ஏற்பட்டது. விரும்பியது கிட்டாமல் போனால் ஏற்படும் இழப்பு என்றுமே இப்படியொரு அமைதியின்மையை தான் ஏற்படுத்துமோ என்று தன்னையே கேட்டுக் கொண்டாள் அவள் .

ஸ்ரீ ராமை பார்த்த உடனேயே அவன் பால் தான் கவரப் பட்டதும் , அவனின் ஆளுமை நிறைந்த தோற்றத்தின் தாக்கத்தில் இருந்து தான் மீளும் முன்னரே அவனின் கேலிப் பேச்சினால் தான் காயப் பட்டதும் நினைவிற்கு வந்தது. அவன் அவளை பற்றிக் கேலியாகக் கூறிய வார்த்தைகளை விட, அவன் தன்னை பார்க்காமலேயே ஒதுக்கி விட்டான் என்கிற அவனின் அலட்ச்சியம் தான் அவளை அதிகம் காயப் படுத்தியது , அதை ஸ்ரீ ராம் சரியாகப் புரிந்து கொண்டு தன் தவறிற்கு மன்னிப்பு கேட்டதும் அவளுக்கு அவன் மீது அதிகம் பிடிப்பு ஏற்படக் காரணமாயிற்று.

ஸ்ரீ ராம் தன்னுடைய தவறினை பெரிதாக நியாயப் படுத்த வில்லை. தான் எண்ணியது தவறு என்று கருதி மன்னிப்பு கேட்டதுடன், குந்தவையை பற்றி புரிந்து கொள்ள முயற்சிதான் . குந்தவைக்கு அந்த இயல்பான குணம் மிகவும் பிடித்தது எனலாம். இன்று கோவிலில் கூட அவன் தன் மனதை காலம் தாழ்த்தாமல் வெளிப்படையாய் திறந்து பேசியது குந்தவையை பெரிதாகக் கவர்ந்தது.

ஆரம்பத்தில் அமெரிக்க நாகரீகத்தில் திளைத்த, வேறு ஒரு பெண்ணை அவன் விரும்பி இருப்பான் . அதற்கு சரஸ்வதி அத்தை எதிர்ப்பு தெரிவித்து இருப்பார்கள் என்று குந்தவை எண்ணினாள். ஆனால் விக்ரமுடன் ஹிக்கின் போதாம்ஸ் சென்றபோது ஸ்ரீ ராம் உடன் நேர்ந்த எதிர் பாராத சந்திப்பு குந்தவைக்கு அவன் மனதை தெளிவாகக் காட்டியது. மாதங்கி குறித்து தான் பேசியதற்கும் அவனிடம் மன்னிப்பை அவள் தெரிவிக்கவே செய்தாள். இருந்தும் பூடக மாய் பேசிக் கொண்டிருந்ததால் தன் மனதை அவன் மீது அலையை விடுவதில் பயன் இல்லை என்று அமைதியாய் இருந்தாள். ஸ்ரீ ராமிடம் இருந்து பெரிதாக எந்த ஒரு தொடர்பும் இல்லாதது அவன் மீது சற்று கோபத்தை கூட வர வழைத்தது எனலாம்.

ஆனால் காஞ்சனா , வினோத் தம்பதியினரின் அன்னியோன்யத்தை பார்க்கும்போது , குந்தவைக்கு திருமணம் ஏன் ஆயிரம் காலத்து பயிர் என்கிறார்கள் என்று விளங்குவது போலிருக்கும். அவர்கள் குழந்தைகளின் குறும்புத் தனத்தில் பெற்றவர்கள் இருவரும் மயங்கினாலும், தேவை படும் இடத்தில் அவர்களை கண்டிக்கவும் அவர்கள் தவறுவது இல்லை. கணவன் மனைவி இருவரும் ஒருவருக்கு ஒருவர் அனுசரணையாய் இருப்பதும், அவ்வப்போது அவர்களின் இடையில் ஏற்படும் உப்புச் சப்பு இல்லாத சின்ன சின்ன சண்டைகளும் அதனை அவர்கள் கையாளும் விதமும் குந்தவைக்கு திருமண வாழ்வு மீது ஒரு மரியாதை கலந்த சுவாரஸ்யத்தை தந்தது எனலாம். தானும் ஒரு சிறந்த குடும்பத் தலைவியாய் இருக்க வேண்டும் என்று மனதிற்குள் எண்ணிக் கொள்வாள்.

ஸ்ரீ ராமும் குந்தவையும் இது நாள் வரை தங்களின் எண்ண ஓட்டத்தை , அதிக வார்த்தை பரிமாற்றங்கள் இன்றியே வெளிப் படுத்திக் கொண்டதும், ஒவ்வொரு தடவையும் ஒருவரின் மனதில் இருப்பதை அடுத்தவர் அதிக விளக்கங்கள் தேவை இன்றி சரி வரப் புரிந்து கொள்வதும் குந்தவைக்கு ஆரம்பம் முதல் ஆச்சரியத்தை தந்து கொண்டே இருந்தது . ஆனால் எந்நிலையிலும் தானும், தன்னால் அடுத்தவரும் காயப் பட்டுவிடக் கூடாது என்பதில் மாத்திரம் குந்தவை உறுதியுடன் இருந்தாள். எனவே அவனிடம் அவசரப் பட்டு தன்னுடைய விருப்பத்தை சொல்லிவிடக் கூடாது என்பதில் அவள் பிடிவாதமாய் இருந்தாள்.

திருமணம் என்பது விளையாட்டு அல்ல ..முதலில் பிடித்திருக்கிறது என்று சொல்லி, ஆசை காட்டி விட்டு பிறகு சந்தர்ப்பம், சூழ்நிலைகளின் மீது பழி போட்டு திருமணத்தை மறுத்து விடுவதற்கு ‘வாழ்கை ஒன்றும் திரைப்படம் அல்ல , நினைத்தபடி சீன்களை மாற்றிக் கொண்டு போவதற்கு ‘ . மனிதர்களின் உணர்வுகள் மனிதர்களாகவே மதிக்கப் படவேண்டியவை என்று அவள் கருதினாள். பல நேரங்களில் நாம் சிறு சிறு உணர்வுகளுக்கு மதிப்பு அளிப்பதில்லை . அவற்றை taken for granted ஆக எடுத்துக் கொள்கிறோம் என்று அவள் கருதுவாள்.

இப்படித் தான் கோமதியின் பெரியம்மா மகன் தன் திருமணத்தை பெண்ணின் மனதை பற்றிக் கொஞ்சமும் அக்கறை இல்லாமல் நிறுத்தி இருந்தான். அந்த சமயத்தில் அவள் கோமதியிடம் செய்த வாக்குவாதங்கள் கேட்டு ருக்மணியே கூட அசந்து தான் போனாள் எனலாம். கார்த்திக்கும் ருக்மணியும் குந்தவையிடம் அது குறித்து பல சமயங்களில் பேசி, கோமதி அவர்களின் குடும்பத்தாரின் மீது தவறு ஒன்றும் இல்லை; அது தான் நடைமுறையில் சாத்தியம் என்று சொல்லி உலக நடப்புகள் பற்றி நிறைய விஷயங்கள் பேசி இருக்கிறார்கள் .

அவை எல்லாம் இப்போது குந்தவைக்கு அட்சரம் பிசகாமல் நினைவிற்கு வந்தது. மேலும் ஸ்ரீ ராமின் அருகாமையில், நடுநிலைமையில் யோசிக்க அவள் மனது வழக்கம் போல தகராறு பண்ணுவதும் அவளுக்குப் புரியவே செய்தது . தன்னை நன்கு உணர்ந்த ஸ்ரீ ராமிடம் தன்னுடைய உடல் நிலயை பற்றி எடுத்துக் கூறினால், நிச்சயம் அவன் புரிந்து கொள்வான் என்பதில் அவளுக்கு சந்தேகம் துளியும் இல்லை. தன் மீது அவனுக்கு உடல் சார்ந்த சந்தர்பவாத காதலை விட , உள்ளம் சார்ந்த உண்மையான காதலே அதிகம் இருக்கும் என்று தான் உறுதியாக நம்புவது அவளுக்கே அந்த நிலையிலும் அதிகப் படியாய் தோன்றினாலும் அபத்தமாய் தோன்றவில்லை .

எப்படி இருந்தாலும் உண்மை அதுதான் என்று அவள் உள் மனது பெருமிதமாய் உணர்ந்தது. ஆனால் அது மகிழ்ச்சி தருவதற்கு பதில் அன்றைக்கு ஏனோ அவளுக்கு குற்ற உணர்ச்சியை தான் அதிகம் தூண்டுவித்தது. அவளின் இது குறித்தான சிந்தனைகள் ஏனோ அவளை அதிக சுயநலக் காரப் பெண்ணாக உருவகப் படுத்திக் காட்டுவது போன்று இருந்தது.

தனக்கு ஒரு குறை பாடு இருப்பது தன்னை சந்திப்பதற்கு முன்பு ஸ்ரீ ராமிற்கும் அவனின் குடும்பத்தாருக்கும் தெரிந்து இருந்தால் தங்களின் திருமணம் குறித்தான பேச்சு வார்த்தைகள் நடப்பது சாத்தியமான ஒன்றா என்று கேள்வி கேட்டது அவள் மன சாட்சி . அவனை சந்திக்குமுன் ஸ்ரீ ராமிற்கே ஏதேனும் இது போன்ற இருதயக் குறை பாடு இருப்பது தெரிந்திருந்தால் , தன்னுடைய பெறோரும் சரி தானும் சரி ..இந்தத் திருமணத்தில் ஈடுபாடு காட்டி இருப்போமா என்கிற எண்ணம் அவளை வாட்டி வதைத்தது.

உண்மையை ஒப்புக்கொள்ள வேண்டும் என்றால், அவளின் பெற்றோர்கள் இருவரும் நிச்சயம் இந்த திருமணத்தில் ஈடுபாடு காட்டி இருக்க மாட்டார்கள். தனக்கும் அவனை காண நேரிடும்போது பரிதாபமே ஏற்பட்டு இருக்கும். பரிதாபம் காதலாய் உருவாகும் சாத்தியம் ஆயிரத்தில் ஒரு சதவிகிதமாய் தான் இருந்திருக்கும் என்று அவள் உள் மனது ஆயிரம் காரணங்களை கூறியது. எனவே தான் ஸ்ரீ ராம் தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று எதிர் பார்ப்பது வெகு சுயநலமான சிந்தனை என்று மனம் வெம்பினாள் குந்தவை.

அதே நேரத்தில் இப்போது ஸ்ரீ ராமிற்கு ஏதேனும் மிகப் பெரிய குறை பாடு இருப்பது தெரிய வந்தால் நிச்சயம் தன் மனம் அவனை விட்டு விலகாது என்றும் தனக்குத் தானே மறு மொழி கூறிக் கொண்டாள் குந்தவை.

இப்படி தனக்குள் கூறிக் கொண்டபோதும், நிஜத்தில் ஸ்ரீ ராம் ஆரோக்கியமானவனாய் இருக்கும்போது தான் இப்படி நினைப்பதில் என்ன பெரிய நியாயம் வந்து விடப் போகிறது ..இங்கு தான் தானே உடல் நிலை பாதிக்கப் பட்டு இருக்கும் ஒரு பெண் … இது தன் குறை பாட்டினை நியாயப் படுத்திக் கொள்வது போன்று இருக்கிறது ” என்று வருத்தத்துடன் நினைத்துக் கொண்டாள் குந்தவை. அவனை இழக்க மனம் இல்லாத தன் மனம் படும் அவஸ்தையை எண்ணி அந்த நிலையிலும் சிரிக்கவே தோன்றியது குந்தவைக்கு.

விக்ரமின் கேள்விகளுக்கு பதிலளிக்கையில் ருக்மணி தடுமாறியதும் அவளுக்கு நினைவிற்கு வந்தது. ருக்மணி ‘ தாங்கள் பெண்ணின் குறையை மறைத்து வைத்து அவளின் திருமணத்தை அவசரமாக நடத்த ஆர்வப் படுகிறோம் ‘ என்று விக்ரம் நினைத்துவிடப் போகிறான் என்று அந்த நிலையிலும் ஒரு வித குற்ற உணர்வுடன் வருந்தியது குந்தவைக்கும் புரியவே செய்தது. இப்போது ருக்மணி மற்றும் கார்த்திக்கின் வாதம் எதுவாய் இருக்கும்..அன்று கோமதியின் குடும்பத்தினர் செய்தது சரி என்று சொன்னவர்கள் இன்று என்ன கூறுவார்கள் என்று அவர்கள் பங்கிற்கும் சேர்ந்து யோசனை செய்தாள் குந்தவை.

கோமதியின் பெரியம்மா மகனிற்கு ஒரு வரன் அமைந்து எல்லோருக்கும் பிடித்திருந்ததும், திருமணம் ஏறத் தாழ நிச்சயம் ஆன சூழ்நிலையில், மேற்கொண்டு விசாரித்ததில் பெண்ணின் தங்கைக்கு மூளை வளர்ச்சி குறைவு என்று தெரிய வந்தது. அது பற்றி மருத்துவரிடம் விசாரித்ததில் , அந்த நோய் குடும்பத்தில் பரம்பரை ரீதியாய் வரும் வியாதி என்று அவர் கூறியதால், கோமதியின் பெரியம்மா வீட்டில் , நடக்க இருந்த அந்த திருமணத்தை நிறுத்தி விட்டார்கள். பின் சில நாட்களில் வேறு ஒரு பெண்ணுடன் அவளுடைய அண்ணனுக்கு திருமணத்தை நடத்தியும் வைத்து விட்டார்கள்.

அந்தப் பெண்ணின் நிலயை எண்ணி அப்பொழுது அதிகம் வருந்தி இருந்தாலும் , இப்பொழுது தன்னுடைய நிலை அந்தப் பெண்ணின் நிலயை விட பரிதாபகரமாகத் தோன்றியது குந்தவைக்கு. அந்தப் பெண்ணிற்காவது பரவாயில்லை, குறை அவளின் தங்கையிடம் தான் . இங்கு தனக்கே அல்லவா குறை பாடு உள்ளது . அதோடு தன்னுடைய குறை பாடு கன்ஜெனிடல் என்றும் , பிறப்பிலேயே வந்திருக்க வாய்ப்புகள் உண்டு என்று விக்ரம் கூறியது ஏனோ அவள் மனதை அதிகம் தாக்கியது .

ஆனால் திருமணம் நின்று போன அந்தப் பெண்ணிற்காக தான் மனம் வருந்த வில்லையா.. அது நியாயமே இல்லை என்று தான் குமுற வில்லையா என்று தன்னையே மீண்டும் எதிர் கேள்வி கேட்டுக் கொண்டாள் குந்தவை.

‘இந்த உலகில் குறை பாடுகள் அற்ற மனிதர்களே குறைவு..இதில் குடும்பத்தில் இருப்பவர்களும் குறை பாடுகள் இன்றி இருக்க வேண்டும் என்று எதிர் பார்ப்பது பயித்தியக் காரத்தனம் மட்டும் இல்லை அதிக சுயநலம் நிறைந்த அரக்கத் தனம் . திருமணம் நின்று போனதும் அந்தப் பெண்ணிற்கு எத்தனை வேதனையாய் இருந்து இருக்கும். எத்தனை கனவுகள் இருந்திருக்கும் அவளுக்கு ;

இனி அந்தப் பெண்ணின் கதி .. ? இப்பொழுது மற்றவர்களுக்கும் அந்தப் பெண்ணை திருமணம் செய்து கொள்ள தயக்கமாய் இருக்குமே.. ‘, என்று அவள் உண்மையான ஆதங்கத்துடன் வாதிட்டபோது , கோமதி அதற்கு , ‘ அந்தப் பெண்ணிற்கு ஏற்றவன் ஒருவன் நிச்சயம் பிறந்திருப்பான் ; அவனை அவள் திருமணம் செய்து கொள்வது தான் முறை .. கடவுள் எல்லாம் பார்த்து பார்த்துதான் முடிச்சு போடுகிறார் ‘ – என்று சர்வ சாதாரணமாய் கூறினாள்.

அதை கேட்டு கொதிப்படைந்து, தான் ” நீ என்ன சொல்ல வருகிறாய் கோமதி ? அவளுக்கு ஏற்றது போன்ற ஒருவனை என்றால் ? .. அவளும் வேறு ஒரு குறை பாடு உள்ளவனையோ அல்லது குடும்பத்தில் இது போன்ற குறை பாடுகள் உள்ள மற்றொருவனையோ பார்த்து திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்கிறாயா ? பிறகு அவளின் பரம்பரையே குறை பாடுகள் நிறைந்த ஒன்றாய் மாறிவிடாதா ? நம்மில் எத்தனை பேருக்கு நம் பரம்பரை பற்றிய போதிய அறிவு இருக்கிறது .. !!எத்தனையோ வியாதிகள் இரண்டு மூன்று தலை முறையை தாண்டிக் கூட மீண்டும் தலை தூக்கும் என்பது மருத்துவ ரீதியாக நாம் எல்லோருக்கும் தெரிந்த ஒன்று தானே !! ‘ என்று கோமதியிடம் வாதிட்டது குந்தவைக்கு தெளிவாக நினைவில் இருந்தது

அவ்வாறு குந்தவை வாதிட்ட போது, கோமதி , ” நீ வேண்டுமானால் குறை உள்ள ஒரு மனிதனை பார்த்து திருமணம் செய்து கொள் குந்தவை .. எங்கள் பெரியம்மா குடும்பத்தினருக்கும் சரி , என்னுடைய அண்ணனுக்கும் சரி .. தாங்கள் செய்வது தவறு என்று பட வில்லை..எனக்கும் அந்த பெண்ணை எண்ணி வருத்தமாய் இருக்கிறதே தவிர, நான் என் அண்ணனின் குழந்தைகளின் எதிர் காலத்தை பற்றியும் அவர்கள் அக்கறை படுவதில் தவறு இல்லை என்றே கருதுகிறேன்.. திருமணம் செய்து கொள்வது நமது சமுதாயத்தைச் பொறுத்தவரையில் தங்களுடைய சந்ததிகளை வளர்க்கும் ஒரு கலாசார அமைப்பு என்பதை யாராலும் மறுக்க முடியாது..இது போன்று விசாரித்து பின் திருமணத்தை நடத்துவது என்பது வழி வழியாய் நமது சமுதாயத்தில் நடக்கும் ஒரு சம்பிரதாயம்.. இதில் சமூக நலனை தான் நான் பார்கிறேன்.. எனக்கு இது சுய நலமாய் பட வில்லை ..” என்று ஆணித்தரமாய் கூறியதும் அதனால் கோபம் கொண்டு இவள் கோமதியிடம் பேசாமல் மூன்று நாள் முகத்தை திருப்பிக் கொண்டதும், இன்று அவளை அலை கழித்து..

ஆனால் கோமதி சொன்னதையும் குந்தவையும் அப்பொழுது யோசனை செய்தே பார்த்தாள்..

தான் ஒரு மூளை வளர்ச்சி இல்லாத ஒருவனை முழு மனதுடன் ஒப்பி திருமணம் செய்து கொள்வது லேசில் நடக்குமா .. ? இல்லை கண் பார்வை இல்லாத ஒருவனையோ , அல்லது பிறவியிலேயே வாய் பேசாது காது கேட்காது இருக்கும் யாரையாவது திருமணம் செய்து கொள்வது தான் சுலபத்தில் நடக்கும் காரியமா.. ? அப்படி யாரையாவது சந்த்தித்து ஏதேனும் தெய்வீகக் காதல் கீதல் என்று ஏதாவது ஏற்பட்டால் தான் உண்டு.. மற்றபடி , தான் விரும்புவது போன்று குடும்பத்தாரால் அங்கீகரிக்கப் படும் அரேஞ்டு மாரியேஜ் சிஸ்டத்தில் , ஏதேனும் குறை பாடுகள் நிறைந்த ஒரு மனிதருடன் தனக்கு திருமணம் நடப்பது என்பது எத்தனை சாத்தியக் குறைவு.. நிறைந்த ஒன்று !!

ஒருவேளை இப்படி அரேஞ்டு மாரியேஜ் செய்து கொள்வதே ஒரு விதத்தில் செப் பெட் (safe bet) என்று கருத வேண்டுமோ ..!! அதனால் தான் இன்னமும் பலரும் இந்தியாவில் இந்த அரேஞ்டு மாரியேஜ் சிஸ்டத்தை முழு மனதுடன் ஆதரிக்கிறார்களோ ? என்று அது குறித்து நிறைய யோசித்தும் நினைவிற்கு வந்தது..

பின் உண்மையில் தான் யாரை கலியாணம் செய்து கொள்ள விரும்புகிறோம் என்று தன்னுடைய மனசாட்ச்சியை நேர்மையாக சொல்லும்படி கேட்டதற்கு , ‘ அது பார்க்க நன்றாக இருக்க வேண்டும், நல்ல வேலையில் இருக்க வேண்டும் , கவுரவமான குடும்பத்தை சேர்ந்தவனாய் இருக்க வேண்டும் , விளையாட்டு உடற் பயிற்ச்சியில் அக்கறை கொண்டவனாய் இருக்க வேண்டும், இசையில் நாட்டம் இருப்பவனாய் இருக்க வேண்டும் , தன்னை புரிந்து கொண்டு தனக்கேற்ற ஒரு தோழனாய் இருக்க வேண்டும் .. என்று இடை நிறுத்தங்களில் நிற்காத ஆம்னி பஸ் போன்று அது பாட்டிற்கு நிற்காமல் எக்கச்சக்கமாய் மிகப் பெரிய ‘வேண்டும் ‘ லிஸ்டை தயார் செய்து கொண்டு போனதை எண்ணி தானே வெட்கம் அடைந்தாள். பிறகு தானாகவே கோமதியிடம் சென்று பேசத் துடங்கியபோதும் தன் கருத்தை அவளுக்குத் தெரிவிக்கவே செய்தாள்.

கோமதியிடமும் அன்று இதை தான் சொன்னாள். ‘கபிலிற்கு பார்த்திருக்கும் பெண்ணின் தங்கைக்கு இது போன்று ஏதேனும் குறைபாடு இருப்பது தெரிந்திருந்தால் நிச்சயம் நான் அவர்களின் திருமணத்தை வரவேற்கவே செய்வேன் ..கபிலும் சரி என்னுடைய குடும்பத்தாரும் சரி ..அந்தப் பெண்ணை அவளுடைய சகோதரியின் குறை பாட்டை காரணம் சொல்லி நிராகரித்து இருக்க மாட்டார்கள் .. அதற்கு மாற்றாக வேறு என்ன செய்ய முடியும் என்று யோசித்து இருப்பார்கள் .. எனவே உங்கள் அண்ணன் செய்ததை பற்றி பேசி , நாம் எதற்கு வீணாய் மனதை வருத்திக் கொள்ள வேண்டும் கோமஸ் ? ‘ , என்று கேட்டு சமாதானமாய் போனது நினைவிற்கு வந்தது. .

அதே நேரத்தில் , தான் ஒருவனை விரும்பி திருமணத்திற்கு ஒப்புதல் அளித்திருந்து பின் அவனுக்கு இது போன்று அவனுக்கே தெரியாததொரு குறை பாடு இருக்க நேர்ந்திருந்தால் நிச்சயம் அவனை தான் திருமணம் செய்து கொண்டே இருப்பேன் ..பெற்றோர்கள் எதிர்த்தாலும் கவலை பட மாட்டேன் ..என்று தனக்குள் மீண்டும் கூறிக் கொண்டாள்.

தன்னுடன் தானே இப்படி மல்லுக் கட்டுவது அவளுக்கு விசித்திரமாய் இருந்தது . என்னதான் முயன்றாலும் தன் மனது தனக்கு மட்டுமே சாதகமாய் திரும்ப திரும்ப யோசனை செய்வது வேறு குந்தவைக்கு சலிப்பை தந்தது. ஸ்ரீ ராமிற்கு சாதகமாகவும் தான் யோசனை செய்ய வேண்டும் என்று தன்னையே ஆழமாய் கடிந்து கொண்டாள் அவள். எனவே தன மனப் போராட்டங்களை யாரும் உணராத வகையில் மறைக்க , ஸ்ரீ ராமை நோக்கி ‘ இந்நேரத்தில் இங்கு என்ன செய்கிறாய் நீ ? ‘ என்பது போன்றதொரு பட்டும் படாததொரு வெற்றுப் பார்வையை வீசினாள் குந்தவை.

வந்தது முதல் எதுவும் பேசாமல் ஒரு நாற்காலியில் அமைதியாய் உட்கார்ந்து கொண்டு , அனிச்சையாய் காதோரம் சுருண்டு தொங்கும் தன்னுடைய கூந்தலை பிடித்துத் திருகியபடி எதையோ தீவிரமாய் யோசித்துக் குந்தவையை பார்க்க ஸ்ரீ ராமிற்கு என்னமோ போலிருந்தது. அவள் மனதில் தன்னை எண்ணி மிகவும் வருந்துகிறாள் என்று மாத்திரம் அவனுக்குப் புரிந்தது. தன்னை நோக்கி வெற்றுப் பார்வையை சிந்தினாலும், முகம் அமைதியாய் இருப்பது போன்று காட்டிக் கொண்டாலும் அவளின் கை விரல்களின் கதகளியில் இருந்து அவளின் உள்ளத்தில் நடந்து கொண்டிருக்கும் உணர்ச்சிக் கொந்தளிப்புகள் ஸ்ரீ ராமிற்கு தெளிவாக விளங்கியது.

குந்தவையின் பார்வைக்கு தகுந்த பதிலை மனதிற்குள் தயார் செய்தபடி, ஏற்கனவே சரியாக இருந்த படுக்கை விரிப்பினை மீண்டும் ஒரு தரம் நீவி சரிசெய்து , குந்தவை படுக்க தயாராக வைத்தான் ஸ்ரீ ராம் .

‘ இப்படி வந்து ரிலாக்ஸ்டாய் படுத்துக் கொண்டே , என்னிடம் என்ன வாதிடலாம்னு நிதானமாய் யோசிக்கலாம் குந்தவை , நீ என்ன சொன்னாலும் , இப்போதைக்கு என்னால் உருப்படியாய் அதை மறுத்து பேச முடியாது .. ஏன்னா உன்னை போல லா எனக்கு எலக்டிவ் சப்ஜெக்ட் எல்லாம் இல்லை .. ஸோ உன்னை போல பாயின்ட் பாயின்டாய் பேசனும்னா, முதலில் என்னோட பெர்சனல் லாயரை நான் கன்சல்ட் பண்ணனும் ..அப்பறம் தான் ஏதோ கொஞ்சம் ரீசனபிலாய் உன்னோடு ஆர்கியூ பண்ண முடியும் .. ‘ என்று சீரியசாய் முகத்தை வைத்துக் கொண்டு , தன்னை பார்வையினாலேயே கேள்விகள் கேட்கும் குந்தவையிடம் பேசினான் ஸ்ரீ ராம் .

தீவிர யோசனையில் இருந்த படியால் குந்தவை, ‘ லா ஒன்னும் எனக்கு எலக்டிவ் சப்ஜக்ட் எல்லாம் இல்லை .. அகவுண்டன்சி தான் ‘ என்று வாய் விட்டு உளறி பின் அவன் தன்னுடன் விளையாடுகிறான் என்று உணர்ந்து முகம் சிவந்தாள் .

அவளின் பதிலை கேட்டு அங்கிருந்த எல்லோருக்கும் சிரிப்பு வந்தது. அவனை பார்த்தும் குந்தவையின் முகத்தில் ஒருவித இருள் சூழ்ந்ததை ருக்மணியும் கவனிக்கத் தவறவில்லை. சூழலின் இறுக்கத்தை மேலும் தளர்த்த விக்ரம் முன் வந்தான்.

‘என்ன ஸ்ரீ ராம் .. உங்களை ரொம்ப நேரம் காக்க வைத்து விட்டோம் இல்லை…! ஸோ சாரி .. குந்தவைக்கு பல்ஸ் எல்லாம் இப்ப ரொம்ப நார்மலாய் வந்து விட்டது .. ஜம் என்று நடந்து வந்த, அவளை பார்த்தே நீங்கள் தெரிந்து கொண்டு இருப்பீர்கள் இல்லை.. .! அவள் உடல் நிலை பாதித்ததற்கு காரணம்..திடீரென்று கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டு இருந்திருப்பாள் என்று நினைக்கி.. ‘, என்று கூறிக்கொண்டு போன விக்ரமை குந்தவையின் பேச்சு நிறுத்தியது.

‘அவர்கள் இருவரும் மதியமே இங்கு வந்து விட்டார்கள் விக்ரம் ..இப்பொழுது மணி இரவு பதினொன்றை வேறு தாண்டி விட்டது .. ‘ என்று ஆதங்கமாய் சொன்னவள் , ருக்மணியை நோக்கித் திரும்பி , ‘அவர்கள் ரெண்டு பேரும் ஏதாவது சாப்பிட்டார்களா அம்மா ? ‘ என்று அக்கறையுடன் விசாரித்தாள் .

“கடவுளே ..நீங்கள் இருவரும் வந்து ரொம்ப நேரம் ஆகி விட்டது இல்லை.. உங்களை பற்றி நினைப்பெதும் இல்லாமல் இருந்து விட்டேனே .. ! குந்தவை வந்து எனக்கு நினைவு படுத்தும் படி ஆகிவிட்டதே ஸ்ரீ ராம்.. ! ஐ யாம் வெரி சாரிப்பா … இன்று உன் பிறந்த நாள் வேறு .. இன்றைக்கு இப்படி நீ வெறும் வயிற்றுடன் இருப்பது நல்லது இல்லை .. நீயும் மாதங்கியும் விக்ரமுடன் வீட்டிற்கு போய் ஏதேனும் சாப்பிட்டு கொஞ்சம் ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள் .. நாங்கள் நாளை வந்து விடுவோம் ” என்று ஸ்ரீ ராமை பார்த்து தர்ம சங்கடத்துடன் பேசினாள் ருக்மணி.

” நீங்க கவலை படுவது போல் எல்லாம் ஒன்னும் இல்லை ஆண்ட்டி ..ஐ ஆம் பெர்பெக்ட்லி ஆல் ரைட் .. நீங்கள் தான் எங்களை கவனிக்கணும் என்கிற அளவிற்கு நாங்கள் ஒன்னும் சின்னக் குழந்தைகள் இல்லை ..முதலில் குந்தவைக்கு என்ன வேண்டும் என்று கேளுங்கள்.. அவள் ஏதாவது சாப்பிடலாமா .. கீழே கான்டீன் ஒன்னு இருக்கு .. சூடாய் இட்லி தோசை எந்நேரமும் கிடைக்குமாம் ..மாதங்கி சொன்னாள் “, என்று புன்னகையுடன் சொன்னான் ஸ்ரீ ராம்.

குந்தவையை பற்றிக் கேட்டுத் தெரிந்து கொள்ளத் துடிக்கிறான் என்பது புரிந்தது ருக்மணிக்கு. நாகரீகம் கருதி வெளிப்படையாய் கேட்காமல் இருந்தாலும் அவனுக்கு குந்தவையே விளக்கி விடுவாள் என்று ருக்மணியும் நினைத்துக் கொண்டார். எனவே ‘ அவளுக்கு ரெண்டு இட்லி தரலாம் ஒன்னும் தப்பு இல்லை என்று விக்ரம் சொன்னார் .. தென், இப்போதைக்கு பயப்படும்படி குந்தவைக்கு ஒன்றும் இல்லை ஸ்ரீ ராம்…. ‘

‘தலைக்கு வந்தது தலைப்பாகையுடன் போயிற்று என்று நினைக்கிறேன் .. இனியும் எல்லாம் நல்லபடியே நடக்கும் என்று நம்புகிறேன் .. நீங்கள் மூவருமே இன்றிரவு நமது வீட்டிலேயே தங்கி விட்டு நாளை காலை ஊருக்கு கிளம்பலாம் இல்லையா .. வீட்டில் எல்லாம் இருக்கு..சமைத்ததை மைக்ரோ வேவில் சுட வைத்து சாப்பிடலாம் ..இல்லை என்றால் கீழே ஹோட்டலில் கூட சாப்பிட்டு விட்டு வீட்டிற்கு போகலாம் ..உங்களுக்கு இதில் ஒன்றும் பிரச்சனையை இல்லையே .. ‘ .

மிகவும் தர்ம சங்கடமாக இருந்தது ருக்மணிக்கு. மாதங்கி வீட்டில் கொஞ்சம் ஸ்வீட் வகையறாக்களை சாபிட்டதுடன் சரி. ஸ்ரீ ராம் அதுவும் இல்லை. அவர்களை பற்றிக் கவனிக்கும் மன நிலையில் தான் இல்லை என்றாலும் , ஸ்ரீ ராமை மாதங்கி வாங்கி வந்த காப்பியை யாவது குடிக்க வைத்திருக்கலாம் என்று மனதிற்குள் நொந்து கொண்டாள் .

தன்னுடன் தொலை பேசியில் பேசியபோதும் ஸ்ரீ ராம், ‘ நீங்கள் எப்படியும் ஹெவியாக தான் டின்னர் ரெடி செய்து இருப்பீர்கள் அத்தை.. எனவே நானும் மாதங்கியும் லஞ்சிற்கு வெளியில் ஏதும் சாப்பிடுவதாக இல்லை.. எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் வீட்டிற்கு வந்து விடுகிறோம் அத்தை .. வந்து உங்கள் டின்னரை ஒரு கை பார்ப்பது தான் எங்கள் இருவரின் முக்கிய வேலையே ..’ என்று கலகலப்பாய் கூறினான்.

“அப்படியெல்லாம் இருந்து விடாதீர்கள் .. குந்தவை வருவதற்கு சற்று நேரம் ஆகலாம் .. எனவே இருவரும் மதியம் கோவிலுக்கு அருகில் இருக்கும் பங்கஜ பவனில் இலேசாக ஏதேனும் சாப்பிடுங்கள். ஹோட்டல், மெஸ் போல பார்வைக்கு சுமாராக இருந்தாலும், அதை நடத்தும் தம்பதிகள் இருவரும் வெகு சுத்தமாய் அதை பராமரிப்பார்கள். உணவையும் வெகு நேர்த்தியுடன் சுகாதாரமாய் தயாரிப்பார்கள் ” , என்று அக்கறையுடன் தான் பேசியதும் அவளுக்கு நினைவிற்கு வந்தது. கூடவே ” இந்தக் காலத்தில் யார் பெரியவர்கள் சொல் பேச்சை கேட்கிறார்கள் ” என்று நினைத்துக் கொண்டு வெகு தர்ம சங்கடமாய் ஸ்ரீ ராமை நோக்கினாள் ருக்மணி.

ருக்மணியின் எண்ண ஓட்டம் புரிந்ததோ என்னமோ …’ கவலையே படாதீர்கள் அத்தை ..நீங்கள் சொன்னது போல மாதங்கியை அந்த பங்கஜ பவனிற்கு அழைத்துச் சென்று மதியம் ஸ்பெஷல் ரச வடை மற்றும் நெய் கிச்சடியை வாங்கிக் கொடுத்தேன் ..அவளிற்கு இது போன்று ஹோட்டல்களில் சாப்பிடுவது தொழில் ரீதியாகவும் ரொம்பப் பிடிக்கும் ..எனவே அவளும் இது போன்ற வாய்ப்புகளை தவற விடுவது இல்லை.. உங்கள் வீட்டிலும் நீங்களே பார்த்து இருப்பீர்களே ..! காபி ஸ்நாக்ஸ் ..என்று எதையும் நாங்கள் விட்டு வைக்க வில்லை தானே.! .சோ நத்திங் டு வொர்ரி .. எங்கள் இருவருக்குமே கொஞ்சம் கூட பசி இல்லை ‘ என்று ஸ்ரீ ராம் உற்சாகமாய் கூறினான்.

மாதங்கிக்கு தேவை அற்ற நேரத்தில் இடையில் பேசிப் பழக்கம் இல்லை . அவன் சொல்லியது போல பங்கஜ பவனில் ரச வடையும் கிச்சடியும் சாப்பிட்டது என்னவோ உண்மையே என்றாலும் ஸ்ரீ ராம் அங்கு எதையும் எடுத்துக் கொள்ள வில்லை என்பதுவும் உண்மை. அவளும் பேருக்கு மாத்திரமே சற்று கொறித்தாள் எனலாம் . மாதங்கிக்கு சிறிய ஹோட்டலில் இருந்து பெரிய ஹோட்டல் வரை , வாய்ப்பு கிடைத்தால் வெளியில் செல்லும் போது அவர்களுடைய நிர்வாகத்தினையும், உணவின் தரத்தினையும் நோட்டம் விட்டபடி இப்படி சாப்பிடுவது பிடிக்கும். இது பல நேரங்களில் அவர்கள் குடும்ப தொழிலில் பல புதிய யுத்திகளை புகுத்தி அதை பலப் படுத்துவதில் உதவியாக இருந்து வருகிறது.

ஆனால் குந்தவையின் வீட்டில் ருக்மணி தயாரித்து வைத்திருந்த பலகாரங்களை பார்த்தும் பசியுடன் ஆர்வமும் சேர்ந்துகொள்ள அவற்றில் சற்று எடுத்துக் கொண்டாள் மாதங்கி . ஸ்ரீ ராம் ருக்மணியின் வீட்டில் ஸ்நாக்சும் எடுத்துக் கொள்ளாதது அவளிற்கு நினைவிற்கு வரவே தான் ஹாஸ்யமாய் ஏதேனும் சொல்லி அவன் இரவும் பட்டினியாய் இருந்து விடப் போகிறான் என்று ஏதும் சொல்லாமல் சும்மா இருந்து விட்டாள். அவனிற்கு குந்தவை அங்கு இருக்கும் வரையில் மருத்துவ மனையை விட்டு வரவே பிடிக்காது என்று நன்றாக புரிந்தது. பார்த்து சில நாழிகை கூட ஆகாத நிலையில், விக்ரம் தன்னை இந்த அளவிற்கு கவர்ந்து இருக்கையில் குந்தவையின் நினைப்பில் ஸ்ரீ ராம் தவிப்பதில் நியாயம் உள்ளது என்று மாதங்கியும் உணரவே செய்தாள்.

‘ விக்ரம் .. ஸ்ரீ ராமும் மாதங்கியும் நம்ம வீட்டிற்கு விருந்தினர்களாய் வந்தார்கள் . .அவர்களுக்கு பெரிதாக உபசரணை செய்யும் நிலையில் நாம் இல்லாமல் போனாலும் , இந்நேரம் வரை அவர்கள் சாப்பிடக் கூட எதுவும் ஏற்பாடு செய்யாமல் இருப்பது நன்றாக இல்லை .. உங்களுக்கு விருப்பம் இருந்தால் இன்று இரவு எனக்குத் துணையாக ஹாஸ்பிடலில் நீங்கள் தங்கி விடுகிறீர்களா ? கபில் வேறு இன்னமும் சில மணி நேரத்தில் வீட்டிற்கு வந்து விடுவான்.. அவர்கள் வரும்போது அம்மா வீட்டில் இல்லாமல் நீங்கள் மூவரும் இருந்தால் , எனக்கு ஏதேனும் விபரீதமாய் நடந்து விட்டதோ என்று எண்ணி அப்பாவும் கபிலும் பயந்து விடுவார்கள் .. நீங்கள் என்னுடன் இருந்தால் அம்மாவும் சற்று நிம்மதியாய் இருப்பார்கள்.. இந்தியாவின் முன்னணி டாக்டரை விட வேறு யார் என்னை பத்திரமாய் பார்த்துக் கொள்ள முடியும் .. ‘ . குந்தவை இவ்வாறு சொன்னதும் விக்ரமே கூட அசந்து தான் போனான். எத்தனை சாமர்த்தியமாய் தன்னுடன் தனிமையில் பேசுவதற்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொள்கிறாள் இந்தக் குந்தவை என்று அவனால் வியக்காமல் இருக்க முடியவில்லை.

அவன் ருக்மணியை நோக்கித் திரும்ப , ருக்மணி குந்தவையின் பேச்சில் இருந்த நியாயம் உரைக்க ஸ்ரீ ராமை பரிதாபமாய் பார்த்தாள். அவளுக்கு ஸ்ரீ ராம் இன்று குந்தவையை ப்ரபோஸ் பண்ணப் போகிறான் என்று நன்றாகவே தெரியும். குந்தவைக்கும் அவனை பிடித்திருக்கிறது என்பதையும் அவள் நன்றாக அறிவாள். எனவே ஸ்ரீ ராமை விருந்தாளிகள் என்று குந்தவை அழைத்ததில் ருக்மணிக்கும் வருத்தமே என்றாலும், கபிலை அழைத்துக் கொண்டு கார்த்திக் வரும் வேளையில் தான் இல்லாமல் இளையவர்கள் மூவரும் வீட்டில் இருக்க நேரிட்டால் கார்த்திக் நிச்சயம் பதட்டம் அடைவார் என்பதும் உண்மையாய் பட்டது .

ஏற்கனவே கார்த்திக்கிற்கு பி.பி வேறு சற்று அதிகப் படி இருப்பதினால் , அவர்கள் வரும் நேரத்தில் தான் வீட்டில் இல்லாமல் போனால் வேறு ஏதேனும் பின் விளைவுகள் ஏற்படலாம் ..திருமணத்திற்கு ஆறு நாட்கள் கூட இல்லாமல் இருக்கையில் நடக்கும் இவை ஏதும் நல்ல சகுனமாய் படவில்லை அவளுக்கு. எனவே ருக்மணியும் குந்தவையின் பேச்சை ஏற்றுத் தீரவேண்டியது கட்டாயம் ஆயிற்று. ஆனால் ஸ்ரீ ராமை ஒதுக்கி வைத்து பேசுவதில் அவருக்கு உடன் பாடு இல்லை.

‘ கபில் – காதம்பரியின் கலியாணம் முடியும் வரை விக்ரமே கூட நமக்கு விருந்தாளிகள் போலத்தான் குந்தவை. இதென்ன அந்தக் காலமா , திருமணப் பேச்சு முடிந்து விட்டாலே எல்லோரும் எல்லோருக்கும் சொந்தம் என்று கருதி உறவு பாராட்டுவதற்கு ..! திருமணம் முடிந்து கணவன் மனைவி என்று ஆனால் கூட ஒருவர் சுதந்திரத்தில் அடுத்தவர் தலையிடுவது தவறு எனும் நாகரீக காலத்தில் அல்லவா நாம் வாழுகிறோம் .. முறைப்படி பார்த்தால் விக்ரம் சம்பந்தி வீட்டை சேர்ந்தவர்.. அவரிடம் நாம் இப்படி கூடுதல் உபகாரம் எதிர் பார்ப்பது தான் சற்று அதிகப் படி உரிமை பாராட்டுவதாய் எல்லோருக்கும் தோன்றும் .. நம்முடைய அதிர்ஷ்டம் விக்ரமும் சரி ஸ்ரீ ராமும் சரி இப்படி எந்த வித அலட்டலும் , போலித் தனமும் இல்லாமல் இருப்பது ..” என்று புன்னகையுடன் கூறி முடித்தார் ருக்மணி.

குந்தவை, ருக்மணி சுட்டிக் காட்டும் பொருள் உணர்ந்து மேற்கொண்டு ஒன்றும் சொல்லாமல் கட்டிலில் சாய்ந்து கொண்டு ஓய்வெடுப்பது போல கண்களை மூடிக் கொண்டாள். கேட்டுக் கொண்டிருந்த மாதங்கிக்கு மாத்திரம் ஒன்றும் புரியாமல் தலை சுற்றுவது போல இருந்தது. ‘என்ன சொல்கிறார் இந்த ருக்மணி..தாங்கள் மட்டுமில்லை விக்ரமும் இன்னமும் அந்நியமே என்கிறாரா ? ‘.

ஸ்ரீ ராமிற்கு சிரிப்பே வந்தது. விக்ரமும் குந்தவைக்கு சரியானபடி பதிலளித்த ருக்மணியின் சாமர்த்தியத்தை மனதிற்குள் மெச்சிக் கொண்டான்.

‘ எங்களுக்கு அலட்டல் ஏதும் இல்லை என்று சொன்னதிற்கு ரொம்ப தேங்க்ஸ் அத்தை ..அதோடு குந்தவை சொல்வதும் ரொம்ப சரி.. கபில் வரும்போது நீங்கள் இருந்து நிலைமையை அவர்களுக்கு ஏற்றது போல எடுத்து சொல்லலாம்.. விக்ரம் ஹாஸ்பிடலில் இருந்து குந்தவையை பார்த்துக் கொள்வதே எனக்கும் ‘ரொம்ப்ப ..’ நிம்மதியை தரும் ..” என்று அசராமல் அழுத்தமாய் சொல்லி குந்தவையை ஒத்து ஊதிய ஸ்ரீ ராமை பார்த்து மாதங்கிக்கு குழப்பம் அதிகம் ஆகியது. தன்னை கொஞ்சமும் கண்டு கொல்லாமல் பேசும் அவனை வெளியில் அழைத்துச் சென்று மண்டையில் ஓங்கிக் குட்ட வேண்டும் போல இருந்தது.

துரைக்கு ரொம்ப நினைப்பு ..இதை தான் நினைப்புதான் பொழப்பை கெடுக்கிறது என்று சரஸ்வதி ஆண்ட்டி படித்து படித்து இவர்கள் மூவரிடம் சொல்வார்கள்.. மூவருக்கும் சரஸ் ஆண்ட்டி சொல்வது போல வாய் கொழுப்பு கொஞ்சம் அதிகப் படிதான் என்று மாதங்கி எண்ணி எரிச்சலடைந்தாள் . விக்ரம் அவளிடம் வழிவதும், குந்தவை ஸ்ரீ ராமை ஒதுக்கி வைத்து விக்ரமுடன் ஒட்டுறவாய் பேசுவதும் அவளுக்குப் பிடிக்க வில்லை.

சாதரணமாய் அவள் எப்படி யாருடன் பேசினாலும் தனக்கு ஒன்றும் இல்லை . ஆனால் இப்படி ஸ்ரீ ராமை வெறுப்பேற்றுவதற்கு என்று விக்ரமுடன் நெருங்கிப் பழகுவது பொதுவில் யாருக்கும் நல்லது இல்லை என்று அவள் நினைத்தாள். ஒரு சில நேரங்களில் மிகவும் முதிர்ந்த பெண்ணாய் பேசும் குந்தவை அடிப்படையில் தன்னை விட சிறு பெண் தான் என்பது இது போன்ற தருணங்களில் வெட்ட வெளிச்சமாய் புலப்படுவதாக மாதங்கிக்கு தோன்றியது.

ரொம்ப நேரம் பேசாமல் இருப்பதும் அவளுக்கு சிரமமாய் இருக்கவே , ஏதேனும் சொல்லியே தீரவேண்டும் என்று எண்ணிக் கொண்டவள், தீர்மான மாய் , ” உங்கள் யாருக்கும் அப்ஜக்ஷன் ஏதும் இல்லை என்றால், நானே குந்தவையுடன் இன்று இரவு தங்கி விடுகிறேனே..! எனக்கு புது இடம் என்றால் இரவு தூக்கம் சரியாய் வராது.. கீழே நமக்கு டீ வாங்கி வரும்போது கையோடு கொஞ்சம் மாகஜின்ஸ் வாங்கி வந்திருக்கிறேன் .. குந்தவைக்கு கொஞ்சம் உடம்பிற்கு முடிந்து ஏதேனும் பேச வேண்டும் என்றாலும் நாங்கள் இருவரும் பேசிக் கொள்வோம் .. இல்லாவிட்டால் நான் பாட்டிற்கு படித்துக் கொண்டு இருப்பேன் .. ” என்று கூறினாள்.

ருக்மணி ‘உனக்கு எதற்கம்மா சிரமம் ‘ என்றதும் , ருக்மணி தான் தங்குவதை பெரிதாக ஒன்றும் மறுக்க வில்லை என்று சந்தோசம் அடைந்து உற்சாகமாய் தான் எண்ணியதை தொடர்ந்து சொன்னாள் மாதங்கி.

“எனக்கொன்றும் சிரமம் இல்லை ஆண்ட்டி..விக்ரம் மருத்துவ மனையில் குந்தவையுடன் இருக்கிறார் என்று நீங்கள் சொன்னால் கூட மாமாவும் கபிலும் பயப படவே செய்வார்கள் ஆண்ட்டி ..அவர்கள் வரும்போது விக்ரம் உங்களுடன் இருந்தால் , “குந்தவைக்கு ஒன்றும் இல்லை ” என்று அவர்களுக்கு புரியும்படி நீங்கள் இருவருமாய் தெளிவாக எடுத்துச் சொல்லலாம் ..எனக்கும் குந்தவைக்கும் ஹாஸ்பிடலுக்கு பக்கத்தில் இருக்கும் ஹோட்டலில் இருந்து ஏதேனும் சிம்பிளாய் ‘டேக் அவே’ போல வாங்கிக் கொள்ளலாம் ஆண்ட்டி ..ஸ்ரீ ராம் உண்மையில் இன்று முழுதும் சரியாக சாபிட்டதாய் எனக்கு நினைவில் இல்லை ..அவன் நினைப்பெல்லாம் வேறு எங்கோ தான் .. ” , என்று சொல்லி சிரித்தவள், ‘ எனவே அவனை மாத்திரம் வற்புறுத்தியாவது சாப்பிட வைத்துவிடுங்கள் ‘ என்று அந்த சூழலுக்கு பொருத்தமாய் கூறி முடித்தாள் மாதங்கி.

மாதங்கியை மெச்சுவது போலப் பார்த்தான் ஸ்ரீ ராம். பெண்கள் பேசும்போது எப்படி பல விஷயங்களை ஒன்றுடன் ஒன்றாய் இணைத்து சாமர்த்தியமாய் பேசுகிறார்கள் என்று அவன் உள்ளுக்குள் வியந்தான். அவனுக்கு அங்கிருந்து செல்ல விருப்பமே இல்லை. என்றாலும் தான் அங்கு இரவு தங்குவது சரியாய் படாது என்று புரியவே செய்தது. ஆனால் குந்தவயினுடன் இருந்து அவளை உற்சாகப் படுத்துவது போல பேச வேண்டும் என்று ஆசையாய் இருந்தது.

அவள் கைகளை பிடித்துக் கொண்டு , ‘ நியாயமாய் நடந்துகொள்கிறேன் பேர்வழி என்று அசட்டுத் தனமாய் தங்களின் காதலை குறைவாய் மதிப்பிடத் தேவை இல்லை ‘ என்று அவளிடம் எடுத்துச் சொல்ல வேண்டும் போல தோன்றியது. அவளிடம் ‘தனக்கு பிறந்த நாள் பரிசாய், என்ன தர வேண்டும் என்று அப்படி கீழே விழுந்து புரண்டு யோசித்தாய் ‘ என்று கேலியாய் அவள் தலையினை கோதியபடி கேட்கவேண்டும் என்று துடிப்பாய் இருந்தது அவனுக்கு.

ஒன்றுமே பேசாமல் போனாலும் பரவாயில்லை ..அவள் தூங்கும் போது அவள் முகம் பார்த்துக் கொண்டு அவள் பக்கத்தில் அமைதியாய் உட்கார்ந்து கொண்டு தலையினை வருடியபடி இருந்தாலே போதும் ..வேறு ஒன்றும் தேவை இல்லை என்று நினைத்துக் கொண்டவன் குந்தவையை பார்த்து ‘அதிகம் யோசித்து அலட்டிக் கொள்ளாதே .. எல்லாவற்றையும் நிதானமாய் பேசிக் கொள்ளலாம் ‘ என்பது போன்ற அர்த்தம் பொதிந்த ஒரு பார்வையை வீசினான்.

தீவிரமாய் யோசித்துக் கொண்டிருந்த குந்தவை , சில நொடிகள் வைத்த கண் வாங்காமல் ஸ்ரீ ராமையே பார்த்தாள் . அவன் சொல்லாமலேயே அவன் சொல்ல வந்தது தனக்கு புரிவது போன்று மீண்டும் தோன்றுவதை எண்ணி குந்தவையும் வியப்புடன், விழிகள் அகல ஸ்ரீ ராமை நோக்கி சரி எனபது போன்று அவளையும் அறியாமல் தலையசைத்தாள்.

அவள் தன்னை புரிந்து கொண்டாள் என்பது புரிந்த உற்சாகத்தில் ஸ்ரீ ராமும், , ” இன்று கம்ப்ளீட் ரெஸ்ட் எடுத்துக் கொள் குந்தவை.. கலியாண வேலைகளை எல்லாம் நாம் தான் பார்த்துக் கொள்ள வேண்டும்.. பெரியவர்கள் எல்லோரும் நெடு நாள் கழித்து ஒன்று சேரும் வைபவம்.. லெட் தெம் என்ஜாய் ..எனவே அவர்களுக்கு அதிகம் வேலை வைக்காமல் நாம் தான் எல்லாம் பார்த்து பொறுப்புடன் செய்ய வேண்டும்.. நான் சொல்வது சரிதானே விக்ரம் ‘, என்று அவனை நோக்கிக் கேட்டவன், ருக்மணியிடம் , “மாதங்கி சொல்வதும் சரி தான் ஆண்ட்டி.. நான் வேண்டும் என்றால் மாதங்கியை அழைத்துக் கீழே சென்று அவர்கள் சாப்பிட ஏதேனும் வாங்கி வருகிறேன் ..நீங்கள் பேசி ஒரு முடிவிற்கு வாருங்கள் .’ .என்று அவர்கள் தனிமையில் பேசிக் கொள்ளவும் ஒரு வாய்ப்பினையும் ஏற்படுத்திக் கொடுத்தான்.

மாதங்கியை அழைத்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பிய ஸ்ரீ ராமை எண்ணி மனதிற்குள் மெச்சிக் கொண்டான் விக்ரம்.

நானும் கீழே சென்று தேநீர் அருந்தி விட்டு வருகிறேன் குந்தவை. உனக்கு விக்ரமுடன் ஏதேனும் பேச வேண்டும் என்றால் இப்பொழுது பேசிக் கொள் .. ஆனால் பேசுவதுடன் மாத்திரம் இன்று நிறுத்திக் கொள்..முடிவினை, இன்றைக்கே எடுத்துவிட வேண்டிய அவசியம் இல்லை ….இன்று இரவு நிம்மதியாய் தூங்கிப் பின் காலை தெளிந்த மனதுடன் மற்றுமொருமுறை எல்லாவற்றையும் யோசித்து தீர்மானித்துக் கொள்லலாம் .. முன்பே கூறியது போல, நானும் அப்பாவும் நீ எடுக்கும் எந்த ஒரு முடிவினையும் என்றைக்கும் மறுக்கப் போவது இல்லை ‘..என்று கூறி விட்டு அவரும் கீழே சென்றார்

-காதல் வந்துச்சோ

~~~~~~~~~~~~ * * * * * * * * ~~~~~~~~~~~~

என் சின்னஞ்சிறு கண்மணிக்கு ..

இந்த உரை கவிதையை எழுதி கிட்டத் தட்ட ஆறு வருடங்கள் ஓடி விட்டது. இந்தக் கவிதையில் சில மாற்றங்களை மாத்திரம் செய்து இங்கு பதிவிடுகிறேன்.. எனக்கு ஆண் குழந்தை பிறக்கும் என்று நான் கனவிலும் எதிர் பார்க்கவில்லை .. என் சகோதரிகள் இருவருக்கும் பெண் குழந்தைகள் மாத்திரமே ..எங்கள் வீட்டிலும் நாங்கள் மூவரும் பெண் குழந்தைகளே ..( ஹி ஹி .. எங்க அம்மா எங்களை இன்னமும் குழந்தைகள் என்று தான் சொல்கிறார்கள் :) ..)

பிரேமிற்கும் பெண் குழந்தை தான் வேண்டும் ..என்று ஆசை .. :D

இந்தக் கவிதையை நான் கன்சீவ் ஆன மூன்றாவது மாதத்தில் தொடங்கி சிட்னியில் இருந்த ஆறு மாதம் வரை அவ்வப் பொழுது கொஞ்சம் கொஞ்சமாய் எழுதியது .. கல்யாணமான புதிதில் நிறைய பெண்ணியல் குறித்த கவிதைகள் எழுதி இருப்பேன் ..

ஆணின் அடக்கு முறையால் பெண்கள் தவிப்பது போல.., வீட்டுக் கைதியாய் பெண்கள் வாடுவது போல அவை எல்லாம் இருக்கும் .. படித்த என்னுடைய சில நண்பர்கள் பிரேம் தான் என்னை ஏதோ கஷ்டப் படுத்துவதாய் நினைத்து தீவிர விசாரணையில் இறங்கி என்னை தொடர்பு கொள்ள ..நான் அவரிடம் தொலை பேசியை கொடுத்து விட்டு ஓடி விடுவேன்.. ;)

அவருடன் பேசிய பிறகு என் நண்பர்களுக்கு எல்லாம் பிரேமை ரொம்பப் பிடித்து விட்டு என்னை ஓரம் கட்டும் அநியாயம் நடக்க ஆரம்பித்தது.

என் நெருங்கிய நண்பன் என்னிடம் கேட்டது ..”அதெப்படி … நீயே அனுபவித்தது போல எழுதற ஷ்யாம் .. நான் கூட ஆரம்பத்தில் கொஞ்சம் பயந்துட்டேன் ..உன்னை கூட ஒருத்தர் கொடுமை படுத்தராரே என்று ”

நான் : அதென்ன உன்னை கூட ஒருத்தர் கொடுமை படுத்தராரே ..?

நண்பன் : ஹி ஹி ..

அனுபவங்கள் என்பது நாமே அனுபவிப்பது இல்லை ..நம்மால் அனுபவிக்கப் படுவது என்று தான் நான் கருதுகிறேன் .. நெருப்பில் கை வைக்காமலே அது சுடும் என்று சொல்வது போலத் தான் அது..

சரி மொக்கை போதும்..விஷயத்திற்கு செல்வோம்..

இதோ பிரணவ் குட்டி வயிற்றில் இருந்த போது எழுதின கவிதை ..( கவிதைனு ஒத்துக்கோங்கப்பா .. அதனால் ஒன்றும் பெரிய loss ஆகி விடாது .. :D )

என் சின்னஞ்சிறு கண்மணிக்கு

என் சின்னஞ்சிறு
கண்மணிக்கு
அம்மா எழுதுவது ..
இன்றோடு நீ உதித்து
பதினோரு வாரம்..
என் வயிற்றில் நீ
இனியதொரு பாரம் ..!

தாயும் பிள்ளையும்
என்றாலும்
வாயும் வயிறும்
வேறாம்..!
சொல்பவர்கள்
சொல்லட்டும்
அவர்களுக் கென்ன
தெரியும் ..
உன் பசிக்கு
என்றே உண்டு
உன் உறக்கம்
மட்டும் உறங்கி
உனக்காகவே வாழும்
நம் ஓருடல் ஈருயிர் வாழ்வு ..!

முதன் முதலில்
உன்னை
மின் ஓவியமாய்
பார்த்தேன் நேற்று ..
பார்த்ததும் நெஞ்சுக்குள்
ஆசையின் ஊற்று ..
என் வயிற்றுக்
கத கதப்பில்
கருவறைக்குள்
சுகமாக நீந்திக்
கொண்டிருந்தாய் நீ ..
வார்த்தைகள் அற்ற
பரவசத்தினில் நான்..!

இரண்டே
அங்குலம் தான்
இருப்பாய் என்றார்கள் ..
ஆனால் அதற்குள்ளே
எத்தனை ஆக்ரமிப்பு
எனக்குள்ளே நீ..!!

கனவுகளில் கண்ட
உன் முகத்தை
கணிப்பொறி காட்டிய
கணம் அழியாத
புகை படமாய்
கைகளில் ஒன்றாக ..
என் நினைவுகளில்
ஆயிரங்களாக ..!

அவ்வப் பொழுது
தலை சுற்றல் ..
எப்பொழுதும் வருவது
வாந்தி மயக்கம் ..
உடல் களைத்திட்டாலும்
உள்ளம் மகிழ்கிறதே..
என்னில் நீ
இருக்கிறாயோ
அல்லது உன்னில்
நானிருக்கிறேனோ
என்று என்னை நான்
கேட்கின்றபோது
நம்மில் நாமிருக்கிறோம்
என்று செல்லமாய்
கூறி வயிற்றுக்குள்
எட்டி உதைக்கிறாய் நீ..
உன்னிடம்
உதை படுவதும்
சுகமாய் தான்
இருக்கிறது எனக்கு..!

நூலகம் நுழைந்து நான்
தேடுவதெல்லாம் ,
“காட்டுக்குள்ளே திருவிழா”
“வன தேவதையும்..
விறகு வெட்டியும் ” .. தான்
“பாட்டி வடை சுட்ட
படக் கதை”- யும்
தவறுவதில்லை..
கூடவே பிடிபடாத
கணக்குப் பாடத்தை
சிரத்தையுடன்
செய்கின்றேன்..
அம்மாவின் ஐக்யூ தான்
குட்டி பாப்பாவிற்கும்
வந்து விடுமென்று
சொன்னதினால்
வந்த பயம்..!!

காத்திருப்பு
என்றுமே சுகமாய்
இருந்ததில்லை ..
ஆனால் இப்பொழுது
இருக்கிறதே
வெகு பரவசமாய்..
இன்னமும் ஏழு
மாதங்கள்
இருக்கிறதாம்..
முழு நிலவாய்
உன்னை மண்ணில்
நான் காண்பதற்கு ..!
என் கருவறையின்
கத கதப்பில்
இதயத்தின்
தாலாட்டில்
சுகமாகத் திரியும்
உன்னை நிரந்தரமாய்
சிறையில் தள்ள
காத்திருகின்றேன் நான் ..!

பயந்து விடாதே ..
இது அன்பெனும்
கம்பிகள் கொண்ட
நம் குடும்பமெனும்
பாச(அ)றை ..!
இதற்குள் என்றைக்கும்
பிணைக் கைதிகளாய்
நானும் உன் அப்பாவும் ..
விரைவில் நீயும் …!
இருப்பாய் தானே..?
நீ இருப்பாய்
என்கின்ற
நம்பிக்கை தான்
எங்கள் வாழ்வாதாரம்..!!

நீ பெண்ணாக
இருப்பாய் என்று
உன் அப்பா ‘சகி’
என்று பெயரிட்டார்..
ஒவ்வொரு நாளும்
நீ அழகாய் வளர்ந்திட
என்னுடன்
இணைபிரியாத ஓர்
ஒப்பந்தம் இட்டார்..
ஆனால் நீயோ
ஆண் குழந்தையாம்..
மருத்துவர்
சொல்லிவிட்டார்..
இப்பொழுது
பிரணவ் என்று
மாற்றி உன்னை
அழைக்கிறோம் ..
உயிரில் இருந்து
உயிராக வந்தவன்
என்பதால்
மட்டும் இல்லை..
பெண்மையை
உயிராய் மதிப்பாய்
என்பதனாலும் தான்..

உன்னை பெண்ணாக
பாவித்து சில நாட்கள்
வாழ்ந்ததினால்
பெண்ணின் உணர்வுகளும்
உனக்கு புரிந்திடவே
செய்யும் என்று நம்புகிறேன் ..
அன்னையின் கருவுக்குள்ளே
வேதங்களே கற்றிடுமாம்
சிறு குழந்தை ..
நீ பெண்ணியலா
கல்லாமல் இருந்திடுவாய்..

என் விருப்பு நான் மறந்து
உன் வளர்வில்
மனம் நிறைகின்றேன்..
எனக்கென்ற கனவுகள்
இருந்தது ஒரு காலம்..
நிஜமென நீ இருக்கையில்
கனவுகளும் நீயாய் போனாய் ..!

ஒவ்வொரு மாதமும்
வளர்வது
நீ மட்டுமல்ல ..
உன்னுடன் நானும் ..
உன் அப்பாவும் தான்..!
கூடவே சில சிரமங்களும்..
நிஜங்களையும்
நீ அறிந்திடவே
நான் இதனை கூறுகின்றேன்..
உன் வாழ்கை
தேன் கிண்ணமாய்
தித்திப்புடன் மட்டுமே
என்றென்றும் இருக்கும்
ஓயாமல் உழைக்கும்
தேனீக்களாய் நானும்
அப்பாவும் இருக்கும்வரை..!

பிரதி பலனாய்
நான் கொஞ்சம்
எதிர் பார்க்கவும்
செய்கிறேன் கண்ணா,
நீ ஆண் என்று
அறிந்ததில் இருந்து ..!
முட் கிரீடத்தை
சூட்டி விடுவேன்
என்று
நினைத்து விடாதே !
ஒவ்வொரு
பெற்றோருக்கும்
ஒரு சில கனவுகள்
இருந்தே தீரும்..
சிலர் சொல்கிறோம்..
சிலர் மறைக்கிறோம்..!

தலைப் பிரசவம்..
பிழைத்தால்
எனக்கிது மறு ஜன்மம்..
இல்லாவிடின் மறு ஜனனம் ..
என் உயிர் ஊட்டி
உன் உடல் வளர்க்கிறேன் ..
என் பிரதி பலிப்பாய்
இருந்திடுவாய்
என்பதால் அல்ல..
உனக்கொரு முகவரியுடன்
தனித்துவமாய் இருப்பாய் என்று !

எப்போதும் நினைவுகொள் ..
ஆணிற்குப் பெண்
என்றைக்கும் சமமில்லை..
தாயாகும் பெண்ணிற்கு
வேறொன்றும் ஈடில்லை ..
உடன்படு..அதனால் கடன்படு ..
உயிர்பட்ட கடனை
எல்லா உயிர்களிடத்தில்
சமத்துவ அன்பு காட்டி
வட்டியுடன் தீர்…!

நியூட்டன் , எடிசன்
ஐன்ஸ்டீன் அறிவுடன்
இருந்திடாமல் போனாலும்
புத்தர், காந்தி
தெரசா பணிவுடன்
என்றென்றும் வாழ்ந்திடு ..
போலித் தனம் தவிர்…
மொழி வெறி, இன வெறி
நிற வெறி , மத வெறி
ஏதும் இல்லாத புதியதொரு
உலகம் சமைத்திடு ..
அதில் சமாதானப்
பூக்களை
நாளும் வளர்த்திடு
பின்பு எனக்கு கொள்ளியிடு…..!

இப்படிக்கு
உன்னிடம் இருந்து
நிறைய்ய்ய எதிர்பார்க்கும்
உன் சுயநலக்கார
அம்மா

பின் குறிப்பு : எனக்குப் பேத்திகள் பிறக்கும் போது பெண்ணியல் எனும் இந்த சொல் வழக் கொடிந்த வார்த்தைகள் ஆக வேண்டும் என்பது என் ஆசை.

டியர் பிரணவ்,
எனக்கும் மத்த அம்மாக்கள் மாதிரி எதையும் எதிர் பார்க்காமல் அன்பை மாத்திரம் பொழிய ஆசை தான் ..But நான் அப்படி இல்லைடா ..அப்படி இருக்கிறேன் நான் என்று சொன்னால் அது போலியாய் சொல்வது ..

So Sorry ..நீ வயிற்றில் இருக்கும் போது கூட பெண் குழந்தையாய் நீ இல்லாமல் போனாயே என்று சின்னதாய் வருந்தியதற்கு ..பட் பிரணவ் …எனக்கு உங்களை எவ்வளவு பிடிக்கும் தெரியுமா….?


If I say I love you upto sky , Then it is not a proper measurement of my love…I love you as much as I love your daddy .. and I love him as much as I love you .. :D !!

இன்னமும் ஒன்பது நாளில் உங்களுக்குப் பிறந்த நாள் வருகிறது .. சோ நிறைய உங்களை பற்றி எழுதலாம் என்று இருக்கிறேன்..நீங்க என்னில் ஏற்படுத்திய மாறுதல்களை யாருமே ஏற்படுத்தியது இல்லை ப்ரெஷி செல்லம் ..

I am happy and fortunate to be your mom ..!!

அம்மா ..நான் …அவர்..ஓர் வட்டம்

அம்மா … நான் … அவர்… ஓர் வட்டம் ..!!!

இன்னமும் சில நாட்களில் அம்மா ஊருக்குப் போகணும் என்று சொன்னார்..
அப்பா தனியாய் இருக்கிறார் அதுதான் ..என்று அவர் சொன்ன காரணம் சரிதான் என்றாலும் என்னால் ஏற்க முடியவில்லை.


” அப்பா தான் இங்க வரக் கூடாதா? அப்படி என்ன பிடிவாதம் .அவருக்கு .? தனியே தானேம்மா இருக்கப் போறீங்க.. எங்களோட இருந்தால் நம்ம எல்லோருக்குமே நல்லது தானே..? ‘ என்று அம்மாவின் மடியில் படுத்துக் கொண்டே கேட்டேன்.

ஆசையாய் என் தலையினை கோதிக் கொண்டிருந்த அவர் திடீரென்று மவுனிக்க என் தலையில் இரண்டு சொட்டு கண்ணீர் விழுந்தது. அவர் வந்து நான்கு மாதங்கள் உருண்டு பிரண்டு ஓடி விட்டதாம் .அம்மாவே மீண்டும் தொடங்கினார் ..நம்பவே முடியவில்லை.. இருவரும் பிரமை பிடித்தது போல் சில நொடிகள் ஒருவர் முகம் ஒருவர் பார்த்திருக்க தலை கோதிய அம்மா சொன்னார்…

நேற்று தான் உன் கைப்பிடித்து பள்ளியில் விட்டது போல் இருந்தது .. ஸ்வீட்டி .. சின்ன வயசில் ரொம்ப அடம் ஒன்னுமே சாப்பிட மாட்டாய்.. என்னைக்கும் மாறாம இருப்பது கையில் புக்கு ஒன்னு கிடைத்தால் சோறு தண்ணி மறந்துட்டு , இடி இடித்தாலும் அசராமல் படிப்பியே ..அந்த ஒரு பழக்கம் தான்..

கரண்ட்டு போனால் கூட மெழுகு வர்த்தி ஏத்தி வச்சுகிட்டு கதை புக் படிக்கும்போது நினைப்பேன்..ஏன் உருப்படமா போகிறாள் இவள்..இவளுக்கு இருக்கும் அறிவுக்கு ஒழுங்காய் பாட புத்தகங்களை படித்தால் எவ்வளவு பெரிய ஆளாய் வருவாள்…என்று

கடைசி நாளில் மட்டும் உட்கார்ந்து படித்து விட்டு ஸ்கூல் பிரஸ்ட் வந்து விடும் இவள் ஒவ்வொரு நாளும் அதே சிரத்தையுடன் படித்தால் ஸ்டேட் பிரஸ்ட் கூட வருவாளே ..( நான் டிஸ்ட்ரிக்ட் பிரஸ்ட் வந்து கலெக்டரிடம் பரிசெல்லாம் வாங்கி இருக்கேனாக்கும்.. இதை பெருமைக்காக சொல்ல வில்லை.. இதை அப்ப அப்ப நினைத்து என் தன்னம்பிக்கையை கொஞ்சம் வளர்த்துக் கொள்வதோடு சரி :( ) என்று நினைப்பேன் .. இப்ப பார்த்தால் நெட்டில் கதை எழுதறேன் வந்து படி .. என்று சொல்கிறாய் ..ஏதோ .. அய்யோ பாவம்னு படிக்க வந்தவங்களை படுத்தாமல் நல்லா எழுதினால் சரி.. என்று சொல்லி சிரித்தார்.

அம்மாவிற்கு செல்லமாய் கன்னத்தில் ஒன்று வைத்தேன்..வேறு என்ன முத்தம் தான்.. :D

” ஆத்தாகாரி போனால் போட்டும் உனக்கு போரடிகுதே படிக்க எதாச்சும் கேட்பியேன்னு நான் எழுதினதை படிக்க கூப்பிட்டேன்.. அன்னையில் இருந்து இதே “நை நை ” தான்.. நீ மட்டும் மாறவே இல்லைடி ஆத்தாகாரி ..என்று பெரிய மனுஷி போல் சொன்னேன். அட இப்பொழுது பெரிய மனுஷி தான் நான் இல்லை..!! மறந்தே விட்டது…எனக்கு :)

அம்மா வுடன் இருக்கும்போது
என்றுமே குழந்தையாய் தான்
இருக்கிறது மனசு ..
வளர்ந்ததும் நினைவில் இல்லை..
வயதாவதும் தெரி வதில்லை..
பாவடை சட்டை பருவத்திலும் சரி
பாவாடை தாவணி அணிந்த
காலத்திலும் சரி -இன்று
ஜீன்ஸ் பான்ட் போட்டு
அதன் மேல் சேலை கட்டும்
வயது வந்தும் சரி..
அம்மாவின் அணைப்பில் மட்டும்
ஐஸ் க்ரீம் தின்னும் குழந்தயாட்டமே
குதியாட்டம் போடுகிறதே மனசு..!

இறைவியே அப்படி நீ ஒருத்தி இருந்தால்
அடுத்தொரு பிறவியும் வேண்டும் ..
அதிலும் இதே தாய்க்கு
மகளாகவே நான்
ஜனித்திடவும் வேண்டும்..
ஒரே ஒரு திருத்தம்..
இவள் வீட்டோடே என்னை
என்றைக்கும் இருந்திட வை..

இவள் முகம் பார்த்தபடி
நினைத்த கணம்
இவள் மடி துயிலும்
வரம் மட்டும் இருந்தால் ..
ஹார்மோன் ரீப்லேஸ்மென்ட்
தேவை இன்றியே
என்றென்றும் இளமையுடன்
இருந்திடுவேன் நான்..
..

சரி இதை எல்லாம் கவிதை ஏன் மொக்கை என்று கூட ஒத்துக் கொள்ளாதவர்களுக்கு ..அண்மையில் எங்கோ படித்தேன் ..இந்தக் கீழ் வரும் கவிதையை ஒத்த ஒரு கவிதையை .. .. படித்தது எங்கு என்று சரியாக நினைவில் இல்லை..

அம்மா நீ ஒருமுறை
தலை கோதினால் கூட
ஓராயிரம் முறை சீப்பினால்
தலை சீவியது போல் இருக்கிறது …!!!

இதை படித்ததும் முதலில் சிரிப்புதான் வந்தது..

அதே அதே ..இப்படி என் கவிதையை படித்த போது உங்களுக்கு எவ்ளோ சிரிப்பு வந்ததோ அதே அவ்வளவு சிரிப்புதான்..

ஓராயிரம் முறை சீப்பு கொண்டு தலை சீவினால் முடி எல்லாம் கொட்டிப் போகும்..தலை வழுக்கை ஆகும்.. :D ..அத்தனை எபக்ட் அம்மா ஒரே ஒரு முறை தலை கோதுவதிலேயே கிடைத்திடும் என்றால் …ஹி ஹி ..படித்து விட்டு நன்றாக என்ஜாய் பண்ணினேன்..

அதே போல நான் எழுதின கிறுக்கல்களையும் சிலர் படித்து என்ஜாய் பண்ணட்டும் என்கிற நல்ல கொள்கையினால் தான் தைரியமாய் நான் எழுதுவதை எல்லாம் கவிதை , உரை கவிதை என்று கன்னா பின்னா வென்று பெயர் வைத்து பதிவாக்கிப் போட்டு விடுகிறேன் ….

(சரி அவரை பற்றி இன்னமும் சொல்லவே இல்லையே ..இதோ வந்து விட்டார் காதல் இளவரசர் ( பிரேம் குமார் ..அவர் ஒரிஜினல் பெயரே இது தாங்க ..) )

அசட்டு தனமாய் இப்படி பிதற்றலாய் யோசித்துக் கொண்டிருந்த வேளை, என் தாய் என் தலையினை கோதிக் கொண்டிருக்க , பிரேம் என் கால் விரல்களை பிடித்து சொடுக்கு கிறேன் என்று வம்புக்கு வந்து கொண்டிருந்தார். எனக்கு இந்த நட்டை உடைத்தல் எனும் இந்த சொடுக்கு எடுக்கும் விஷயம் என்றால் ரொம்பவே அல்லர்ஜி ..

என்ன இது .. பிரேம் அடிக்கடி என் விரலை நீவும் சாக்கில் காலை உடைக்க பார்கறீங்க ..” என்று சத்தம் போட்டேன்..

டைமிங்கில் மன்னரான அவர்..ஒரு நாளாச்சும் உனக்கு கால் கட்டு போடனும்னு தான் பார்கிறேன் ஸ்வீட்டி ..எங்க விடற ..என்று சொல்லிவிட்டு மேலும் என் காலை உடைப்பதில் தீவிரமாக இருக்க நான் அலறத் தொடங்கினேன் .

என் அம்மாவும் சளைக்காமல், விடுங்க பிரேம்..கலியாணம் பண்ணிக் கொடுத்தப்ப என் பெண்ணை உங்களுக்கு பிடிக்கணும்னு தான் சொன்னோம்.. இப்படி அவள் காலை பிடிக்கணும்னு எல்லாம் சொல்லலை என்று சொல்ல ..நான் ஆ வென்று கத்தினேன்.

டக் கென்று உடைந்தது நட்டை .ஒரு வழியாக அவர் என் கால் விரலில் சொடுக்கு எடுப்பதில் வெற்றி பெற்று விட, பரிசாக நங்கென்று அவர் தலையில் குட்டினேன். மூவரும் சிரித்தோம்.

இன்னமும் கொஞ்ச நேரத்தில் உன் பேரன் ஸ்கூலில் இருந்து வந்து விடுவான். இன்னைக்கு பிரைடே ..ஹோட்டலுக்கு போலாமா அம்மா .. என்று கேட்க என் அம்மா மீண்டும் யோசனையில் ஆழ்ந்தார்.

“என் குழந்தைகள் எல்லோரும் குழந்தைகள் பெற்று அவர்களே இப்பொழுது பள்ளிக் கூடம் போகிறார்கள்.. என் காலம் அவ்வளவு விரைவாக முடிந்து விட்டது என்று நினைத்தால் ஆச்சரியமாய் இருக்கிறது.. பெரு மூச்சுடன் மகிழ்வா, துக்கமா என்று புரியாத ஒரு தொனியில் சொன்னார் அவர்.

நான் உடனே , ” அட போங்கம்மா…என்ன வயசாயிடுச்சு.. உங்களுக்கு.. அப்பா கூட ரஜினியை விட சின்னவர் தான் தெரியுமா.. ஆனால் ரஜினியை பாருங்க..இன்னமும் என்னை விட சின்ன பெண்ணையே தனக்கு ஹீரோயினாக போட்டு படத்துல நடிச்சு அசத்தறார். நீங்களும் அப்பாவும் என்னடான்னா இப்பவே இப்படி பேசறீங்க.. டூ பாட்..

உங்க வயச விட ஒன்னு ரெண்டு வயசு கம்மியா இருக்கிற மடோனா எல்லாம் எப்படி இருக்காங்க.. ஆனா நீங்க என்னடான்னா இப்படி பேசறீங்க.. இதுல எனக்கு வயசானதை வேற தேவை இல்லாமல் நியாபகம் மூட்டறீங்க..” என்று என் வழக்கப் படியான லொள்ளலுடன் லொள்ளினேன்.

அம்மா புன்னகைத்தார்.. உடனே நான் அவரை கட்டிப் பிடித்துக் கொண்டு , ” பக்கத்து வீட்டு மாகிக்கு ( மார்கரெட்) எத்தனி வயசு தெரியுமா..63 ..அவர் அதை சிக்ஸ்டி இஸ் நியூ தர்ட்டி ( 60 இஸ் நியூ 30) என்று பாசிடிவாக சொல்வார்.. மேலும் அவங்களை பாருங்க ..உங்களுக்குத் தங்கை மாதிரி இருக்காங்க..”, என்று சொல்லி அவரை உற்சாகப் படுத்தினேன்..

அப்ப 30 இஸ் நியூ 3 யா.. என்று அம்மா கேட்க மூவரும் சேர்ந்தே சிரித்தோம். சைக்கிள் கேப்பில் பிரேம் சொன்னார் ..” இவளோட லொள்ளு மாத்திரம் உங்க கிட்ட இருந்து தான் வந்திருக்கணும்.. இல்லையாம்மா .. அப்பா என்னை மாதிரி அப்பாவி தானே..” என்று சொல்ல மீண்டும் அம்மா என் அப்பாவின் நினைவில் மூழ்கிப் போனார்.

அமாம் பிரேம்…நீங்களாவது பரவாயில்லை.. உங்களுக்கு வீட்டு வேலைகள் எல்லாம் செய்யத் தெரிந்திருக்கிறது..ஆனால் அவருக்கு ஒன்னுமே தெரியாது.. தோசை மாவு இருந்தால் தோசை பண்ணிப்பார் ..ஏதோ ஒரு உப்புமா..செய்வார் அவ்ளோதான்..மத்தபடி ஒன்னும் தெரியாது அவருக்கு.. நான் இல்லாமல் என்ன சாப்பிடுகிறாரோ .. இப்படி அவரின் சிந்தனை முழுவதும் அப்பாவிடமே இருக்க , அவரின் ஒன் இயர் விசாவை கேன்சல் பண்ணினோம்..

எங்களுக்குத் தான் தலை எழுத்து.. இங்கே குப்பை கூட்டவேண்டும் என்று ..எங்க அம்மாவுக்கென்ன..இருந்தாலும் மனது ரொம்பவே கஷ்டப் படுகிறது அம்மா அப்பா வுடன் இல்லாமல் இருப்பதை நினைத்து ..


என் வருத்தத்தை பார்த்து , அதான் வருஷம் தவறாமல் வந்து தங்கிட்டு போறியே ஸ்வீட்டி ..அப்பறம் என்ன.. ஒரு வேளை இந்தியாவிலேயே நீ இருந்திருந்தாலும் , கலியாணத்திற்கு பிறகு, நம்ம ஆத்திலேயே தங்க முடியுமா .. என்னோட தங்கைகள் எல்லாம் போபாலிலும் , டில்லியிலும் இருக்கிறார்கள்.. அவர்கள் இரண்டு வருஷத்துக்கு ஒரு தரம் தான் சில நேரங்களில் எங்க அம்மா அப்பாவை பார்க்க வருவார்கள் தெரியுமா ? என்று நடை முறையின் யதார்த்தத்தை புரிய வைக்க முயன்றார்கள்..

மேலும் ஸ்வீட்டி ..நீ எழுதற கதையை புத்தகமாய் போட்டு எனக்கும் அப்பாவிற்கும் அனுப்பி வை.. கம்பியூட்டரில் குட்டி குட்டியாய் தெரியும் எழுத்தை படிக்கறதுக்கு ரொம்ப கஷ்டமாய் இருக்கு .. எனக்கு நீ எழுதரதை நிஜமாவே படிக்கனும்னு ஆசையாய் இருக்கு ..

சரி என்று தலை யாட்டினேன். மனிதர்கள் நிரம்பவும் போலிகளாக மாறி விட்டார்கள். நல்ல உறவுகள் தரும் நிறைவை விட பணம் எப்படி நிம்மதியை தரும் .. எதற்கு இப்படி பணத்தை தேடி ஒரு வாழ்கை என்று மீண்டும் பிரேமிடம் வந்து கேட்டேன் ..

அவர் சொன்னார் வட்டத்திற்குள் தான் வாழ்கை ஸ்வீட்டி ..

உங்களுக்குப் புரிகிறதா ?

புவனேஷ்—பெண்ணியத்தில் என் வரிகள்

புவனேஷ்—பெண்ணியத்தில் என் வரிகள்

இது எனக்கு கொஞ்சம் புதுசு!! பெண்ணுக்கு நடக்கும் கொடுமைகளை பத்தி நான் எழுதவேண்டும்.. இதை எழுதும் முன் ரெண்டு விஷயம்
1) ஜானு அக்கா என்னை இந்த பதிவை எழுத சொன்னார். முதலில் பெண்கள் இப்படி என்னை கொடுமை படுத்துவதை நிறுத்தவேண்டும்!!
2) நான் பெண்களுக்கு என்னென்ன கொடுமைகள் செய்யறேன் என்று யோசித்து, அது எதுவும் இங்கே வாராத மாதிரி பார்த்துக்கொள்ளவேண்டும்!!

என்னடா இவ்வளவு சீரியஸ் டாபிக் எடுத்துட்டு விளையாடறான்னு நினைக்காதீங்க!! நான் அப்படித்தான்!! (இப்படி ஜாலியா இருந்த எனக்கு ஒரு சீரியஸ் டாபிக் கொடுத்துட்டீங்க!!)

முதலில் என்னை பற்றி கொஞ்சம் தெளிவு படுத்திக்கொள்ள சில கேள்வி பதில்!! கேள்விகள் என் மனசாட்சியிடம் இருந்து!!

உனக்கு இத எழுத தகுதி இருக்கா?

தெரியல.. எழுத சொன்னாங்க உனக்கு (மனசாட்சிக்கு) துரோகம் செய்யாம எழுதறேன்!

நீ எப்பவும் ஆண்களுக்கு ஆதரவா பேசறதா சொல்றாங்களே, ஏன் அப்படி??

நான் ஆண்களுக்கு ஆதரவா பேசலை.. பொதுவா எல்லா ஆண்களும் தப்பு என்று சொல்லும் வாதத்தை தான் எதிர்கிறேன்!!

அப்போ பெண்கள் எல்லாம் நல்லவங்களா?
அப்படி நான் நினைக்கவில்லை.. அவர்களிலும் சில தப்பானவர்கள் இருகிறார்கள்!! ஆனால் பெரும்பாலான பெண்கள் ஒரு வகை தொல்லைகளுக்கு ஆளாகிறார்கள் என்பது உண்மை.. அதுக்காக எல்லா ஆண்களும் கெட்டவர்கள் என்று நான் ஒத்துகொள்ளமாடேன்!! ஏன் எல்லா மனுசங்களும் கெட்டவர்கள் என்றோ எல்லா மனுசங்களும் நல்லவர்கள் என்றோ ஒத்துகொள்ள மாட்டேன்!!

சமூகம் பெண்களை வஞ்சிக்கிறது என்பதும் உண்மை.. ஆனால் பெண்களை வஞ்சிக்கும் சமூகத்தில் பெண்களும் பெரும் பங்கு வகிக்கிறார்கள் என்பதும் உண்மை..

உதாரணம் ??
மாமியார் கொடுமை!

சரி சரி விஷயத்துக்கு வருவோம்!! பாலியல் கொடுமை, வரதட்சணை கொடுமை, பெண் அடிமை இது எல்லாம் பற்றி நான் பேசுவதை விட அருமையா பல அனுபவஸ்தர்கள் பேசிவிட்டார்கள்!

அதனால் நான் சொல்ல போகும் பிரச்சனை கொஞ்சம் புதுசு.. இது கத்தி மீது நடப்பது போல், கொஞ்சம் மிஸ் ஆனாலும் ஆண்களுக்கு சப்போர்ட் போல ஆகும்.. இருந்தாலும் நான் ட்ரை பண்ணறேன்.. எங்கையாவது அப்படி ஆண் ஆதிக்க வாடை அடித்தால், அதை சுட்டி காட்டவும்.. அதற்காக இதில் உள்ள அர்த்தத்தை, நான் சொல்ல வந்த கருத்தை புரிந்து கொள்ளாமல் விட்டுவிடாதீர்கள்!!

முதலில் பெண்கள் தங்களை பற்றிய சுய மதிப்பீட்டை மாற்றவேண்டும்!! சுய மதிப்பீடு என்றால் உங்கள் ஒருத்தியை பற்றிய மதிப்பீடு இல்லை!! பெண்களுக்கு பெண் சமுதாயத்தின் மீது உள்ள மதிப்பீடு!! தேவையற்ற சடங்குகளை தூக்கி எறியுங்கள்!! தேவையற்ற தடைகளை நீங்களே உங்களுக்கு ஏற்படுத்தாதீர்கள்..
உதாரணம்.. உங்கள் மகனுக்கு, தம்பிக்கு, அண்ணனுக்கு பெண் பார்க்கும்போது அவர்களிடம் (உங்கள் மகன்/தம்பி/ அண்ணன்/ நெருங்கின சொந்தம்) பெண்ணை பெண் இஷ்டத்துக்கு இருக்க விடு.;. வேலைக்கு போ, வேண்டாம் என்று சும்மா காரணமே இல்லாமல் சொல்ல வேண்டாம் என்று அறிவுறுத்துங்கள்..

உங்களுக்கு மாபிள்ளை பார்க்கும் போது, தனி குடித்தனம் போனால் தான் சம்மதிப்பேன் என்று எல்லாம் சொல்லாதீர்கள்.. இது நீங்கள் உங்கள் மாமியார் ஆகிய பெண்ணுக்கு செய்யும் கொடுமை தான்!! இதையே உங்கள் வீட்டில் உள்ள பெண்களுக்கு சொல்லுங்கள்!!

நான் ஒரு பதிவில் தாலி வேண்டாம் என்பதை கொஞ்சம் விளையாட்டாய் சொன்னேன்.. அதற்கு ஜானு அக்கா சொன்ன பதில் இது “அது ஒரு சமூக அடையாளம்”.. ஆனால் நான் வேண்டாம் என்று சொன்னதற்கு சீரியஸ் காரணம் கணவன் இறந்த பிறகு அதை கழுட்ட செய்யும் சடங்குகள்.. அதுவும் அந்த சடங்குகள் பெண்களாலேயே நடத்தபடுகிறது தான் கொடுமை.. என் கூட படித்த தோழியின் தந்தை இறந்துவிட்டார்.. அங்கே இந்த சடங்கு நடந்த போது அவள் தாயாரின் ஒப்பாரி என் வாழ்நாளில் நான் மறக்க முடியாதது.. இனி எங்கும் எப்பவும் கேட்க விரும்பாதது..

எனக்கே இப்படி என்றால், அந்த தோழிக்கு எப்படி இருந்திருக்கும்? அவர் அம்மாவிற்கு எப்படி இருந்திருக்கும்?
இப்படி ஒரு சடங்கு தேவையா??
இந்த சடங்கு ஒரு உதாரணம் தான்.. இன்னும் பல சடங்குகள் உள்ளது..
இதற்கு குரல் கொடுங்கள்.. அதை விட்டுவிட்டு என் ஆடையை என் விருப்பப்படி தான் போடுவேன்.. நீ ஏன் பாக்கற? என்பது போன்று அபத்தமான கேள்விகளை எல்லாம் கேட்டு போராடாதீர்கள்..

நான் இங்கே சொல்லவந்தது, சின்ன விசயத்துக்கு போராடும் நீங்கள் காலம் காலமாக நீங்கள் அனுபவிக்கும் கொடுமைகளை சும்மா வேடிக்கை பார்ப்பது ஏன்?.. அற்ப விஷயத்துக்கு போராடனும்!!

“பொம்பளைங்க காதலைத்தான் நம்பிவிடாதே என்று பாடல் வந்தால் போராட்டம்”
“குட்டி ரேவதியை என்று ஒரு படத்தில் வசனம் வந்தால் போராட்டம்”
“லீனா ஆடையை குறிப்பிட்டு கல்லூரிக்குள் அனுப்பா விட்டால் போராட்டம்” என்ற உங்கள் சமூக அக்கறையை (!) மாற்றுங்கள்!!

உங்களை இதற்கு மேல் சிந்திக்க விடாமல் இருப்பது யார்? ஆடை, பப் போன்ற விஷயத்திற்கு போராட வேண்டாம் என்று நான் சொல்லவில்லை.. அது அவசியமானதா என்று மட்டும் சிந்தியுங்கள்.. இந்த கலாச்சாரம் எல்லாம் வெறும் சொற்ப சதவீத பெண்களிடமே உள்ளது.. பெரும்பாண்மையான பெண்கள் பிரச்சனை என்ன? அவர்கள் எப்படி அடக்கப்படுகிறார்கள் என்று கொஞ்சம் சிந்தியுங்கள்!!

பெண்கள் என்று தரும் சலுகைகள் அனைத்தும் எங்களுக்கு வேண்டாம் என்று சொல்லுங்கள்.. சலுகைகள் கொடுப்பதே உங்களை ஒரு வட்டத்துக்குள் வைக்கத்தான்!! சலுகை என்பது அல்வா மாதிரி..

உதாரணம் எங்களுக்கு லேடீஸ் சீட் வேண்டாம் நாங்கள் எங்கு வேண்டுமானாலும் உக்காருவோம் என்று சொல்லுங்கள்.. உங்கள் பக்கத்தில் உக்காரும் ஆண் உங்கள் மேல் இடித்தால் பளார் என்று ஒரு அரை கொடுங்கள்.. அவன் நிச்சியம் தடுமாறித்தான் போவான்..

உண்மை சம்பவம்:
நாங்கள் கல்லுரி டூர் கேரளா போயிருந்தோம்… ரோட்டில் நடக்கும் போது எங்களுக்கு பத்து அடி முன்பு என் உடன் படிக்கும் நாலு தோழிகள் நடந்தார்கள் ஒருவன் அவர்களில் ஒருத்தியை இடித்து விட்டு வந்தான், கூட இருந்த ஒருத்தி பச் எண்டு அவன் முதுகில் ஒரு சாத்து சாத்தினாள்.. அவன் நிலை தடுமாறி கிழே விழுந்தான்..

ஊரே பாத்துச்சு.. அவமானத்தில் அவன் ஓடிய ஓட்டம் இன்னும் நினைவில் இருக்கு..
You have to have that Guts..
நான் “UK Cross Culture Adaptability” போயிருந்தேன்,அங்க அவங்க சொன்ன விஷயம் “அமெரிக்கால ஒரு பொண்ணு கூட நீங்க சாப்பிட போறீங்க (ஆபீஸ் பார்ட்டி, ப்ராஜெக்ட் அவுட்டிங்) அங்க வர பொண்ணுங்களுக்கு நீங்க போய் இருக்கை சரி பண்ணி கொடுக்கணும்.. அவங்கல செய்ய விட கூடாது (இதை நீங்கள் “மஞ்சள் வெயில் மாலையிலே” பாட்டில் கமல் செய்வதை கவனித்து இருக்கலாம்).. ஆனா இதையே UK ல செஞ்சா.. எனக்கு கை கால் நல்லா இருக்கு, நான் செஞ்சுகறேன்னு சொல்லுவாங்க.” இந்த மாதிரி ஒரு மனோபாவம் உங்களுக்கு வேணும் !!

இந்த மாதிரி பல சலுகைகள் போட்டு உங்களால எதுவும் முடியாதுன்னு உங்களையே நம்ப வெச்சுருக்காங்க. இவைகள் தான் உங்கள் கால்களில் இருக்கும் சங்குலி..

அதாவது நீங்க ஆம்பளைங்கள நம்பி இல்ல என்று நீங்களே நம்புங்க!!
இந்த விஷயத்த சொன்னா பல பெண்கள் வீட்டுல இருக்குற ஆம்பளைய மட்டும் நம்பி இல்லன்னு நினச்சு விவாகரத்து வரைக்கும் போகறாங்க.. அதுவும் சின்ன சின்ன பிரச்னைகளுக்கு!!
மேடை ஏறி பெண் சுதந்திரம் பேசும் பெண்கள் எல்லாம் தன் குடும்பத்தோட சந்தோசமா இருப்பாங்க.. அவங்களுக்கு தெரியும் குடும்பனா விட்டு கொடுத்து போகனும்னு!! அவங்க பேசறத கேட்டுட்டு அத முழுசா புருஞ்சுக்காதவங்க சின்ன விஷயத்துக்கு சண்ட போடறாங்க.. அப்புறம் அது பெரிய சண்டை ஆகுது! ஒரு விசு படத்துல வரும் “நான் வாங்கியிருக்கறது சுதந்திரம்.. நீ வாங்கியிருக்கிறது விடுதலை..”. அது தான் இங்கே நடக்குது!
சரி அடுத்து.. மறுமணம்.. விதி வசத்தால கணவனை இழந்துட்டால், மறு மனம் செய்ய முன்வரனும்.. பெண்கள் தங்கள் வீட்டில் இப்படி இருக்கும் பெண்களை மறுமணம் செய்ய சொல்லவேண்டும்.. நான் கணவனை நினைத்தே வாழ்வேன் என்றால் அது சுத்த பேத்தல்.. இந்த மாற்றம் பெண்களிடம் முதலில் வரவேண்டும் அப்போது தான் ஆண்களும் மாறுவார்கள்.. நீங்கள் அவர்கள் படும் கஷ்டத்தை உணரவில்லை என்றால், ஆண்களும் உணரமாட்டார்கள்..

நினைத்து பாருங்கள், ஒரு மாமியார் இப்படி சொல்லுகிறார் “இவ ரொம்ப நல்ல பொண்ணு.. என் பையனுக்கு இவளோட வாழ கொடுத்துவைக்கல.. அதான் நானே இவளுக்கு ஒரு மாபிள்ளை பாக்றேன்..”
இது நடந்தா நிறைய மாற்றம் வரும் என்று நான் நம்புகிறேன்..

இந்த மாற்றங்கள் உங்களிடம் வரும் வரை ஆண்களிடம் உங்களை பற்றிய கண்ணோட்டத்தில் பெரிய மாற்றம் வரது!!

அப்புறம் எதில் மாற வேண்டும், எதில் மாற கூடாது என்று தெளிவு உங்களுக்கு இருக்கிறதா? (உங்களுக்கு என்றால் பெரும்பான்மையான பெண்கள்).. இல்லை என்பதற்கு தான் நான் மேலே சொன்ன வாதங்கள்.. இருக்கிறது என்று அடித்து சொல்லி சில உதாரணங்கள் கொடுத்தால் நான் என் கருத்தை மாற்றி கொள்கிறேன்!!
நான் ஆரம்பத்தில் சொன்ன மாதிரி என் மனட்சிக்கு துரோகம் செய்யாமல் எழுதிவிட்டேன்!! நீங்கள் நான் பெண்களுக்கு சாதகமாக பேசவில்லை என்று நினைக்கலாம்.. நான் சாதகாமாகத்தான் பேசறேன்.. நீங்கள் அடிமை பட்டு கிடக்கும் எல்லா விஷயங்களையும் விட்டு விட்டு ஆடைக்கு மட்டும் வரிந்துகட்டி கொண்டு வருகிறீர்களே என்ற ஆதங்கம் தான்!!

நான் பெண்கள் என்று பொதுவாக சொல்லவில்லை, பெரும்பாண்மையான பெண்களை தான் சொல்கிறேன்!!

இப்போதிக்கு அம்புடுதான்.. வாய்ப்பு தந்த ஜானு அக்கா விற்கு நன்றி!

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

இந்த சின்ன பையன் மனசுல இருந்தத எழுதீட்டேன்.. தப்பா இருந்தா சொல்லுங்க மாத்திகறேன்..

யாரும் சொல்லாததை (அல்லது அதிகம் சொல்லாததை) சொல்ல ஆசை பட்டுத்தான் இப்படி ஒரு பதிவு..
படிச்சுட்டு சொல்லுங்க.. (திட்டினாலும் வாங்கி கொள்ளப்படும்.. இங்கே திட்டினாலும் ஒகே என் தளத்தில் திட்டினாலும் ஓகே.. எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் இல்லை!!)

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

பெண்ணியத்தில் என் வரிகள் —இங்கிலீஷ்காரன்

பெண்ணியத்தில் என் வரிகள் -இங்கிலீஷ்காரன்

பெண்களுக்கு ஆண்களினால் நிகழ்த்தப்படும் கொடுமைகள் அதற்கு எதிராக ஆண்களின் குரல்கள்… இப்படி என்னுடைய ஒரு பதிவின் அளவுக்கு உள்ள தலைப்புக்கு ஒரு பதிவு எழுத என்னையும் பொறுப்பான பதிவராக மதித்து அழைத்த ஜானு அக்கா அவர்களுக்கு என் நன்றி கலந்த வணக்கங்கள் முதலில். ஒ.கே இதை பொறுமையா படிக்க போற உங்களுக்கும் எனது நன்றி கலந்த வணக்கங்கள் (போதுங்களா?!)…சரி விஷயத்துக்கு வருவோம். இது கொஞ்சம் சீரியஸ் மேட்டர் வேற.. அதனால கொஞ்சம் அடக்கியே வாசிக்கிறேன்.

நம்ம நாட்டில் மட்டும் தான் பெண்கள் கொடுமைப் படுத்த படுகிறார்கள் என்று இல்லீங்க.

உலகம் முழுவதும் இந்த கொடிய செய்கை நிறைந்திருக்கிறது என்பதற்கு சில சான்றுகள் முதலில்.

1) ஆஸ்ட்ரியா என்ற நாட்டில் ப்ரிஸ்ல் என்ற ஆள் தந்து மகளான எலிசபெத் என்பவரை 24 வருடம் இருட்டிய அறையில் அடைத்து வைத்து தனது மகளுடனே உறவு கொண்டு பிறகு தனது மகள் மூலமே ஏழு குழந்தைகளுக்கும் தகப்பன்?! ஆகியிருக்கிறான்.இத்தனைக்கும் இந்த ஆள் நன்கு படித்த ஒரு எலெக்ட்ரிகல் இன்ஜினியர். எலிசபெத் தப்பிக்க முடிந்தது அவரது மூத்த மகளின் உடல் நிலை சரியில்லாமல் போனதால் அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ப்ரிஸ்ல் அனுமதித்ததன் மூலமே. இதற்கு என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள்? முழுக்க முழுக்க மரபணுக் கோளாறு தான் என்கிறது மருத்துவ குழு. இருப்பினும் இநத்தகைய காமக் கொடூரனை என்ன செய்ய முடியும்?

2) நவம்பர் 11 2001 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் நடந்த சம்பவம் இது. சிறு குழந்தைகளுடன் உறவு வைத்துக் கொள்வதன் மூலம் எய்ட்ஸ் நோயிலிருந்து குணமாகி விடலாம் என்ற மூட நம்பிக்கையின் காரணமாக 22 முதல் 66 வயது ஆறு பேர் கொண்ட கும்பல் ஒன்பது மாதமே ஆன பச்சிளம் குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார்கள்.

3) அதே வருடம் அக்டோபர் 31 ஆம் தேதி ஒரு மாதக் குழந்தையை அதன் தாய் மாமன்களே கொடூரமாக கற்பழித்து இருக்கிறார்கள்.அதை விடக் கொடுமை இந்த கயவர்களால் எயிட்ஸ் நோயால் பாதிக்கப் பட்ட பெண் குழந்தைகளை குப்பைத் தொட்டியில் வீசி விடுகிறார்கள் என்பது தான். இதற்கு என்ன தான் தீர்வு?

வெளிநாட்டுக்கு எல்லாம் ஏனுங்க போகணும் நம்ம உள்ளூர் சமாச்சரதையே பாருங்க.. அட அதாங்க மங்களூர் மேட்டரு… பப்புகளில் பெண்கள் தாக்கப் பட்ட நிகழ்வு… இதற்கு யாருங்க காரணம்? பெண்கள் தங்களுக்கு கொடுக்கப் பட்ட சுதந்திரத்தை முறையாக பயன்படுத்தியிருந்தால் இந்த சம்பவம் நடந்து இருக்குமா? வெறும் பப்புகளிலும், பார்களிலும் தான் பெண் சுதந்திரம் அடைக்கப் பட்டிருக்கிறதா?

இதெல்லாம் விட பெரு நகரங்களில் பெண்கள் சந்திக்கும் தினசரி போராட்டங்கள் சொல்லி மாளாது. வேலைக்கு செல்லும் போது பேருந்தில் ரோமியோக்கள் செய்யும் சில்மிஷங்கள், அலுவலகத்தில் வழியும் சக பணியாளர்கள், சாலையில் நடக்கும் போது சமாளிக்க வேண்டிய ரோடு சைடு ரோமியோக்கள் என காலை முதல் மாலை வரை ஒரு பெண் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் மேற்கொள்ளும் இன்னல்கள் தான் எத்தனை. மறக்கமுடியுமா பெங்களுருவில் நைட் ஷிப்டுக்கு செல்லும் போது சார் டிரைவரால் கற்பழித்து கொலை செய்யப்பட்ட பிரதிபாவை?

அத்தனை பெண்களும் ஆண்களுக்கு சரி நிகராக பாருக்கு சென்றால் தான் அவர்களுக்கு உரிமை கிடைத்து விடப் போகிறதா? ஆண் இது போன்ற விஷயங்களில் ஈடு படுகின்றான் எனில் அதனால் ஏற்படும் பிரச்சினைகளை சமாளிக்க அவனுக்கு இயற்கையிலேயே அவனது உடலில் பலம் இருக்கிறது. ஆனால் பெண்களுக்கோ இயற்கையிலேயே ஆண்களை விட மனோபலம் தான் அதிகமே தவிர உடல் பலம் இல்லை. அதே போல ‘ஸ்ரீராம் எதோவின்’ தாக்குதல்களும் ஏற்புடையதல்ல. ஒரு மனிதன் தானாக திருந்தினால் ஒழிய அவனை/அவளை வற்புறுத்தி திருத்த முடியாது.

இன்னொரு விஷயம் வெள்ளிகிழமைகளில் அலுவலகத்துக்கு பெண்கள் அணிந்து வரும் ஆடை. கேஷுவல்ஸ் டிரஸ் என்று பாலிசி கொண்டு வந்தாலும் கொண்டுவந்தார்கள், பெண்கள் முக்கால் பேண்டை அணிந்து வரத் தவறுவது இல்லை. இரட்டை அர்த்த வாசகம் பொறிக்கப் பட்ட டி.ஷர்ட், அங்கங்களை வெட்டவெளிச்சமாகக் காடும் இறுக்கமான உடைகள்..இவை தேவையா இளம் யுவதிகளே? நீங்கள் ஜீன்ஸ் பேன்ட், டி -ஷர்ட் அணிந்து வாருங்கள். அடுத்தவர் கண்ணை உறுத்தாதவாறு அணிந்து வாருங்கள். எங்கள் அலுவலக பெண்களையே ரயிலில் வரும் பொறம்போக்குகள் தரைக் குறைவான விமர்சனங்கள் செய்வதை கண்டும் காணாதது போல பேடித் தனத்தை நான் செய்திருக்கிறேன்.

ஆனால் அவர்களிடம் “ஏன்டா இப்படி பேசுறீங்க?” என்று கேட்க எனக்கு உரிமை இல்லை. ஏனெனில் பெண்கள் அணிந்து வந்த உடை அவ்வளவு மோசமாக இருந்தது. இதெல்லாம் சில கசப்பான உண்மைகள் தான். எனவே பெண்ணுக்கு இழைக்கப் படும் கொடுமைகளை குறைப்பதற்கு பெண்களும் தங்களை சில மாற்றங்களுக்கு பழக்கப் படுத்திக் கொள்ள தயாராக வேண்டும்.

உங்களுக்கு பெரும்பாலும் தெரிந்த இத்தகைய சான்றுகளே போதும் என்று நினைக்கிறேன். பல சம்பவங்களை கிளர வேண்டாமே.

டிஸ்கி கேள்வி : ஊசி இடம் கொடுக்காம நூல் நுழையுமா? இந்த கேள்வியை வைத்துக் கொண்டு தான் பல புத்திசாலி வழக்கறிஞர்கள் வாதாடுகிறார்கள். (நான் எல்லாத்தையும் சொல்லலீங்கோ. இதனால நீங்க மறுபடியும் கோஷம் போட்டுறாதீங்க.நாடும் தாங்காது, கலைஞரும் தாங்க மாட்டார்.)

பதில் :நுழையும்… ஊசியை இறுகப் பற்றிக் கொள்ள ஒரு விசை இருந்தால்.

இந்த சமாசாரங்களைப் பற்றிய எனது சிந்தனை:

சரி ஒரு ஆண்மகனாக இந்த சமூகத்தில் நான் பிறந்து வளர்ந்து ஒரு மனிதனாக இருப்பதால் இந்த விஷயத்தில் எனது கருத்துக்கள் சில.

பெரும்பாலும் பெண்களுக்கு அநீதி இழைக்கக் கூடிய ஆண்களின் மனோபாவம் பின் வரும் மூன்று வகையில் பிரிக்கலாம்.

1) தான் ஆண் என்ற அகங்காரம் கொண்ட ஆண்மகன் பெண்கள் வெறும் புணர்வதற்கு படைக்கப் பட்டவள் என்று நினைப்பவன். தனக்கு உடல் பசி எடுக்கும் நேரத்தில் இவன் வரம்பு மீற துணிபவன். இவர்களை அவர்களின் உடல் கூறுகளை வைத்தே கண்டு கொள்ளலாம்.

2) சாதரணமாக தோற்றம் கொண்டிருக்கும் சில ஆண்கள் அப்பாவி போல் இருப்பார்கள். ஆனால் சில்மிஷ மன்னர்களாய் இருப்பார்கள். சகஜமாக பேசுவது போல ஆரம்பித்து சந்தில் சிந்து பாட காத்திருக்கும் வகை இவர்கள். இவர்களை அவர்களின் பேச்சை வைத்தே கண்டு கொள்ளலாம்.

3) மூன்றாவது பிரிவு வகையில் உள்ள இவர்களுக்கு பெண்களைக் கண்டாலே பிடிக்காது. பெரும்பாலும் உடல் உளைச்சலை விட மன உளைச்சலை தருபவர்கள் இவர்கள்.

அதே போல கெட்ட வார்த்தைகளில் திட்டுவதிலும் கூட பெண் பாலை முன்னிலைப் படுத்தியே வார்த்தைகள் அதிகம் இருக்கின்றன. இது ஒன்றே போதும் இன்னும் தமிழகத்தில் பெண்களுக்கு சமூகத்தில் மதிப்பு இல்லை இது ஆண் ஆதிக்க சமுதாயம் தான் என்று.

இப்போது நான் கூறுவது தலைப்பை சார்ந்து இல்லை என்றாலும் இவ்விஷயத்தில் இதனையும் கூற வேண்டி இருக்கிறது. ஆண்களால் மட்டும் கொடுமைகள் நிகழ்வதில்லை. ஒரு பெண்ணே கூட இன்னொரு பொண்ணுக்கு கொடுமை செய்யலாம் என்பதற்கு மாமியார், மருமகள், நாத்தனார் குடுமிப் புடி சண்டைகள், குழாய் அடி சண்டைகள் மற்றும் இன்ன பிற சான்றுகள் பல இருக்கின்றன.

ஆனால் இதையும் தாண்டி பெண்களை சக மனுஷி என்ற கோணத்தில் பார்க்கும் ஆண்கள் இருக்கவே செய்கின்றார்கள். அவர்களால் தான் பெண் சமுதாயம் இந்த அளவுக்கேனும் முன்னேற்றம் கண்டிருக்கிறது என்பதை எந்த பெண்ணும் மறுக்க முடியாது.

ஆணும் சரி பெண்ணும் சரி இவ்வையகத்தில் படைக்கப்பட்ட மானுடப் பிறவிகள். இதில் இருவருமே ஒருவருக்கு ஒருவர் துன்புறுத்தாமல் வாழ்ந்தால் தான் இந்த விஷயங்களுக்கு தீர்வு கிடைக்கும். ஆனால் என்ன ஒரு துரதிர்ஷ்டம் பாருங்கள் இது தான் நடக்காது.

எதோ எனக்கு தெரிஞ்சத எல்லாம் சொல்லிட்டேன். இனிமே பெண்களையும் சக மனிதனாய் பார்ப்பது ஒவ்வொரு ஆணின் நடத்தையில் தான் உள்ளது.அதில் பெண்களும் பங்கும் சிறிது உள்ளது.

இன்னும் நிறைய சொல்லனுமுன்னு நினைக்கிறேன் நேரம் வரும் போது சொல்லுறேன்…

@@@@@@@@@@@@@@@@@@@@@@

இங்கிலிஷ்காரன் என்ற பெயரில் இங்கே பதிவு போட்டு இருப்பது வேறு யாரும் இல்லை ..நம்ம தமிழ் நாட்டு .. ஸ்ரீ ராம் ..இங்கு ஒரு விஷயத்தை நான் சொல்லியே ஆகணும். நான் ப்ளாக் ஆரம்பித்த போது தமிழில் இவ்வளவு நிறைய ப்ளாகுகள் இருக்கு என்றே உண்மையில் தெரியாது. வோர்ட் ப்ரெஸ்ஸை ஒரு அலசு அலசி ப்ளாகில் வரும் பான்டை(fonts) தமிழ் படுத்த முயன்ற போது தான் டாஷ் போர்டில் ஸ்ரீ ராமின் ஒரு பதிவை பார்க்க நேர்ந்தது.

அதை படிச்சுட்டு கமெண்ட்ஸ் போடப் போனால் ..அங்கே குந்தவையின் பெயரை பார்த்தேன் ..எனக்கு உடனே ரொம்ப சுவாரஸ்யமா ஆயிடுச்சு ..ஏன்னா நான் ஸ்ரீ ராம் ..குந்தவை இவர்கள் பெயரில் ஒரு நாவலை ( சரி சரி ..ஒரு மொக்கையை )எழுதிட்டு வரேன் . அப்படியே குந்தவையின் ப்ளாகை போய் பார்த்தேன் ..அப்படியே புவனேஷ் ..கல்யாண கமலா அம்மா ப்ளாக் என்று வலை சரங்களைபற்றிய என் உலகம் கொஞ்சம் கொஞ்சமாய் விரியத் தொடங்கியது. எனவே ஸ்ரீ ராமிற்கு முதலில் ஒரு தேங்க்ஸ்..இது என்னடா அநியாயமா இருக்கே ..ஸ்ரீ ராமை பற்றி ஒரு அறிமுகம் தராமல் ஏதேதோ பேசறேன்னு நினைப்பவர்களுக்கு ..அந்த அளவிற்கு நான் பெரிய ஆள் கிடையாதுப்பா..வயசில் மாத்திரம் தான் நான் சீனியர்..ப்ளாக் நடத்துரத்தில் எல்லாம் இவங்க தான் சீனியர்..

அனுதினமும் அணு ஒப்பந்தம்… என்கிற ஒரு பதிவை ரொம்ப ரொம்ப அழகா எழுதறார். இவரை பற்றி நான் அதிகம் சொல்றதை விட நீங்களே போய் தெரிஞ்சுகறது தான் சரி.

இவரை பற்றி மேலும் தெரிந்து கொள்ள , இங்கு சொடுக்கவும்.

@@@@@@@@@@@@@@@@@@@@@@

நான் பாடிக் கொண்டே இருப்பேன்… 1

The sweetest mummy in the world!

The sweetest mummy in the world!


நான் பாடிக் கொண்டே இருப்பேன்…1

எங்கள் வீட்டின் ஹை லைட்டே ரொம்ப பெரிய தோட்டம் தான் ..எங்கள் வீடு கால் ஏக்கர் பரப்பளவில் உள்ள வீடு. வீடு என்னமோ அடக்கமாய் மூன்று பெட் ரூம் மற்றும் இரண்டு லிவிங் ஏரியாக்கள் உள் அடக்கிக் கொண்டு காம்பாக்டாய் தான் இருக்கும் . ஆனால் தோட்டம் ரொம்ப பெரிசு . பெரிய இடம் வேண்டும் என்றே விரும்பி இந்த வீட்டை வாங்கினோம். ( இந்த வீட்டிற்காக சிடியை கொஞ்சம் தள்ளி வச்சுட்டோம் ..ஜஸ்ட் ஒரு முப்பத்தி அஞ்சு கிலோ மீட்டர் .. ;) )

எனக்கு வீட்டிற்குள் கிடந்து அடை படுவதை விட விட வெளிச்சமாய் திறந்த வெளியில் ஊஞ்சலில் அமர்ந்து கொண்டு , வைர முத்துவின் பாணியில் “வானம் எனக்கொரு போதி மரம் ..நாளும் எனக்கது சேதி தரும்” என்று பாடிக் கொண்டிருக்க ரொம்ப பிடிக்கும் .. பக்கத்து வீட்டில் இருப்பவர்கள் தான் அடிக்கடி ஜாகை மாறிக் கொண்டு இருக்கிறார்கள். :(

வலது பக்கத்து வீட்டுக் காரர் ஒருத்தர் வீட்டை விற்று விட்டே ஓடி போய்விட்டார். இருந்தும் பாடுவதை என்னால் நிறுத்த முடியாது .. நேற்று பிரேம் என்னிடம் வந்து ரொம்ப சீரியஸாக இப்படி சொன்னார். ..

பிரேம்: ஸ்வீட்டி ..ரியல் எஸ்டேட் ஏஜென்ட்டிடம் இருந்து எனக்கு ஒரு போன் வந்தது ..மாதம் ஐந்நூறு டாலர் தருகிறேன் என்று சொன்னார்கள் ..

நான்: எதுக்கு ..?

பிரேம் : பக்கத்து வீட்டை வாடகைக்கு விடுகிறார்களாம்.. யாரும் வாடகைக்கு வர பயப் படுகிறார்கள் ..அதான் நமக்கு மாதம் ஐந்நூறு டாலர் தருகிறோம் என்று சொன்னார்கள்..

நான் : என்ன ஆச்சு உங்க ஆஸ்திரேலியக் கார்களுக்கு .. ரிசஷன் முத்திப் போய் பயித்தியம் கியித்தியம் பிடிச்சிருச்சோ ? ( …. இப்படி சொல்லி சொல்லி அவரை வெறுப்பேற்றுவது வழக்கம் .. )

பிரேம்: அவர்களுக்கென்ன ..நல்லா தான் இருக்காங்க .. நம்ம பக்கத்து வீட்டுக்காரர்கள் தான் பாவம் .. வீட்டை வாடகைக்கு விட்டால் மாசம் ஒரு ஆயிரத்து எண்ணூறு டாலர் வருமாம்..வீட்டை காலி பண்ணிட்டு போயி மூணு மாசம் ஆகியும் யாரும் வராமல் இருப்பதால் இதுவரை ஐயாயிரத்து நானூறு டாலர் நஷ்டம்..அதான் மாசம் நமக்கு ஐந்நூறு டாலர் தருகிறேன் ..ஒரு உதவி பண்ண முடியுமா என்று அவர்கள் சார்பில் அந்த வீட்டை நிர்வகிக்கும் ஏஜென்ட் போன் பண்ணிக் கேட்டார்..

நான்: என்ன இது ? புது மாறி வேண்டுதலாய் இருக்கே ..? .. நமக்கு ஐந்நூறு டாலர் கொடுத்தால் அவங்க வீட்டுக்கு யாராவது குடி வருவாங்களாமா ? உங்க ஆபீஸ் வேலையோட ப்ரோக்கர் வேலையையும் பார்க்கர idea எதாச்சும் இருக்கா என்ன

பிரேம் : அதெல்லாம் ஒன்னும் இல்லை .. ஸ்வீட்டி.. கிட்ட தட்ட பாதி வீட்டு வாடகையை கூட உங்களுக்குத் தந்துடறோம் , உங்க பொண்டாட்டியை மாத்திரம் கொஞ்ச நாள் பாடாமல் இருக்கச் சொல்லி தயவு செய்து கேட்டுப் பாருங்கள் என்று வீட்டு சொந்தக் கார்கள் ரொம்ப கெஞ்சிக் கேட்டார்களாம் .. மாசம் ஐந்நூறு டாலர் சும்மாவே வருது ஸ்வீட்டி ..பிளீஸ்..பிளீஸ் கொஞ்சம் கருணை வையேன் ..??


பிரணவ் : அப்பா ..ஐந்நூறு டாலர் வந்தால் எனக்கு பர்த் டேக்கு மினி ரேஸ் கார் வாங்கிக் கலாம் .. இல்லை.. yippee !!

பிரேம் : ஆமாம் புஜ்ஜி ..எல்லாம் அம்மா கையில் தான் இருக்கு …

நான் : :x :x :x நர நர நர ..

ஒழிஞ்சு போகட்டும் என்று வெறும் தமிழ் பாடல்களை மாத்திரம் பாடிக் கொண்டிருந்த நான் ..இப்ப எல்லாம் பிரணவின் உதவியால் இங்கிலீஷ் பாடல்களை பாடிக் கொண்டு இருக்கிறேன்.. ஒவ்வொருவரும் இது சொல்வார்கள் அது சொல்வார்கள் என்று பயந்தால் நாம் வாழவே முடியாது என்பது என் கட்சி :)

அதோட கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை ..!! அது சரி கழுதைக்கு எதுக்கு கற்பூர வாசனை தெரியனும்னு என்னை போல அசத்தலாய் யோசிப்பவர்களுக்கு .. உங்கள் நேரத்தை இன்னமும் சிறப்பாக்க, கீழே இருக்கும் இந்தப் பாடல்களை வழங்குகிறேன்.. சில பாடல்களுக்கு யு.டியூப் லிங்கை தேடுவது பெரும்பாடாய் இருக்கு ..உங்களுக்கு தெரிந்தால் போடுங்க..நானும் கேட்டுப்பேன் :)

இதெல்லாம் எங்க அம்மாவிற்குப் ரொம்ப ரொம்ப பிடித்த சில பாடல்கள்..

எங்க அம்மா ரொம்ப ரொம்ப அழகா பாடுவாங்க. பேரே ஜானகின்னு இருக்கும்போது சொல்லவா வேணும் ..எங்க அப்பாவோட குரல் பி.பி. ஸ்ரீ நிவாஸ் போல இருக்கும் ..சின்ன வயசில் இவங்க ரெண்டு பேரும் தாலாட்டு பாடித் தான் நான் தூங்கியது வழக்கம் .. இப்ப பாருங்க … தப்பி தவறி நான் பாடினாலும்… அப்பாவும் பையனும் என்னை கலாய்த்து உண்டு இல்லைன்னு ஆக்கிடறாங்க :)

படிச்சிட்டு சாரி கேட்டுட்டு எங்க அம்மா செலக்ஷன் எப்படின்னு சொல்லுங்க.. இந்த பாடல்களை ரொம்ப முன்னாலேயே அவங்க சொல்லி நான் எழுதிட்டேன் ..ஆனா போடறதுக்கு இப்ப தான் நேரம் வாய்த்தது…

1.இந்த மன்றத்தில் ஓடி வரும் இளம் தென்றலை கேட்கின்றேன்

2.அமைதியான நதியினிலே ஓடும் ஓடம்

3.பாலிருக்கும் பழமிருக்கும் பசி இருக்காது

4.வாழ நினைத்தால் வாழலாம் வழியா இல்லை பூமியில்

5.பூமாலையில் ஒரு மல்லிகை

6.பால் வண்ணம் பருவம் கண்டேன்

7.கண்ணன் வருவான்

8.அழகன் முருகனிடம் ஆசை

9.எந்தன் உள்ளம் துள்ளி விளையாடுவதும் ஏனோ..

10.அத்தை மடி மெத்தை யடி

11.பக்கத்து வீட்டு பருவ மச்சான்

12. நீ இல்லாத இதயத்திலே சிந்தனை இல்லை

13. ஒருவனுக்கு ஒருத்தி என்று உறவு கண்டோம் திருக்குறளில்

14, மல்லிகை என் மன்னன்

15. கண்ணன் வரும் நேரமிது

16. கண்ணுக்கு குலமேது கண்ணா

17.கண்கள் எங்கே நெஞ்சமும் அங்கே

18.நான் மலரோடு தனியாக என் இங்கு நின்றேன்

19. நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்

20.மெல்ல வரும் காற்று

21.முத்துக்களோ கண்கள்

22.அன்புள்ள மான் விழியே ..ஆசையில் ஊர் கடிதம்

23. மாலை சூடும் மண நாள் ..இளம் மங்கையின் வாழ்வில் ..திரு நாள்

24.சொன்னது நீதானா ..சொல் சொல்

25.தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே

26.தன்னிலவு தேனிறைக்க

27.கொஞ்சி கொஞ்சி பேசி மதி மயக்கும்

28.உன்னை ஒன்று கேட்பேன்

29.சிட்டுக் குருவி முத்தம் கொடுத்து

30.காதல் சிறகை காற்றினில் விரித்து

31.நெஞ்சத்திலே நீ நேற்று வந்தாய்

32.காண வந்த காட்சி என்ன வெள்ளி நிலவே

33. மாலை பொழுதின் மயக்கத்திலே

34. காதலெனும் வடிவம் கண்டேன் ..

35.அனுபவம் புதுமை அவனிடம் கண்டேன்

36. என்ன பார்வை உந்தன் பார்வை

37.தேன் உண்ணும் வண்டு

38.காற்று வெளியிடை கண்ணம்மா

39.பிருந்தாவனமும் நந்த குமாரனும்

40. அடுத்தாத்து அம்புஜத்த பார்த்தேளா

41.தேடினேன் வந்தது

42.உலகம் எங்கும் ஒரே மொழி

43.லவ் பார்ட்ஸ் லவ் பார்ட்ஸ்

44.விழியே கதை எழுது

45.பனி இல்லாத மார்கழியா

46.ஆயிரம் நிலவே வா

47. பார்த்தேன் சிரித்தேன்

48.இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே

49.தமிழுக்கு அமுதென்று பேர்

50. ஐம்பதிலும் ஆசை வரும்

( ஐம்பதாவதா அவங்க டக்குன்னு இந்தப் பட்டை சொல்ல நாங்க ரெண்டு பெரும் கட்டிப் பிடிச்சிட்டு ஒரே சிரிப்பு ..இந்தியாவில் இப்ப இருக்கும் அப்பா நியாபகம் வந்துடுச்சின்னு நான் சொல்லி ஓட்ட ..அப்பறம் அவங்க கொஞ்சம் கண் கலங்க flow தடை பட்டுடுச்சு .. )

என்ன இருந்தாலும் அம்மா அம்மா தான் இல்லை.. !

இப்ப நானும் அம்மா ..நாளைக்கு நானும் இப்படித் தான் பாட்டி ஆவேன்னு நினைக்கிறன்.. என்னை போல எங்க அம்மாகிட்ட எனக்கு இருக்கும் இதே அன்னியோன்யம் பிரணவிற்கும் இருக்கணும்கறது தான் என்னோட ஆசை ..

அப்பறம் இந்தப் பதிவை பார்த்தல் ரொம்ப சாதாரணமாய் தோணும் ..பட் இந்தப் பாட்டுக்கள் ஒவ்வொன்னையும் நீங்க கேட்டால் …எங்க அம்மாவோட டேஸ்ட் புரியும் ..என்ஜாய் த மியூசிக்

அடுத்து எங்க அப்பாக்கு பிடிச்ச ஒரு ஐம்பத்து பாட்டோடு உங்களை சீக்கிரம் சந்திக்கிறேன்
********************இன்னமும் தொடரும் **********************

-Janu

Do share your opinions. நானும் அம்மாவுக்கு காட்டுவேன்ல :)

மின்னுவதெல்லாம் பொன்னல்ல ..!

மின்னுவதெல்லாம் பொன்னல்ல ..!!!!

போலித்தனமாய் சிரித்து
போலித்தனமாய் நட்பு கொள்கிறார்கள் ..
போலித்தனமாய் அழுது
போலித்தனமாய் இரக்கம் கொள்கிறார்கள் ..
போலித்தனமாய் மகிழ்ந்து
போலித்தனமாய் பாராட்டுகிறார்கள்..
இப்படியே
போலித்தனமாய் நல்ல சொல் பேசி
போலித்தனமாய் நல்ல செயல் செய்து
போலித்தனமாய் நல்ல பெயர் வாங்கி
போலித்தனமாய் நல்லவ ராகும்
இந்த
பெருமைக்கு பள பளக்கும்
பொன்னான வாழ்வை விட
உண்மையாய் வாழ்ந்தால் வெறும்
கெட்ட பெயரே மிஞ்சுமென்றாலும்
கெட்டவளாகவே வாழ்ந்திடுவேன் போ..

-ஷ்யாமா

ஏனிந்த கவிதை ?

நல்லதுக்கு காலம் இல்லை எனும் பேச்சு இன்று நேற்றல்ல, வழி வழியாய் புழக்கத்தில் இருந்தே வருகிறது.. எனக்கு நல்லதோ கேட்டதோ முதுகிற்குப் பின் செய்யும் செய்கைகளில் என்றுமே உடன் பாடு இல்லை. இந்த என் குணத்தினால் எனக்கு சில சமயம் இடர்பாடுகள் ஏற்படவே செய்தாலும் , அவற்றை தாண்டி வாழவே செய்கிறேன்..

மேலும் என் அளவில் நான் மன நிறைவும் கொண்டே இருக்கிறேன். கண்ண தாசனின் ஒரு பாடலை என் சிறுவயதில் என் தந்தை அடிக்கடி பாடக் கேட்பேன். ” நல்லவர்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு ..ஒன்று மனசாட்சி ..ஒன்று தெய்வத்தின் சாட்ச்சியம்மா …”எனும் பாடல் தான் அது.. தெய்வம் இருக்கிறதா இல்லையா என்றெல்லாம் நான் என் மூளையை போட்டுக் குழப்பிக் கொள்வது இல்லை. ஆனால் மனம் இருப்பது உண்மை !! அப்படி மனமுள்ள மனிதர்கள் எப்படி போலியாய் இருந்தாலும் மகிழ்ச்சியாய் கூட இருந்திட முடியும் என்று பல நேரங்களில் வியக்கவே செய்கிறேன்..

இப்படி போலித்தனம் எனும் மகுடிக்கு மயங்கிய பாம்பாகவே வாழ்வதும் வாழ்வா ?

உண்மையாய் வாழ்வதற்கு என்னை அடிமைப் படுத்தியவர் மற்றும்
இதற்கான என் ரோல் மாடல் எல்லாம் மஹாத்மா காந்தி அவர்கள் தான். அவரின் சத்திய சோதனை , ஆங்கிலத்தில் Story of My Experiments With Truth by M.Gandhi எனும் இந்தப் புத்தகத்தை இந்த தடவை என் மகனின் பிறந்த நாளிற்குப் பரிசாகக் கொடுக்கலாம் என்று இருக்கிறேன்..

இனி இந்த மாதம் முடியும் வரை பிரணவிற்கும் எனது தாயாருக்கும் என்று மாத்திரமே பதிவு இடுவதாகவும் திட்டம்.

பிரணவ்.. பொன்னை போல மின்னுவது தான் வாழ்கை என்று எண்ணி விடாதீர்கள் .. அலுமினியம் போல பார்ப்பதற்கு சாதாரணமாய் தோன்றினாலும் , பள பளப்பு அவ்வளவாய் இல்லாமல் போனாலும் பிளாட்டினம் மதிப்பிலும் வலிமையிலும் பொன்னை விட உயர்ந்தது என்பதை என்றுமே மறந்து விடாதீர்கள் ..

அதீத அன்புடன்
அம்மா

மின்னுவதெல்லாம் பொன்னல்ல ..!!!!

பெண்களுக்கு எதிராக இழைக்கப் படும் கொடுமைகளுக்கு எதிராக ஆண்களின் குரல்கள் !

பெண்களுக்கு எதிராக இழைக்கப் படும் கொடுமைகளுக்கு எதிராக ஆண்களின் குரல்கள் ..

நேரடியாக பதிவிற்கு வருகிறேன். .. காலம் காலமாய் நம் நாட்டில் மாத்திரம் அல்லாமல் உலகம் முழுவதிலும் உள்ள பெண்களுக்கு எதிராக பல வன்முறைகளுக்கும் கொடுமைகளுக்கும் நிகழ்ந்து கொண்டுதான் வருகிறது . ஆண்களும் கொடுமைகளுக்கு ஆளாகிக் கொண்டு தான் இருக்கிறார்கள் :D . ஆனால் உடலளவில் உறுதியை பெற்றிருக்கும் ஆண் தன்னுடைய பிரச்சனைகளை பெரும்பாலும் தானே தீர்த்துக் கொள்ள முடியும்.

மேலும் பெண்களுக்கு பாலியல் கொடுமைகள் சிறு வயதிலேயே தொடங்கி விடுகிறது. இரண்டு வயது பெண் குழந்தை முதல் எண்பது வயது முதிர்ந்த பெண் மணி வரை பலாத்காரம் செய்யப்படுகிறார்கள் என்பது மிகவும் வருந்தத் தக்க விஷயம் . சிலவற்றை எழுதக் கூட முடிவது இல்லை. மனம் வெகு பாரமாகி விடுகிறது.

ஆனாலும் வெளிப்படையாகக் கூறுகிறேன். பல சிறுமிகள் சொந்த தந்தையினராலேயே ..பல சிறுமிகள் சொந்த சகோதரனாலேயே பல சிறுமிகள் வளர்ப்புத் தந்தை என்றைழைக்கப் படும் உறவு முறைகளாலேயே கூட ..இந்தக் கொடுமைகளுக்கு ஆளாகின்றனர். இதில் பெரும்பாலான சம்பவங்கள் சமுதாயத்தில் கிடைக்கும் அவப் பெயருக்கு பயந்து வெளியில் வருவதும் இல்லை.. பலருக்கு தெரிவதும் இல்லை !

சமீபத்தில் ஆப்ரிக்காவில் ஒரு ஒன்பது வயது சிறுமி , தனது சொந்த வளர்ப்புத் தந்தையினாலேயே , பலாத்காரம் செய்யப்பட்டு , அவள் இரட்டை குழந்தைகளை சுமக்கும் அவலம் நேர்ந்தது. அவளுக்கு கருக் கலைப்பு நடந்ததிற்கும் RIO DE JANEIRO – A Roman Catholic archbishop, கண்டனம் தெரிவித்து அந்த தாயினையும் , அந்த சிறுமிக்கு மருத்துவ உதவி செய்த மருத்துவர்களையும் ,தங்களின் சமூகத்தில் இருந்து அவர் ஒதுக்கி வைத்து விட்டார். . அவருடைய வாதத்தில் எல்லா உயிர்களிடத்திலும் அன்பு நோக்கும் கருணையை விட பிடிவாதமே அதிகம் இருந்தது போன்று இருந்தது.

எனது பெரிய பாட்டி , பனிரெண்டு வயதில் என்னுடய பெரியம்மாவை ஈன்றெடுத்து இரண்டாம் நாள் இறந்து போனார். இதெல்லாம் அந்தக் காலம் என்பவர்களுக்கு என்று தான் இப்பொழுது நடக்கும் சில கொடுமைகளையும் இப்படி வெளிச்சத்திற்கு கொண்டு வருகிறேன்.

வயிற்றில் இருந்த குழந்தைகள் என்ன பாவம் செய்தது என்பது அவரின் வாதம். பல நேரங்களில் கருக் கலைப்புக்கு எதிராகவே ஒலிக்கும் என் குரல் , சில நேரங்களில் ஏதும் பேச இயலாமல் கனத்த மவுனம் சாதிக்கிறது. கடவுள் எதை ஒப்புவார் என்ற கேள்விக்கு விடையை ஏன் மனிதர்கள் கடவுளிடமே விட்டு விடக் கூடாது.

மேற்படி தகவலுக்கு இங்கு தொடுக்கவும்.

வெகு சில நாட்களே ஆன கருவை கலைப்பது குற்றம் எனில் , காண்டம் உபயோகிப்பது கூட தவறு தானே. இருவரின் உயிர் சத்து தானே இணைந்து குழந்தையாய் உருவாகிறது. மேலும் அப்படி இணையும் உயிர் சத்துகள் குழந்தையாய் உருவாக சில வாரங்கள் ஆகும். எனவே தேவைப்படின் கருக் கலைப்பு என்பது தவறு இல்லை என்று சில நேரங்களில் தோன்றுகிறது.

மேலும் தற்போதைய மருத்துவ அறிவியல் துறையின் வளர்ச்ச்சி காரணமாய் , உருவான கரு , மிகவும் பாதிக்கத் தகுந்த குறை பாடுகளுடன் உள்ளதா என்று அறியும் வசதி உள்ளது. எந்த ஒரு காலத்திலும் குணப் படுத்த இயலாத வியாதிகள் கொண்ட கருக்களை அது குழந்தையாய் உருவாகுவதற்கு முன்பே கண்டறியும் வசதி உள்ளதால் அதை கலைக்கும் முடிவை மருத்துவர்கள் பெற்றோர்களின் கையில் தந்து விடுகிறார்கள்.

இதை எழுதும் போது மிக மிக கடினமாக உள்ளது. ஏன் எனில் நான் தனிப்பட்ட முறையில் குழந்தையோ கருவோ எப்படி இருந்தாலும் அதை ஏற்று வளர்க்க வேண்டும் என்று தான் கருதுகிறேன்.முட்டையை தின்பதும் கோழியை தின்பதும் ஒன்றுதான் எனபது தான் என் அளவிலான சித்தாந்தம்.

அனால் ஒன்பது வயது குழந்தையின் நிலைமையை யோசித்துப் பார்க்கிறேன். மனம் பதறுகிறது. என் மகனுக்கு ஆறு வயது தொடங்கப் போகிறது. அவன் ஒரு வேளை மகளாக இருக்கும் பட்சத்தில் தன்னுடைய ஒன்பதாவது வயதில் அவள் ஒரு குழந்தைக்கு தாயாக ஆக நேர்ந்தால் எப்படி இருக்கும் என்றே நான் இந்த பிரச்சனையை அணுகுகிறேன்.

மேலும் பெண்களுக்கு எதிராக கொடுமைகள் நடக்கப் படுவதை குறித்துப் பேசினால் , ஆண்கள் என்னமோ அவர்களை தரக் குறைவாய் கருதுவதாக நினைப்பது வேதனை தரும் மற்றுமொரு விஷயம். இது நாம் சார்ந்துள்ள சமுதாயப் பிரச்சனை . இதில் ஆண் பெண் என்று பேதம் பார்த்து ஒப்புக்கு விவாதிப்பதை விட, உண்மையில் பாதிக்கப் படும் பெண்களுக்கு நியாயம் கிடைத்திட வழி செய்வோம்.

நான் மிக மிக சந்தோஷமாய் இருக்கிறேன். மிக மிக அற்புதமான கணவர் எனக்கு . எனவே என்றுமே நான் ஒட்டு மொத்த ஆண்களையும் குறை கூறுவது இல்லை. எத்தனை தடை வந்தாலும் என்னை புரிந்திட்ட கணவர் கிடைத்ததினால் மட்டுமே என்னால் இத்தனை ஈடுபாட்டுடன் இந்த வலைப் பூவை நடத்த முடிகிறது.

ஒரு வார்த்தை பிரயோகமாய் தான் ஆண்கள் இப்படி செய்வது வேதனையாய் இருக்கிறது என்று கூறுவது..நான் நல்ல எத்தனையோ நண்பர்களை சந்தித்துக் கொண்டு இருக்கிறேன்/ வருகிறேன். எனவே இது ஒட்டு மொத்த ஆண்களை குறிக்கும் பதிவாக யாரும் கருத வேண்டாம் என்று பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

இந்த பக்கத்தில் வலை உலக நண்பர்களை அழைத்து பெண்களுக்கு இழைக்கப் படும் கொடுமைகளுக்கு எதிரான தங்களின் குரலினை கொஞ்சம் அழுத்தமாய் தெரிவிக்கும்படி கேட்பதாக எண்ணம். என் எண்ணம் நிறைவேறும் என்கிற நம்பிக்கைகளுடன், ,முதலாவதாக இங்கு பதிவிட அழைப்பது புவனேஷ் தம்பியை.

கோரிக்கையை ஏற்று வருவார் என்கிற நம்பிக்கையில் ..

அன்புடன்
ஜானு.

எச்சரிக்கை : பதிலுக்கு ஆண்களுக்கு எதிராக பெண்களால் இழைக்கப் படும் கொடுமைகள் என்று யாரும் போட்டீர்கள் என்றால் தெரியும் சேதி.. வேறு என்ன , அங்க வந்து செமத்தியாய் பாராட்டிடுவேன் அம்புட்டுதான் .. :D .!!!

மேலும் விவரங்களுக்கு ..

times of Inida வெளியிட்டுள்ள ஒரு இடுக்கையை படிக்க இங்கு தொடுக்கவும்.

ஒவ்வொரு வருடமும் ஆயிரக் கணக்கான இந்தியப் பெண்கள் எரித்துக் கொல்லப் படுகிறார்கள். கடந்த வருடம் இதன் எண்ணிக்கை 100000. இதை பற்றிய தகவல் அறிந்திட இங்கு சொடுக்கவும்.

பெண்களுக்கு எதிரான மற்றும் சில கொடுமைகள்

பிரணவ் கிட்ட சொன்ன “பாட்டி வடை சுட்ட கதை “

பிரணவ் கிட்ட சொன்ன “பாட்டி வடை சுட்ட கதை “

ஒரு ஊருல ஒரு பாட்டி வடை சுட்டுக் கிட்டு இருந்தாங்களாம் ..ஒரு வடை இல்லை ரெண்டு வடை இல்லை.. நிறைய வடை ..எல்லாம் செம டேஸ்ட்டி வடை ..வகை வகையா ..இருந்தது அவங்க சுட்ட வடைகளனைத்தும் ..

கார வடை ..மெது வடை.. ஆம வடை..மசாலா வடை..வாழப்பூ வடை.. வாழக்காய் வடை ..முட்டை கோஸ் வடை .. பருப்பு வடைன்னு எல்லா வடையும் ஒரே நேரத்துல ஆசையா பேரன் பேத்திகள் சாப்பிடனும்னு செஞ்சாங்களாம் அந்த பாட்டி.

வடையோட மணம் அப்படியே காத்துல பரவிச்சாம். அது பக்கத்து மரத்துல வசிச்சுட்டு இருந்த ஒரு சோம்பேறிக் காக்காவையும் சுண்டு இழுத்துச்சாம் ..

வாயூரிய காக்கா அந்த பாட்டி கிட்ட போயி , ” பாட்டி ..இவ்ளோ விதம் விதமா வடை ..நான் பார்த்ததே இல்லை.. எதாவது ஒன்னே ஒன்னையாவது எனக்குத் தரியா ” , என்று கேட்டுச்சாம்..

பாட்டிக்கு வயசு தான் பெருசே தவிர மனசு ரொம்ப சின்னது ..சீ போ ஒன்னும் இல்லைன்னு விரட்டி அடிச்சாங்களாம்..

சும்மா போகுமா இந்த காக்கா.. மெல்ல மெல்ல கள்ளம் அதன் மனசுல புக , அது திருட்டு காக்காவாய் மாறி வடையை திருடிட்டு ஓடிடுச்சாம்..

மரத்து மேல ஏறி உக்கார்ந்து கிட்ட காக்கா, அதை சாப்பிட ஆரம்பிக்கும்போது ஒரு குள்ள நரி அங்க வந்துச்சாம்.

அது காக்காவை பார்த்து “ஹேய் காக்கா ..நீ ரொம்ப அழகு .. உன் குரலோ ரொம்ப இனிமை ..உன் பாட்டை கேக்காம எனக்கு டெய்லி தூக்கமே வருவது இல்லை.. எனக்காக ஒரே ஒரு பாட்டை பாடேன் ப்ளீஸ் ” என்று கெஞ்சி கேட்டுச்சாம்.

காக்கா கொஞ்சம் புத்தி சாலி ..அது அவ்ளோ சீக்கிரம் ஏமாறலை ..எனக்கே அல்வாவானு மனசுக்குள் நெனச்ச காக்கா , வாயில் இருந்த வடையை எடுத்து , காலுக்கு அடியில் வச்சிக்கிட்டு கா.. கானு கத்திச்சாம்..

நரி மாத்திரம் கேனையா என்ன..? மனசுக்குள் காக்காவின் சாமார்த்தியத்தை எண்ணி மெச்சிக் கிட்டாலும், நரி காக்காவை விட தந்திரம் வாய்ந்தது தானே ..அது காக்கா பாடறதை விடாம கேட்டு ரசிக்கிற மாறி நடிச்சதாம்..

உண்மையா பாராட்டுவது போல , ஆஹா ஓஹோ என்று பாராட்டிக் கிட்டே இருந்துச்சாம்.. குள்ள நரியின் புகழ்ச்சியில் இந்த காக்கா கொஞ்சம் கொஞ்சமாய் புத்த்தியை இழக்க ஆரம்பிச்சதாம்.

மேலும் , மேலும் பாராட்டின நரியின் வார்த்தைகள் கேட்டு இந்த காக்கா உற்சாக மாய் “நிஜமா நாம ரொம்ப நல்லாத்தான் பாடறோமோ ” என்று நினைத்து அது பாட்டுக்கு பாடிட்டே கிடக்க இப்ப நரி தந்திரமாய் சொல்லுச்சாம் ..” ஏய் காக்கா ..நீ பாடறதே சூப்பராய் இருக்குதே ..நீ பாடிட்டே டான்ஸ் ஆடினால் எப்படி இருக்கும் ..எனக்காக ஒரு டான்ஸ் ஆடேன் ப்ளீஸ் ..அதையும் பார்த்துட்டு போயிடறேன்னு ” :)

புகழ் போதையில பரவசமான காக்காய் , இப்ப எச்சரிக்கை குணம் குறைந்து ஒரு குதியாட்டம் போட காலடியில் இருந்த வடை கீழே விழுந்திடுச்சாம் :(

நரி வடையை எடுத்துகிட்டு , நாளைக்கு வந்து மீதி ஆட்டத்தை பார்க்கிறேன் காக்கா ..ஸீ யு ..சூன் -னு சொல்லி ஓடியே போயிடுச்சாம்.. ;)

நீதி 1: பாட்டி கிட்ட காக்கா மரியாதைய கேட்கறச்ச பாட்டி வடை கொடுத்து இருக்கலாம்.. பாட்டிக்கு நல்ல பேராவது வந்து இருக்கும் .. ஏமாளி பட்டம் கிடைச்சு இருக்காது ..

நீதி 2: வடையை வாங்கிட்டு போன திருட்டு காக்காய் ..முதலில் வடையை சாப்டுட்டு மத்த வேலை பார்த்து இருக்கலாம்.. .. எவ்வளவு பெரிய புத்திசாலியாய் இருந்தாலும் , . எவ்ளோ எச்சரிக்கையாய் இருந்தாலும் பத்தாது .. புகழ் போதையில் மாட்டி கிட்டா அவ்வளவு தான் ..அதிகமாய் யாராவது நம்மை புகழ்ந்தால் நாமும் அதிகமாய் விழிப்புணர்வு வோடு இருப்பது நல்லது ..

நீதி 3: நரி போல அசராமல் காரியத்திலேயே கண்ணாய் இருந்தால் , .ஏதாவது ஒரு வழி பொறக்கும். வெற்றி நிச்சயம்!


விபத்து : வடை திருடிட்டு வேகமா ஓடிப் போன நரி பாட்டி , சர்கஸ் கம்பனி வச்சி நடத்தும் பாட்டியோட பேரன் கிட்ட மாடிக்கிச்சாம்.. இப்ப கூண்டுக்குள்ள அடைஞ்சி கிடக்கு .. என்று கேள்வி.. தப்பு செஞ்சால் தண்டனை ஏதாவது ஒரு ரூபத்தில் வந்தே தீரும் ..

கொசுறு நீதி : வாய்மை எப்படியாவது வெல்லும்.

சின்ன வயசுல பாட்டி வடை சுட்ட கதை ரொம்ப பாமஸ்.. யார் முதலில் எழுதி வைத்தார்களோ தெரியாது .. இந்த பஞ்ச தந்திரக் கதைகள் காலத்துக்கும் அழியாதவை ..இங்கே அதை ரீ -மிக்ஸ் மாத்திரம் நான் பண்றேன்.. ஏன்னா இப்ப இருக்கிற குழந்தைகள் ரொம்ப புத்திசாலிகள்.. கேள்வி மேல கேள்வி கேட்கிறாங்க..அவங்க கேள்விக்கு விடை சொல்றதுக்குள்ள முழி பிதிங்கிடுது ..என் குழந்தை கிட்ட கதை சொல்லும்போது நான் ரொம்ப யோசிச்சு பொறுமையா சொல்லணும் … சமீபத்தில் அப்படி சொன்ன கதை தன் இதுவும்..

இந்தக் கதை கூட பிரணவோட கேள்விகளுக்கு நான் கொடுத்த பதில்களால தான் உருவானது ..
வடை தானே காக்கா கேட்டுச்சு ..அந்த பாட்டி சுத்த மோசம்.. காக்கை வடயை காலடியில் வச்சிகிச்சாம்..என்றால் ..ஏன் நரி டான்ஸ் ஆட சொல்லலைனு :) ஒரு கேள்வி ..

பரவாயில்லை பையன் என்னை இல்லை .. அப்பாவ மாறியும் இல்லை ..ரொம்ப விவரமாய் தான் இருக்கான் என்று மனதிற்குள் நினைத்து பெருமூச்சு விட்டுக் கொண்டேன்..

அந்த சர்கஸ் விஷயம் மாத்திரம் தான் என்னோட டச் .. சோ ஏதாவது நல்லா வந்து இருந்ததுன்னா அதற்கும் காரணம் ப்ரணவ் மட்டுமே ..

எச்சரிக்கை : இதை பதிவுன்னு எல்லோரும் ஏத்துகிட்டு ஒழுங்கா பின்னூட்டம் இடுங்கள்.. இல்லாட்டி இதே போல் நிறைய மொக்கை போடுவேன் .. ;) இல்லாட்டியும் இதே போல் தான் மொக்கை போடுவேன்.. :D

அச்சச்சோ இத மறந்துட்டேனே :- இந்தக் கதையை நான் ப்ரனவிற்கு சொன்னப்ப , அவனோட பாட்டி கூடவே இருந்தாங்க.. அவங்களுக்கு செம சந்தோசம்.. நான் முழி பிதுங்கினாலும் சமாளிச்சு கிட்டு அவனுக்கு பதில் சொல்ல, எங்க அம்மா என்னை பார்த்து இப்ப தெரியுதா ..உன்னை எல்லாம் வளர்க்க நானும் அப்பாவும் எவ்ளோ கஷ்டப் பட்டு இருப்போம்னு .. நீ அப்ப கேள்வி கேட்ட இப்ப உன் பையன் உன்னை மடக்கறான்னு சொல்லி ஒரே கலாட்டா.. பாட்டிங்களுக்கு தான் பேரங்க மேல எவ்ளோ பாசம்..

“அவார்டு கொடுப்பவர்களுக்கெல்லாம் ஏதாச்சும் அவார்டு இருக்கா? ” அல்லது ” எனக்கு எப்ப பக்குவம் வரும் ? ”

“அவார்டு கொடுப்பவர்களுக்கெல்லாம் ஏதாச்சும் அவார்டு இருக்கா? ” அல்லது ” எனக்கு எப்ப பக்குவம் வரும் ? ”

தனித்தனியாய் இரண்டு பதிவுகள் எழுதுவதற்கு மனம் இல்லை என்பதால் ஒன்றிலேயே எழுதி விடுகிறேன் . உங்களுக்கும் சிரமம் குறையும் :) .

கடந்த இரண்டு வாரத்தில் நேற்று தான் சுமார் ஒரு ஏழு மணி நேரம் தொடர்ச்சியாய் தூங்கினேன் .. அதற்குள் இத்தனை பேர் கமெண்ட்ஸ். எல்லோருக்கும் ரிப்ளை பண்ணுவதை விட அதை ஒரு பதிவாய் இப்படி போட்டு விடலாம் என்று இன்னமும் பக்குவப் பட்டுக் கொண்டிருக்கும் நான் யோசித்து இதை எழுதுகிறேன் ;) .

அவார்டு கொடுக்கிற மற்றவர்களை பற்றி எல்லாம் என்னால் சுதந்திரமாய் (அப்பாடா கொஞ்சம் பக்குவம் ..வருது போல இருக்கே .. :) ) ஒன்றும் சொல்ல முடியாது . ஆனால் என்னை பற்றி சொல்வதற்கு எனக்கு என்ன பயம்…. ;)

அந்தக் குறைவே உங்களுக்கு வேண்டாம் நாமக்கல் சிபி. எனக்கு தான் ஏற்கனவே இரண்டு பட்டங்கள் நானே கொடுத்துக் கொண்டேனே ..பார்கலை.. ” ஏமாளி ” , “இளிச்ச வாயி ” .. இது போதாது என்றால் ..வேறு நீங்கள் எதையாவது கொடுத்தாலும் ஏற்கிறேன் ..ஆனால் ஆதாரத்துடன் நிரூபித்து கொடுக்கணும் .. !! :lol:

இல்லாட்டி மத்தவங்க அதுக்கு போட்டியாய் ..எங்களுக்கு தராமல் அதெப்படி ஜானு உனக்கு மாத்திரம் தரலாம்.. என்று கேள்வி மேல் கேட்டு சண்டைக்கு (!!!!) வருவார்கள்.. ஆதாரங்கள் கொடுத்தாலும் சிலர் சண்டைக்கு :( வருவார்கள் உங்களை போல .. அவர்களை நம்மால் ஒன்றுமே செய்ய முடியாது சிபி …:D ( பக்குவம் கொஞ்சம் கூடிடுச்சோ .. :( !!!! ).. இதை மறக்காமல் சொல்லிடறேன் பா.. உங்களின் முதல் வருகைக்கும் , முதல் பல பின்னூட்டங்களுக்கும் நன்றி ..

அதெப்படி சிபி? பிட் அடிச்சால் எல்லாம் மாட்டிக்க மாட்டாங்களா? எங்க ஸ்கூலில் தரவோ ( முழுமையாக ) செக் பண்ணுவாங்க பா !! மேலும் அதெல்லாம் தப்புன்னு தான் எங்க டீச்சர்ஸ் சொல்லி தந்து இருக்காங்க.. copy அடிக்கறது வேற.. பிட் அடிக்கறது வேற ஆனால் ரெண்டயுமே கையும் களவுமாய் தான் பிடிக்க முடியும்..!! :D

இந்த பிட் அடிச்சால் பாருங்க.. தண்டனை கொஞ்சம் அதிகம் …!! அடுத்து மூன்று வருடம் exam எல்லாம் எழுதக் கூடாதுன்னு சில கடுமையான சட்டங்கள் எல்லாம் எங்க ஸ்கூலில் இருக்கு .. ;)

எங்கள் பள்ளிகளில் இதற்குத் தண்டனை சற்று கடுமையாய் இருப்பதற்குக் காரணமும் இதுவாய்த்தான் இருக்கும் என்று எண்ணுகிறேன் .. பிட் அடித்தே தீரனும்னு அதற்குத் தகுந்த ஏற்பாடுகள் செய்து கொண்டு வருபவர்கள் , இந்த தவறை செய்ய முன் கூட்டியே தீர்மானிச்சு, அதை நியாயப் படுத்திக் கொண்டு ஒரு தவறான மனப் போக்கை வளர்த்துக் கொள்கிறார்கள். அவர்களை கண்டிக்காமல் விட்டால் இது வெற்றியை , தங்கள் உழைப்பு ஏதுமின்றி , குறுக்கு வழியில் அடைந்து விடும் ஒரு தவறான எண்ணத்தை அவர்களுக்கு ஏற்படுத்தும் ..என்பதே !!

… நீங்க லக்கி ” பிட் அடித்தால் தப்பு இல்லைன்னு சொல்லிக் கொடுத்த ” ஸ்கூலில் படிச்சிருக்கீங்க. உங்களுக்கு விருப்பம் இருந்தால் அந்த ஸ்கூலின் முகவரியை வெளியிடுங்கள். நாங்கள் எங்கள் குழந்தை களை மழைக்கும் அங்கு ஒதுங்காமல் பார்த்துக் கொள்கிறோம்…. ;)

அப்பறம் நீங்க அபி அப்பாவோட கமெண்டை வழி மொழிந்ததை எல்லாம் ” இவர் என்ன கமெண்டை கூட சொந்தமாய் எழுதாமல் இப்படி சுடுகிறார்..” என்று எண்ண வில்லை.. மேலும் அதை பிட் என்று கூட கருதவில்லை .. அவர் கருத்தினை நீங்க ஏற்று வழி மொழிகிறீர்கள் என்று எண்ணுகிறேன்.. :)

அப்பாடா எனக்கு பிட்டிற்கும், திருட்டிற்கும், வழி மொழிதலுக்கும், பிறர் கருத்துகளை ஏற்று அதை சொந்தமாய் தன் நடையில் வெளி இடுவதற்கும் உள்ள வித்தியாசங்கள் எல்லாம் நன்றாய் தான் தெரிகிறது ..இல்லையா ?? என்ன சொல்கிறீர்கள் நண்பர்களே ..!!!! ( பக்குவம் கூடிட்டே போகுது … ஹையா :lol: )

பெரியவங்க சந்தையில் குழந்தைகளை இழுப்பது என்றைக்கும் நியாயமே இல்லை அபி அப்பா. இதை நான் உளமாரக் கூறுகிறேன் .மேலும் குழந்தைகளை இங்கு நான் எங்கே இழுத்து உள்ளேன் என்று தெரியவில்லை அபிஅப்பா . எங்கள் வலிகளின் வேதனையை பிறருக்கு உணர்த்தும் ஒரு உவமை யாக அல்லவா அதை நான் கூறினேன். நீங்கள் எல்லாம் என்னை காட்டிலும் நிறைய நாட்களாய் ப்ளாக் நடத்துகிறீர்கள். நாமக்கல் சிபி அவர்களின் logic படிப் பார்த்தால் என்னை விட நிறைய படித்திருக்க வேண்டும் … பின் நீங்களே இப்படி கேட்டால் எப்படி ? :(

நிஜமாக வேதனையாய் இருக்கிறது அபி அப்பா.. நான் சில நாட்களாய் உங்கள் பக்கத்திற்கு வர வேண்டும் என்று நினைத்திருந்தேன் .. அபி அப்பா என்கிற நீங்கள் எனக்கு பல வலை பூக்களில் பார்த்து ரொம்ப பழகிய பெயர். என் கணவரிடம் கூறிக் கொண்டிருப்பேன் .. அவரையும் உங்களை போன்று என் குழந்தைக்கு ஒரு ப்ளாகை தொடக்கி எழுதி வரும்படி … ப்ளாகை கூட உங்க குழந்தையின் பெயரில் இழுத்து நடத்தும் நீங்கள் இப்படி கூறுவது .. ரொம்ப கஷ்டமாய் இருக்கிறது … :( .. தங்களின் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி .

குழந்தைகள் வேறு பெரியவர்கள் வேறு என்றெல்லாம் நான் பெரிதாக எண்ணி குழம்புவது இல்லை. குழந்தைகள் தான் நாளை பெரியவர்கள் ஆகிறார்கள். இதை எழுதிய நானும் , படிக்கும் நீங்களும் குழந்தைகளாய் இருந்து பெரியவர்கள் ஆனவர்கள் தான். சிலருடைய வளர்ச்ச்சி வயதில் மாத்திரம் இருப்பது தான் வேதனை தரும் விஷயம்.

நாங்களும் எல்லோரின் நலம் விரும்பிகள் தான். பறக்கும் படை வைத்து மாணவர்கள் செய்யும் தப்பை கண் காணிப்பதன் நோக்கம் , அவர்கள் மேலும் வளராமல், வெற்றி அடையாமல் போக வேண்டும் என்பது அல்ல. அவர்கள் இனி அந்தத் தவறுகளை செய்யாமல் இருக்க வேண்டும் என்பதற்கும் , அது மற்றவர்களுக்கு ஒரு எச்சரிக்கையாய் இருக்க வேண்டும் என்பதற்கும் தான்.

குறை கூறுவது வேறு .. குற்றங்களை கூறுவது வேறு .. நீங்கள் குறை கூறுகிறீர்கள் ..நாங்கள் குற்றங்களை கூறுகிறோம். மேலும் இதை தெளிவு படுத்துகிறோம் . நாங்கள் யாரும் சண்டை இடவில்லை . எங்கள் உரிமைகளை நிலை நாட்டிக் கொள்கிறோம். ஏமாற்றப் படுவதை பகிர்ந்து கொள்கிறோம். மற்றவர்களுக்கு எச்சரிக்கையாய் இருந்திடும் என்று.

நான் அடிக்கடி கூறுவது தான். நியாயங்கள் எல்லாம் நமக்கு பிடித்தவர் என்றால் ஒரு மாதிரியாகவும் , பிடிக்காதவர் என்றால் வேறு மாதிரியாகவும் மாறி விடுகின்றன. எனக்கு அப்படி இல்லை . என் பையன் தவறு செய்தால் கூட அவனே அதை ஒத்துக் கொள்ளும்படி தான் வளர்கிறேன். அதோடு மாத்திரம் இல்லை அவன் அனாவசியமாய் புகழ் ஆரங்களை ஏற்றுக் கொள்வதும் தவறு என்று தெரிந்தும் வளருகிறான்.

உதாரணம்..

என் மகன் பிரணவோட ஸ்கூலில் எங்களை தனியாக அழைத்து குழந்தையின் வளர்ச்சியை பற்றி தெரிவிக்க வேண்டும் என்று சொன்னார்கள் ..

நாங்கள் (நானும் அவரும் ) இருவரும் சற்று பயந்தபடி தான் சென்றோம் .

நாங்கள்: முன்னேற்றம்(progress) எப்படி இருக்கு ? எங்களுக்கு கொஞ்சம் கவலையாய் தான் இருக்கு ..அவன் வகுப்பில் எல்லோரும் ஏறத்தாழ ஒரு வருடம் அவனை விட பெரியவர்களாய் இருக்கிறார்கள் ..சுலபத்தில் கிரகித்துக் கொள்கிறானா? வேண்டும் என்றால் அடுத்த வருடமே சேர்க்கிறோம் …

டீச்சர்: என்ன இப்படி கூறுகிறீர்கள் ..இதை நான் ஒரு நாளும் ஏற்கப் போவதில்லை .. உங்கள் குழந்தை ரொம்ப சுட்டிகை …என்னுடைய பாவரைட் பாய் .. கவலை படாதீர்கள் ..குழந்தைகள் விரைவில் எல்லாம் கிரகித்துக் கொள்வார்கள்..

நாங்கள் : அதில்லை நாங்கள் வீட்டில் ஆங்கிலம் பேசுவது இல்லை.. நீங்களோ பள்ளியில் சேர்ந்த அடுத்த வாரத்திலேயே ஆங்கில கதை புத்தகங்களை வீட்டில் படித்து மறுநாள் குழந்தைகள் தாங்கள் படித்த கதையினை ஸ்டோரி டெல்லிங் போல நண்பர்களிடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்கிறீர்கள்..
நீங்களும் வீட்டில் ஆங்கிலத்தில் பேசாதீர்கள் ..என்று எங்களுக்கு சொல்லி விட்டீர்கள்.. அவன் எப்படி சமாளிக்கிரானோ ?

டீச்சர் : .. இரண்டு மூன்று மொழிகள் பேசும் குழந்தைகள் மிகவும் புத்திசாலிகளாய் இருப்பார்கள்..உங்களுக்குத் தெரிந்தது தானே.. மேலும் நான் உங்களை அழைத்தது ஒரு நல்ல சேதியை சொல்லத் தான் …

டீச்சர் : பிரணவ் இங்கே வா..(பிரணவ் தன் வழக்கமான புன்னகையோடு ஓடி வந்தார். ) உங்கள் மகன் இதுவரை வகுப்பில் நடந்த எல்லா ஸ்பெல்லிங் கேமிலும் டென் அவுட் ஆப் டென் ..

பிரணவ் ( தயங்கியபடி ) : Excuse me.. மிஸ். ஹோர்டன் .. கேன் ஐ சே சம்திங் .. முதல் தடவை நைன் அவுட் ஆப் டென் தான் .. வாங்கினேன்

டீச்சர் சிரித்து விட்டார். பார்த்தீர்களா உங்கள் மகனின் நினைவாற்றலை .. குழந்தைகள் மிகவும் கெட்டிக் காரர்கள். அதிலும் உங்கள் மகன் அனாவசிய மான புகழ்ச்சியை கூட ஏற்பது இல்லை.. அவன் வயதிற்கு மிகவும் மெச்சூர்ட் …

எங்கள் இருவருக்கும் சிரிப்பு கலந்த பூரிப்பு ..

டீச்சர்: மேலும் த்ராஷ் ( Thraas ) சார்டினை வேகமாய் புரிந்து கொண்ட மாணவர்களில் அவனும் ஒருவன் . மேலும் அவனது எண்களின் அடிப்படையை புரிந்து கொண்டு பெரிய எங்களை கண்டு பிடிக்கும் உத்தி கண்டு நாங்கள் வியக்கிறோம்.. அவனை வைத்து ஒரு வீடியோ டாகுமெண்டரி (ஆவணப்படம் ? ) எடுப்பதாய் உள்ளோம். அதற்கு உங்களது அனுமதி வேண்டும் ..அது குறித்து பேசுவதற்கு தான் கூப்பிட்டோம் ..

குறிப்பு :ப்ரனவிற்கு நான் சின்ன வயசில் இருந்து அதாவது அவனுக்கு இரண்டு வயது இருக்கும் போதிலிருந்து , எண்களை வைத்து விளையாடுவது வழக்கம். யார் பெரிய எண்களை சொல்வது என்று போட்டி வைத்து விளையாடுவோம்.. ..இப்போது சர்.. (sir) க்வாட்ரில்லியன் பெப்டில்லியன் , செப்டில்லியன் , நனில்லியன் , இன்பினிட்டி என்று என்னை திணற அடித்துக் கொண்டிருக்கிறார். மேலும் நான் இப்போது தீவிரமாய் யோசிக்கிறேன்.. அவனை குழந்தையாகவே இருக்குபடி விட்டு விட வேண்டும் என்று.. மற்ற குழந்தைகளில் இருந்து அவன் இப்படித் தனித்து பிராடிஜி போல தெரிய வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது..அவன் குழந்தை பருவத்தின் கள்ளம் கபடு அற்றத் தன்மை கொண்டு வாழட்டும் என்று தோன்றுகிறது..

பல பெரிய மனிதர்களை பார்த்தால் இவர்களுக்கு இருக்கும் பக்குவம் எல்லாம் எனக்கும் சரி , என் குழந்தைக்கும் சரி தேவை இல்லை என்று தான் தோன்றுகிறது.குழந்தைகள் வேறு பெரியவர்கள் வேறு என்றெல்லாம் நான் பெரிதாக எண்ணி குழம்புவது இல்லை. குழந்தைகள் தான் நாளை பெரியவர்கள் ஆகிறார்கள். இதை எழுதிய நானும் , படிக்கும் நீங்களும் குழந்தைகளாய் இருந்து பெரியவர்கள் ஆனவர்கள் தான். வளர்ச்ச்சி வயதில் மாத்திரம் இருப்பது தான் வேதனை தரும் விஷயம்.

பிரணவ் நீங்கள் அம்மாவை மன்னிக்க வேண்டும் ..என் குழந்தையாய் இருந்தாலும் , உன்னை பற்றிய செய்தியை இப்படி பகிர்ந்து கொள்வதற்கு … உன்னிடம் அம்மா உன்னை பற்றி எழுதுகிறேன் என்று சொல்லி விட்டு ,தான் செய்கிறேன் .

அடுத்த மன்னிப்பு உன் போட்டோவை வெளியிட்டதற்கு . உன்னிடம் காட்டி விட்டு , உன் அப்பாவிடம் எல்லாம் பேசி விட்டு தான் வெளியிட்டேன்.. இப்போது அதற்கும் வருந்துகிறேன் டா செல்லம் …நீ அனுமதித்தாலும் நீ இன்னமும் குழந்தை தானே.. உனக்கு பெரியவர்களின் தெளிவு வரும்போது நீயாய் வெளியிடுவது தான் முறையாய் இருக்குமோ ?

எனவே உன் புகை படத்ததை மாத்திரம் எடுத்து விடுகிறேன். ஆனால்

என் உயிர் பிரணவ்
கரும்பை காட்டிலும்
தித்திக்கும் உன் குறும்புகளை
என்றைக்கும் பதிவிடவே ஆசை
பின் ஒரு நாளில்
புகை படம் போல
பார்த்து அக்கணங்களை
சுவையோடு அசை போட்டிட
இவை எனக்கு தேவை …

( அபி அப்பா ..கரும்பை இப்படி உவமையாய் இழுப்பதற்கும் மன்னித்து விடுங்கள். அப்பறம் நாமக்கல் சிபி எனக்கு தமிழ் இந்த அளவிற்குத் தான் தெரியும் .. ரொம்ப பெரிய ஆள் எல்லாம் இல்லை .. கற்றது கை மண் அளவு ..ஐ மீன் எறும்பின் கை மண் அளவு.. உடனே எறும்புக்கு கை இருக்கிறதா என்றெல்லாம் ஆதாரங்கள் கேட்டு அழ வைக்காதீர்கள் …. எனவே உங்களுக்கு மாத்திரம் நான் கற்றதை எறும்பின் காலளவாக மாற்றி விடுகிறேன். :) )

அப்பறம் என் பக்குவத்தை பற்றி எல்லாம் யாரும் ரொம்ப கவலை படாதீர்கள் .. இந்த ஜன்மத்தில் எனக்கு அத்தனை பக்குவம் வராது ..எத்தனை பக்குவம் என்கிறீர்களா .. ?

அதற்கு நான் சொந்தமாய் எழுதிய இந்தக் கதையை படியுங்கள்.

கீழே திரைகடலில் ஆன்மீகப் பயணங்கள் என்ற தொடரை அருமையாக எழுத்தும் என் தோழி அனிதா பாணியில் ஒரு என் / ஜென் கதை ..

(அனிதா நீங்க தான் சொல்லணும் இது போல ஏதாவது ஜென் கதை இருக்கா என்று .. நான் ஓஷோ படித்து பல வருஷம் ஆயிடுச்சு .. மேலும் இந்த ஜென் கதை நிச்சயமாய் நான் படித்தது இல்லை …)

தாகம் தீர்ப்பதற்குத் தானே தண்ணீர்..!

ஒரு ஊரில் ஒரு வயதான ஜென் துறவி ஒருத்தர் இருந்தார். அவருக்கு குறைவான சீடர்கள் தான் என்றாலும் , எல்லோரும் நிறைவான குணங்களை கொண்டவர்களாய் இருந்தார்கள் . அந்த குருவிடம் பல காலம் ஒன்றாய் இருந்தவர்கள் என்பதாலும் அவரிடம் பெரும் மதிப்பு வைத்திருக்கும் மாணவர்கள் என்பதாலும் அவர்களுக்கு சமீபத்தில் நடக்கும் ஒரு விஷயத்தில் மனக் கசப்பு ஏற்பட்டது .

அதற்குக் காரணம் பக்கத்து ஊரில் இருக்கும் ஒரு போலிச் சாமியார் ! அதென்ன மாயமோ தெரியலை மந்திரமோ தெரியலை. போலிகளுக்கு இருக்கும் மதிப்பு எப்பவும் அசலுக்கு இருப்பதில்லை. இங்கும் அப்படித் தான் . போலிச் சாமியாரின் புகழ் எட்டுத் திக்கிலும் பரவ, இந்த சீடர்களும் ஆவலாய் அவர் என்ன சொல்கிறார் என்று கேட்போமே என்று போனார்கள்.

அங்கு தான் அவர்களுக்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. ஏன் என்றால் அந்த போலித் துறவி வேறு யாரும் இல்லை . இந்த வயதான துறவியின் ஒரு முன்னாள் மாணவர். மேலும் அவர் கூறுவது எல்லாம் அந்த வயதான ஜென் துறவியின் சொந்தக் கருத்துக்கள். அதுவும் வரி பிசகாமல் ஒரு வார்த்தை மாறாமல் அட்ச்சரம் குறையாமல் ..அச்சு அசலாய் எல்லோரிடமும் தன் கருத்து போல சொல்லிக் கொண்டிருந்தார் அந்த முன்னாள் மாணவர் .

அவரை துதி பாடியவர்களிடம் மருந்துக்கும் மறுப்பு தெரிவிக்காமல், எல்லாம் அவன் செயல் என்று நாடகம் வேறு ஆடிக் கொண்டிருந்தார். அவரையும் அவர் கூறுவதையும் கேட்டு கொத்திப் படைந்த சீடர்கள் துறவியிடம் சென்று வருத்தத்துடன் இதை பற்றி முறையிட்டார்கள்.

அதற்குத் துறவி சொன்னார்: இன்னமும் கொஞ்ச நாளில் என் காலம் முடிந்து விடும். தாகம் தீர்ப்பதற்குத் தானே தண்ணீர். பாத்திரம் எதுவாய் இருந்தால் என்ன?

உப்பை தின்றவன் என்றாவது ஒரு நாள் தண்ணீர் தண்ணீர் குடித்து தான் தீர வேண்டும் என்பது அவர் சொல்லாமலே மாணவர்களுக்குத் தெரியும்.

என் காலமும் சீக்கிரம் தான் முடியப் போகிறது. நானே எழுதிய கதை என்றாலும் இந்த துறவியின் பக்குவம் எனக்கு இல்லாதது எனக்கே வருத்தமாய் தான் இருக்கிறது. அனால் பல நேரங்களில் நக்கீரன் போல இருப்பது தான் இந்த குள்ள நரிகள் நிறைந்த காலத்திற்கு ஏற்றதாக இருக்கும் என்று தோன்றுகிறது.

மேலும் இந்தக் கதை ..திரைகடலில் வெளிவரும் மற்றக் கதைகள் / பதிவுகள் .. வேறு எங்கும் பார்க்க முடியாது என்று நான் சவால் விடுகிறேன்.

அப்படி இதை போல வேறு சாமியார் யாராவது சொல்லி இருந்தால் எனக்குத் தெரிவிக்கவும் .. அது நிச்சயம் இங்கிருந்து சுடப் பட்டதாய் தானிருக்கும் .

(இப்படி சொல்வதற்குக் காரணம் என்னை போல அரை குறை தமிழ் எல்லோருக்கும் வராது என்பது தான் அது.. சத்தியமாய் தலை கணம் எல்லாம் இல்ல :( )

இன்னமும் இது போன்ற பல நல்ல பட்டங்களை
எதிர் பார்த்துக் காத்திருக்கும் ,

ஏமாளி , இளிச்ச வாயி, அப்பாவி , அடிப்பாவி , அடி அசடே , ” இன்னமுமா புத்தி வரல” சாமியாரிணி
அரை குறை தமிழச்ச்சி
ஜானு

உங்க எல்லோருக்கும் வான வில்லின் வண்ணம் ஏழு பாட்டினை காணிக்கையாய் சமர்பிக்கிறேன் ..

பிங்கி: இன்னமுமா ஜானு இப்படி சமர்பிக்கரத்தை நீ நிறுத்தாம இருக்க ..

ஜானு : என்ன பண்றது பிங்கி “இன்னமுமா புத்தி வரல ” என்கிற பட்டத்துக்கு ஏற்ற மாதிரி கொஞ்சமாச்சும் நடந்துக்க வேண்டாமா? அனால் இதை சாக்கு வைத்துக் கொண்டு சொல்லாம கொள்ளாம எங்கயாவது இது எனதாக்கும் என்று உரிமை பாராட்டி போட்டால் இருக்கு …

“பறக்கும் படை “.. ” ரகசிய போலீஸ் ” , “Jeans Pant 007″ கணக்கா …

இந்த அவார்டுகள் கூட நல்லா இருக்கே என்று மனதிற்குள் நினைத்த பிங்கி, ஆவலுடன் : என்ன .என்ன பண்ணுவ ஜானு .. எல்லோரையும் சுட்டுடுவியா ?

ஜானு : ச்சே ச்சே ..அந்த வார்த்தையை மாத்திரம் என் கிட்ட சொல்லாதே நீ .. நான் இன்னொரு பதிவையும் இதே போல போட்டுடுவேன்னு தான் சொல்ல வந்தேன் .. :D

pinki : :roll:

இறுதியாய் ….. அடிக்கடி சுட்டுக் கொண்டு இருப்பவர்களுக்கும், அப்படி சுடுவதை நியாயப் படுத்துபவர்களுக்கும் …. தங்கள் நண்பர்கள் செய்தால் மட்டும் அதற்கு சப்பை கட்டு விளக்கங்கள் தருகிறவர்களுக்கும் ஒன்றை சொல்ல விரும்புகிறேன்..

உண்மையும் சுடும்.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

சரி கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணிக்கலாம் பிரெண்ட்ஸ் ..

ஜோக்ஸ் கார்னர்

நாமக்கல் சிபி : நீண்ட நாளா எழுதுறவங்களுக்கு ஒரு நிதானமும் இருக்கும்!

ஜானு : பிதற்றல்கள்.. சிபி .. !!!!!! ( நான் சொன்னது உங்க ப்ளாக் பேரை :D .. Take it easy please)

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

இதை பதிவு என்று ஒத்துக் கொள்ளதாவர்கள் தீவிரமாகக் கண்டிக்கப் படுகிறார்கள் . :)

உன் மூக்கின் நுனியுடன் உனது சுதந்திரம் முடிகிறது..

இது ஒரு கற்பனை கதை ..இதை எழுதியதின் நோக்கம் யாரையும் புண் படுத்துவது இல்லை.. ஏன்னா நான் எல்லாம் நான் மாத்திரமே புண்ணாகிப் போகிற ஜன்மம்..

எனக்கு எல்லா மனிதர்களையும் மன்னிக்கும் உயர்ந்த கொள்கை ரொம்பப் பிடிக்கும்..ஆனால் அதே நேரத்தில் தான் செய்த தவறுக்கு பகிரங்கமாய் மன்னிப்பு கேட்கும்வரை..யாரையும் மன்னிக்க முடியாமல் திண்டாடுவேன்.. ஏன்னா நானும் ரத்தமும் உணர்வுகளும் கொண்ட சராசரி மனுஷி தானே..

இப்ப கதைக்கு போவோம்…

உன் மூக்கின் நுனியுடன் உனது சுதந்திரம் முடிகிறது..

காட்சி ஒன்று :

சமீபத்தில் என்னுடைய தோழி ஒருத்தி , ” ஹேய் ஜானு …நீ கதை எழுதறியா …இல்லை காப்பி அடிக்கறியா… ஏன் ஒழுங்கா update போடறதே இல்லை.. உண்மையா கதை எழுதறவர் போட்டு முடிச்சால் தான் நீ அதை சுட்டு உன் ப்ளாகில் போடுவியா ..” என்று விளயாட்டாய் கேட்டு எனக்கு ஒரு மெயில் அனுப்பினாள்.

முதலில் எனக்கு புரியவில்லை..” ஹா ஹா..எனக்கு தான் காப்பி வாடையே ஆகாதே ..உனக்குத் தெரியாதா? பாட்டி வடை சுட்ட கதையையே நான் சுட்ட மாதிரி (I mean just வடை :D ) ஒரு கதை போடலாம்னு இருந்தேனே ..உனக்கு எப்படி நான் நினைக்கறது எல்லாம் அச்சு பிசகாம டெலிபதியா வந்து மூக்குல வேர்த்துடுதோ .. தெரியலை….ஹி ஹி ” என்று கேனத்தனமாய் அவளுக்கு ரிப்ளை அனுப்பினேன் .. ..

” மெயில் அனுப்பின முப்பதாவது நிமிஷம் , என்னுடய சிநேகிதியிடம் இருந்து எனக்கு போன் …”

ஹேய் ஜானு.. எப்படி இருக்க.. நிஜமாவே கதை எல்லாம் நீ தான் எழுதறியா..? உன்னோட ப்ளாகுல வந்து கமெண்ட்ஸ் போடறவங்க ப்ளாகுக்கு எல்லாம் போறியா … இல்லையா..? உனக்கு எதாச்சும் உலக நடப்பு தெரியுதா.. இல்லியா? ” , என்று பட படவென பொரிந்து தள்ளினாள்.

ஜானு: என்ன பிங்கி..எனக்கு வடையே இன்னமும் சரியாய் சுடத் தெரியாது …இதுல கதை சுடறதா..? நீ வேற..ஹை..வடை ..கதை ..நான் பேசறது கூட நல்லா ரைமிங் -கா தான் இருக்கு இல்லை..பிங்கி .. ஹி ஹி ..

பிங்கி: இதுக்கொண்ணும் கொறச்சல் இல்லை.. உன் daughter கூட வளர்ந்துடுவான்னு நினைக்கிறன் ஜானு.. ஆனால் நீ கஷ்டம்…அப்படியே தான் இருக்க.. அங்க உன் ப்ளாகில் இளம் மாறன் அண்ணா என்று ஒருத்தர் வந்து உன் பையனுக்கு வாழ்த்து மடலை தந்தார்.. இல்லையா..அவரோட குழுமத்தை போய் பார்த்தியா நீ ..? உன்னை சேரு சேருன்னு பல தடவை சொல்லி இருக்காரே.

ஜானு: இல்லையே ..ஜஸ்ட் few டைம்ஸ் தான்..சொல்லி இருப்பார்.. இப்ப அவரே வேணாம்னு சொல்லிட்டாரே..அப்படியே அவர் சேருன்னு சொன்னாலும் எனக்கு நோ டைம்..உனக்கே தெரியும் இல்லை என்னோட வேலைகள் பத்தி எல்லாம் …!! இப்ப கம்பியூட்டர் முன்னலையா இருக்க..அப்ப நீ வேணா அவர் அனுப்பிய மெயிலை பாரேன்…

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

show details Mar 5

என் இனிய நேசமே..

தங்கையின் வடிவில்

தரணியில் வசந்தம்

செழிக்க அத்தானுடனும்

என் மாப்பிள்ளையுடனும்

உன் மகிழ்ச்சியினை

அள்ளித் தந்தாயே…

அதுவே ..

அமீரக கடலில்..வேதனைகளின்

திணறலில் தினம் உள்ளே

இறுகிக்கிடந்தவனை..

உன் மடலும்..அதன் மகிழ்வும்

அப்படியே வெளியே தூக்கி..

அடைத்திருந்த மூச்சுக்குழலை

சரியாக்கியதே…

நான் ” ……” விட்டு வெளியே வந்து விட்டேன்..

சில காலம்..ஆம்… சில காலம் ஆகலாம் சேர..

மழையோ..வெயிலோ..அதனதன் பருவத்தில் வந்தால் தான் அதற்கும் அர்த்தம்..மற்றவர்களுக்கும் ஏற்கும்..

ஆகையால்..தூண்டி விட்ட உன்னை துவலவிட்டதா எண்ணாமல்.. வரும் எந்தன் எண்ணங்களையும் எழுத்துக்களையும் படி…

அன்புடன்
இளம் மாறன்

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

காட்சி இரண்டு
( அடுத்த நாள்)

ட்ரின்க் ட்ரின்க் ..போன் கதைகளில் வருவது போலவே கற்பனை கலந்த நிஜத்திலும் ஒலிக்கும் போலிருக்கிறது .. காலங்காத்தாலேயே அலறிய போனை பதறி அடித்துக் கொண்டு போய் எடுத்தால் பிங்கி ..

பிங்கி : நீ போக மாட்டாய்னு தெரிஞ்சு தான் நான் போய் பார்த்துட்டு வந்தேன் …அப்ப தான் எனக்கு உன்னோட இன்னொரு (ஏமாளி) முகம் தெரிஞ்சது..

ஜானு: என்ன திடீர்னு போன் பண்ணி இப்படி உளர்ற.. ? தலையும் புரியலை ..வாலும் புரியலை..என்ன யாராவது திரைகடலில் நான் ஆற்றும் பணியை பாராட்டி Madame Tassaud-இல் (லண்டன் மெழுகுச் சிலை மியூசியத்தில்) எனக்கு மெழுகுச் சிலை வச்சி இருக்காங்களா? ஹி ஹி ..

பிங்கி : ம்ம்ம்.. வச்சி இருக்காங்க “இன்ன்புடனில்” நல்லா ஒரு அல்வா கடையை உன் பேரில் …! எல்லாம் என் தலையெழுத்து.. உன் ஜாதகத்தை கையில் எடுத்து உங்க அப்பா ஊர் ஊராய் சுற்றினதை விட , நான் தான் உன் மேட்டரோடு அதிக நேரம் இப்படி ப்ளாகு ப்ளாகாய் சுத்தி வந்திருப்பேன்னு நினைக்கிறேன்..

ஜானு: என்னடி ..பிங்கி இது..ஜாதகம் அது இதுன்னு உளறல் மேல உளறல்.. எனக்கு ஜாதகமே எழுதலை ..!! நீ என்ன ….கனவு ஏதாவது காணறியா..இப்ப? காலைல இவ்வளவு சீக்கிரம் நீ எழுந்திருக்கவே மாட்டியே..என்ன ஆச்சு தூக்கத்துல நடக்கிற வ்யாதி மாறி போனில் பேசற வ்யாதி ஏதாவது……….வந்துடுச்சா?

பிங்கி (கோவமாய்) : எனக்கு தூக்கத்துல அறையர வ்யாதி தான் இருக்கு….ஜானு … எனக்கு வருகிற ஆத்திரத்தில் .. முதல்ல என் கேள்விக்கு பதில் சொல்லு ..நீ ஏன் இன்ன்புடன் குழுமத்தில் இன்னமும் சேரலை.. இன்னமும் அதை போய் பார்கலை என்கிறதை உன்னோட மெகா சைஸ் இளிச்சவாய் தனத்தில் இருந்தே தெரியுதே..

ஜானு: சேரச் சொன்ன இளம் மாறன் அண்ணாவே ” இன்ன்புடன் குழுமத்தில் ” இருந்து வெளி வந்து விட்ட பிறகு நான் எதுக்கு சேரனும்… அப்பறம் யார் இந்த இளம் மாறன் அண்ணா…? ஒரு நாலு கமென்ட் மூலமாய் தான் தெரியும்.. அவருக்கு என்னை எத்தனை நாளாய் தெரியும்னு கூட எனக்குத் தெரியாது..!! அதான் கொஞ்சம் அவரை பற்றித் தெரிந்ததும் சேரலாம்னு விட்டு விட்டேன்… கடைசியில் அவரே வெளியில வந்துட்டார்.. நீ தான் மெயிலை பார்த்தியே .! தெரியலை? நீ ஏனடி இப்படி அனாவசியமாய் டென்ஷன் ஆகி , என்னையும் டென்ஷன் படுத்தற …

பிங்கி : மார்ச் 5th உனக்கு மெயில் அனுப்பினார்னு சொன்ன.. நானும் பார்த்தேன்.. ஆனால் அசடே ..அன்னைக்கு தான் உன்னோட ” என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்” என்கிற கதையை சுட்டு அந்த குழுமத்தில் போட்டு இருக்கிறார்..அவர்

முதலில் உன்னோட ” சும்மா இருக்கிறேன் கதையை ” அவர் மகளிர் தினத்துக்கு மகளிருக்கேல்லாம் சமர்பித்து இருப்பதை படிச்சிட்டு தான் டென்ஷனாகி உனக்கு போன் பண்ணேன்.. நீ பேசறதை பார்த்த்தும் பொண்ணு ரொம்ப தெளிவா இருக்கே னு தெரிஞ்சது…

சரி நாமதான் .. கொஞ்சம் இந்த இளம் மாறன் ப்ளாகை ரிசர்ச் பண்ணனும்னு நினைத்து, பொறுமையா நேத்து நைட் எல்லாம் ரிசர்ச் மேல ரிசர்ச் பண்ணினால்..நீ மாத்திரம் நல்லா தூங்கி எழுந்துட்டு ..உங்க அம்மா கையால் இட்லி சாம்பார் வடைன்னு வெளுத்து வாங்கிட்டு இருக்க..

ஜானு: அதெப்படி பிங்கி உனக்கு தெரிஞ்சது..அம்மா இட்லி வடை சாம்பார் பண்ணது எல்லாம்..கூட? (ஆச்சரியத்தில் வாய் பிளந்தபடி நான்)

பிங்கி: நர நர நர.. அது மாத்திரம் இல்லை ஜானு ..உனக்கு இளம் மாறன் அண்ணா வண்டி வண்டியாய் கொடுக்கிற ஹல்வா பத்தியும் நல்லா தெரியும்.. அவர் உன்னோட கதைகளை எல்லாம் ஒவ்வொன்னா சுடர முயற்சியில் இருக்கிறார்னு நினைக்கிறேன்..ரொம்ப நல்ல சிந்தனை வளம் அவருக்கு..தான் சிந்திப்பதுடன் மாத்திரம் இல்லாமல், அடுத்தவர்களையும் (இப்படி ????!!!!) சிந்திக்க வைக்கும் முயற்சியில் , ” சும்மா இருக்கிறேன் ..” .. “என்று மடியும் உங்கள் அடிமையின் மோகம்..” னு கலக்கலாய் கதை எழுதறார்.. சிந்திக்க வைக்கும் இளம் மாறனின் சிறுகதைகள் என்கிற பெயரில்..அந்த இன்ன்புடன் குழுமத்தில்..அது வெளிவருகிறது..

ஜானு: அப்படி எல்லாம் நமக்கு தெரியாத ஒரு மனுஷரை பற்றி சொல்லாதே பிங்கி .. என்னுடைய ஒரு கவிதையைத்தான் அவர் போட்டு இருந்தாராம்.. ..அவரோட ப்ளாகில் தெரிவிச்சு இருக்காரே…ப்ராபப்லி அது ” குப்பத்து சிலப்பதிகாரமாய் இருக்கும்..”

பிங்கி : அதான் நீ ஒரே அடியா ..அண்ணா ..தம்பி ..எல்லாம் கிடைச்சுட்டாங்க..அப்படி இப்படின்னு அரசிய வாதி கணக்கா , ப்ளாகு மக்களை பார்த்து என் ரத்தத்தின் ரத்தமே ..உடன் பிறப்புகளேன்னு ஏகத்துக்கும் உருகி வச்சிருக்கியே.. ஒரு நாளாச்சும் எனக்கு போன் பண்ணி நீயாய் பேசினதாய் சரித்திரம் இருக்கா..?? ( சமயம் கிடைக்கும்போது இப்படி நம்புகிற எல்லாராலும் காலை வாரி விடப் படும் நான் ஒரு :( பாவப் பட்ட ஜன்மம் ..ம்ம்ம்ம் )

நீ உருகின உருகலில் தான் ” விழுந்து அடித்துக் கொண்டு ” போய் அவரின் இன்ன்புடன் குழுமத்தை பார்த்துட்டு வந்தேன்… ”

உன் கவிதையை மட்டும் இல்லை ஜானு.. நீ எழுதின இரண்டு கதைகளை கூட இளங்கோவனின் சிந்தனையை தூண்டும் சிறுகதைகள்னு ” வெளியிட்டு இருக்கார்.. யாருக்கும் புரியாதபடி ..ஒரு மூலைல ” நன்றி ஜானு..கூடவே உன்னோட குட்டி பையன் ப்ரனவிற்கு வாழ்த்துக்கள் …” னு ரொம்ப சாமர்த்தியமா எழுதினது யாருங்கறதை யாருக்கும் புரி படாமல் செய்து இருக்கார்..

படிச்ச யாருக்குமே சத்தியமாய் புரிந்திருக்காது அந்த ரெண்டு கதையை எழுதியதும் நீ தான்னு .. இது வரை எல்லோரும் போட்டு இருக்கிற கமெண்ட்ஸ் எல்லாம் அப்படி தான் சொல்லுது..கூடவே உன்னோட அண்ணா உன்னை பற்றி மறந்தும் கூட வாயே திறக்கிறதாய் இல்லை..அவரை பாராட்டுவதற்கு வெறும் நன்றிகள் தான்..சொல்றார்.,இதுல் தவறு நடந்துடுச்சுன்னு மறந்தும் வாயை திறப்பதாக இல்லை..

ஜானு : ” இப்ப நீ சொல்றது தான் எனக்கு ஒன்னும் புரியலை..பிங்கி…பதினஞ்சு கிலோ மீட்டர் தூரத்தில் தானே வீடு ..நீ இதுக்கு நேராக வீட்டுக்கே வந்திருக்கலாம்…. உனக்கு பிடிச்ச இட்லி ..வடை சாம்பார்..புதினா தொகயல்.. தேங்காய் சட்னி ..எல்லாம் இருக்கு ..நேத்து பண்ணின கொழு கட்டையும் .. இன்னைக்கு பண்ணிய பீட்ரூட் ஹல்வாவும் ( ஹி ஹி ) கூட இருக்கு ..

பிங்கி : ( செம டென்ஷன் ஆகி விட்டு ..) இந்த சமயத்துல கூட மெனு போடற உன் புத்தியை …ஜானு .. இங்க ஒவ்வொருத்தர் அடுத்தவங்களுக்கு மெகா சைஸ் அல்வா கொடுத்துட்டு இருக்காங்க.. நீ பீட்ரூட் ஹல்வா பத்தி பேசிட்டே காலத்தை கழி..

ஜானு : ( அவள் கத்தின கத்தலில் தான் நான் நான் முதன் முதலில் பிரச்சனையின் தீவிரத்தை புரிந்து கொள்ள ஆரம்பித்தேன்…)

ஜானு: பிங்கி ..நான் நாளைக்கு காலையில் , After sending my daughter to school, அப்படியே ஆபீசிற்கு லீவ் சொல்லிட்டு , உங்க வீட்டுக்கு வரேன்..ரெண்டு பெரும் டிஸ்கஸ் பண்ணுவோம்.. .. இன்னைக்கு நாசூக்காய் மெயில் அனுப்பி அந்த அண்ணனிடம் விளக்கம் கேட்கிறேன்.. அதுவரைக்கும் ஜஸ்ட் ரிலாக்ஸ்..சரியா

பிங்கி :: ஏன் சொல்ல மாட்ட ..எனக்கு நேரமடி எல்லாம்.. சரி காரை பத்திரமா ஓட்டிட்டு வா.. வரும்போது அம்மா எதையாவது செஞ்சிருப்பாங்க இல்ல..அதை எனக்கும் எடுத்துட்டு வர மறந்துடாதே.. சரியா..”

என்று சொல்லி போனை வைத்தாள் பிங்கி . மனதிற்குள் சிரித்துக் கொண்டேன் நான். … எங்க அம்மா சமையல்னா சும்மாவா பின்னே..

@@@@@@@@@@@@@@@@@@@

காட்சி-3 இடம் பிங்கி வீடு
நாள் 9./03 /09 :

பிங்கி : மனுஷன் ரொம்ப சாமர்த்தியம்..அடுத்து உன்னோட உரை கதையை எடுத்து போட்டு இருக்கார் அதுவும் நேத்து ..ஏழாம் தேதி ..அதை பார்த்து தான் நான் கொதிப்பு அடைந்தேன் ஜானு.. நீ யானால் ..இப்படி எதுவுமே நடக்காதது போல எனக்கு உங்க அம்மா முந்தா நாள் பண்ண கொழு கட்டை எடுத்துட்டு வர..

ஜானு: அடிப்பாவி நீதானே கேட்ட.. பயப் படாதே ..சாப்டால் ஒன்னும் ஆகாது எல்லாம் ரெஃப்ரிஜிரேட்டரில் வச்சு தான் கொண்டு வந்திருக்கேன்.. நீ முதல்ல விஷயத்துக்கு வா…

பிங்கி: அதெப்படி ஜானு ..எனக்கு அப்படி பதறுது ..நீ ரொம்ப கூலாய் இருக்க.. எத்தனை நாள் நைட் தூங்காமல் கண் விழிச்சு கதை எழுதி இருக்க.. எனக்கே நெஞ்சு பொறுக்கலை ..ஆனால் நீ..

ஜானு: பிங்கி.. உன்னோட கவலை புரியுது ..உன்னோட அக்கறையும் சிலிர்க்க வைக்குது …ஆனால் நான் இளம் மாறன் அண்ணாவிற்கு மெயில் அனுப்பி கேட்டு இருக்கேன் ..நாசூக்காய் ஏன் “இன்ன்புடன்” குழுமத்தை விட்டு வெளியில் வந்து விட்டார் என்று கேட்டு..!!

பிங்கி : என்ன சொன்னார்..?

ஜானு: ஒன்னும் சொல்லலை பிங்கி ..பதிலுக்கு இன்னொரு கதை அனுப்பி இருக்கார்..இது நான் ஒரு முதியோர் இல்லத்தை வைத்து கதை எழுதினேனே..நியாபகம் இருக்கா..அதன் தாக்கம் போல இருக்கு ..கொஞ்சம் சொந்த நடையில் எழுத முயற்சி பண்ணி இருக்கார்..அந்த கதைல என்னை மாதிரியே குறிப்பா என்னை பார்த்து வேறு கேள்வி எல்லாம் கேட்டு ..இருக்கார்..

என்னோட அதே ஸ்டைலில்..தான் இருக்கு எழுத்து நடை ..நான் கதை எழுதி முடிக்கும்போது எல்லோரையும் உங்களுக்கு ஒரு கேள்வின்னு கேட்பேன்..அதே மாறி இப்ப அவர் எனக்கு கேள்வி கேட்கறார்…

இதோ நீயே படியேன் பிங்கி…

பிங்கி : ஹேய் …ஜானு இதுல அடுத்து இன்ஷா அல்லா வை காப்பி அடிக்கப் போகும் ஹின்ட் வேற தெரியுது.. பெண்கள் பெண்கள்னு உருகுகிற மனுஷர் பெண்களுக்கு பண்ணுகிற நியாயமா இது.. ஒரு பெண்ணோட கதைகளை சுட்டு வெளியிட்டு ..அதற்கு முழு கிரெடிட் டயும் தராமல் இருக்கிறாரே..

உதாரணமாய் பூப் போன்ற கூந்தலை உடையவர் பாராட்டியபோது கூட ..அதை நீ தான் எழுதினாய் னு சொல்லவே இல்லை..பாரேன்… வாழ்த்துக்களுக்கு வாழ்த்துக்கள்னு பெரிய ஹல்வா..வேற தர்றார்…மனுஷர் பொண்களுக்கு எப்படி ஹல்வா தரதுன்னு ஸ்பெஷல் கோர்ஸே எடுத்து படிச்சிருப்பார்னு நினைக்கிறேன்…

ஜானு: பிங்கி ..கட் திஸ் டால்க் ..நானே ரொம்ப வருத்தத்தில் இருக்கேன்..இன்னமும் ஏன் அவர் எனக்கு ரிப்ளை பண்ணலைனு ..அவரோட ப்ளாக் வாழ் தோழி ஒருத்தரிடம் கூட நாசூக்காய் மெயில் அனுப்பி அவர் எப்படிப் பட்டவர்னு கேட்டேன்.. எல்லாம் அந்த முதியோர் இல்லக் கதை படிச்சு என்னோட மெயிலுக்கு வந்த மெயிலை பார்த்து தான்.. அந்த தோழி பற்றித் தெரிந்தது..

கூடவே திரைகடலின் லிங்கை அனுப்பி.. வைத்தேன்….அப்படியாவது அதில் வந்திருக்கும் என் கதைகளை படிப்பார்களே என்கிற நப்பாசையில்..அப்ப உண்மை தெரிந்து கொள்வார்கள் இல்லை…!!

அவர் அனுப்பிய பதிலில் சொன்னார் ..இளங்கோ ரொம்ப நல்லவர்.. அதுக்குமேல திரைகடலை நான் பார்த்திருக்கேன்னு அவர் சொன்னதும் மேற்கொண்டு என்ன கேட்பது என்று தெரியாமல் விட்டு விட்டேன்….

பிங்கி : நீ சொல்றதும் சரி யார் கண்டா..? ..ஒரு வேளை இந்த தோழியும் , இது வரை பெண்கள் பெயரில் மாத்திரம் எழுதி இருப்பதாக சொன்ன அண்ணாவாக இருந்திடுவாரோன்னு ஒரு பயம்.. எனக்கே வருது…யாரையுமே நம்ப முடியாது ஜானு..நீ தான் எல்லோரையும் நம்பிடற.. உன்னோட … எப்படியோ போகட்டும்..உன்னோட கதைகளை போடுவதற்கு முன்பு உன்னிடம் முறையாக முன் அறிவிப்பு செய்து இருக்கலாம்..

ஜானு: ஆமாம்பா..நான் அவர் பெண்ணிற்கு என் ” நான் … பெண் … காத்தாடி ..” என்கிற கதையினை தான் சமர்பித்தேன்.. அதுவும் ஜஸ்ட் லைக் ” I dedicate this story to x,y,z…” னு போட்டு புக்ஸில் வருமே ..அது போல.. இதை சாக்கு வச்சு கிட்டு ..என் கதைகள் எல்லாவற்றிகும் இவர் உரிமை கொண்டாடுவார்னு எனக்கு சத்தியமாய் தெரியாமல் போச்சே..

பிங்கி: ஆமாம்..நீ வேற திரைகடலில் வெளிவரும் உன் படைப்புகளை புத்தகமாய் வேற போடனும்னு இருக்க..இப்படி கதைகள் அங்கும் இங்கும் வெளி வந்து கொண்டு இருந்தால் …நாளைக்கு உனக்கு காப்பி ரைட் பிரச்சனைகள் வராது.. ??அதான் நான் உன் விஷயத்தில் இவ்வளவு அக்கறை எடுத்து கிட்டேன்..நான் சொல்லி ப்ளாக் ஆரம்பிச்சவள் நீ ..”

ஜானு: என்னவோ போ ….பிங்கி .. எனக்கு நேரமே சரி இல்லை.. பட் இந்த அற்பமான பிரச்சனை..ஒரு வார்த்தை என்னிடம் கேட்டு இருந்தால் வந்தே இருக்காது..இல்லை..!! முறையா கேட்டு இருந்தால் நான் ஒண்ணுமே சொல்லி இருக்க மாட்டேன்.. என்னிடம் குழுமத்தில் இருந்து அவரே வெளி வந்து விட்டது போல நாடகம் ஆடி ..இப்போது என்னுடைய மற்றுமொரு படைப்பை நேற்று வெளியிட்டு அதே சூட்டோடு .. என் பாணியில் இன்னொரு கதை எழுதி விட்டு , எனக்கே கேள்விகள் வேறு அனுப்பி இருக்காரே..மனசே பொறுக்கலை.. பிங்கி..

நேத்து (ஏழாம் தேதி ..மார்ச்…2009 )என்னோட இன்னொரு கவிதையை குழுமத்தில் வெளியிட்ட போதாவது எல்லோரிடமும் , சொல்லி இருக்கலாம்..நீங்கள் எல்லோரும் தவறாய் புரிந்து கொண்டீர்கள்..அந்தக் கதைகளை எழுதியது நான் இல்லை …ஜானு என்னும் ஒருத்தர் தான் என்று..

அதோடு கூட, கதையினை வெளியிட்ட போது ஒரு சின்ன குறிப்பு ..தெளிவாக எல்லோருக்கும் புரியும்படி … .இப்படி வெளியிட்டு இருக்கலாம். .இந்தக் கதையினை எழுதினது ஜானு..வெளியிட்டது திரைகடல் எனும் அவரின் வலைப்பூவில் ..இது அவருடைய லிங்க் ..என்பது போல ..சம்திங் ..சம்திங்..

அப்படி ஏதும் செய்யாமல், அதுவும் அந்தக் குழுவில் இருந்து வெளி வந்து விட்டேன் ..இனி அங்கு செல்ல சில காலம் ஆகும்..அதுவரை நான் எழுதுவதை படி .. என்று சொல்லி விட்டு.. இதென்ன அநியாயம் ? என்னை வேறு தூண்டி விட்டு பின் துவள வைத்ததாக சொல்லி வருத்தம் வேறு எல்லாம் பட்டுக் கொண்டார் … இதை தான் ஆடு நனைகிறதேன்னு ஓநாய் கண்ணீர் விடுது என்று சொல்வார்களா?

அவர் குறிப்பிட்ட அந்த சில காலத்திற்கு ஆயுசு ரெண்டு நாள் கூட இல்லை போல இருக்கே.. மேலும் அந்த சில காலம் இத்தனை சீக்கிரம் முடிந்து விட்டதை ஏன் எனக்கு தெரியப் படுத்த வில்லை பிங்கி..அதை தான் என்னால் ரொம்பவே ….ரொம்பவே நம்ப / தாங்க முடிய வில்லை பிங்கி..

மேலும் இவர் இன்ன்புடன்-ல் இருந்து வெளி வந்து விட்டேன் என்பதெல்லாம் எனக்குத் தெரிவிக்க வேண்டிய அவசியம் என்ன ? ..அப்படி வெளி வந்து இருப்பவர் அந்தக் குழுவில் அதை பற்றி ஒன்றும் சொல்லியது போலத் தெரியவில்லை.. மேலும் அன்புடன் என்பது ஒரு குழு..அதில் 1200 -ருக்கும் மேல் உறுப்பினர்கள் இருக்கிறார்கள்.. இவர் விலகினால் வேறு யாரும் அதில் சேரக் கூடாது என்று என்ன சட்டம் இருக்கிறது இருக்கிறது? இணைவதும் , விலகுவதும் அவரவர் சுய விருப்பம்… இவர் என்ன அடுத்தவருக்கு கட்டளை இடுவது..இவர் சேருன்னா நான் விழுந்தடிச்சிட்டு போய் சேரனும்..இல்லை என்றால் சும்மா இருக்கனுமா? என்னை என்ன “சும்மா இருக்கிறேன் ..தலையாட்டி பொம்மை ..” காவேரின்னு நினைக்கிறாரா?

நான் முதன் முறையாக பட பட வென கொட்டிக் கொண்டே போனேன்.. பிங்கி என்னையே பார்த்துக் கொண்டிருந்தாள்..

” யாரை தான் நம்புவதோ பேதை நெஞ்சம்….” சன் டிவியில் சமயா சந்தர்ப்பம் இல்லாமல் பழைய பாடல் வர ..நான் தாங்க முடியாமல் சிரிக்க ( இதுக்கெல்லாம் அழுதால் ப்ளாக் எல்லாம் தொடர்ந்து நடத்த முடியுமா..எனா ? ) ஆரம்பித்தேன்.. பிங்கி தான் கடுப்படைந்து டி.வியை ஆப் செய்தாள்..

அது என்ன பண்ணுச்சு பிங்கி..மாசம் நாற்பது டாலர் கட்டற ..சோ அது பாட்டுக்கு ஓடிட்டு இருக்கட்டும் என்று சொன்னேன்..

மேலும் பிங்கி யை பார்த்து சொன்னேன் …” இணைய தளத்தில் எழுதும் பெண்கள் ஆண்களிடம் சற்று உஷாராய் இருக்க இதையே ஒரு கதை போல எழுதுகிறேன் பிங்கி.. That அண்ணா ..முதலில் என்ன நினைத்து என் கதையினை வெளியிட்டாரோ தெரிய வில்லை..ஆனால் எல்லோரும் கதைகள் நன்றாக இருக்கிறது என்று சொன்னதும், அவர் மனதில் ஏதோ —– குடி புகுந்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்..அப்படியே விட்டு விட்டார்…இல்லை என்றாலும் இதற்கு என்ன விளக்கம் அளிப்பார்.. அது அவருக்கே வெளிச்சம் ..

ஒரு வேளை ..அவர் மேற்கொண்டு இன்ன்புடனில் ஏதும் எழுதாமலோ, ஏதும் பதிவு போடாமல் இருந்திருந்தாலும் பரவாயில்லை என்று இருந்திருப்பேன்..ஏதோ தர்ம சங்கடம் ..நடந்து விட்டது ..விலகி விட்டார் என்று..ஆனால் விலகி விட்டேன் என்று சொல்லி விட்டு … இப்படி பண்ணுவது ..பச்சை நம்பிக்கை துரோகம் செய்வது போல இல்லை..

ஏன் இவ்வளவு ஆதங்கம் என்றால் , ஏழாம் தேதி கூட பதிவு போட்டு இருக்கார். மேலும் எனக்கு இது வரை என் கதைகளை , கவிதைகளை உபயோகப் படுத்திக் கொண்டதை பற்றி திரைகடலில் தெரிவிக்க வில்லை.. ????

இணைய தோழிகளே எச்சரிக்கையுடன் இருங்கள்..நம்முடைய நண்பர்கள் என்று நாம் நினைப்பவர்கள் கூட நம் எண்ணங்களையும் அதில் தோன்றிய வண்ணங்களையும் ஓசை படாமல் எடுத்துச் சென்று விடுவார்கள்..

இள—– அண்ணா..இன்னமும் நீங்கள் எனக்கு அண்ணன் தான் ..என் கணவரை தவிர்த்து மற்ற ஆண் மக்கள் எல்லோரும் எனக்கு சகோதரர் களே.. நடந்ததிற்கு வருத்தம் தெரிவித்து அந்தக் கதைகளை எழுதியது நான் தான் என்று அன்புடனில் எல்லோருக்கும் தெரிவித்து திரைகடலிலும் ஒரு மன்னிப்பை தெரிவியுங்கள்..

ஒரு வேளை உங்கள் நியாயத்தை நீங்கள் கூறலாம்..ஆனால் எதுவாய் இருந்தாலும் , என் அனுமதி இன்றி, எனக்குத் தெரிவிக்காமல், திரைகடலில் வெளியான என் பதிவுகளை , அதுவும் எனக்கு கொஞ்சமும் தொடர்பில்லாத ” இன்ன்புடனில் ” எனும் குழுமத்தில் போட்டு இருக்கிறீர்கள்…

குப்பத்து சிலப் பதிகாரம் கூட இன்ன்புடனில் நான் பார்த்தேன்..அது போட்டு நீண்ட நாள் ஆகி இருக்கும் என்று நினைக்கிறேன்..அதை பற்றியும் எனக்கு மூச்..

உங்களுக்கு நேரடியாகவே ஒரு கேள்வி: ஏன் இப்படி செய்தீர்கள்? உங்கள் மகள்களை நினைத்து வருத்தமாய் இருக்கிறது அண்ணா … ப்ளாக் வாழ்கையில் எல்லோரும் சகஜமாய் , ஒட்டிக் கொண்டும் வெளிப்படையாகவும் பேசிக் கொண்டு தானே இருக்கிறார்கள்..என்னை அக்கா என்று அழைப்பவர்களும் இங்கு உள்ளார்களே ..நான் தம்பி என்று அழைக்கும் புவனேஷ் கூட அண்மையில் என்னை கலாய்த்து அவர் ப்ளாகில் ஒரு பதிவினை வெளியிட்டு இருக்கிறார்.. அதில் என் பதிவை பற்றி குறிப்பிட்டு ஒரு இணைய தொடுப்பையும், சிறு முன் குறிப்பையும் வெளியிட்டு.. இருக்கார்..இத்தனைக்கும் அவர் எனக்கு தம்பி..

இன்னொரு நண்பர் கவின் ( தம்பி) கூட என்னை நன்றாக கலாய்த்து ஒரு பதிவை இட்டு, என்னை வந்து பார்க்கும்படி ஒளிவு மறைவு இன்றியே செய்து இருக்கும்போது அவர்களை விட வயதிலும், அனுபவத்திலும் பெரியவரான நீங்கள் இப்படி மறைந்திருந்து போலித்தனமாய் ஒரு ஆட்டம் போடு கிறீர்களே அது ஏன்…?

படித்துக் கொண்டிருக்கும் எல்லோருக்கும் ஒரு கேள்வி: என்னால் ஏன் இப்படி ஒரு பதிவை போடாமல் இருக்க முடிய வில்லை..? இதை நல்ல முறையில் தீர்த்துக் கொண்டிருக்கலாம்.. என்ன , ஒரு சப்பை கட்டு விளக்கம் வந்திருக்கும் எனக்கு…ஆனால் பெண்கள் தங்கள் பிரச்சனைகளை வெளியில் சொல்வதற்கு பயப்படும் அந்த மென்மையான குணத்தினால் தானே ஆண்கள் பெண்களை இன்னமும் கிள்ளுக் கீரையாய் , சுயமாய் சிந்திக்கும் குணம் இல்லாத ஆட்டு மந்தையாய் நினைக்கிறார்கள்….?

பெண்களை பாராட்டி நாலு வார்த்தை சொல்லி விட்டால் போதும்..அவர்களை எளிதில் வசப் படுத்தி விடலாம் என்று நினைப்பவர்கள் எல்லோருக்கும் ஒன்று..அதெல்லாம் அந்தக் காலம்!!!!

டிஸ்கி 1: இள…. அண்ணா..நீங்கள் அன்புடன் குழுமத்தில் இருந்து வந்து விட்டேன்..மேலும் என்னையும் அங்கு போக வேண்டாம் என்று கூறியதால் தான் நான் அங்கு member-ராக சேர்வதற்கு போனேன்……பிகாஸ் I ஜஸ்ட் ஸ்மெல்ட் எ ராட் in தட் மெயில். நியாயமானதொரு விளக்கம் தாருங்கள் அண்ணா..நான் உங்களிடம் மனதார மன்னிப்பினை கேட்கிறேன்..

நீங்கள் என்ன சொல்ல போகிறீர்கள் என்று எனக்குத் தெரியாது..ஆனால் சில காலம் கழித்து வேறு யாரேனும் “இன்ன்புடனில் ” குழுமத்தில் நீங்கள் வெளியிட்ட என் கதை களை ” கடலில் ” பார்க்க நேரிட்டால்..அவற்றை காப்பி அடித்தது நான் என்று தானே நினைப்பார்கள்..? எனவே இந்த பதிவு!!

அதே நேரத்தில் ..இதை படித்து நீங்கள் மனம் துவளாமல், இனி சிறப்புடன் எழுத என்னுடைய மனமார்ந்த பிரார்த்தனைகள். மற்றும் வாழ்த்துக்கள்.. சட்டி என்ற பெயரை வேண்டுமானால் மாற்றிக் கொள்ளுங்கள் அண்ணா.. அது இப்படி உடைவதில் உங்கள் உடன் பிறவா சகோதரிக்கு மிகவும் வருத்தமாகவே இருக்கிறது..

@@@@@@@@@@@@@@@

டிஸ்கி 2: this is just an imaginary story but the bitter experience I got is true …இந்த கதையில் வந்திருக்கும் பாத்திரம் யாவும் ஜானுவை சேர்த்து கற்பனை . ஆனால் அனுபவம் நிஜம் ..

@@@@@@@@@@@@@@@@@@@@@

Acknowledgement :( If they work)

1. http://groups.google.com/group/anbudan/browse_thread/thread/d36eb8b988dfee55/30524dd572e2b83c
2. http://groups.google.com/group/anbudan/browse_thread/thread/d36eb8b988dfee55/f248c2faa63ff8d6

@@@@@@@@@

@@@@@@@@@@@@@@@@@@

அன்புச் சகோதரர் இதில் நான் ஏதேனும் தப்பாக எழுதி இருந்தால் விளக்கம் தாருங்கள் .. புரிந்து கொள்கிறேன்..

இப்படிக்கு
பாசக் காரத் தங்கை..
ஜானு…

மற்றும் எல்லோருக்கும்,

அட நானும் வளர்ந்து விட்டேனோ? என் கதைகளை கூட ( என் அனுமதி இன்றி என்றாலும் ) வெவேறு குழுமங்களில் வெளியிடப் படுவதை பார்த்து முதலில் தோன்றியது இது தான் ..

. என் கதையினை உங்கள் ப்லாகுகளில் குழுமங்களில் வெளியிடுவதை நான் பெரிதாக ஒன்றும் ஆட்சேபிக்கப் போவது இல்லை.. அதை பெருமையாகவே கருதுகிறேன் ..ஆனால் வெளியிடுவதற்கு முன்பு, மரியாதை நிமித்தமாக , என்னுடைய எந்த படைப்பினை நீங்கள் வெளியிடுகிறீர்கள் என்கிற தகவலை எனக்கு தெளிவாகத் தெரிவித்து விட்டு, படைப்பினை வெளியிடும் வலை தளத்திலும் அதை படிப்பவர்கள் தெளிவாகத் தெரிந்து கொள்ளும்படி திரைகடலின் இணய தள முகவரியையும் சேர்த்து ஒரு சிறு அறிமுக முன் குறிப்பையும் வெளியிடுங்கள்.. உங்களுக்கு நான் மிகவும் நன்றி உடையவளாவேன்.

.. இது என்ன சமையல் குறிப்பா..எல்லோரும் ஒரே மாதிரி அச்சு அடித்தார் போல வெளியிடுவதற்கு ..என்று சொல்லலாம் … என்று பார்த்தல் இப்பொழுதெல்லாம் சமையல் குறிப்புகளை வெளியிடுபவர்கள் கூட , தங்களுக்கு தெரிவித்து விட்டு, தங்களின் அனுமதியுடன் குறிப்புகளை வெளியிடும்படி கேட்டு கொள்கிறார்கள்.. ( நன்றி: தாளிக்கும் ஓசை.. ஜெய ஸ்ரீ , ஸ்பைசி லிவிங் .. கிருத்தி )

ஏனெனில் ஒரே பொருள்கள் வைத்து சமைத்தாலும், ஒவ்வொரு கைக்கு என்று இருக்கும் மணம் , செய்யும் முறை மற்றும் சமைக்கத் தேவையான பொருள்களின் அளவீடுகள் மாறுகிறது என்பதால் தான்..இது போன்ற ஏற்பாடு எல்லாம்.. செய்வது !! எல்லா வற்றிக்கும் மேலாக ஒருத்தர் கஷ்டப்பட்டு எழுதுவதை அது எதுவாக இருந்தாலும் இன்னொருவர் எப்படி அவர் அனுமதி இல்லாமல் வெளியிடலாம்? அது P.R.O வேலை பார்ப்பதற்காக இருந்தாலும் சரி!

நானெல்லாம் ரூம் போட்டு கதை/கவிதை எழுதுவது இல்லை தான் என்றாலும் , என் பணிகளுக்கு இடையில் கஷ்டப்பட்டு எழுதுகிறேன்.. அதை எனக்கு சொல்லி புட்டு , acknowledge செய்து விட்டு செய்ங்க மக்கா …

மேலும் என்னுடைய இணைய தளத் தோழி ஒருவரின் கதையினை அப்படியே ஒருவர் எடுத்து தன் கதை போன்று வெளியிட்ட அவலத்தையும் நான் காண நேர்ந்தது. ( அதை பற்றி இன்னொரு பதிவு இடலாம் என்று இருக்கிறேன்..)

இதை எல்லாம் கண் காணிக்கும் குழு போல ஏதேனும் இருந்தால் நன்றாக இருக்கும்..என்று தோன்றுகிறது..

எல்லோருக்கும் ஒன்றை தெளிவு பட இங்கு கூறுகிறேன்…நான் என்றும் மற்றவரின் படைப்பை அவர் அனுமதி இல்லாமல் வெளியிட மாட்டேன்..வெளியிட்டாலும் என் படைப்பு என்று உரிமை பாராட்ட மாட்டேன் … என் கணவருக்கு மனைவியாய் நான் வாழும் காலம் மட்டும் இந்த தவறினை அறிந்தும் சரி அறியாமலும் சரி செய்ய மாட்டேன்.. இதை எல்லோருக்கும் ஒரு உறுதி மொழி போலவே தெரிவிக்கிறேன்.. இதை நான் நிச்சயம் கோபத்தில் சொல்ல வில்லை.. ஒரு ஆதங்கத்தில் தான்… சொல்கிறேன்..

நான் இங்கு தவறாக பொருள் படும்படி எழுதி இருந்தால் , தயவு செய்து இள… அண்ணா உட்பட எல்லோரும் மன்னியுங்கள்.. ஆனால் எனது நோக்கம் தவறானது இல்லை..உன்னுடைய மூக்கின் நுனியுடன் உனது உரிமை , அதிகாரம் மற்றும் சுதந்திரம் முடிந்து விட்டது..என்று மகான்கள் சொல்லிக் கேள்வி பட்டு இருக்கிறேன்..

அதை கொஞ்சம் நாம் எல்லோரும் சிந்தித்து, முன் பின் தெரியாதவர்களிடம் ,எடுத்த எடுப்பில் அதிகம் உரிமை பாராட்டாமல் இருக்கலாம்..ஏன் என்றால் எல்லா விரல்களும் ஒன்று போல் இல்லை…

@@@@@@@

திரைகடலுள் என் முத்துச் சிப்பிகள்..
இங்கு நான் சேர்த்து வைக்கும்
கதைகள் , கட்டுரைகள்,
கவிதைகள் , உரை கவிதைகள்
குறிப்புகள் , ஹாஸ்யங்கள் ..
இப்படியே தொடரும்
என் எண்ணக் கிறுக்கல்கள்..
திரைகடலில் பதிவாகும்
என் எழுத்துக் குழந்தைகள்..
என் உணர்வின் புகை படங்கள்..

திரைகடல்..
நான் ஒருத்தி வாழ்ந்ததற்கான
தடயங்களை சுமந்திடும்
என் எண்ணச் சுவடுகள்..
என்னின் பிரதி பலிப்புகளாய் ..
நான் வாழ்ந்த காலம் முடிந்தும்
என் மக்களுக்கு என் உணர்வுகளை
தெரிவிக்க நான் விட்டுச் செல்லும்
என் எண்ணப் பெட்டகம் !

இவை..
என் மனதின் தாக்கங்கள்..
நான் சேர்த்து வைக்கும்
முத்துக் குவியல்கள் ..
இவற்றை திரைகடல்
என்னும் பேழைக்குள்
போட்டு வைக்கிறேன்
சிப்பிகளோடு ..பாதுகாப்பாய்
என்றைக்கும் சிதறாமல்
பத்திரமாய் இருந்திடுமென்று..

என்றோ ஒரு நாள்
என் எண்ணக் குவியல்களை
கோர்த் தெடுப்பேன்
முத்து மணிச் சரங்களாக ..
என்கின்ற இந்த
நம்பிக்கை கொண்டே
ஒவ்வொரு நாளும்
ஜனிக்கின்றேன் ..

வலைச் சரத்தில்
என் மனமெனும் சிப்பியில்
உதித்த முத்துக்களை
கோர்த்துக் கொண்டே
வரும் வேளையில் ,
கடற் கொள்ளையரிடம்
மொத்தமாய் களவு போய்விடுமோ
என்கிற பயம் இன்றெனக்கு..

மகா பாரத குந்தி போல்
நானே தரித்து
நானே பிரசவித்த
இவற்றிக்கு முகவரியாக
என்னுடைய
முதல் எழுத்தே
இருக்க வேண்டும் ..
அழகோ ….. அசிங்கமோ,
குப்பையோ, மாணிக்கமோ
நான் ஈன்றெடுத்த
என் குழந்தைகள்
காக்கைகள் என்றாலும்
எனக்கு அவை பொன் குஞ்சுகளே ..

என் உயிர் போயினும்
அவற்றை யாரிடமும்
விட்டுக் கொடுக்கவும் மாட்டேன்
இனி தத்துக் கொடுக்கவும மாட்டேன் ..
அன்னை என்பவள் காப்பவள் மாத்திரமே ..
என்றைக்கும் களவு கொடுப்பவள் அல்ல..

இப்படிக்கு,
இடுக்கண் வருங்கால் நகைத்து நகைத்து
இளிச்சவாயாகிக் கொண்டிருக்கும் மற்றும்
முதல் தடவையாக சக மனிதரின் மீது ,
வருத்தங்களுடன் பதிவு போடும் ,
ஜானு
இதுவே கடைசியாக இருக்க வேண்டும்
என்கிற பிரார்த்தனைகளுடன் ..

click here to see his stories..

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

what will happen if i post this story..??????? I was holding back just because of his innocent daughters .. for quite sometime..somehow I feel so sad about them.. But still he has not acknowledged me properly.. Hence by posting it, I do want to teach some people a very hard lesson that women are not always vulnerable and scape-goats..

I have given him more than 5 days time since march 5th to think over what he is doing ,but i have so far not received any mails apart form that story i posted in thiraikadal.. I am, with the fear of being tricked or exploited by some person unknown is posting that story and mails he sent to me under tea kadai bench page in thiraikadal.. ..and posting this story here..now…..As he wrote something about his daughter and wrote a poem for pranav, I thought i should thank him..while i tried to post a messege in his blog , i could not ..that’s y i have sent a mail sending the comment and agreed to join anbudan team..I have requested him to post it on his blog too .. but I feel like he is playing a trick on me.. or this is what my friend told me who saw it many number of times along with me.. Thanks pinki …

still confused , (it has been 6 days since i slept properly.. )..
ஜானு

please tell me whether i deserve to be upset or not..!!

Links related to this issue..:-

1. to see links related to “kuppaththu silap pathigaaram.. ”

2. here is another one to see links related to “kuppaththu silap pathigaaram.. ”

links related to vaana villin vannam yezhu..!

About Anthaanbudan group,

It sounds really a decent group with many aspiring souls aiming to write uniquely.. when I searched more, I came to know that they conduct “kavithaigal” competions and present awards to the participants now and then .. presided by famous people like Mr. Maalan avargal .

click here to see the links related to this..</a?

பஞ்சவர்ணக் கிளியும் ,அண்டங் காக்கையும்

பஞ்சவர்ணக் கிளியும் ,அண்டங் காக்கையும்

ஒரு ஊர்ல ஒரு பஞ்ச வர்ணக் கிளி இருந்துச்சாம். அதுக்கு பக்கத்து வீட்டுல
கன்னங் கரேல்னு ஒரு அண்டங் காக்கா வாழ்ந்துட்டு வந்துச்சாம். பஞ்ச வர்ணக் கிளி பார்க்கவே ரொம்ப ரொம்ப அழகாம். அதனோட அழகு மேல அதுக்கு ரொம்ப பெருமை. வெறும் பெருமை மட்டும் பட்டுகிட்டு சும்மா கிடந்து இருக்கலாம் அந்தக் கிளி. ஆனா அதுக்கு இந்தக் கன்னங் கரேல்னு இருந்த அண்டங் காக்காவை தன்னோட ஒப்பிட்டுப் பார்த்து தன் அழகு மேல ஒரே கர்வம் வேற வந்துச்சாம்.

ஒரு நாள் இரண்டும் ஒன்னா இரை தேடக் கிளம்பிச்சாம் . வழக்கமாய் போற காட்டுக்கு அருகே, ஒரு பூங்கா வனத்துல சின்னக் குழந்தைங்க நிறைய பேர் பூப்பந்தாட்டம் ஆடி கிட்டும் சருக்கா மெத்தையில் சறுக்கிக் கிட்டும் மகிழ்ச்சி பொங்க விளையாடி கிட்டு இருந்தாங்களாம். அப்ப அந்தப் பக்கம் வந்த இந்த கிளியை பார்த்ததும் குழந்தைங்க குதூகலம் அடைஞ்சி, அவங்க சாப்பிட கொண்டு வந்த கடலையையும் , சுண்டலையும் கொஞ்சம் எடுத்து அதுக்குத் தூக்கிப் போட்டாங்களாம். கிளியோட சேர்ந்து ஆசையா சாப்பிட வந்த காக்காவை “ஷூ ஷூ ” னு சொல்லி விரட்டி அடிச்ச பசங்க, பஞ்ச வர்ணக் கிளிக்கு மாத்திரம் , இன்னும் துண்டு செய்த பழங்களையும் கொடுத்து ராஜ உபச்சாரம் பண்ணாங்களாம்.

மரத்து மேல உட்கார்ந்து பரிதாபமாய் பார்த்துட்டு இருந்த அண்டங் காக்காவை , கர்வமாய் பார்த்து சிரிச்சுதாம் பஞ்ச வர்ணக் கிளி . நல்லா சாப்டுட்டு மரத்து மேல போய் உட்கார்ந்து கிட்டு, ” ஐயோ பாவம் நீ..உனக்கு எதுக்கு இப்படியும் ஒரு பொழப்பு ..இந்த ஜன்மத்துல தான் நீ என்னை மாதிரி இல்லை..அட் லீஸ்ட் .. அடுத்த ஜன்மத்துலயாச்சும் என்னை மாறி ஒரு பஞ்ச வர்ணக் கிளியா பொறக்கனும்னு கடவுள் கிட்ட வேண்டிக்க… உன்னை பார்த்தால் யாருக்குமே பிடிக்க மாட்டேங்குது பாரு.. ” என்று சொல்லி காக்காவை ஏளனம் பண்ணுச்சாம்.

மேலும் விடாம, “அதோ நான் சாப்டதில் கொஞ்சம் மிச்சம் இருக்கு பாரு.. எல்லோரும் போனப்பறம் நீயும் கொஞ்சம் சாப்டு”, என்று ரொம்ப கர்வமாய் சொல்லுச்சாம்..

அண்டங் காக்கைக்கு இதை எல்லாம் கேட்டு ரொம்ப வருத்தமாய் போச்சாம்.. இறைவா என்னை மாத்திரம் ஏன் இப்படி பொறக்க வச்ச.. எல்லோரும் வேணாம்னு ஒதுக்கற மிச்சங்களையும் எச்சில்களையும் சாப்டுட்டே இப்படி என்ன ஒரு வாழ்க்கை.. எனக்கு.. குழந்தையும் தெய்வமும் ஒன்னுன்னு சொல்வாங்களே .. அந்தக் குழந்தைகளுக்குக் கூட என்னை பிடிக்கலையே.. என்னை ஏன் இப்படி படைச்ச .. என்று புலம்பிக் கொண்டே ஒன்னும் சாப்பிடாமல் வெறும் வயித்தோட, கிளியோட வருத்தத்தோட வீட்டுக்குக் கிளம்பிடுச்சாம் காக்கா.

சாப்பிடமால் வந்த காக்காவை பார்த்து , ” நீ ஏற்கனவே கருப்பு..இதுல இப்படி சாப்பிடாமல் குச்சி குச்சியா ஆனால் , அப்பறம் உன்னை பார்க்க சகிக்குமா ..” என்று மேலும் தன் வண்ண இறக்கையை ஆட்டி கர்வமாய்ப் பேசி வெந்த புண்ணுல வேலைப் பாய்ச்சிச்சாம் இந்தப் பஞ்ச வர்ணக் கிளி.

சில நாட்கள் இப்படியே ஓடுச்சாம்.. அன்னைக்கும் இரை தேட இரண்டும் வழக்கம் போல ஒன்னாக் கிளம்புச்சாம் ..அதே பூங்காவிற்குத் தான் போகனும்னு கிளி அடம் பிடிக்க, . அதுக்கு காக்கா ” அங்க ..வேணாம் பா .. இன்னைக்கு நாம வழக்கமாய் போகும் பக்கத்துக் காட்டுக்கே போலாம். அங்க நிறைய புத்தம் புது பழங்கள் இருக்கும் . ருசியான பருப்பு வகைகள் கிடைக்கும்.. ஆசையாய் திண்ணலாம்னு “, சொல்லுச்சாம்.

அத கேட்டு கிளிக்கு ஒரே கோவம் வந்துச்சாம். அது காக்காவை பார்த்து “என் மேல உனக்கு ரொம்ப பொறாமை .. என்னை மத்தவங்க புகழரதை பார்த்து உனக்கு ரொம்ப வயித்து எரிச்சல் ..அதான் இப்படி நீ புலம்பற ..நீ வேணா போ ..நான் வர மாட்டேன் ” என்று சொல்லுச்சாம்.. அதுக்கு காக்கா ” வேணாம் ..அடிக்கடி ஒரே இடத்துக்கு நீ போறது உனக்கு நல்லது இல்லை.. நீ வேற ரொம்ப அழகா இருக்க ..அதனால உன் நல்லதுக்கு தான் சொல்றேன்னு “, எவ்வளவோ எடுத்துச் சொல்லிப் பார்த்துச்சாம்..

கிளிக்கு கோபம் அதிகமாய் ஆகி .. ” சீ வாயை மூடு.. எனக்கு நல்லது எதுன்னு எனக்கு தெரியும் ..நீ உன் வேலையே பார்த்துட்டு போ..எவ்வளவு பொறாமை என் மேல உனக்கு ..” என்று சொல்லிட்டு , சமீபத்துல அடிக்கடி போகும் பூங்கா வனதிற்கே பறந்து போச்சாம்..கிளி.

காக்காவும் வேற வழி இல்லாமல் தனியாகவே காட்டுக்கு போய் கொஞ்சம் பழங்களை சாப்டுச்சாம் ..ஆனா அதுக்கு மனசு கேக்காம , மறுபடியும் தன்னோட பிரெண்டை தேடிட்டு அந்த பூங்காவனதுக்கே வந்துடுச்சாம்.

கிளி குழந்தைங்க போடும் பழத் துண்டுகளை எம்பி எம்பி சாப்டுட்டு உற்ச்சாகமாய் சிறகை விரிச்சு குதிச்சுக் கிட்டே இருந்துச்சாம். அப்ப அங்கு ஒரு பெரிய மீசைக்கார ஆள் ஒருத்தர் பெரிய தட்டில் பலவகை பருப்புகளையும் தானியங்களையும் வச்சிக்கிட்டு கிளிக்கு அருகில் வந்தாராம் . அதை பார்த்த காக்காவிற்கு இதில் ஏதோ சூது இருக்குமோ என்று சந்தேகம் வந்து கிளியை பார்த்து உரக்கக் கத்தி கூபிடுச்சாம்..

“கிளி..சாப்டது போதும்..சீக்கிரம் மேலே வா ..” என்று திடீர்னு கத்திய காக்காவை பார்த்த கிளி , ” ஒழிஞ்சது சனியன்னு நிம்மதியா இருந்தேன்..மறுபடியும் வந்துட்டியா..யாராச்சும் எனக்கு நல்லது செஞ்சாலே உனக்கு பொறுக்காதே ..கடவுளுக்கு உன்னை பிடிக்கவே பிடிக்கலை..அதான் உன்னை உன் மனசு போலவே கருப்பாய் படைச் சிட்டார் “, என்று கத்தி அந்த தட்டை நோக்கி ஆவலுடன், வேகமாய் பறந்து போச்சாம் கிளி.

படார்..நு ஒரு சத்தம். அதுவரை பருப்புகளை சுவாரஸ்யமா கொறிச்சுகிட்டு இருந்த கிளி, அப்பத்தான் யாரோ தன் மேல எதையோ வச்சி மூடரத்தை உணர்ந்து திகைச்சு போய் நிமிர்ந்து பார்த்துச்சாம் ..வேற யார்..எல்லாம் அந்த பெரிய மீசைக்கார ஆள் தான்..கிளியை தன்னோட கூண்டில் அடைச்சு மூடிகிட்டு இருந்தார்..

தன்னோட பிரெண்டை பார்த்து கண்ணீர் விட்ட காக்கா, கடவுளுக்கு மனசார நன்றி சொல்லுச்சாம்.. கடவுளே ..அடுத்த ஜன்மத்துலயும் என்னை காக்காவாகவே படச்சுடு.. அப்ப தான் எப்பவும் போல நான் இப்படி சுதந்திரமா இருப்பேன்.. இந்த அழகால வேற ஒரு பிரயோஜனமும் இல்லைன்னு எனக்கு இப்ப நல்லாவே தெரிஞ்சுடுச்சு ..” என்று சொல்லி தன் வீட்டுக்கு நன்றியுடன் பறந்து போச்சாம் காக்கா ..

குறிப்பு 1: இது குட்டீஸ் களுக்கான கதை.. ஆனால் பெரியவங்களும் படிச்சு கமெண்ட்ஸ் சொல்லணும் ..

குறிப்பு 2 : பிரணவ் நீங்க அண்டங் காக்காவை பார்த்தால் கூட பொறி கடலையை அள்ளி வீசறீங்க .. அதையும் ரசிக்கும் உங்க மனோபாவம் வளரும்போதும் மாறிடாமல் இருக்கணும் என்கிற பிரார்த்தனைகளுடன்,

அதீத அன்புடன்,
அம்மா

நான்.. பெண்.. காத்தாடி..

நான் …பெண்..காத்தாடி ..

இன்றல்ல நேற்றல்ல ..என்றைக்குமே எனக்கு காத்தாடி என்றால் கொள்ளை பிரியம். காத்தாடியை பார்த்தாலே மனதிற்குள் ஒரு துள்ளல் எழும். பெயருக்கு ஏற்றபடி காற்றில் ஆடி ஆடி, காத்தாடி மேலே பறக்கும் அழகே தனி தான். மெல்லிய நூலால் கட்டப் பட்ட காத்தாடி உயரே பறக்க பறக்க , அவிழ்த்து விட்ட வால் போல, கவலைகள் ஏதுமின்றி, அது அங்கும் இங்கும் பறந்து கொட்டமடிப்பது பார்க்கவே வெகு ஜோராக இருக்கும்.

அன்றைக்கு கடை தெருவிற்கு போய் விட்டு வந்தபோது எனது பக்கத்த வீட்டு நண்பன் கண்ணைப் பறிக்கும் ஒரு வண்ணக் காத்தாடியை வீட்டு மொட்டி மாடியில் நின்று கொண்டு ஒய்யாரமாய் விட்டுக் கொண்டிருந்தான். ஜிவ் வென்று உயரே பரந்த காத்தாடியை பார்க்கும்போது கைகள் துரு துருத்து. மனது அதனுடன் சேர்ந்து ரெக்கை விரித்துப் பறந்தது. இதுவரை என்றுமே காத்தாடி விட்டது இல்லை நான். யாரும் சொல்லிக் கொடுத்ததும் இல்லை. உதவியதும் இல்லை.

நான் “ஆ’ வென்று திறந்த வாயை மூடாமல் பார்த்துக் கொண்டிருப்பதை பார்த்த என் நண்பன் , ” நீ வேடிக்கை பார்ப்பதற்கு தான் லாயக்கு ” என்பது போன்ற அலட்டலுடன் அதை மேலும் மேலும் உயரமாய் பறக்க விட்டான். அவன் காத்தாடியும் அவனைப் போன்றே ஆணாக இருக்குமோ..? எதை பற்றியும் கவலை இல்லாமல் திமிறிக்கொண்டு மேலே மேலே பறந்து கொண்டிருந்தது. பறந்த காத்தாடியுடன் சேர்ந்து என் மனதும் அலை பாயத் தொடங்கியது. இன்றைக்கு எப்படியும் இவன் முன்னால் காத்தாடி ஒன்றை பறக்க விட்டே தீர வேண்டும் என்று மனதிற்குள் சபதமிட்டேன் நான்.

கோடிக் கடையில் பத்து ரூபாய் கொடுத்து நானும் ஒரு காத்தாடியை வாங்கிக் கொண்டு வீட்டிற்குள் நுழையாமல் , நேராக அவனிருக்கும் மொட்டை மாடிக்கு சென்றேன் . அவனுக்கு நான் ஒன்றும் சளைத்தவள் அல்ல என்பதை நிரூபித்துக் காட்ட வேண்டிய கட்டாயம் என்னில் கொழுந்து விட்டு எரிந்தது.

கடைக்காரன் கொடுத்த மாஞ்சாக் கயிற்றில் காத்தாடியை ஒரு வழியாக கட்டி மேல் நோக்கி அதை செலுத்தினேன். ம்ஹூம்..கொஞ்சமும் அசைய வில்லை காத்தாடி..அது கீழே செங்குத்தாய் இறங்குவதிலேயே பிடிவாதமாய் இருந்தது. இம்மியும் மேலே பறப்பதாய் இல்லை.

மேலும் சில தடவைகள் முயற்சித்துப் பார்க்கையில் தெரிந்து கொண்டேன் மனதை அடக்குவதே வெகு சுலபம் என்று. காத்தாடி டிமிக்கி தான் கொடுத்துக் கொண்டிருந்தது.

எத்தனை முயன்றாலும்
பறக்காத காத்தாடி ..
நூலோடு நானும்
நூலாகிப் போனேன்..

மாற்றான் காத்தாடி தான் மேகத்தில் பறக்கும் போலிருக்கிறது. என் காத்தாடி மறந்தும் , மருந்துக்கும் மேலே பறப்பதாக இல்லை. என் தளராத முயற்சி அருகில் இருந்த என் நண்பனின் ஏளனம் கலந்த வெற்றிக் களிப்பில் கொஞ்சம் கொஞ்சமாய் காணாமல் போய்க் கொண்டிருந்தது.

என் நண்பனை ஓரக் கண்ணால் பார்த்தவாறே , அவன் செய்வது போல நூலை பிடித்து இப்படி அப்படி என்று ஆட்டினேன். என்ன செய்தாலும் மேலே பறக்காமல் தரையில் தவழ்ந்து குழைந்து சண்டித் தனம் செய்தது. இப்பொழுது கொஞ்சம் கொஞ்சமாய் பறந்தது ..என் பொறுமை … அம்மா வேறு சீக்கிரம் வரச் சொல்லி அனுப்பியது நினைவுக்கு வந்து என்னை அலை கழித்தது.

ஏனோ எல்லாவற்றின் மீதும் கோபம் பொத்துக் கொண்டு வர , என் வீம்பை கொஞ்சம் தளர்த்தி, என் நண்பனை பார்த்து கொஞ்சம் உதவேன் என்பது போல ஒரு “கெஞ்சல்” பார்வையை வீசினேன். அவனோ ” உனக்கெல்லாம் எதுக்கு இது..பேசாமல் நான் விடுவதை பார்த்துட்டு போவியா..?” என்று கொக்கரித்தான்.

காத்தாடி பெண்களின்
கண்களுக்குத்தான்..
கைகளுக்கல்ல ..

என்று சொன்ன நண்பன் இப்போது விரோதியாய் தெரிந்தான். காத்தாடி வாங்குவதும் ஒரு கலை தெரியுமா..நல்ல மாஞ்சாக் கயிற்றை வீட்டிலேயே செய்வதும் ஒரு கலை..அதெல்லாம் உனக்கு சொன்னால் புரியாது.. உன் காத்தாடி என்ன செய்தாலும் என் காத்தாடி போல பறக்கவே பறக்காது …போய் உங்க அம்மா வாங்கி வரச் சொன்ன அப்பளத்தை கொடுத்துட்டு வா ..கீழே எல்லோரும் உன்னை தேடிட்டு இருக்காங்க ..என்று கூறி கட கடவென சிரித்தான் என் நண்பன் . ஆண் திமிர்..!

கோபம் கோபமாய் வந்தது எனக்கு. ஆனால் கோபம் என்றைக்கு பெரிதாக சாதித்தது. கிழித்துப் போட்டேன் காத்தாடியை.. நான் கிழித்தது அவன் காத்தாடியை என்பதால் , இப்போது அவன் கையில் என் காத்தாடி என்னை பார்த்து கண்ணடித்து சிரித்தது.

” இதோ பார்..அதோ பார் ..எப்படி பறக்குது பார் “, என்று என்னை பார்த்து போங்கு காட்டினான் அவன். இப்பொழுது முன்பை காட்டிலும் ஏளனமாய் அவன் குரல் ஒலித்தது போலிருந்தது. . என் காத்தாடியை எனக்கே காட்டி இன்னமும் உயர உயர பறக்க விட்டுக் கொண்டிருந்தான் அவன்.

இருந்தாலும் சிலிர்ப்பாய் மனதிற்குள் மகிழ்ச்சி பரவியது. பரவிய மகிழ்ச்சி உந்திக்கொண்டு தானாக வெளிப்பட, குதூகலம் நிறைந்த குரலில் சொன்னேன்..” பறப்பது என் காத்தாடியாக்கும்..அது தான் அத்தனை உயரமாய் பறக்கிறது.. “

மேலும் சும்மா இராமல், ” 12th ரிசல்ட் அடுத்த வாரம் வெளி வருது ..அப்ப தெரியும் யாரோட பட்டம் ரொம்ப உயரமாய் பறக்கும் என்று.. வெவ்வே ..”, என்று ஒழுங்கு காட்டி விட்டு சிட்டாக வீட்டிற்குள் பறந்தேன்.

நுழையும்போதே அம்மா கத்தினார் …” போனா சீக்கிரம் வர தெரியாது..அப்பளம் வாங்கி வர எவ்வளவு நேரம்… ? இன்னமும் பதினைந்தே நிமிஷத்தில், உன்னை பெண் பார்க்க மாபிள்ளை வீட்டுக் காரர்கள் வருகிறார்களாம்..மச மசன்னு நிற்காம, சீக்கிரம் போய் ரெடியாகு…”

திகைப்புடன் நான்….! என் மனக் கண்ணில், சற்றுமுன் என்னால் கிழி பட்ட நண்பனின் காத்தாடி , அவனின் அதே ஏளனம் கலந்த சிரிப்புடன் என்னை பார்த்து கண்ணைச் சிமிட்டி சிரிப்பது போல இருந்தது. மெல்லிய வருத்தம் பரவ ஜன்னலின் ஊடே வெறித்துப் பார்த்தேன்.. அவனிடம் கொடுத்திருந்த என் காத்தாடி , இப்போது மின் கம்பத்தில் சிக்குண்டு வாலருபட்டு துடியாய் துடித்துக் கொண்டிருந்தது..

நான் .. பெண் ..
காத்தாடி..
என்றுமே இயங்குவதில்லை..
இயக்கப் படுகிறேன்..

என்பது புரிய வெகு நேரமாகவில்லை..

டிஸ்கி-1: ஐந்து வருடத்திற்கு முன்பு காத்தாடி விட்ட என் நண்பன் பேமென்ட் சீட்டில் எஞ்சினியரிங் படித்து முடித்து விட்டான். அவனை விட இருபது சதவிகிதம் கூடுதல் மதிப்பெண்கள் பெற்றிருந்தும் நான் … இப்பொழுது என் நான்கு வயது பெண்ணிற்கு காத்தாடி விடக்( இயக்கக்) கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கிறேன் ..

டிஸ்கி-2 : இது ஆங்கிலத்தில் நான் எழுதிய (Me, The Kite) proem -மின் மொழி பெயர்ப்பு .. சிறுகதை வடிவில் கொடுத்திருக்கிறேன்.. I have written “Me, The Kite ” on 15/08/02 just 2 months after I got married ..haha :lol:

டிஸ்கி-3:.. இதில் வரும் நான் நான் அல்ல..நான் கோபம் வந்தால் வெறும் காத்தாடியை கிழிக்கும் ரகம் இல்லை . ———–…. ஹிஹி